Friday, May 29, 2026

ஸ்பைடர்மேன்-நுவார்

Spiderman - Noir

அப்டின்னு ஒரு சோனியோட மார்வெல் வெப்சீரிஸ் அதுவும் அமேசான் ப்ரைம்ல. பொதுவா ஸ்பைடர்மேன் அப்டின்னாலே அது சோனி நிறுவனத்தோட தயாரிப்புதான். ஏன்னா ஸ்பைடர்மேனோட ரைட்ஸ மார்வெல் சோனிகிட்ட வித்துட்டாங்கங்கறது தெரிஞ்ச ப்ராண்ட் நியூ இன்ஃபர்மேஷன். இப்பவும் அவங்க ஸ்பைடர்மேன வச்சு என்னென்னமோ பண்ணிப் பார்க்கறாங்க. பீட்டர் பார்க்கர் வர்றான், சிலந்திப்பூச்சி கடிக்கிது, ஸ்பைடரா மாறிடறான் ரீ-பூட்டு. பீட்டர் பார்க்கர் வர்றான், சிலந்திப்பூச்சி கடிக்கிது, ஸ்பைடரா மாறிடறான் ரீ-பூட்டுன்னு இதுவரைக்கும் நாலஞ்சு வாட்டி ரீ-பூட் பண்ணிருக்காங்க. ஆனா இந்த வாட்டி பீட்டர் பார்க்கர் இல்ல. ஆமாங்க வாங்க அது என்ன எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.

கதைப்படி இது 1930ல ஒரு ஸ்பைடர் நியூ யார்க்ல கட்டிடங்கள் மேல கம்மு வுட்டு ஸ்விங் பண்ணிக்கிட்டே போயி தப்பெல்லாம் தடுத்துகிட்டிருக்கான். ஆமாங்க 1930கள்ல தான். முப்பதுகள்ல எப்டிடா பீட்டர் பார்க்கர்னு கேக்காதிங்க, இது மொதல்ல பீட்டர் பார்க்கரே கெடயாது. பென் ரெய்லிங்கற மாஜி ராணுவ வீரர் கம் இந்நாள் ப்ரைவேட் டிடெக்ட்டிவ். இதுல பென் அப்டிங்கறத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமா அங்கிள் பென்னே தான். அங்கிள் பென்னோட பேர்ல உள்ள பென்னையும், ஆண்ட் மேவோட சர் நேமான ரெய்லியையும், நிறுத்து. ஆண்ட் மேயோட சர் நேம் பார்க்கர் தான? ஆமா அது மே பார்க்கர்தான். ஆனா அது பென் பார்க்கரை கல்யாணம் பண்ணப்புறம். ஆனா அவங்க ரியல் நேம் மே ரெய்லி. புரிஞ்சதா? ஆண்ட் மேயோட சர் நேமான ரெய்லியையும் இணைச்சு பென் ரெய்லின்னு ஒரு ஸ்பைடர் கதாபாத்திரம். அதுவும் மிடில் ஏஜ் தாண்டி அங்கிள் பென் வயசுல.

கதைப்படி ஸ்பைடர் தனக்குன்னு குடும்பம் குழந்தை குட்டின்னு எதுவுமில்லாம, தன்னோட காதலி ரூபி ஜே வில்லியம்ஸை வில்லன்கள் கொல்லுற வரை விட்டுட்டு, இப்ப சோகமா, தண்ணி தம்முன்னு அடிச்சுகிட்டு, ஊருக்கு நடுவால ஒரு டிடெக்ட்டிவ் ஆபிஸ் வச்சு, தன்னோட ஆபிஸ் ஸ்டாஃப் ஜானட்டுக்கு சம்பளம் கூட குடுக்க முடியாம குடிகாரனா சுத்திட்டிருக்காரு. இதெல்லாம் கேட்டா நாம இதுவரைக்கும் நம்புன ஸ்பைடர்மேனோட குணாதிசயம் எதுவுமே பொருந்தலேல்ல. யூ ஆர் அப்சொல்யூட்லி ரைட். வாடு மாமூல்வாடு காது. ரொம்ப டொக்கான ஒரு ஸ்பைடர்தான். ஆனா ஸ்பைடர் மேன்னு யாரும் அவரை விளிக்கறதில்ல. வெறுமனே ஸ்பைடர்ன்னு மட்டுமே தான் பரிட்சயம். அதுலயும் காதலி ரூபி போன துக்கம் தொண்டைய அடைக்க, ஸ்பைடரும் வேணாம் அந்த பவரும் வேணாம்னு சோகமா பார் பாரா உக்காந்து சரக்கப் போட்டுகிட்டு தம்ம ஊதிகிட்டு அவள் பறந்து போனளே என்னை மறந்து போனாளேன்னு தன்னோட மிச்சக் காலத்தை அர்த்தமே இல்லாம குறிப்பா எந்த ரெஸ்பான்சிபிளிட்டியும் இல்லாம எவனோ அடிச்சிக்கோங்கடா, நா இந்த ஊர்லயே இல்லன்னு வெறும் பென் ரெய்லிங்கற ப்ரைவேட் டிடெக்ட்டிவ் அடையாளத்தோட மட்டுமே வாழ்ந்துகிட்டு இருக்காரு.

