Wednesday, January 7, 2026

Eko - நாய்கள் (ஓனர்) ஜாக்கிரதை

Eko

அப்டின்னு ஒரு திரில்லர் படம். நடிகர்கள்னு பாத்தா வினீத் அண்ட் நரேனைத் தவிர வேற யாரையும் சுத்தமாத் தெரியாது. மத்தபடி மலையாளத் துணை நடிகர்கள் நிறைய நடிக்கத்தான் செஞ்சிருக்காங்க. உண்மையில இந்தப் படத்தை எகோன்னு சொல்றத விட நாய்கள் ஜாக்கிரதைன்னு தான் சொல்லனும். வாங்க எப்டி இருக்குன்னு பார்க்கலாம்.

கதைப்படி ஒருத்தரை ஆளாளுக்குத் தேடறாங்க. அவர் பேரு குரியச்சன். ஏன் தேடறாங்கன்னா பழி வாங்கத்தான். அதாவது அடிச்சுக் கொல்றதுக்கு. அவ்ளோ பேர்த்த யூஸ் பண்ணியிருக்காரு தன்னோட சுய லாபத்துக்காக. அதனால பாதிப்படைஞ்சவங்க எல்லாரும் அவரைப் போட்டுத் தள்ளியே ஆகணும்னு தேடறாங்க. அதுல ஒருத்தர்தான் வினீத். அவர் வந்ததும், ஆகா கதையில இனி பாருங்க எதோ பெருசா நடக்கப் போகுதுன்னு பாக்க வச்சது என்னமோ உண்மைதான். அதெல்லாம் கேஸ்ட்டிங் மேல உள்ள நம்ம எதிர்பார்ப்புனாலதான். அப்புறம் அவரும் காணாமப் போறாரு. இத்தனைக்கும் குரியச்சன் கூடவே பல காலம் மலேசியாவுல போர் சமயத்துல நாய் பிஸ்னஸ் பண்ணிட்டிருந்தவரு. ஆனா இதுல நாய்களைப் பத்தி நல்லா தெரிஞ்சவர்ன்னா அது குரியச்சன் தான். அங்கயும் வினீத் ஒரு டம்மி தான்.

அடுத்ததா நரேன் வர்றாரு. அவரும் தடால் புடால்னு என்னென்னமோ பண்றாரு. அவரும் கடசீல டம்மிதான். வினீத் அளவுக்கு டம்மின்னு சொல்லிக்க முடியாது. இவர் கொஞ்சம் கெத்துக் காட்டிட்டு டம்மியாகி ஆஃப் ஆகிடுவாரு. இதுல ரெண்டு பேரும் குரியச்சன் குரியச்சன் மிலாத்திகிட்ட வந்து ரொம்ப கொடயறாங்க. இதுல மிலாத்தி தான் குரியச்சனோட மலேசியா மனைவி. மத்தபடி அவருக்கு இன்னும் பல மனைவிகள் ஊருக்கொன்னு இருக்கறதா ஒரு பேச்சு இருக்கு. உண்மையில படத்துல எல்லாமே பேச்சு தான். பேச்சு பேச்சு பேச்சு ஓயாத பேச்சு. ஆனா அந்தப் பேச்சுதான் கதைய நகத்திகிட்டு போய்கிட்டே இருக்கு. ஒரு கட்டத்துல 'என்னது படம் முடியப் போகுதா'ன்னு கூட எனக்கு ஃபீலானதென்னமோ உண்மை தான். இந்தக் கதையில சொல்லப்படற பெரும்பால குரியச்சனோட சம்பவங்கள் எல்லாமே பேச்சு வழியாதான் நமக்கு உணர்த்தப்படுது. இந்த டெக்னிக்ல தான் பெரும்பாலான மலையாளப் படங்கள்ங்கற வண்டி ஓடிட்டிருக்கு. ஏன்னா பட்ஜெட்க்குள்ளயும், வெறும் பேச்சாலயுமே நம்மள மெரட்டி வுட்ருவாங்க

