Wednesday, June 3, 2026

அர்ஜுனா ஃபால்குனா - நண்பர்களுக்காக



Arjuna phalguna

அப்டின்னு ஒரு கிராமத்துக்கதையுள்ள தெலுங்கு காமெடி ஆக்சன்  படம். நடிகர்கள்னு பாத்தா ம்ருத்யுஞ்செய் படத்துல ஹீரோவா நடிச்சிருந்த ஸ்ரீவிஷ்ணுவும், அம்ரிதா ஐயரும் தான். மத்த எந்த நடிகர்களையும் எனக்குத் தெரியல. ஆனா ஒரு ஆக்ட்டரை மட்டும் பாத்தவுடனே இவர நிறைய படத்துல பாத்திருக்கேன்னு ஃபீலாச்சு. அவர்தான் சுப்புராஜ் சந்தோஷ். அவர் இதுல ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காரு. சரி இந்தப் படத்தைப் பாத்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி ஐந்து நண்பர்கள். ஒரே கிராமத்துல, ஒரே ஸ்கூல்ல ஒன்னா சின்ன வயசுலேர்ந்தே படிச்சு வளர்ந்த நண்பர்கள். நாலு ஆண்கள் அண்ட் ஒரு பெண். ஊர்ல விவசாயத்துக்காக, குடியிருக்கற வீட்டை, விவசாய நிலத்தை பேங்க்ல அடகு வச்சு லோன் வாங்கிக் கட்ட முடியாம ஜப்தி செய்ய டெய்லி அந்த கிராமத்துக்குள்ள பேங்க் ஆளுங்க வந்து போயிட்டிருக்கு. அது ஒருவாட்டி அர்ஜுனோட நண்பனுக்கே வீடு ஜப்தியாகற நிலை வரவும், அங்க வந்து அடிதடின்னு தகராறு பண்ணி, அது பேச்சுவார்த்தைல முடிய, இப்போதைக்கி அம்பதாயிரம் கட்டினா ஒரு வாரம் பாக்கி அமவுண்ட்ட கட்றதுக்கு டைம் தரேன்னு வங்கி அதிகாரி சொல்ல, அர்ஜுன் தன்னோட சிவாங்கிய ஊர் பெரிய மனுசன்கிட்ட அடகு வச்சு அம்பதாயிரத்த செட்டில் பண்றாரு. இதுல சிவாங்கிங்கறது அவன் பாசமா வளக்கற பசுமாடு. அதுவும் இந்தப் படத்துல ஒரு கேரக்ட்டர்.

இப்டியே இருந்தா எப்டின்னு சீக்கிரம் பணத்தை ரெடி பண்ண முடியாட்டியும் ஒரு வேலையோ பிஸினஸோ இருந்தா இதை ஒரு மாதிரியா சமாளிச்சிடலாம்னு அர்ஜுனோட கைப்பக்குவமான கலர் சோடா கம்பெனி ஆரம்பிக்க பேங்க்ல லோன் கேக்கப் போனா, லோன் சேங்க்சன் பண்ணவே அம்பதாயிரம் லஞ்சம் கேக்கறாங்க. அப்புறம் என்னென்னமோ பண்ணித் தோத்துப் போயி கடைசில தன்கூடப் படிச்ச வம்சின்னு ஒரு நண்பன் சொன்ன வேலையை செய்ய நாலு லட்சம் தரேன்னு சொல்றான். ஆனா அவன் சொல்லியெல்லாம் அந்த வேலையைச் செய்ய முடியாதுன்னு அவங்க பணத்துக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க, அதுக்குள்ள ஊருக்குள்ள கடனால ஒரு தற்கொலை நடக்க, வேற வழியே இல்லாம, நண்பன் வம்சி சொன்ன வேலையைச் செய்ய சம்மதிக்கிறாங்க. அது ஒன்னும் பெரிய வேலையில்ல. மெடிசின் ப்ளாண்ட் முட்டையைக் கொண்டு போய் இன்னொரு எடத்துல டெலிவரி பண்ணனும். அதென்ன மெடிசின் ப்ளாண்டுன்னா கேட்டீங்க? அதாங்க கஞ்சா.

