ரேகை
அப்டின்னு ஒரு கிரைம் திரில்லர் வெப்சீரிஸ். நடிகர்கள்னு பாத்தா, எனக்குத் தெரிஞ்சு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல போலிஸா நடிச்ச விநோதினி மட்டுந்தான். மத்தவங்கெல்லாம் யாரு என்னன்னு நான் இப்ப வரைக்கும் கூகுள் கூட பண்ணல. அதனால, வெற்றின்னு ஒரு இன்ஸ்பெக்டர், சந்தியான்னு ஒரு லேடி கான்ஸ்டபிள், அப்றம் மற்றும் பலர்னு தான் சொல்லிக்கனும். சத்தியமா யாரு என்னன்னு ஒரு ஐடியாவும் இல்ல. இதுல மேற்கூறிய வெற்றி சந்தியா கூட டிவி சீரியல் ஆக்டர்ஸ்ன்னு நெனைக்கிறேன். மத்தபடி டைட்டில்லயே ராஜேஷ்குமார் நாவலைத் தழுவிய ரேகைன்னு தான் டைட்டில் கார்டே. அவர் மட்டும்தான் தெரிஞ்சவர். ஆக மொத்தத்துல நாவல படிக்கிறப்ப நாம அந்தக் கேரக்டர்ல இவர், இந்த கேரக்டர்ல அவர்னெல்லாம் நெனச்சுகிட்டு படிக்க மாட்டோம்ல, அப்டியே இந்த வெப்சீரிஸையும் எப்டி இருக்குன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி மொத்தமும் நான் லினியர்தான். ஆனா, நான் மொத எபிசோட் பாத்து முடிச்சப்புறந்தான் கண்டுபுடிச்சேன் அது ரெண்டாவது எபிசோட்னு. அப்பவே எனக்கு அதுக்கடுத்த எபிசோடைப் பாக்கனும்னு தான் ஆர்வமா இருந்தது. சரி பரவால்ல அப்டி எதையாவது மிஸ் பண்ணித் தொலைக்கப் போறோம்னு வம்படியா தான் மொத எபிசோடை, மொத எபிசோட்னு தெரிஞ்சே, மொதவாட்டி, மொத எபிசோடைப் பாத்தேன். சரி புரியுது. கடுப்பாகாதிங்க. திட்டாதிங்க. நான் முன்னாடி பாத்த ரெண்டாவது எபிசோட் முடிஞ்சப்பவே எனக்கு அடுத்தது என்னன்னு தெரிஞ்சிக்கனும்ங்கற ஆர்வம்தான் அதிகப்படியா இருந்தது. அதே மாதிரி முறைப்படி அதுக்கு முன்னாடி எபிசோடைப் பாத்ததும் எனக்கு அடடே இவ்வளவு விசயம் இருக்கான்னு ஒரு ஃபீல் கெடச்சது. திஸ் ஸ்டண்ட் இஸ் பர்ஃபார்ம்ட் பை எக்ஸ்பர்ட்ஸ். ப்ளீஸ் டோண்ட் ட்ரை திஸ் அட் ஹோம். ஆமா, நானே முதலும் கடைசியுமா இருந்துட்டுப் போறேன். நான் லினியர் கதையுள்ள ஒரு வெப்சீரிஸ ரேண்டமா பாத்தேங்கறதத்தான் சுத்தி சுத்தி எழுதிருக்கேன். மன்னிச்சிருங்க.
சில கதைகள பாக்கும் போது, இது இப்டித்தான் இருக்கும்னு ஆல்ரெடி நமக்குள்ள ஒரு ஃபீல் வரும் இல்லையா, அந்த மாதிரி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியல. ஏன்னா முதல் காரணம், இது வெப்சீரிஸ் மாதிரியே இல்லாதது. அடுத்து இதோட கலர் கிரேடிங். ரொம்ப சாதாரணமா இருந்தது. மேரேஜ் வீடியோல கூட கொஞ்சம் கலர் கிரேடிங் பண்ணுவாங்க. நாம எடுக்கற வீடியோக்களுக்குக் கூட இப்பெல்லாம் பல ஃபில்டர்கள போட்டுத் தாக்குறோம். இதுல அப்டி எதும் பண்ணல போல. ரிச் லுக் இல்ல. அப்றம் அது ஒது பெரிய குறையா தெரியல. பாக்கப் பாக்க அதுவே பழகிருச்.
