Friday, February 13, 2026

Taskaree: The smugglers web


Taskaree: The smugglers web

அப்டின்னு ஒரு அயன் பட சங்கதிகள் நெறஞ்ச ஒரு நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸ். நடிகர்கள்னு பாத்தா கஸ்டம்ஸ் அதிகாரியா அர்ஜுன் மீனாவா நடிச்சிருக்கற இம்ரானைத் தவிர யாரையும் தெரியாது. ஆனா இந்த சீரிஸ் பாத்து முடிக்கிறப்ப நிறைய கேரக்ட்டர்கள நியாபகத்துல வச்சுக்கலாம். அப்டி என் மனசுல நிக்கிறதுல ரொம்ப புடிச்சவங்களும் இந்த லிஸ்ட்ல வருவாங்க. சரி அப்டி என்னவெல்லாம் இந்த சீரிஸ்ல இருக்குன்னு பாத்துடலாம் வாங்க.

கதைப்படி, மும்பை விமான நிலையம் பலவிதமான ஸ்மக்லிங்க்கும் பேர் போனதா கதை ஆரம்பிக்கிது. சத்தியமா நான் அந்த வழியா பறந்ததே இல்ல. அதனால அதெல்லாம் தெரியாது. கதைக்காக அப்டியா இல்ல நெசமாவே அப்டித்தானான்னு எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபுடிக்க முடியாம பலவிதமான வெளிநாட்டுப்பொருட்களும், போதை வஸ்துக்களும், தங்கங்களும் கடத்தப்படறதால அரசாங்கத்துக்கு பல கோடிகள் வருமான இழப்பு. இதுக்காக ஒரு துடிப்பான இளம் அதிகாரிய நியமிக்கிறாங்க. அதுல அவர் ஒரு புது டீம் ஒன்னை, பல பழைய சஸ்பெண்டான கஸ்டம்ஸ் அதிகாரிகள ஒன்னு சேர்த்து உருவாக்கறாரு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம், ஆனா அவங்கள எல்லார்த்தையும் ஒன்னா இணைக்கறது அவங்க எல்லாருமே நேர்மையான அதிகாரிகள்ங்கறதுதான். அதனாலதான் சஸ்பெண்டாகி இருந்தாங்க. இப்ப மறுபடியும் போஸ்ட்டிங்ல வந்த பின்னாடி அவங்க பக்குவம் அவங்க வேகத்தை விட அதிகமா இருக்குமில்லையா. அதைக் கொஞ்சம் இன்னும் நல்லா காட்டிருக்கலாம். ஆனாலும் அது ஒரு பெரிய குறையா தெரியல. அந்தந்த சிச்சுவேசனுக்கு, அந்த கேரக்ட்டர்ஸ் அந்த சமயங்கள்ல ரியாக்ட் பண்றதுதான் நம்மள அடுத்தது என்னன்னு நினைச்சு அதுக்கான விடையா ஒரு சர்ப்பிர்ரைசிங்கான ஒரு விசயத்த நமக்கு கொடுத்தாலோ, அச்சச்சோ அப்றம் என்னாச்சுன்னு கண்ணகல வச்சாலோ அந்த வெப்சீரிஸ் சக்சஸ்ன்னு அர்த்தம். அந்த வகையில இந்த சீரிஸ் ஜெயிச்சிருச்சு.

அர்ஜுன் மீனாவா நடிச்சிருக்கற இம்ரான் ஹஸ்மி, இதுல அவர்தான் ஹீரோ. அவரோட டீம்ல உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளா சிலர் நடிச்சிருக்காங்க. அதுல நாலு பேர் உண்மையிலயே மனசுல நிப்பாங்க. அதுல குஜ்ஜர்னு ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி. விட்டா அவன் இம்ரானைத் தூக்கி சாப்ட்ருவான்னு அவனுக்கு வச்சிருந்த லவ் போர்சன்லயும் சரி, ஃபைட் சீன்லயும் சரி மொக்கையாக்கி பொட்டுன்னு போட்ருவானுக. ஆனா உண்மை என்னன்னா, இம்ரான் கேரக்ட்டரை விடவும் இது சிறப்பா அமைஞ்சதுதான் அவங்களே எதிர்பார்க்காதது.

