காளிதாஸ் 2
அப்டின்னு ஒரு கிரைம் திரில்லர் தமிழ்ப்படம். நடிகர்கள்னு பாத்தா, பரத், பவானி ஸ்ரீ, சங்கீதா (பூவே உனக்காக), பிரகாஷ்ராஜ், கிஷோர், அபர்ணதி நடிச்சிருக்காங்க. இந்தப் படம் பார்த்த அனுபவம் எப்படி இருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி பரத் ஒரு இன்ஸ்பெக்டர். அது போன முதல் பாகத்துலயே தெரிஞ்சது தான். ஆனா இதுல அவ்ளோ முறுக்கில்லாம, கொஞ்சம் பவ்யமா நடிச்ச மாதிரிதான் ஃபீலாச்சு. உண்மையில, போலிஸ்க்குண்டான அந்த மிடுக்கும் தோரணையும் சத்தியமா மிஸ்ஸிங். பவானி ஸ்ரீ அசிஸ்டண்ட் கமிஷனர்ங்கறதால அவர் அடக்கி வாசிக்கிறார்னு எடுத்துகிட்டாலும், தொட்டதுக்கெல்லாம், பரத் மேல எரிஞ்சு விழுகறதாகவும், ஒரு மாதிரி திமிராவும், அதிகாரத் தொனியோடயும் நடிச்சிருக்காங்க. அதாவது இதெல்லாம் பரத்கிட்ட மட்டும். உண்மையில அந்த போலிஸ் தோரணையோட நடிச்சிருக்கறது பவானி ஸ்ரீ தான். பரத் இல்ல. அவர் எதோ ஏ.சியோட வீட்டு எடுபுடி மாதிரி தான் பம்முறாரு.
கதைப்படி ஒரு நியூ இயர் செலிப்ரேசன்ல ஒரு மூனரை வயசுப் பாப்பா மிஸ்ஸிங். அதுதான் கதையே. அந்தக் கொழந்தைக்கு என்னாச்சுங்கறது கதையில்ல. எப்டி ஆச்சு அண்ட் யாரால ஆச்சுங்கறதுதான் கதை. யெஸ் இது ஒரு ஹூடன்னிட் வகைப் படம் தான். ஆனா அதை எடுத்த விதம் தான் கொஞ்சம் நெளிய வைக்குது. உண்மையில இதுக்குன்னு ஒரு தனித் தலைப்பு வச்சு ரிலீஸ் பண்ணிருக்கலாம். காளிதாஸ் ஃப்ரான்ச்சைஸைக் கேவலப் படுத்தியிருக்க வேணாம். காளிதாஸ் உண்மையில நல்லாருக்கும். எங்கேஜிங்காவும் சொல்லிக்கிற மாதிரியும் இருந்தது. ஆனா இதை ஏன் காளிதாஸ் ரெண்டுன்னு போட்டு ரிலீஸ் பண்ணனும்ன்னு பாத்திருக்காங்கன்னா, எல்லாம் மார்க்கெட்டிங் பண்ணி நம்ம தலையில இந்த காளிதாஸ் 2ங்கற மொளகாய அரைக்கிற ஸ்கேம் தான் அவங்க ஐடியா.
எல்லாம் நல்லாவே தான் போயிட்டிருந்தது. கிளைமேக்ஸ்ன்னு ஒன்னு வர்ற வரை. கிளைமாக்ஸ் பத்தி நான் இங்க சொல்லல. அத விட்டுட்டு சங்கீதா பக்கம் ஒதுங்குவோம். அதாவது இது டைரக்ட்டர்கிட்ட கேக்க வேண்டிய விசயம். அதாவது, சங்கீதா மாதிரி ஒருத்தர கேஸ்ட் பண்ணிட்டிங்க. அதுக்கு எதாவது ஒரு வலுவான காரணம் இருக்கனும்ல, இருந்துச்சா? இது அவங்களுக்கு ரீ எண்ட்ரி கிடையாது. போன வருசமே ஒரு மலையாளப் படத்துல போலீஸா ரீ எண்ட்ரி பண்ணிட்டாங்க. அது எவ்ளோ சிறப்பா இருந்தது. ஆனா இது? அந்த கதாபாத்திரத்துக்கு மொதல்ல சங்கீதா தேவையே இல்ல. அபார்ட்மென்ட் செகரட்டரி வரைக்கும் ஓக்கே. அதுக்கு மேல அவங்களக் கூப்ட்டு வந்து அசாசினேட் பண்ண மாதிரிதான் இருந்தது அந்தக் கேரக்ட்டர். அவங்க கதை கேட்டுத்தான் நடிச்சிருப்பாங்கன்னாலும், அவ்ளோ வெய்ட்டா இல்லன்னு சொல்றத விட வேஸ்ட் கேரக்ட்டர். அதுக்கு எப்டி அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னு தான் புரியாம கேக்கறேன். சமீபத்துல கவுசல்யா ரீ எண்ட்ரியா ஒரு படம் நடிச்சிருந்தாங்க. அதை ஏத்துக்கற மாதிரி இருந்தது. ஆனா இது என்ன மாதிரி இருந்ததுன்னு உங்களுக்கு டைம் பாஸா இந்தப் படத்தைப் பாக்கறப்ப பாத்து தெரிஞ்சிக்கோங்க.
