Saturday, May 30, 2026

BADH


BADH

அப்டின்னு ஒரு ஃப்ரெஞ்சு ஸ்பை திரில்லர் படம். முதல்ல இந்தப்படத்தோட போஸ்டர்ல ஸ்னைபரோட அதோட ஸ்கோப்புக்கு வெளிய பாத்துகிட்டிருந்த நடிகையைப் பாத்ததும் நான் முதல்ல அதை எனோலா ஹோம்ஸ் அண்ட் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்ல நடிச்ச மிலின்னு நெனச்சுத்தான் இந்தப் படத்தப் பாக்க ஆரம்பிச்சேன். ஆனா அது அவங்க இல்ல. வேற நடிகை. படத்துல அந்த நடிகைக்கும் மிலிக்கும் கொஞ்சம் கூட உருவ ஒற்றுமையோ முக அமைப்போ கொஞ்சம் கூட கிடையாது. சரி வாங்க அப்டி நான் மிலின்னு நெனச்சுப் பாக்கப் போயி பல்பு வாங்குன இந்தப் படம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.

கதைப்படி சிரியால ஒரு வீட்டை பாத் நோட்டம் விட்டுகிட்டிருக்கா அதே தெருவுல உள்ள இன்னொரு மேல் வீட்டுல உள்ள ஜன்னல் வழியா பைனாகுலர்ல. அப்ப அந்த வீட்டுக்கு ஒரு புர்கா அணிஞ்ச ஒரு ஆள் அடிக்கடி வந்து கதவைத் தட்டுறாங்க. அந்த கதவைத் தட்டுறதே ஒரு மாதிரி சங்கேத பாஷை. அதை ஒன் டூ ஒன் ஒன் டூ டூன்னு குறிப்பெடுத்துகிட்டிருக்கா பாத். அந்த புர்கா ஆள் தட்டின அந்த வீட்டுக் கதவு தெறந்ததும் கையில உள்ள பிளாஸ்ட்டிக் கவர்ல உள்ள காய்கறிகள டெலிவர் பண்ணிட்டுப் போறாங்க. அப்றம் கொஞ்ச நேரத்துல இது திரும்பவும் நடக்குது. இப்டி பலமுறை.


இதை எல்லாத்தையும் உலகத்துல வேற ஒரு மூலையில ஒரு ஆபிஸ்ல பெரிய திரையில கம்ப்யூட்டர்களெல்லாம் வச்சு சாட்டிலைட் வச்சு யார் வர்றா யார் போறாங்கறதெல்லாம் நோட்டம் விட்டுகிட்டிருக்கு ஒரு அரசாங்க அமைப்பு. இது பாரிஸ்லன்னு நினைக்கிறேன். ஏன்னா அது எங்கங்கற விளக்கம் தெளிவா படத்துல காட்டப்படல. அப்டி காட்டப்பட்டிருந்தா நான் மிஸ் பண்ணிருக்கேன்னு அர்த்தம். இப்போதைக்கு அத பாரிஸ்ன்னே வய்ங்க. அப்போ அங்கயிருந்து அந்தத் தெருவுல அந்த வீட்டுக்குப் பக்கத்துல இருந்து அதை நோட்டம் விட்டுகிட்டிருந்த பாத்துக்கு கால் போகுது. போலாம்னு. இப்ப அடுத்து பாத் போயி அந்த வீட்டுக் கதவை அதே சங்கேத தட்டல்கள்ல தட்றாங்க.