அப்ப ஊருக்குள்ள ஸ்பைடர்ன்னு ஒருத்தன் தப்பைத் தட்டிக் கேக்கறதுக்கு இல்லன்னா, குற்றங்கள் வெகு மலிவா நடக்கறது சகஜம் தான? அப்டி ஒரு வில்லன் தான் சில்வர்மேன். காமிக்ஸ்ல இப்டி ஒரு கேரக்ட்டர் இருக்கு. ஆனா அது ரொம்ப சப்பை கேரக்ட்டர். காமிக்ஸ்ல கூட இந்த ஸ்பைடருக்கும் வில்லனா இருந்தது நார்மன் ஆஸ்பார்ன் தான். இதுல வாடு காது. சில்வர்மேன் தான். அதுவும் எந்த பவரும் கிடையாது. ஸ்பைடர்கிட்ட இல்லாத ஒரு பெரிய பவரோட இருக்கற ஒரு பெரிய மனுசன். ஆமாங்க, நெறய பணத்தோட இருக்கற ஒரு கேங்ஸ்டர். கிட்டத்தட்ட காட்ஃபாதர் ஃபீல் கொடுக்கற ஒருத்தர். வயசானவர்தான். ஏங்க பென் ரெய்லியே மிடில் ஏஜ் கூட கெடயாதுன்னு சொல்றேன் அப்றம் எப்டி வில்லன் மட்டும் யங்கா இருப்பான்? சில்வர்மேன் ஒரு கிங்மேக்கர். அவர் கை காட்டுற ஆள் தான் நியூ யார்க் மேயர். அப்டி பவர்ஃபுல். கொலை, கொள்ளை, ஆயுதக்கடத்தல், சரக்குக் கடத்தல். சரக்குன்னா தண்ணிதான். அதைக் கூடக் கடத்துறாரு. அண்ட் கதை முதல் உலகப்போருக்கும் ரெண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட காலம். அந்த காலகட்டங்கள மனசுல கற்பனை பண்ணி வச்சுக்கோங்க. மேற்படி போகலாம்.

பென் ரெய்லிகிட்ட ஒரு கேஸ் வருது. ஒரு ஆளைப் பிடிச்சுத் தரணும். அவன் யாருன்னா, சில்வர்மேனோட வீட்டை அவர் தூங்கிட்டிருக்கறப்ப தீ வச்சுக் கொளுத்தின ஆடிசன் அப்டிங்கறவன். அவனைப் பிடிக்கப் போற சமயத்துல இதே வேலைக்கு அமர்த்தப்பட்ட இன்னொரு ப்ரைவேட் டிடெக்ட்டிவ் வந்து பென்னை அடிச்சுப் போட்டுட்டு ஆடிசனைப் பிடிக்கப் போறான். ஆமாங்க. அவர்தான் ஸ்பைடரும் வேணாம் அந்தப் பவரும் வேணாம்னு அமைதியா வாழ்ந்துகிட்டிருக்காரே. சோ நோ பவர் நோ ஸ்பைடி சென்ஸ். யாரடிச்சாலும் அடி வாங்கறதோட சரி. திருப்பி அடிக்கிறதெல்லாம் கெடயாது. அப்டி பென்னை அடிச்சுப் போட்டுட்டு ஆடிசனைப் புடிக்கப் போக அந்த ஆடிசன் தன்னோட ஒடம்பெல்லாம் ஹ்யூமன் டார்ச்சா மாறின மாதிரி தீயா இருக்கான். அசந்து போய் பார்த்துகிட்டிருக்கறப்ப அந்த இன்னொரு ப்ரைவேட் டிடெக்ட்டிவ் பயத்துல டுமீல் பண்ணிடறான். அவன் டிடெக்ட்டிவ் கிடையாது. ப்ரைவேட் டிடெக்ட்டிவ் தான். சோ இது ஒரு கொலைக் குற்றம் தான். இந்தக் கேஸும் போச்சா. சரி இது அப்டியே இருக்கட்டும்.