சரி ஸ்பாய்லிங்கா ஒரு விசயம். உண்மையில அது ஒரு கொலையே இல்ல. விபத்து. அதை அப்டியே விட்ருக்கலாம். ஆணியே புடுங்கியிருக்க வேண்டியதில்ல. அந்தக் கொலையே ஒன்னுமில்லாம போனதுக்கப்புறம், அதைத் தொடர்ந்து அதை மறைக்கறதுக்காகப் பண்ற கொலைகள் எல்லாம், டேய் டேய் எல்லை மீறிப் போறீங்கடான்னு தான் தோனுச்சு. இதுல அதை மறைக்க தற்கொலை வேற. என்ன சேக்ரிஃபைசா இல்ல சேக்ரிஃபைசான்னு கேக்கறேன்? என்னத்தையோ என்ன கருமத்தையோ கொலைன்னு எடுத்து வைங்க. ஆனா சின்னக் கொழந்தைங்கள கொல்ற மாதிரியெல்லாம் படம் எடுக்கறத தவிர்க்கலாமே ப்ளீஸ். அந்தக் கொழந்த வளந்து தடிமாடானாதுக்கப்புறம் கொல்லுங்களேன் என்ன பிரச்சினை? அப்டித்தான் இதுல ஒரு தடிமாடு சுத்துது. அதுதான் கொன்னுச்சுன்னு அரெஸ்ட் பண்றாய்ங்க. பிரகாஷ்ராஜ் வந்து காப்பாத்தி கூட்டிட்டு போறாரு. சரி அதுக்குத்தான் சரியானா ஆதாரமில்ல. அடுத்து ஒரு கொலையை அவந்தான் பண்றான்னு ஆடியன்ஸுக்கு தெளிவா வாலி படத்தோட போட்டுக் காட்டிட்டு அதுலயும் ஆதாரமில்லன்னு கிஷோர் வந்து காப்பாத்தி வுடுறாரு. சரி அடுத்து ஒருத்தனக் கொல்ல கண்டிப்பா வருவான்னு தத்தி ஏ.சி பவானி ஸ்ரீயே சொல்லுது. அப்பவாச்சும் புடிப்பானுகன்னு பாத்தா, இந்த வாட்டி காளிதாஸே நேர்ல வந்து அந்தப் பக்கம் போகாத, ஆவாஸ் அஞ்சிங்னு காப்பாத்தி வுட்டுட்டுப் போறாரு. கடைசில ஹூடன்னிட் வகைப் படம் ஸ்டீவன் எப்டிப்பட்ட நல்லவன் தெரியுமான்னு எடுத்த டாக்குமெண்டரி மாதிரி ஆகிருச்சு. காளிதாஸ் முதல் பாகத்துல ஹீரோயின் மாதிரி வெய்ட்டான ஒரு கேரக்ட்டரை வச்சு சம்பவம் பண்ணிட்டு, அதே படத்தோட ரெண்டாவது பாகத்தை அதுக்கு மேல எதாவது ஒரு கேரக்ட்டரை வச்சு சம்பவம் பண்ணியிருக்க வேணாமா?
படத்துல எந்த எடத்துலயும் ஒரு வலுவான அடித்தளமே இல்ல. ரெண்டு மூனு எடத்துல காண்ட்ரவர்சியான சில விசயங்களக் கொண்டு வந்து அதை அப்டியே கதையோட போக்குல வீணடிச்சிருக்காங்க. ஒன்னு படத்தோட ஆரம்பத்துல வர்ற அப்பாவே மகளையும் மருமகனையும் கொல்ற சம்பவம். அடுத்து தொலைஞ்சு போன பாப்பாவோட அம்மா அபர்ணதியும், கொன்னதா அரெஸ்ட்டான அஜய் கார்த்தியும் லவ்வர்ஸ்ன்னு ஒரு ஆங்கிள்ல கதை போகும். டூயட்டெல்லாம் இருந்தது. அந்த பாட்டு கூட நல்லாருந்தது கேக்க. அதை அப்டியே அடுத்த விசாரணை சீன்ல மலுங்கடிச்சிருக்காங்க. இப்டிப் படமே ஒவ்வொரு சீனும் அடன்னு ஆரம்பிச்சு அடப் போங்கடான்னு முடியறதுதான் படத்தோட பெரிய பிரச்சினை.
மொத்தத்துல காளிதாஸ் 2வ நாங்க கேட்டமா? எதுக்கு இப்டி யூடர்னடிச்சு வண்டியத் திருப்பி ஆக்சிடெண்ட் பண்ணி அதுக்கு ஒரு பெரிய விளக்கம் கொடுத்து சண்டையெல்லாம் போட்டுக்கிட்டு? கிரைம் திரில்லர் ரசிகர்கள் வண்டிய வேற எதாவது நல்ல படத்துப் பக்கமா திருப்பவும்.
வர்ட்டா!
No comments:
Post a Comment