கதவு திறக்கப்பட, கவரெல்லாம் டெலிவர் பண்ணல. கன்னெடுத்து டுமீல் டுமீல்னு கண்ல பட்ட ஆளுங்கள சுட்டுகிட்டே உள்ள போறாங்க. அங்க பெண்கள் குழந்தைகளைத் தவிர அத்தனை ஆண்களையும் சுட்டுக் கொல்றாங்க. அந்த சமயத்துல அவங்க ட்ரெஸ்ல ஒரு பாடி கேமரா இருக்கு. அது மேற்படி சொன்ன பாரிஸ் அலுவலகத்துலயும் அங்க என்ன நடக்குதுன்னு லைவா பார்த்துகிட்டிருக்காங்க. அவங்க பாத்கிட்ட அந்த குடும்பம் மொத்தத்தையும் கொல்லச் சொல்றாங்க. ஆனா அவ பதிலெதுவும் சொல்லாம பெண்களையும் குழந்தைங்களையும் கொல்லாம வீட்டை விட்டு வெளியேறறாங்க. வெளிய வர்றதுக்குள்ள அந்தத் தெரு வழியா வந்துகிட்டிருந்த ஒருத்தன் ஒரு பேக் பேக்கை கழட்டி அந்த வீட்டு சுவத்துல வீசுறாமிசஅது வெடிச்சு அந்த வீடே இடிஞ்சு விழறதுக்குள்ள அந்த களேபரத்துல இருந்து பாத் வெளிய தெருவுல வந்து விழறாங்க. சாகல.


அதுக்கப்புறம் அவ தன்னோட காதலனா கணவனான்னு தெரியல. அது சரியா ரெஜிஸ்டராகிருந்தா ஏன் இப்டி சொல்லப் போறேன். அந்த இலியாஸ் கூட வெளிய தெருவுல காஃபி குடிச்சிட்டிருக்கறப்ப மோட்டார் பைக்ல வந்த ரெண்டு பேர் அவனை சுட்டுட்டுப் பறந்துடறாங்க. இப்ப ரெண்டு சம்பவம். இது நிச்சயமா கான்சிக்வென்சஸ் தான். முன்னாடி பாத் பண்ண மிசனுக்கான பதிலடி தான் இந்தத் தாக்குதல். இதுல பாத் தன்னோட துணை இலியாஸையும் காப்பாத்தனும். அவனைச் சுட்டவங்களையும் பழிவாங்கனும். மொத்தக் கதையும் முதல்ல நடந்த மிசனோட கான்சிக்வென்சஸ் தான் மொத்தக் கதையும். இப்ப பதிலுக்கு பாத் அந்த ரெண்டு பேர்த்தையும் தேடிப் போய்க் கொல்ல, அவங்கப்பன் ஊர்ல பெரிய தலைக்கட்டு. அவன் சும்மாருப்பானா? பாத்தைக் கொல்லத் தேடுறான். இதுக்கு நடுவுல அவள் யாருக்காக அந்த மிசனைப் பண்ணாளோ, அந்த ஏஜென்சியே அவளுக்கு ஒரு துரோகம் செஞ்சு அவளைக் கொல்லத் தேடுது.


இப்ப மொத்தக் கதையும் நம்மாள சிம்பிளா யூகிக்க முடியும். ஒன்னு பாத் கொல்லனும் அல்லது கொல்லப்படனும். கிட்டத்தட்ட பர்ன் ஐடெண்டிட்டி கதையில மெமரி லாஸ் ப்ளாட்டை மட்டும் ரிமூவ் பண்ணிட்டு ஜேசன் பர்னுக்கு பதிலா பாத்ங்கற பொண்ணை ரீப்ளேஸ் பண்ணா அதான் பாத். ஆங்கிலத்துல இதோட டைட்டில் எஜெண்ட் ஜீரோ. ரொம்பவே சின்னப்படம். ஒன்னரை மணி நேரம் கூட இல்ல. ஷார்ட் ஃபிலிம் மாதிரி ஃபாஸ்ட் ஃபேஸா ஓடி ஏன் முடிஞ்சது, முடிவென்னன்னு கூட சரியா ரெஜிஸ்ட்டர் பண்ணாம முடிஞ்சிருது. சிம்பிளா சுத்த வேஸ்ட். பர்ன் சீரிஸையே இன்னொருக்கா பாக்கலாம். நான் ஸ்னைப்பர் கதைகளைப் பத்தி பலமுறை ப்லாக்ல எழுதிருக்கேன். போஸ்ட்டர்ல ஸ்னைப்பர் கன்னோட மிலின்னு நெனச்சுப் பாக்கப் போயி, மேல சொன்ன மாதிரி பல்ப்பு வாங்கினதுதான் மிச்சம். ஓகே ஃப்ரெண்ட்ஸ், அடுத்த பதிவுல சந்திப்போம்.

வர்ட்டா!

No comments:

Post a Comment