அடுத்ததா இன்னொரு கேஸ் வருது. அதுல தன்னோட மனைவிக்கு யாரோடவோ தொடர்பிருக்கு. இன்னிக்கி நைட் அவ யாரையோ பாக்கப் போறா, அது யாருன்னு ஃபோட்டோ எடுத்துத் தரணும்னு. முன்னாடி வந்தக் கேஸாவது ஊமைக்குத்து தான். ஆனா இதுல நிறைய உள்குத்துகள். ஏன்னா, அது அந்த ஆளோட மனைவியே கெடயாது. அது ஒரு பார் பாடகி. அதுவும் பெரிய கையோட ஆளு. அந்தப் பெரிய ஆளுதான் சில்வர்மேன். அந்தக் கேஸே ஒரு உடான்ஸுன்னு புரிஞ்சுகிட்ட பென் ரெய்லி அந்தக் கேஸுக்குன்னு வாங்கின பணத்தை அந்தாள்கிட்டயே கொடுத்துட்டு, சரி அந்தப் பாடகிய ப்ளாக்மெயில் பண்ணலாம்னு போறாரு. ஏன்னா ஜானட்டுக்கு சம்பளம் கொடுக்க காசில்லையே. அவ வேற புஸ் புஸ்ஸுன்னு கோச்சுக்குவான்னு போறாரு. ஏன்னா அப்டி அந்தப் பொண்ணைப் பின் தொடர்ந்து போயி அவ சந்திச்ச ஆளு அந்த ஊரோட மேயர். எசகுபெசகான நெலயில ஃபோட்டோவும் எடுத்துடறாரு. அதை வச்சு காசு கறக்கலாம்னு போனா, கெணறு வெட்ட பூதம் கெளம்பின கதையா எக்கச்சக்கமா மாட்டிக்கிறாரு பென். 

முதல்ல இத ஒரு ஸ்பைடர்மேன் ஃப்ரான்ச்சைஸா நெனச்சுப் பாக்க வேணாம். மொத்தமா ஒரு பழைய ப்ளாக் அண்ட் வொய்ட் படத்தைப் பாக்கற மாதிரி நெனச்சுக்கிட்டுப் பாருங்க. ஏன்னா இதை கலர் அண்ட் ப்ளாக் அண்ட் வொய்ட் ரெண்டு நிறத்துலயும் ரிலீஸ் பண்ணிருக்காங்க. கலர்ல ஒருவாட்டி பார்த்துட்டேன். அடுத்து ப்ளாக் அண்ட் வொய்ட்லயும் ஒருவாட்டி பாக்குறதா இருக்கேன். ஏன்னா அந்த நுவார் ஃபீல் இன்னும் ஹெவிய்யா கெளப்பும்னு மனசுல தோணுது. அப்புறம் இன்னுமொரு டிஸ்கிளைமர். இத மார்வெல் கொடுத்திருக்கான்னு தெர்ல. ஆனா நான் சொல்றேன். இது எப்பவும் போல உள்ள ஸ்பைடர்மேன் படங்கள் மாதிரி கிடையாது. அடல்ஸ் மட்டுமே பாருங்க. ஏன்னா, ஒரு அடியாள் ஒருத்தன் நெல்லை பாஷையில பேசுறதெல்லாம் சில சமயம் காமெடின்னாலும், பல சமயம் பலான காம நெடி வசனங்கள். பொதுவா ஸ்பைடர்மேன் படங்கள் குழந்தைகளுக்கானது. ஆனா இந்த டெலிவிசன் சீரிஸ் அப்டியில்ல. அதுக்காக அடல்ஸ் ஒன்லி காட்சிகள் இருக்குன்னு அர்த்தம் இல்ல.

ஆனா, நிச்சயம் பார்க்கலாம். மார்வெல் சினிமாக்கள் மாதிரி, இந்தப் படத்தைப் பாக்க முந்தைய சில/பல படங்களைப் பார்க்கனும்னு எந்த அவசியமும் இல்ல. ஸ்டாண்ட் அலோன் சீரிஸ் தான். அதுவும் நிக்கோலஸ் கேஜ் ஆல்ரெடி கோஸ்ட் ரைடரா மார்வெல்ல நடிச்சவர்தான். இத ஏன் கடைசில சொல்றேன்னா, இந்த மொத்த சீரிஸும் பார்த்து முடிக்கிறவரை நிக்கோலஸ் கேஜ் தான் கோஸ்ட் ரைடரா நடிச்சவர்ங்கற எண்ணமே வரல எனக்கு. அப்டித்தான் இத இணைத் தயாரிப்பு ப்ளஸ் நடிப்பு ரெண்டயும் செஞ்சிருக்காரு. அடுத்த பதிவுல சந்திப்போம்.

வர்ட்டா!

No comments:

Post a Comment