சிஸ்டம் (2026)
அப்டின்னு ஒரு ஹிந்தி கோர்ட் ரூம் ட்ராமா படம். டைட்டில் கிரெடிட் ஓடும்போதே ஆச்சர்யப்பட வச்ச கேஸ்ட்டிங். முதல் பேரா ஆசுதோஸ் கொவாரிகர்னு பார்த்ததும் படத்தை கொஞ்ச நேரம் பாஸ் பண்ணிட்டேன். இந்தப் பேரை பலமுறை ரொம்பப் புடிச்ச படங்கள்ல இயக்குநர்ன்னோ, தயாரிப்பாளர்ன்னோ பார்த்த ஞாபகம். குறிப்பா லகான் அண்ட் ஸ்வதேஷ். அதனாலேயே அது யாரா இருக்கும்னு தேடிகிட்டேதான் முழுப்படத்தையும் பாத்தேன். கூகுளெல்லாம் பண்ணி அது யார்ன்னு தெரிஞ்சிக்க ஆர்வமில்ல. முழுப்படத்தையும் பாத்துட்டு நம்ம தேடலை வச்சுக்கலாம்ங்கறதுதான் ஐடியா. அடுத்து ஜோதிகா அண்ட் சோனாக்ஷி சின்ஹா. அவ்ளோதான் தெரிஞ்ச முகங்கள். சரி இந்தப்படம் பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி ஜெயில்ல ஒரு கைதி ஜெயில்லயே தூக்குப் போட்டு தற்கொலை பண்ணி சாகறாரு. அங்கிருந்துதான் சிஸ்டம் ஸ்டார்ட்டாகுது. அதுக்கப்புறம் அந்த சாவு நமக்கு படத்தோட ஓட்டத்துல மறந்தும் போகுது. அப்டி ஒரு கதை. ரவி ராஜ்வன்ஷின்னு ஒரு பெரிய வக்கீல். அவர் தோத்துப் போன வழக்குகள எண்ணுறது ஈஸி. அந்தளவுக்கு எந்தக் கேஸை எடுத்தாலும் அதுல ஜெயிக்கிறளவுக்கு திறமையானவர். அவரோட லா ஃபர்ம்க்கு இது இருவத்தஞ்சாவது வருசம். அவர் குடும்பத்துல அவரோட மனைவியைத் தவிர எல்லாருமே வழக்கறிஞர்கள். அவரோட மகள்தான் நேஹா ராஜ்வன்ஷி. ஆனா அவளைத் தன்னோடா நிறுவனத்துல சேர்த்துக்கக் கூட அவளுக்குன்னு ஒரு தகுதி இருக்கனும்னு சேர்த்துக்கல.
நேஹா இன்னும் பப்ளிக் ப்ராசிக்யூட்டரா தான் வேலை பார்த்துகிட்டிருக்காங்க. அவங்க இப்ப வாதாடற வழக்குல கூட ஜெயிப்பாங்கங்கற மாதிரி நமக்கே தோனறதில்ல. அந்தளவுக்கு எதிர் தரப்பு ஸ்ட்ராங்குன்னு சொல்ல முடியாது. ஆனா இவங்க வாதாடற பாய்ண்ட்ஸ் எல்லாம் அவ்ளோ வீக்கு. இவங்க எப்டியும் தோத்துருவாங்கன்னு அந்த வழக்கை அவளோட சீனியரே வாதாடறேன்னு சொல்ல, இவங்க கெஞ்சறாங்க ப்ளீஸ் எனக்கொரு வாய்ப்பு கொடுங்கன்னு. அதே கோர்ட்ல ஸ்டெனோவா இருக்கறாங்க சரிகா ராவத். ஸ்டெனோன்னா இந்த நீதிபதிக்கி முன்னாடி கீழ உள்ள டேபிள்ல, நீதிபதி சொல்லச் சொல்ல டைப்படிச்சிட்டிருப்பாங்களே அவங்களேதான். உண்மையில ஒரு ஸ்டெனோவுக்கு வாதி, பிரதிவாதிகளோட எல்லா பர்செப்சனும் அத்துப்படியா இருக்கும். ஏன்னா இவங்க வக்கீலும் இல்ல, ஜட்ஜும் இல்ல. ஆனா ரெண்டு பேரும் என்ன மாதிரியான விசயங்கள எப்டி ஹேண்டில் பண்ணுவாங்க சொல்லுவாங்கன்னு நல்லாவே தெரிஞ்சிருக்கும் இல்லையா. அந்த சரிகா ஒரு முறை ஆக்சிடெண்டலா நேஹா கூட அவளோட கார்ல பயணிக்கிற சமயத்துல, இப்ப அவங்க வாதாடிகிட்டிருக்கற வழக்குக்கான ஒரு சஜசன் சொல்லிட்டு பதிலை எதிர்பார்க்காம போயிடறாங்க. ஆனா சரிகா சொன்ன விசயம் நேஹாவை யோசிக்க வச்சு, அந்த சஜசன் படி வாதாடி ஜெயிக்கவும் செஞ்சிடறாங்க.