கதைப்படின்னு சொல்லிட்டு கதையப் பத்தி சொல்லவே இல்ல. சரி. இப்ப கதைப்படின்னு சொல்லிட்டு கதைப்படி... லைஃப்ல ரொம்பக் கஷ்டப்பட்டுகிட்டிருக்கற நாலு இளைஞர்கள் தற்கொலை. போலிஸ் விசாரணை. அது தற்கொலையல்ல கொலைன்னு தெரிய வருகிறது. அப்புறம், அது எப்டின்னு கூட தெரிஞ்சிக்கிறாங்க பேசிக்கலான விசாரணைய வச்சு. நாலு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தொடர்பில்லாதவங்க. இதுல சிலர் கல்யாணமானவங்க. சிலர் பேச்சிலர்ஸ். எல்லாத்தையும் இணைக்கிது ஒரு டாஸ்மாக் பார்னு நெனப்போம். ஆனா அந்த சீன் ஜஸ்ட் லைக் தட்னு நம்மளக் கடந்து போயிடும். இன்ஃபாக்ட் அங்க ஒன்னுமே நடக்கல. ஆனா எல்லாத்தையும் கண்டுபுடிக்கிற எடத்துலதான் எல்லாமே பெருசா நடக்குது. ஆமா, போலிஸ் ஸ்டேசன்ல இன்ஸ்க்கும் லேடி பி.சிக்கும் லவ்ஸு. ஆனா நான் அத சொல்லல. சாரி. சொல்லல சொல்லலன்னு சொல்லிட்டே இருக்கேன். இல்ல நான் அதச் சொல்லல. கண்டுபுடிக்கிற எடம்னு சொன்னது வேற எடம்.
அடுத்தது ஏன் இப்டியெல்லாம்னு ஒரு கேள்விக்கான விடைதான் மூத்த எபிசோடுகளெல்லாம். சிம்பிளா சொன்னா, சரியா நறுக்கிருந்தா சிக்குன்னு ஒரு கிரைம் திரில்லர் படமாவே எடுத்திருக்கலாம். அந்த ஹூடன்னிட் ஆஸ்பெக்ட் அப்டி. ஆனாலும் ஒரு கிளிப்ஹேங்கர் வச்சு, ஹூடன்னிட் வில் ரிட்டர்ன் இன் டூம்ஸ்டேன்னு போடாம நம்மள வாயப் பொளக்கப் போட்டதுதான் அடங்கொன்னியான்னு இருந்தது. எப்டியிருந்தாலும் அது ஐ.எஸ்.டி காலர்தான். லோக்கல் கால் இல்ல. ஆக இதுவரைக்கும் இந்த சீசன்ல காட்டாத ஒருத்தரைத்தான் அடுத்த சீசன்ல வில்லனா காட்டனும்.
ஒருத்தன தொரத்திட்டே போவாங்க. புடிச்சிடுவாங்க. ஆனா அவன புடிக்கறதுக்கு ஜஸ்ட் முன்னாடிதான் முடிச்சிருப்பாங்க. டுஸ்ட்டு. ஆனா இதுல பெரிய ட்விஸ்ட்னு பாத்தா டேய் நீயெல்லாம் டிரைவரான்னு தான் ஃபீலாகும். சரி சரி கோச்சுகாதிங்க. வொர்த்துதான் பாக்கலாம் பாருங்கன்னு சொல்லலாம்தான். ஆனா பாருங்க, இந்த சீரிஸ கடைசியா பாத்ததே நானாத்தான் இருப்பேன். இது வந்து ஜீஃபைல ரிலீஸாகி எல்லாரும் பாத்து எழுதித் தள்ளின வெப்சீரிஸ்தான். பரவால்ல. இதுக்குப் பின்னாடி வர்ற சந்ததிகள், இதப் படிச்சு, அதப் பாத்து சிலாகிப்பாங்கங்கற உணர்ச்சி மிகுதில எழுதிட்டேன். இதெல்லாம் நம்ம கடமையில்லையா! நமக்குக் கடமைதான முக்கியம். நானொரு கடமை தவறாத வலைப்பதிவரில்லையா!
No comments:
Post a Comment