அடுத்ததா மித்தாலின்னு ஒரு பெண் கஸ்டம்ஸ் அதிகாரி. மித்தாலி, அர்ஜுன் மீனா மற்றும் குஜ்ஜரை விடவும், டக்குன்னு ஆக்சன்ல எறங்கற கேரக்ட்டர். அதை இன்னும் கொஞ்சம் ஷ்பெசலா ட்ரீட் பண்ணிருந்திருக்கலாம். ஆனா பத்துல ஒன்னா போயிட்ட மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. லைட்டா ஒரு எடத்துல அம்மா செண்டிமெண்ட் கொண்டு வந்தாங்க. அதை ஒன்னுமே இல்லாம கொண்டு போன மாதிரி ஒரு ஃபீல். அது கடந்து போயிடும்.

இது போக, சவுத்ரின்னு ஒரு சிண்டிகேட்டையே நடத்திகிட்டிருக்கற ஒரு வில்லன். அதுவும் ட்வின்ஸ். ஆதுவும் சப்பையா ஒன்னுமே இல்லாம போன ஒரு சமாச்சாரம் அது. ஏதுக்கு ட்வின்ஸ். கெட்டவனா இருந்த அண்ணனை இழந்துட்டு, நல்லவனா இருந்த தம்பி கெட்டவனா மாறிடுவான். ரெண்டு பேர்த்தோட பேரும் சவுத்ரிங்கறதாலயும் உருவ ஒற்றுமை இருக்கறதாலயும் யாருக்கும் அவங்க ட்வின்ஸ்ங்கற சமாச்சாரம் தெரியாதாம். ஆத்தாடி செம பயந்து வெலவெலத்துப் போயிட்டேன். செம ட்விஸ்ட்டுங்!

அடுத்து பிரியான்னு ஒரு அண்டர்கிரவுண்ட் ஸ்பை. இவங்கதான் ஹீரோயின். உண்மையில மாஸ் ஹீரோ பில்டப் மட்டுந்தான் மிஸ்ஸிங் மத்தபடி ட்விஸ்ட் எல்லாமே இவங்களுக்குன்னே எழுதிருப்பாங்க போல. இதே மாதிரி குஜ்ஜருக்கும் எழுதிருக்கலாம். ஆனா பரவால்ல. பிரியாவோ அழகுக்கு முன்னாடி குஜ்ஜரா முக்கியம்னு லெதார்ஜிக்கா விட்டுட்டாங்க போல. ஆனா இதுல பிரியா அழகுங்கறது மட்டும் ஒத்துக்கலாம்.

அயன் மாதிரி இருக்குன்னு எழுதிருந்த பதிவை வச்சுத்தான் இதைத் தேடிப் போய் பாத்தேன். ஆனா அயன் கிட்டயெல்லாம் நெருங்கக் கூட முடியாது. அதெல்லாம் அப்டித்தான். ஆனா இதுவும் ஒருவகையில செமியாத்தான் இருக்கு. சவுத்ரிய இன்னும் நச்சுன்னு எழுதிருந்தா கதை இன்னும் செமயா இருந்திருக்கும். அங்கதான் கோட்டை விட்டுட்டாங்க. பில்டப்னு நெனச்சு எழுதினது எல்லாமே பெருசா எடுபடல. டெரரா காட்டனும்னு சவுத்ரி ஒருத்தன கொடூரமா கொல்ற மாதிரி காட்டிருப்பாங்க. அதுக்கு ஏன் மியன்மார்க்காரன புடிச்சாங்கன்னு தெரியல. அதுக்கும் ஒரு இந்தியனைக் கொல்ற மாதிரி எடுத்திருந்திருக்கலாம். அடிச்சிக் கொல்ற சீன். நமக்குத்தான் பயம் வரல. பயங்கரமா காட்டனும்னு நெனச்சு எழுதியிருக்கலாம். வில்லன் ஒருத்தன கொல்ற மாதிரின்னு மட்டும் எழுதிட்டு யாரைக் கொல்லனும்னு நினைக்கறப்ப, அவன் இண்டர்நேசனல் ரெவுடிங்க. அதனால வெளிநாட்டுக்காரன் ஒருத்தனைக் கொல்லலாம்னு காவு கொடுத்துட்டாங்க போல.

அவ்ளோதான் மேட்டர். பெருசா இருக்கும்னு நெனச்சுப் பாக்காதிங்க. டைம்பாஸ் பண்ணலாம்ன்னா மட்டும் பாருங்க.

No comments:

Post a Comment