Drop
அப்டின்னு ஒரு ஹாலிவுட் படம். நோ நோ தமிழ் டப்பிங்கெல்லாம் இல்ல. இந்தப் படத்தை பார்க்கனும்ன்னா, இங்கிலிஷ் மட்டும்தான் ஒரே வழி . நாம இதுவரைக்கும் எப்டி, படங்களைத் தேர்ந்தெடுப்போம் பாக்கறதுக்கு? நமக்குப் பிடிச்ச நடிகர், நடிகை, வில்லன், காமெடியன் அப்புறம் டைரக்ட்டர் மியூசிக் டைரக்ட்டர், கேமரா மேன், எடிட்டர் அப்புறம் ஜானர் இந்த மாதிரி நிறைய இருக்கிலையா? ஆனா ஹாலிவுட்ல மட்டும் அதுல ஒரு சின்ன விதிவிலக்கு – ஸ்டூடியோ எதுன்னு தேடிப் பாக்குற வகையும் அதுல முதன்மையானதா இருக்கும். அப்டி ஒரு புரடக்சன் தான் ‘ப்ளம்ஹவுஸ்’. இதுல வெளியாகற படங்கள் பெரும்பாலும் ஹாரர் அல்லது திரில்லர் வகையில தான்.
அப்டி இந்த வருசம் வெளியாகிருக்கற படம்தான் ட்ராப். கதைப்படி ஹீரோயின் வயலட், ஒரு சிங்கிள் மதர். அவங்களுக்கு நாலு அல்லது அஞ்சு வயசுல டாபின்னு ஒரு குட்டிப்பையன் இருக்கான். அவனைத் தன்னோட கீழ் வீட்டுல குடியிருக்கற தங்கச்சிகிட்ட பாத்துக்கச் சொல்லி விட்டுட்டு ஒரு டேட்டுக்கு கிளம்பறாங்க. அப்ப தான் பண்ணிருக்கற ட்ரஸ்ஸிங் சென்ஸ் கூட டேட்டுக்கு ஏத்ததா இல்லைன்னு அவங்களோட தங்கச்சிதான், வேற நல்ல ட்ரஸ்ஸா செலக்ட் பண்ணி, சேஞ்ச் பண்ணி அனுப்பி வைக்கறாங்க. ஏன்னா, வயலட்க்கு லைஃப்லயே இதுதான் முதல் டேட்.
ஹோல்டான். இப்ப படத்தோட ஆரம்பக் காட்சியில இதே வீட்டுல, வயலட்டை ஒரு சைக்கோ கொலைகாரன் கொல்லுறதுக்குத் துரத்துறான். அப்ப இவங்க தாறுமாறா முகத்துல உடம்புல எல்லாம் ரத்தக் காயங்களோட துப்பாக்கி முனையில தரையில விழுந்து கிடக்குறாங்க. அந்த சீன் சில வசனங்களோட மேற்கூறிய டேட்டுக்கு கெளம்பற சீனுக்கு மாறிடுது.
இந்த ரெண்டயும் ஏன் மாத்தி சொன்னேன்னா, கதையே அப்டித்தான். அந்த முதல் சீன், ஃப்ளாஸ்பேக்கா இல்ல ப்ரசண்டான்னு படத்த முழுசா பாத்தா மட்டுமே தெரிஞ்சிக்க முடியும். ஆனா அந்தக் காட்சியோட தொடர்ச்சி நான் லினியரா படத்துல அடிக்கடி தொடரும். இதுல ஒரு சிறப்பென்னன்னா, அந்த மொத்தக் காட்சியும் முடிஞ்சதுக்கப்புறம்தான், அந்த சைக்கோ யாரு, அது முன்னாடி நடந்ததா, இப்ப நடந்துகிட்டிருக்கறதான்னு தெரியவரும்.
அப்டி நாம இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலதான், அந்த டேட்டிங் சீனைப் பார்க்கறோம். இன்னொரு விசயம், இந்த மொத்தப்படமும் அந்த மிகப்பெரிய ரெஸ்டாரெண்ட்ல உள்ள சில டேபிள்கள்ல மட்டும்தான்.
இப்ப வயலட் தன்னோட டேட்டுக்கு கொஞ்சம் முன்னாடியே வந்துடறாங்க. அப்ப இருந்து இவங்களுக்கு, ட்ராப்னு ஒரு டேட்டிங் ஆப்ல இருந்து சில ரிக்வெஸ்ட்டுகள் வந்துகிட்டே இருக்கு. கூட சில மெசேஜ்களும். இந்த கேப்ல, இவங்களோட டேட், ஹென்றியும் வந்துடறாப்ல. அவரும் இதே ஆப் மூலமாத்தான் இந்த டேட்டுக்கு வந்திருக்கார். அவர் ஒரு போட்டோகிராபர்.
