Sunday, May 31, 2026

எனோலா ஹோம்ஸ்


Enola Holmes

அப்டின்னு ஒரு டிடெக்ட்டிவ் மூவி சீரிஸ். வெப்சீரிஸ் இல்ல. மூவி ஃப்ரான்ச்சைஸ். இப்பவரைக்கும் இதுல ரெண்டு படம் மட்டும்தான் வந்திருக்கு. மிலி பாபி ப்ரௌன் தான் எனோலா ஹோம்ஸா நடிச்சது.ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்ல நடிச்ச பொண்ணு. ஹோம்ஸ்னு சொன்னதும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஞாபகத்துக்கு வர்றதைத் தவிர்க்க முடியாது. ஏன்னா எனோலா ஷெர்லாக்கோட தங்கச்சி. அதே மாதிரி ஷெர்லாக் எனோலாவோட ரெண்டாவது அண்ணன். முதல் அண்ணன் பேரு மைக்ராஃப்ட் ஹோம்ஸ். அவர் ரொம்ப கண்டிப்பான பேர்வழி. டிடெக்ட்டிவும் கிடையாது. அரசாங்க உத்யோகம் பார்க்கறவர். அவராலதான் எனோலா ரொம்ப அலைய வேண்டியதாகிடுது. சரி வாங்க அது எப்டியிருந்ததுன்னு பாத்துடலாம்.

கதைப்படி எனோலா, அரண்மனை மாதிரி ஒரு பெரிய வீட்டுல தன்னோட அம்மாவோட பார்வையில வளர்றாங்க. இப்ப வரைக்கும் ஸ்கூல் போனதில்ல. அப்படியே ஸ்கூல் போனாலும் அங்க என்ன சொல்லித் தருவாங்கன்னா பொது இடத்துல பெண்கள் எப்படி நடந்துக்கணும்னுதான் அங்க சொல்லித் தருவாங்க. அதாவது டிரஸ் இப்படி பண்ணனும், தொப்பி எப்படி போடணும், அடுத்தவங்க முன்னாடி எப்படி சாப்பிடறது இந்த மாதிரி தான் சொல்லித் தருவாங்க. அதாவது ஸ்கூல்ல இருந்தே ஒரு பொண்ண ஆண்களுக்கு அடக்கமா சமூகத்துல எப்படி வாழ்றதுன்னு சொல்லித் தருவாங்க. அந்தக் கோர்ஸ் எழுத, படிக்கவும் தான் ஆனா அது மெயின் கோர்ஸ் கிடையாது செகண்டரி தான். மெயினா அடக்க ஒடுக்கம். ஆனா எனோலா ஹோம்ஸ்க்கு ஸ்கூல் போக வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா கணவனை இழந்த அவளோட அம்மா எனோலாவ தன்னோட ட்ரெயினிங்ல தான் வளர்த்தாங்க. சண்டை போடுறது எப்படி, புதிர்களை அவிழ்ப்பது எப்படி இந்த மாதிரி நிறைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே கத்துக் கொடுத்தாங்க. எல்லாத்தையும் கத்துக் கொடுத்துட்டு, லெட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டு காணாம போயிடுறாங்க.

அதுக்கப்புறம் அவங்க அம்மாவை தேடுறது தான் கதை. வெளிய நகரத்துல வாழ்ந்துகிட்டிருக்கிற மைகிராஃப்ட் ஹோம்ஸும், ஷெர்லாக் ஹோம்ஸும், ஊர்ல வீட்டுக்கு வந்தவுடனே இவளைப் பாத்து ஆச்சரியப்படுறாங்க. என்ன இவ, ஸ்கூலுக்கு இத்தனை காலமா போகாம இப்டி கத்துக்குட்டியா இருக்காளேன்னு செம கோவத்துல மைகிராஃப்ட் அவளை ஒரு ஸ்கூல்ல சேர்த்த முடிவு பண்ணி வீட்டுக்கு ஒரு டீச்சரை வரவழைக்கிறார். அதாவது வீட்டுக்கே வந்து ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போற ஒரு ஹெட்மிஸ்ட்ரஸ். ஆனா இது எதுவுமே எனோலாவுக்குப் புடிக்கல. இது ஷெர்லக் ஹோம்ஸுக்கும் பிடிக்கலதான். ஆனா அவரால தன்னோட அண்ணனை எதிர்த்து பேச முடியாது. இப்ப வரைக்கும் எனோலா ஹோம்ஸோட கஸ்ட்டடி மைக்ராஃப்ட் ஹோம்ஸ்கிட்டதான் இருக்கு. அதனால அவர் சொல்றபடி தான் எனோலா வளர, வாழ முடியும். அதுதான் சட்டம்.