அங்கிருந்து தொடருது அவங்களோட நட்பு. நேஹாவோட அப்பா அவளைத் தன்னோட லா ஃபர்ம்ல பார்ட்னரா சேர்த்துக்கனும்ன்னா, தொடர்ச்சியா பத்து கேஸ்ல ஜெயிச்சுக் காட்டனும். எதுலயும் தோக்கக் கூடாதுன்னு சொல்லி பந்தயம். அதுக்கு சரிகாவை ரகசியமா அட்வைஸரா வேலைக்கு வச்சுகிட்டு ஒவ்வொரு வழக்குலயும் ஜெயிச்சுகிட்டே வர்றாங்க. இப்ப முதல் காட்சியில ஜெயில்ல தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போனதுக்கும் நேஹாவுக்கும் என்ன தொடர்பு. ஏன் அந்தக் காட்சியும், இந்தக் கதையும் ஒரே படத்துல வருதுங்கறது தான் சிஸ்டம் படத்தோட மீதி.
ரவி ராஜ்வன்ஷியா நடிச்சிருக்கறவர்தான் ஆசுதோஸ் கொவாரிகர். ரொம்ப வயசானவரும் இல்ல. இதுல அவர் வில்லனும் இல்ல. ஆனா முக்கியமான ஒரு கதாபாத்திரம். அந்தப் பத்தாவது வழக்கு, அதுல ரவி ராஜ்வன்ஷியும், நேஹா ராஜ்வன்ஷியுமே எதிரெதிரா நீயும் நானுமா, நேஹா நீயும் நானுமான்னு கௌரவம் சிவாஜிகள் மாதிரி மோதிக்கிற சிச்சுவேசன் வருது. சத்தியமா அதுக்காக அவங்க வீட்டுல பேசி சண்ட போட்டுக்கறதெல்லாம் எனக்கு கௌரவத்தைத் தான் ஞாபகப் படுத்துச்சு. அத விட ஒரு பெரிய கொழப்பம் கடைசில நேஹாவுக்கும், படத்தை இவ்ளோ நேரம் பாத்துகிட்டிருந்த நமக்கும் வருது. அதுல நேஹா எடுக்கற முடிவுகள் தான் படத்தை ஒரு லெவெல் மேல தூக்கி நிறுத்துது.
ஏன்னா இத்தனை நாள் நேஹா வாதாடினப்ப அவளுக்கே தெரியும், அவளோட வாதங்களெல்லாம் குற்றவாளிக் கூண்டுல நிக்கிறவர் உண்மையிலேயே குற்றவாளின்னு. ஆனா அந்தப் பத்தாவது வழக்கு கொஞ்சம் சிக்கலானது. அவர் அவளோட சின்ன வயசுல இருந்தே குடும்ப நண்பர். ஊர்ல பெரிய மனுசன். தன் அப்பாவோட சிநேகிதர். அவர் இந்தக் கொலையை செஞ்சிருப்பாராங்கற சந்தேகத்தை விடத் தீர்க்கமா தெரியும் அதை யார் செஞ்சதுன்னு. ஆனாலும் அவ இந்தப் பத்தாவது கேஸ்லயும் ஜெயிக்கிறதுக்காகப் போராடுவாளா இல்ல, நீதி கிடைக்கப் போராடுவாளாங்கறதுல தான் மேட்டர். உண்மையில இது நாம பார்க்க வேண்டிய முக்கியமான ஒரு படம். எனக்குப் படம் ரொம்பவே பிடிச்சிருந்தது. படம் முடிஞ்சப்புறம் கிரெடிட்ஸ்ல ஆசுதோஸ் கொவாரிகர் நடிச்ச கேரக்ட்டரோட பேரென்னன்னு பாக்கறதுக்காக வெய்ட் பண்ணிப் பாத்துகிட்டிருந்தேன். அப்ப வந்த பின்னணி இசை செமயா இருந்தது. பேர் கூட தென்னிந்தியரோட பேருதான் காட்டுச்சு. இப்ப ஞாபகமில்ல. வொர்த்து ஆர்கெஸ்ட்ரா.
பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும். அடுத்து ஒரு படத்தோட பதிவுல சந்திப்போம்.
வர்ட்டா!
No comments:
Post a Comment