அப்படின்னு ஒரு படம். அதுவும் க்ரைம் த்ரில்லர் படம். மார்வெல் ஹீரோஸ்ல தோர் ஹல்க் அண்ட் ஸ்டோர்ம் நடிச்ச படம். உண்மையில இது சூப்பர் ஹீரோஸ் மூவிஸ் அல்ல. இது ஒரு சாதாரண ஹாலிவுட் படம் தான் ஆனால் மார்வெல் ஹீரோஸ் அண்ட் ஹீரோயின் நடிச்ச படம். ஹல்க்கா நடிச்ச மார்க் ரஃபேலோ , தோரா நடிச்ச கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்டோர்மா நடிச்ச ஹாலே பேரி. இதுதான் இந்தப் படத்தோட கேஸ்டிங்ல நமக்கு தெரிஞ்சவங்க. சரி வாங்க இந்த படம் பார்த்த அனுபவம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
கதைப்படி லாஸ்ட் ஏஞ்சல்ஸ்ல பணக்காரங்க அதிகமா வாழுற ரோடு நம்பர் 101ல அதிகமான குற்றங்கள் நடக்குது அதாவது கொள்ளை சம்பவம். அதை கண்டுபிடிக்கிற அதிகாரியா நடிச்சிருக்காரு ஹல்க்கா நடிச்ச மார்க் ரஃபல்லோ. பணக்காரங்களுக்கு இன்ஷூரன்ஸ் கொடுக்கிற அதிகாரியா நடிச்சிருக்கிறாங்க ஹாலே பேரி. கொள்ளையடிக்கிற ஹீரோவா நடிச்சிருக்கிறது கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். கிறிஸ்க்கு மத்தவங்க கண்ணைப் பார்த்து பேசுறதுல ஒரு பயம். ஏன்னா இயல்பாவே அவர் ஒரு திருடன். அவர் கேட்டும் திருடறதுக்கு ஒத்துக்காத ஒரு ஆள் ஹாலே பேரி. ஏன்னா அவங்களுக்குத் தான் பணக்காரங்களுக்கு ஜுவல்ஸ் எல்லாம் எப்பெப்ப டெலிவரி ஆகும் அதைக் கொண்டு வர்றது யாரு என்னங்கற டீடெயில்ஸ் தெரியும். சால்ட் அண்ட் பேப்பர் லுக்ல போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்காரு மார்க். இந்த கொள்ளைச் சம்பவங்கள்ல ஒரு பேட்டர்ன் இருக்கறதக் கண்டுபிடிச்சி அதை தன்னோட டிப்பார்ட்மென்ட்ல சொல்றாரு. ஆனா பெரும்பாலும் கரெப்ட்டட் ஆபிசர்ஸா இருக்கறதால அவரோட தியரிய ஜஸ்ட் லைக் தட்டா லெப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணி அவங்க இஷ்ட்டத்துக்கு கிடைக்கறவங்கள அரெஸ்ட் பண்ணி கேஸை குளோஸ் பண்ணிட்டு பிரமோஷன்ல அவருக்கே மேலதிகாரியா வேலை செய்யிறாங்க. அதனால கிரிஸ் எந்தக் கவலையும் இல்லாம கிடைக்கிற தகவல்கள வச்சு கொள்ளைச் சம்பவங்கள செஞ்சிட்டே போறாரு. இந்தக் கதையை ரொம்ப அலட்டிக்காம பெரிய ஆக்சன் சீன்ஸ் எல்லாம் எதுவும் இல்லாம தெளிவா வசனங்கள் மூலமாவே கதையை நகர்த்திட்டுப் போறாங்க. நமக்கு இது எதுவும் போரடிக்கல. இன் ஃபாக்ட் படம் ஒரு ஸ்டைலிஷ்சா மூவ் ஆகிட்டே இருக்கறதால கதை ஒரு தெளிவான நீரோட்டம் மாதிரி போயிக்கிட்டே இருக்கும். வெறும் வசனங்கள் மட்டுமேன்னு இல்லாம அப்பப்ப ஆக்சன் சீன்ஸும் இருக்கு. அப்பவெல்லாம் நமக்கு அய்யய்யோ நல்லாத்தான பேசிக்கிருந்தாங்க திடீர்னு ஏன்டா அடிச்சிக்கிறீங்கன்னு தான் இருந்தது.