வயலட்டுக்கு டேட்டிங் ஆப்ல இருந்து சில மெசேஜ் வந்துட்டே இருக்குன்னு சொன்னேனில்லயா, இனி அதுதான் மொத்தப் படமும். ஆரம்பத்துல, அவங்களைக் கலாய்ச்சு வர்ற சில மீம்களாத்தான் ஆரம்பிக்கிது ஒரு அன்னவுன்கிட்ட இருந்து. இவங்களும் அதை யாரோ விளையாட்டுக்கு அனுப்பிட்டிருக்காங்கன்னு நினைச்சு சாதாரணமா நினைச்சுகிட்டிருப்பாங்க. அப்ப திடீர்னு ஒரு மீம்ல வயலட்ன்னு இவங்க பேர் மென்சன் பண்ணி ஒரு மீம் வரும். அப்பத்தான் இது அன்னவுன் இல்ல. இது வேணும்ன்னே யாரோ தெரிஞ்சவங்க பண்றாங்களா என்னன்னு கொஞ்சம் நெர்வஸாகறாங்க.
ஒருவேள தன்னோட தங்கச்சியா இருக்குமோன்னு நினைச்சு அவங்களுக்கு கால் பண்ணிக் கூட கேட்டுடறாங்க. ஆனா அவங்க இல்ல. சிலபல மெசேஜ்களுக்கு அப்புறம், இந்த மீம் மெசேஜஸ் இவங்கள மிரட்ட ஆரம்பிக்கிது. “இப்ப நீ உன் வீட்டு சிசிடிவியப் பாரு”ன்னு. மொபைல்ல சிசிடிவிய ஓபன் பண்ணிப் பாத்தா, அதுல அவங்க வீட்டுக்குள்ள ஒரு முகமூடி போட்ட ஒரு ஆள் கையில துப்பாக்கியோட நின்னுகிட்டிருக்கான், சிசிடிவி கேமராவ ஃபேஸ் பண்ணி.
அப்பத்தான் நமக்கும் இது எந்த மாதிரியான படம்னு கொஞ்சம் புரிய வருது. வயலட் 911க்கு கால் பண்ண ட்ரை பண்றாங்க. இதுக்கும் அவன்கிட்ட இருந்து மெசேஜ் வருது, “போலீஸுக்கு கால் பண்ணா உன் பையனும் சிஸ்டரும் காலி”ன்னு. அடுத்தடுத்து இவங்க யாரையாவது காண்டாக்ட் பண்ண முயற்சி செஞ்சா, ஹென்றிகிட்ட இந்த மாதிரி ஒருத்தன் மிரட்டிகிட்டிருக்கான்னு சொல்ல ட்ரை பண்ணா, அதுக்கும் அவன்கிட்ட இருந்து மெசேஜ், இதைப் பண்ணாத, பண்ணா பையனும் சிஸ்டரும் காலின்னு.
படம் பார்த்துகிட்டிருக்கற நமக்கே இப்ப என்னதாண்டா வழி? அவன் எப்டி எங்கயோ உக்காந்துகிட்டு இந்த ரெஸ்டாரண்ட் டேபிள்ல உக்காந்திருக்கறவ பண்றதெல்லாம் கரெக்ட்டா சொல்லிட்டிருக்கான்னு பாத்தா, அவங்க ரிசர்வ் பண்ண டேபிள்ல ஒரு மைக் செட் பண்ணிருப்பான் அந்த மிரட்டுறவன். அதே போல பாத்ரூம் போனாலும், அங்க இவன் சொல்ற டோரை மட்டும் தான் ஓபன் பண்ணனும், அங்கயும் மைக் வச்சிருப்பான். ஹேண்ட் வாஷ் பண்ற எடத்துல கூட. ரெஸ்டாரண்ட் சிசிடிவியையும் ஹேக் பண்ணி இவங்கள வாட்ச் பண்ணிட்டிருப்பான். வயலட் வசமா லாக். மூச்சு விடறதுன்னாக் கூட அவன் சொல்ற மாதிரி தான் மூச்சு விடனும். இப்ப அவன் சொல்லுற வேலைய செஞ்சுட்டு தப்பிச்சாங்களா இல்ல, வேற என்னதான் ஆனாங்க, இதுக்கு என்ன தாண்டா முடிவுன்னு நாம ஒவ்வொரு சீனுக்கும் நினைச்சுகிட்டிருக்கும் போதே படம் வேற மாதிரி எலவேட்டாகி, வயலெட் மாதிரியே நம்மளையும் லாக் பண்ணி முழுப்படத்தையும் பாக்க வச்சிடுது.
உண்மையிலயே திரில்லர் விரும்பிகளும், ப்ளம்ஹவுஸ் விசிறிகளும் தவற விட வேண்டாம்.
இல்ல இதுல ஆபாசக் காட்சிகள் எதுவும் இல்லைன்னாலும் சிறியவர்கள் தவிர்க்கவும். மிரட்டல், வன்முறைக்காட்சிகள் இருக்கு. அது நமக்கே காய்ச்சல் வர வைக்கிற மாதிரியெல்லாம் ஃபீல் பண்ண வைக்கும்ங்கறதால தான் சொல்லுறேன்.
ஹாட்ஸ்டார்ல இருக்கு. பார்த்துட்டு வாங்க. கொஞ்சம் சின்னப் படம் தான்.

No comments:
Post a Comment