இதுவரைக்கும் கிராமத்துக்குள்ளயே போயிகிட்டிருந்த கதை அதுக்கப்புறம் வேகமெடுத்து வேற பல நகரங்கள் காடுகள் கடல் மலைகள்னு சேஸிங்லயே போகுது, ஆப்சனே இல்லாம நிறைய ஆக்சன் காட்சிகளோட. இதுவரைக்கும் எனக்கு தெலுங்கு சினிமான்னாலே, அது சிரஞ்சீவி, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், அதிவிசேஷ், நானின்னு இவங்க படங்களைத் தான் அதிகமா விரும்பிப் பார்க்கறது வழக்கம். இதுல சிரஞ்சீவியோட படங்களும் கடந்த ரெண்டு டெகேட்ஸா பாக்கறதையே நிறுத்திட்டேன். அவருக்கு வயசாயிடுச்சுங்கறதால இல்ல. அவரோட கதைத் தேர்வு காலப் போக்குல கம்மியாகி, வெத்து பில்டப்தான் அதிகம். அதனால பின்னவர்களின் படங்களைத் தான் அதிகமாப் பாத்திருக்கேன். இப்ப ஸ்ரீவிஷ்ணுவோட படங்களையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாம். அது மிருத்யுஞ்செய் படம் பாத்ததுல இருந்தே. அந்த லிஸ்ட்ல நான் நடிகரோட பேருக்காகவே எந்த டிரெய்லர் டீசர்னு எதையும் பாக்காம படம் பார்த்தது அதிவிசேஷ் படங்களைத் தான். அதுவும் இப்ப கதையோட சுவை கொறஞ்சுகிட்டே வந்து இப்ப வெறும் மசாலா சுவை தான் இருக்கு. அந்தப் பதார்த்தம் இனிமேலும் சுவைக்கனும்னா பழையபடி கதைங்கற இன்க்ரெடியண்டயே கான்செண்ட்ரேட் பண்ணா நொவைல் அண்ட் டாப் நாட்ச் ஆக வாய்ப்பிருக்கு.

ஸ்ரீவிஷ்ணுவ தூக்கிப் பிடிக்கறதுக்காக சிரஞ்சீவியையும் அதிவிசேஷையும் மட்டம் தட்டல. இந்தப் படத்தைப் பாக்கறப்ப இது எல்லாமே மண்டைக்குள்ள ஓடிகிட்டிருந்தது. இதுவரைக்கும் ஸ்ரீவிஷ்ணுவோட ரெண்டே படங்களைத் தான் பாத்திருக்கேன். ம்ருத்யுஞ்செய் அண்ட் அர்ஜுனா ஃபால்குனா. ரெண்டு படங்களோட ஆரம்பத்துலயும் ஹீரோவைப் பாக்கறப்ப, நாம தவறான முடிவ எடுத்துட்டமோ, இந்த மாதிரி யார்ன்னே தெரியாத ஆளோட படத்தைப் பார்க்கலாம்னு தெரியாம ஆரம்பிச்சிட்டமோன்னு மனசுல ஒரு சப்டைட்டில் ஓடினதென்னமோ உண்மைதான். ஆல்ரெடி ம்ருத்யுஞ்செய் படத்துல பாத்து நல்லாருக்கேன்னு வியந்திருந்தாலும், இந்த அர்ஜுனா ஃபால்குனா 2021ல வந்த படம். 2026ல வந்த படத்துல பாக்கறதுக்கும் அஞ்சு வருசம் முன்னாடி வந்த படத்துல ஸ்ரீவிஷ்ணுவைப் பாக்கறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்ல. அப்புறம் எப்டி அதே நடிகரோட படம்னு நினைச்சுப் பாக்க முடியும்? கொஞ்ச நேரம் படம் ஓடினப்புறம்தான் இது அந்த ஆள்னு லைட்டா தோனவே ஆரம்பிச்சது.

ரெண்டு படங்கள்லயும் ஒரு பொதுவான விசயம், ஹீரோவோட நண்பர்களா வர்றவங்கள வச்சு கதையோட முக்கியமான காட்சிகள் நகர்றதுதான். ரெண்டுலயுமே சசிக்குமார் படங்கள் மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கறதுதான். அது துருத்திகிட்டுத் துண்டா தெரியாம, கதையே நண்பர்களை வச்சுத்தான் நகருது. நண்பர்களால், நண்பர்களுக்காகன்னு தான் கதையே.

இனிமேல் ஸ்ரீவிஷ்ணுவோட படங்கள்ன்னா பாக்கலாம்னு தான் மனசுல தோணும்ங்கறளவுக்கு அவரோட ரெண்டு படங்களைப் பாத்துட்டேன். நீங்களும் இந்தப் படங்களைப் பாக்கலாம். மேபீ நீங்க இந்தப் படத்தை ஆல்ரெடி பாத்திருக்கலாம். ஆனா நான் இப்பதான் பாத்திருக்கேன். அதனாலதான் இந்தப் பதிவு. சரிங்க, மீண்டும் அடுத்த பதிவுல சந்திக்கலாம்.

வர்ட்டா!

No comments:

Post a Comment