ஆக்சன் ஹீரோ கிரிஸ்க்கு ஒரு அழகான லவ் போர்சன் உண்டு. ஒரு சின்ன ஆச்சிடன்ட்ல ஆரம்பிச்சு டேட் மேல டேட்னு போய்க்கிட்டே இருக்கும். ஆனா ஒரு சின்ன வருத்தம். கடைசில அது என்னாச்சுன்னு ஒரு ஹின்ட்டாவது கொடுத்திருக்கலாம். ஒரு நல்ல இன்ட்ரஸ்ட்டிங் நாவல்ல கடைசி பேஜ் மட்டும் கிழிஞ்சு போனாப்ல படம் முடிஞ்சது. அதுக்காக ஒரு ஃபினிஷிங் இல்லன்னு அர்த்தம் இல்ல. அப்டி அப்ரப்ட்டா கதை முடிஞ்சது தான் காரணம். படத்தோட மையக்கதை அந்த கொள்ளைச் சம்பவங்கள் தான். அதனால அதை மட்டுமே ஃபோகஸ் பண்ணி கதை போட்டிருக்கும். படம் முடிஞ்சப்புறம் நாமளா யோசிச்சாதான் அட ஆமால்ல அவ என்னானா? அந்த லவ் என்ன ஆச்சு? அந்த வில்லன் என்னானான்னு நமக்கே தோணும். ஆனா இதெல்லாம் பாக்கறவங்க முடிவுக்கே அதெல்லாம் விட்டுட்டாங்க. அதனால நாமளே ஏதாவது எழுதி கோடிட்ட இடங்கள நிரப்பிக்க வேண்டியதுதான்.
இதுல ஒரு எக்சென்ட்ரிக் கேரக்டர் ஒன்னு வரும். அதுக்கு தடாலடியா பண்ற விசயங்கள் தான் கதையில ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்தக் கேரக்டர் வர்றப்பவெல்லாம் எப்படா இவன் அடி வாங்குவான்னு தான் நமக்கே தோணும். நல்லா வெங்கலக் கடையில யானை புகுந்த மாதிரி ஒரு கேரக்டர்.
உண்மையில படம் ஓடிட்டிருந்தப்ப, பெருசா எதோ இருந்தும் இல்லாத மாதிரிதான் தோனிக்கிட்டே இருந்தது. நல்ல கேஸ்ட்டிங், நல்ல கதை, நல்ல செட்டப் ஆனா ப்ரமோஷன் இல்லாம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பார்த்ததால வந்த ஃபீலா இருக்கலாம் போல. அதை ஏன் இங்க மென்சன் பண்ணேன்னா படம் முடிஞ்சப்புறமும் அந்த படத்தை மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல் இருந்துட்டே இருக்கு. இதை ஒரு வெப்சீரிஸா எடுத்திருக்கலாம். அப்ப நாம அந்த உலகத்துல எப்பவும் இருக்கற ஒரு ஃபீல் கிடைச்சிருக்கும்.
மார்க் ஒரு விசயத்தைக் கண்டுபுடிப்பாரு. அடுத்து அதை வச்சு ஒரு மூவ் பண்ணிட்டிருப்பாரு. ஆனா அதனாலதான் இதை அவர் பண்ணுறார்ன்னு நமக்கு சொல்லிட்டிருக்க மாட்டாங்க. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூடு நடக்கும். அதுல சுடப்பட்டவன் கையில ஆயுதம் எதுவும் இருக்காது. ஆனா ஒரு சில விசயங்களுக்கப்புறம் செத்தவன் கையில ஒரு துப்பாக்கி இருக்கும். மார்க் அதை அதிர்ச்சியோட பாத்துட்டு அது அவன் கையில இல்லையே இப்ப மட்டும் எப்டி இருக்குன்னு கேப்பாரு. அதைத் தொடர்ந்த சில சீன்ஸ் போகும். இதுல எந்த சீன் ரீப்ளேவும் இருக்காது. இது போல படம் முழுக்கவுமே காட்சிகள் கடந்து போயிக்கிட்டே இருக்கும். ஆடியன்ஸ்க்குன்னு எந்த ஸ்பூன் ஃபீடிங்கும் இருக்காது. அதாவது ஆடியன்ஸ மெச்சூர்ட்ன்னு நம்பி, கதையை ஒரு ஃபுளோவா கொண்டு போற ஒரு ட்ரீட்மென்ட் இது. படம் பார்த்தா அது நமக்கே புரியும். பாருங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்.
வர்ட்டா!
No comments:
Post a Comment