அடுத்து மிலாத்தி. அது மலேசியாக்காரின்னு கூப்ட ஆரம்பிச்சு, கடைசில அது மிலாத்தின்னு வழுவி வந்த பேரு. உண்மையில அவங்க பேரென்னன்னு கூட யாருக்கும் தெரியாது. ஐ மீன் படத்துல. நிஜத்துல zhifeii இந்தப்படத்துல ரெண்டு விசயங்கள் யாருக்குமே தெரியாது. ஒன்னு மிலாத்தியோட நிஜப்பெயர். ரெண்டாவது குரியச்சன் எங்கிருக்காரு. முதல் விசயம் கதையில வரும். நாம தெரிஞ்சிக்கவும் செய்வோம். ஆனா, அது பெரிய விசயமே இல்ல. ஆனா குரியச்சன் எங்கங்கற தேடல்லதான் மொத்தக் கதையும் நகர்ந்துகிட்டிருக்கும். படம் முடியும் போது அது ஒரு மிஸ்டரி ஃபீல் கொடுக்கத் தவறவே இல்ல. உண்மையில இந்தப் படத்தோட ஒளிப்பதிவும், அதோட பின்னணியும் அவ்வளவு இயல்பாவும், சிறப்பாவும் அமைஞ்சிருக்கறதுதான் படத்துல இருக்கற மிகப்பெரிய கூட்டல்புள்ளியே!

அதுக்கும் மேல ஒரு சிறப்பம்சம் என்னன்னா, அது மிலாத்தியா நடிச்சிருக்கற நடிகை. அவங்க இந்தியாவுக்கே புதுசு. அவங்க ஒரு மலேசிய மாடல். ஆனா இதுல இளமைக்கால மிலாத்தியாவும், வயசான கெட்டப்ல இந்தியன் சுகன்யா மாதிரியான கெட்டப்லயும் நடிச்சிருக்கறது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது. அதனாலன்னு இல்லன்னாலும், இந்தப் படத்துல வர்ற பல மலாய் வசனங்களுக்காக சப்ட்டைட்டிலோடவே பாருங்க. அது ஒரு கட்டாயப் பரிந்துரையா இப்பவே சொல்லிக்கிறேன்.

அடுத்து இந்தப் படத்துல வர்ற இன்னொரு சில முக்கியமான ஆள்ன்னா அது மிலாத்திக்கிப் பணிவிடை செய்யிற நர்ஸ் கம் வீட்டு வேலைக்காரன் பியூஸா நடிச்சிருக்கற நடிகர்தான். அவர்தான் பெரும்பாலானா ஸ்கிரீன் ஸ்பேஸ் உள்ள நடிகர். அவருக்கடுத்தபடியா படத்துல பெரும்பாலான ஸ்கிரீன் ஸ்பேஸ் உள்ளது மிலாத்தி வீடுகளைச் சுத்தி உள்ள நாய்கள்தான். அதுதான் கதையே. அதைப் படத்தைப் பாத்தா புரிஞ்சிக்குவீங்க.

படத்தோட ஜியாக்ரஃபிக்கல் அமைப்பு எனக்கு இலவீழா பூஞ்சிராவ ஞாபகப்படுத்தினதத் தவிர்க்க முடியல. அந்த வீட்டை வச்சு நம்மள பயமுறுத்தறது டைரக்டரோட எண்ணமில்ல. அதுக்காக அந்த வீட்டை ஒரு பேய் வீடு மாதிரி பயங்கரமாக் கூட காட்டிருக்கலாம். ஆனா அப்டியெல்லாம் எதுவும் பண்ணாம இயல்பான ஒரு வீட்டை வடிவமைச்சு அதுல சில கதாபாத்திரங்கள உலவ விட்டு, அந்த வீட்டோட அமைப்பு கூட படம் முடியும் போது நமக்கு ஒரு அழகான இடம் மாதிரி மனசுல தோன வச்சதெல்லாம் பாராட்டியே ஆகணும்.

நாய்கள் ஜாக்கிரதைன்னு ஆரம்பிச்சு கடைசில கள யதார்த்தமான நாய்களோட ஓனர் ஜாக்கிரதைன்னு கதைய முடிச்சதெல்லாம் வேற லெவல். ஏன்னா அதான் உண்மை. நாய்கள விடக் கொடுமையான ஆளுங்கன்னா, அதை வளர்த்துகிட்டிருக்கறவங்கதான். எனக்கு நாய்ன்னாலும் அலர்ஜி, அதை வளர்க்கறவங்கன்னாலும் அலர்ஜி.

இதையெல்லாம் விட எண்ட் பன்ச்சா ஒரு டயலாக் வரும் படத்துல. அதை முடிஞ்சளவுக்கு தமிழ்ப்படுத்தி சொல்ல ட்ரை பண்றேன். சில சமயங்கள்ல கட்டுப்பாடும், பாதுகாப்பும் பாக்கறதுக்கு ஒன்னு மாதிரிதான் இருக்கும். இந்த க்வோட்ட வச்சு அதகளம் பண்ணதுதான் மொத்தக் கதையும்.

செம கதை, செம படம்ங்க!

No comments:

Post a Comment