Saturday, May 2, 2026

ஹேப்பி ராஜ் - அப்பா + அப்பாஸ்

ஹாப்பி ராஜ் 

அப்டின்னு ஒரு காமெடி கலந்த தமிழ் செண்டிமெண்ட் படம். நடிகர்கள்ன்னு பாத்தா ஜிவி பிரகாஷ், அப்பாஸ், ஜார்ஜ் மரியான், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, பிரதனா நாதன் மற்றும் பலர். சரி இந்தப் படம் எப்டி இருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி காத்தமுத்துங்கற குதிரை முட்டை வாத்தியார் மகன் தான் ஹாப்பி ராஜ் என்கிற ஆனந்த்ராஜ். வாத்தியாருக்கு மகனா பொறந்ததனாலேயே குட்டி குதிரை முட்டைன்னு அன்போடு கலாக்கப் படுகிறான் ஹாப்பி ராஜ். இது எந்தளவுக்குப் போகுதுன்னா, அவன் யாருக்காவது ப்ரொபோஸ் பண்ணா கூட, குதிரை முட்டை மருமகன்னு பேர் வந்துரும்னு தான் சைட் அடிக்கிற பையன் அழகா இருந்தாலும் காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்கவோ தெறிச்சு ஓடிர்றாங்க. அப்பனாலதான் இந்தப் பிரச்னைன்னு ஸ்டேட் விட்டு ஸ்டேட் மாறி வந்து பிரப்போஸ் பண்றாரு ஹாப்பி. அங்கயும் வருது அதே பிரச்னை. அதை அவர் எப்படி சமாளிச்சாருங்கறது தான் மீதிக் கதை.

ஒவ்வொரு வாட்டியும் ஹாப்பிக்கு இப்டி எம்பாரிசிங்கா மானம் போறப்ப நமக்கு வராத ஒரு ஃபீல், ஒரு மொமன்ட்ல நமக்கும் வருது. ஏன்னா அதான் நாம. அந்த மொமன்ட்ல நமக்கு அய்யே இதுக்கு மேல இதப் பாக்கணுமான்னு கூட ஒரு ஃபீல் வருது. ஆனா அதைத் தாண்டிட்டா ரொம்ப அழகான பல மொமண்ட்ச பாக்கலாம். ஜிவிபி என்னென்னமோவெல்லாம் பண்ணுவாரு. ஆனா நமக்கு அதெல்லாம் எப்டி இருக்கும்னா நல்லவேள இவன் எதும் பண்ணல தேங்க்ஸ்ப்பான்னு தான் இருக்கும்.

காலங்காலமா அம்மா செண்டிமெண்ட் படங்களையே பாத்துப் பாத்து சலிச்சுப் போன நமக்கு ஒரு ஆறுதல் இந்தப் படம். டோட்டலா அப்பா செண்டிமெண்ட் படம் இது. ஆனா படத்தோட ஆரம்பக் காட்சிகளை மட்டுமே வச்சி படத்தப் பத்தி நாமளா ஒரு முடிவுக்கு வந்தா அதுக்கு டைரக்டரா பொறுப்பு? அப்படி நாம ஒன்னு நெனச்சுக்கிட்டு அதுவே ஸ்கிரீன்ல ஓடினா அப்ப அதுக்கு நாம என்ன சொல்லுவோம்? புதுசா ஒன்னுமில்ல அதே பழைய கதைன்னு சொல்ல மாட்டோமா? அந்த வகையில இது ஒரு புதுசா முயற்சி தான். 

முக்கியமா படத்துல குறிப்பிட வேண்டியது ஜார்ஜ் மாரியனைத் தான். மனுஷன் அந்தக் கேரக்டருக்கு ஒரு புதுசா வடிவம் கொடுத்திருக்காரு. அவரோட சிறு வயசு, பால்ய வயசு, இளமைக் காலம்ன்னு சிலரை அவரோட ஃபிளாஷ் பேக்ல நடிக்க வச்சிருக்காங்க, அதெல்லாம் அவரே அதையெல்லாம் கமல் மாதிரி மேக்கப் போட்டு நடிச்சிருக்காரோன்னு நினைக்க வக்கிறளவுக்கு அவ்ளோ பர்ஃபெக்ட்டா இருந்தது நடிகர்கள் தேர்வு. எப்டி கைதியில கான்ஸ்டபிளா வந்து ஒரே சீன்ல மாஸ் பண்ணாரோ அதே மாதிரி இதுலயும் பல சீன்கள்ல மாஸ் பண்ணிருக்காரு. செம!

அடுத்ததா ரீ-என்ட்ரி அப்பாஸ். அதே காதல் தேசம் அப்பாஸ் தான். இதுல அப்பாஸாவே நடிச்சிருக்காரு. அதாவது ஹீரோயினோட அப்பாஸா. வில்லன்னு சொல்லிக்க முடியாது ஆனாலும் ஒருவகையில வில்லன் மாதிரி தான். அவரு இயல்பா சால்ட் அண்ட் பேப்பர்ல நடிச்ச சீன்ஸ் கூட ஓகே ஆனா டை அடிச்சு ஒரு சீன்ல நடிச்சிருப்பாரு. அதுதான் ஒட்டாம ஆடா துருத்திகிட்டு தெரிஞ்சது. மத்தபடி சிறப்பு. 

இதுல ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். அதாவது கேமரா கோணங்கள. குறிப்பா ஹிரோயின் ஹிரோவை தட்டிக் குடுத்து பாராட்டற சீன்ஸ் எல்லாமே கேமரா லோ அங்கிள்ல வச்சு தட்டிக் கொடுக்கற சீன்ஸ் எல்லாம் உயரத்துல வர்ற மாதிரி அதை உயர்த்திக் காட்டின சீன்ஸ் எல்லாம் செம!

சில முக்கியமான உறவுகளை மிகைப்படுத்தி காட்டுறது தான் செண்டிமெண்ட் படங்களோட கதையமைப்பா இருந்தாலும் இந்த உறவுகள் எப்பவும் மதிக்கப்பட வேண்டியது தான் உண்மை. அதுல அப்பா எப்பவும் உயர்வான இடத்துலதான் இருக்கணும் இருக்கும் ஆனா நாம அப்டியா நினைக்கிறோம்? அதுதான் இப்போதைய பிரச்சனை. அந்தப் பிரச்சினையா நல்லாவே ஹேண்டில் பண்ணிருக்கு இந்தப் படத்துல. கண்டிப்பா பாக்கலாம். பாருங்க. என்னடா இவன் எல்லாம் சொல்லிட்டிங்க ஹீரோ ஹீரோயின் பத்தியெல்லாம் எதுவுமே சொல்லலைன்னு நினைக்கறது புரியுது. சாம்பிராதாயமா எழுதற பதிவுகளல்ல இதெல்லாம் நான் படம் பாக்குறப்ப உணர்ந்த அனுபவங்கள். அவ்வளவு தான்.

No comments:

Post a Comment