இப்ப எனோலா, என்ன செய்வா? எப்டி தனக்குப் பிடிக்காத ஒரு ஸ்கூல்ல சேருவா, என்ன பண்ணப் போறா அப்டிங்கறது தான் கதை. இதெல்லாம் மொத்தமும் எனோலா ஹோம்ஸ் முதல் பாகத்துலயே முடிஞ்சிடும். அதுக்கப்புறம் அவ ஷெர்லாக் மாதிரியே ஒரு பெரிய டிடெக்டிவா மாறிடுவா. வீட்ல இருந்து தப்பிச்சு, ஸ்கூல்ல இருந்து தப்பிச்சு ஒரு இளவரசனைக் காப்பாத்தி, அவனை யார் கொல்ல ட்ரை பண்றான்னு கண்டுபிடிச்சு பெரிய டிடெக்டிவ் ஆயிடுவா ஷெர்லாக் ஹோம்ஸே பெருமைப்படற அளவுக்கு. அதுக்கப்புறம் மைக்ராஃட் கிட்ட இருந்து எனோலாவோட கஸ்டடிய ஷெர்லாக் வாங்கிடுவார். இத்தோட முதல் பாகம் முடிஞ்சது. இதுல எனோலாவோட அம்மாவா நடிச்சவங்க ஏற்கனவே ஷெர்லாக்கோட ஜோடியா நடிச்ச ஹெலனா போனம் கார்ட்டர். இதுல ஷெர்லாக்குக்கே அம்மா. அடுத்து ஷெர்லாக்கா நடிச்சது சூப்பர் மேனா நடிச்ச ஹென்றி காவில். கட் டு செகண்ட் பார்ட்.


செகண்ட் பார்ட்ல எனோலா ஹோம்ஸ் ஒரு ஊரறிஞ்ச டிடெக்டிவா ஆகிட்டாங்க, நிறைய கேஸ்களை அட்டன்ட் பண்றாங்க. ஆனா ஏழைகளுக்காக மட்டுமே கேஸ்களை எடுத்துக்கறாங்க. அப்டி ஒரு பொண்ணு தன்கிட்ட வந்து தன்னோட அக்காவைக் காணோம் அப்டின்னு ஒரு வழக்கைக் கொடுக்கறா. அவ ஒரு டான்சர். ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில வேலை செய்றவ. அவ அந்த தீப்பெட்டி தொழிற்சாலையில பணத்தைத் திருடிட்டு ஓடிட்டா அப்படின்னு அவ மேல ஒரு கம்ப்ளைன்ட் இருக்கு. அவளைத் தேடி கண்டுபிடிக்கிறது தான் கதை. இதுக்கு நடுவுல முதல் பாகத்தில இருந்தே எனோலாவுக்கும், ஒரு ராஜ குடும்பத்தின் இளவரசன் மாதிரியான ஒரு பையனுக்கும் நடுவுல சண்டையும் காதலுமா ஓடிகிட்டிருக்கும். நான் இதுவரைக்கும் ஷெர்லாக்கோட எந்தக் கதையையும் நாவலையும் காமிக்ஸையும் படிச்சதில்ல. படத்துல வெப் சீரிஸ் ல என்ன வருதோ அந்தக் கதைகள் தான் எனக்கும் தெரியும். எனக்கு ஷெர்லாக் பத்தின எல்லா விஷயங்களும் தெரியும்னு அர்த்தம் கிடையாது இந்தப் பதிவை எழுதறதனாலேயே. எனக்குத் தெரிஞ்சு ஷெர்லாக் பத்தின கதைகளை எழுதினவர் பேரு சர் ஆர்தர் கோணன் டாயல் அப்படின்னு நினைக்கிறேன். இது 99% தப்பா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா இதுக்காக நான் கூகுள் கூட பண்ணல.

இப்ப ஜூன் 1ஆம் தேதி இதோட தேர்ட் பார்ட் நெட்ஃபிளிக்ஸ்ல ரிலீஸ் ஆகப்போகுது. தியேட்டரிக்கல் ரிலீஸ் கிடையாது. இதுல இந்த காதலனுக்கும் எனோலாவுக்கும் கல்யாணம் வரை போகப்போகுது அப்படின்னு ட்ரெய்லர்ல பார்த்தேன். அந்த ட்ரெய்லர்லையே இன்னொரு விஷயமும் பார்த்தேன். கல்யாணத்தன்னிக்கி எனோலா ரன் அவே ப்ரைடு அதுவும் ஒரு கேஸ்க்காக. அந்தக் கேஸ் என்னான்னா ஷெர்லாக்கையே கடத்திடறாங்க. அப்ப ஓடிப் போய்த் தேடித்தான ஆகணும். இதெல்லாம் ட்ரைலர்லையே இருக்கு. நானும் ஈகரா வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன் முதல் இரண்டு பாகத்தையும் இன்னொருவாட்டி பார்த்துட்டு. எல்லாம் ஓகே, ஆனா ரெண்டாவது பாகத்துல வில்லனா அவங்க காட்டினது ஒரு கருப்பினத்தவரை. அது மட்டும் தான் கொஞ்சம் நெருடலா இருந்தது. அதாவது கதை வெள்ளைக்காரங்க கதை வில்லன் கருப்பினத்தவர். இது கொஞ்சம் எனக்கு ஒரு மாதிரி அசூயையா பட்டது. மத்தபடி அந்த ஒரு விஷயத்தை தவிர படம் நல்லா தான் இருந்தது. பார்ப்போம் மூன்றாவது பாகம் எப்படி இருக்குன்னு. அடுத்த பதிவுல சந்திப்போம்.

வர்ட்டா!

No comments:

Post a Comment