Monday, January 5, 2026

DRIVE - பாதி ரூட்டுப் பயணம்

Drive

அப்டின்னு ஒரு பாதி வழிப் பயணம். தெலுங்கு டப்பிங் தான், ஆனா மசாலான்னு சொல்லிக்க முடியாத இனஞ்சேராத ஒரு படம். பொதுவா ஒரு தெலுங்குப் படம்ன்னா இப்டித்தான் இருக்கும்னு ஒரு கிளிஷே இருக்கில்லையா, அப்டியெல்லாம் எப்டியுமே இல்லாம இருந்த ஒரு படம். சரி வாங்க வந்து வண்டியில ஏறுங்க. போற வழியில படத்தப் பத்தி பேசிட்டே போவோம்.

கதைப்படி ஆதி ஒரு பெப்பெரிய பணக்கார இவர். மீடியா கம்பெனி வச்சு நெனச்ச நேரத்துல நெனச்ச நாட்டுக்கு தப்பச்சுப் போகக் கூடியளவுக்குப் பணக்காரர். அவருக்கு மடோனா செபாஸ்டியன் வொய்பா இருக்காங்க. அப்பப்ப ஃபோன்ல ஹலோ சொல்லுவாங்க. அவ்ளோதான் அவங்களுக்கு சீன்ஸும் டயலாக்ஸும். படம் ஆரம்பத்துலயே ஒரு பேட்டியில ஆரம்பிக்கிது. ஆதிகிட்ட அவரோட மீடியா கம்பெனி மூலமா எப்டியெல்லாம் நாட்டுக்கு நல்லது பண்றாரு, யார்லாம் அவர் சம்பந்தப்பட்டவங்கன்னு, அந்தப் பேட்டிய வச்சே கதைக்குள்ள நம்மள இழுத்துருவாங்க. என்ன இருந்தாலும், இதெல்லாம் அஃபென்ஸ்ல தான வருதுன்னு நாமளே ஒரு அட்வகேட்ட கூட வச்சுகிட்டு டவுட் கிளியர் பண்ணிக்கிறளவுக்கு தப்புகளா பண்ணி வச்சுகிட்டு எல்லாம் பணத்தையும் மீடியாவையும் வச்சிக்கிட்டு கித்தாப்பா திரியிற ஒரு நெகட்டிவ் கேரக்ட்டர் தான் ஆதி. இவ்ளோலாம் பண்ணீட்டு அவ்ளோ அசால்ட்டா வெளிநாட்டுக்கு ஓடிப் போய்ட்டா மட்டும் வுட்ருவமான்னு ஒரு ஹேக்கர் அவனோட வரி ஏய்ப்பு சொத்துக் குவிப்பு விவரங்கள ஆதிய லைன்ல வச்சுகிட்டே அம்பலப் படுத்துறான் ஒரு ஹேக்கர்.

பாஸ், நம்புங்க இந்தக் கதைப்படி இந்த ஹேக்கர் தான் ஹீரோ. ஆனா ஆதியதான் ஹீரோவா நம்பி இந்தப் படத்தப் பாத்தேன். ஆதி ஃபேஸ் இதுல ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே. மத்தபடி படத்துல வில்லன்னா அது ஆதிதான். எல்லாத் தப்பையும் நீங்கதான் பண்ணீங்க அப்டின்னு, சந்தோஷ், சுப்ரமணியத்துகிட்ட சொல்ற ஜெயம் ரவி வாய்ஸ் கேக்குதாம். அவ்ளோ நல்ல நல்லவரு நம்ம ஆதி.

இப்ப அடுத்த முக்கிய கதாபாத்திரம்ன்னா அது அந்த ஹேக்கர்தான். அவரும் புரடக்சன்ல கொடுத்த முகமூடியப் போட்டுகிட்டு, ஆதியோட நம்மளயும் திகிலடைய வச்சிருக்காரு. கடைசி வரைக்கும் அந்தக் கேரக்ட்டர்ல அவர்தான் நடிச்சாருன்னு சொல்லிக்க முடியாது. அந்த உடல்வாகுள்ள யார் வேணும்ன்னாலும் அந்தக் கேரக்ட்டர்ல நடிச்சிருக்கலாம்ங்கறது படம் எடுத்தவங்க ரிவீல் பண்ண வேண்டிய சங்கதி. எனக்கு ஏன் அப்டி தோனிச்சின்னா, அதுக்கு வாய்ப்பிருக்கும்ன்னு படம் பாக்கறப்பவே ஹெவிய்யா ஃபீலாச்சு.

அடுத்ததா ஏன் அப்டிங்கற கேள்வி. அதுதான் படத்துல நாம எதிர்பார்த்துகிட்டிருந்த ஒரு முக்கியமான காரணி. இவ்ளோ அடி வாங்கறான்னா பெருசா எதோ பண்ணி அதால எவனோ முக்கியமா பாதிக்கப் பட்டிருக்கானாட்ருக்குதுன்னு நமக்கெல்லாம் தோன வச்சதுல ஜெயிச்சிருக்காங்கன்னு தான் சொல்லனும். ஆனா அது ஏத்துக்கும்படியா இருக்கா இல்லையான்னு படம் பாக்கற நாமதான் முடிவு பண்ணிக்கனும். உண்மையில, அது அப்டித்தான் இருக்கு. ஆனா நமக்குத்தான், ஓ அவன் இதெல்லாம் பண்ணிருக்கான்னா, அவன சும்மா விடக்கூடாது. அவன விடாதீங்க, புடிச்சிக் கொல்லுங்கன்னு சொல்லவும் வைக்கல. அதுல விக்டிமா இருந்தவங்க மேல பரிதாபமும் வரலங்கறதுல ஹெவியா மிஸ் பண்ணி தோத்துட்டாங்கன்னு தான் சொல்லனும்.

மொத்தத்துல வில்லனா வந்தவன் வில்லனில்ல ஹீரோ. ஹீரோவா வந்தவன் ஹீரோ இல்ல வில்லன். ஹீரோ மேல பரிதாபமும் வரல. வில்லன் மேல கோபமும் வரல. இது உல்ட்டாவா போனதுதான் படத்துல உள்ள மிகப்பெரிய பிரச்சினையே. எக்சிக்யூசன் பிராப்ளம் லேது, கேஸ்ட்டிங் பிராப்ளம்.

மத்தபடி படம் பல டாலர்களுக்கு வொர்த்துதான். மர்டர் மிஸ்ட்டரிதான். ஆனா ஹூடன்னிட் இல்ல. ஆனாலும் ஹூ டூயிங் இட் தான்! பாருங்க பதிவு புரியும்.

வர்ட்டா!

No comments:

Post a Comment