Monday, June 29, 2026

Prathichaya - மலையாளம்


Prathichaya

அப்டின்னு ஒரு மலையாள பொலிட்டிகல் திரில்லர். நடிகர்கள்னு பாத்தா நிவின் பாலி, சபிதா ஆனந்த், ஆன் அகஸ்டின் அண்ட் ஷராஃபுதீன். மத்த முகங்களெதுவும் பெயர்களோட நமக்கு ஆல்ரெடி பரிட்சயமா இருந்திருக்க வாய்ப்பில்ல. அப்டி நான் பாலச்சந்திர மேனன்னு சொன்னா தெரியுமா? தெரியாதில்ல. அப்டித்தான் ஆன் அகஸ்டின் கூட. நிவின் பாலிக்காகத் தான் பாக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல என்ன சொல்ல வர்றாங்கன்னே கொழப்பமாகி படம் பாக்கறதையே நிறுத்திட்டு அதுக்கப்புறம் படுக்கறதுக்காக முயற்சி செஞ்சு தூக்கம் வர்றதுக்காக பாக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் தூக்கம் போச்சு. வாங்க அந்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.

கதைப்படி நிவின் பாலி கேரள முதலமைச்சரோட ரெண்டாவது மகன். ஐடியில ஹேக்கர்ன்னு மட்டுந்தான் சொல்லல. ஃபயர்வால் டெவலப் பண்ற பெரிய மூளைக்காரர்ன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன். ஆல்ரெடி கல்யாணமானவர். அதனால அவர் மனைவியோ, அல்லது வேற பெண்களோ ஹீரோயின் இல்ல இந்தப் படத்துல. ஜோடியிருக்கு. ரொமான்ஸும் இருக்கு. ஆனா மேல் லீட் மட்டும்தான் இந்தக் கதையில பிரதானம்.

அப்பா முதலமைச்சர்ன்னு சொன்னேனில்லையா, அவர் கட்சி காங்கிரஸ் அப்டிங்கற மாதிரி மனசுல பதிய வச்சிட்டாங்க. ஏன்னா அவர் ஊழல் செஞ்சதா சொல்லி மக்களோட போராடறதெல்லாம் கம்யூனிஸ்ட். எல்.டி.எஃப். எனக்குத் தெரிஞ்சு உலகத்துலயே அந்த மாநிலத்துல நிஜத்துல உள்ள கட்சிகளை அப்டியே அவங்க கொடி கலரைக் கூட மாத்தாம யூஸ் பண்றது கேரள சினிமால மட்டுந்தான். இதுக்கு எந்த எதிர்ப்பும் அந்தக் கட்சிகளோ மக்களோ சொல்றதில்ல. அவ்வளவு ஏன் அதைப் பத்தி ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்ல கூட எதிர்ப்பு கிடையாது. இன்னொரு அவ்வளவு ஏன் கூட சொல்லலாம். இப்ப ஆட்சியில இருக்கறதும் அதே காங்கிரஸ் தான். வாட்டெ மாநிலம்!

இதையெல்லாம் தாண்டி அந்த சி.எம் ஊழல் செஞ்சார்ன்னு எதிர்க்கட்சிகள் போராடுறதும் அதை இவர் அடுத்தடுத்த சீன்ஸ்ல லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணிட்டு குடும்பத்தோட சந்தோசமா தன்னோட ஆஃப் டைம்ஸ குவாலிட்டியா ஸ்பெண்ட் பண்றதும் நமக்கே பொறாமையா இருந்தது. அந்த கேரக்ட்டரை நமக்கே புடிக்க வச்சிடறாங்க. அதாவது நிவின் பாலியோட அப்பா கேரக்ட்டரை. பேரு கே.என்.வர்கீஸ். அவரோட முதல் மகன் பேரு டோபின் வர்கீஸ். ரெண்டாவது மகன் நிவின் பாலி பேரு ஜான் வர்கீஸ்.

இப்ப ஒரு லைவ் இண்டர்வ்யூ நடக்குது முதலமைச்சர் கூட. முதல்வன் படத்தைப் போலயெல்லாம் இல்ல. ஆனா அதுல ஸ்டாம்பேட்ல ஒரு மாணவன் சாகற சீனை ரகுவரனுக்கு அர்ஜுன் டிவியில காட்டி இதுக்கு என்ன சொல்றீங்கன்னு கேப்பார்ல, அது மாதிரி ஒரு சீன் மட்டும். அப்டி ஒரு பாலியல் குற்றச்சாட்டை அவர் மேல லைவ்ல சுமத்தப் படுது. இப்ப என்ன விசயம்ன்னா, அதை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ண முதலமைச்சர் கே.என்.வர்கீஸ் வில்லன் இல்லை. அதனால ஒடஞ்சு போயிடறாரு.

அவரை எப்டியாவது ராஜினாமா பண்ண வச்சிடனும்னு அவரோட கட்சி ஆளுங்களே திரைமறைவு வேலைகளைச் செய்யிறதா முன்னாடி வந்த சில காட்சிகள்ல பதிவு பண்ணிருப்பாங்க. இதை எப்டி அவர் ஹேண்டில் பண்ண முடியும்னு சொந்தக் கட்சியே அவர் ராஜினாமா பண்ணப் போறதா அறிவிச்சிடறாங்க. தொடர்ந்து வர்ற காட்சிகள்ல அவர் பார்ட்டி ஆஃபிஸ் வந்தப்ப கோபத்துல கொதிச்சுகிட்டிருந்த மக்கள் கல்லால அடிச்சி மண்டையை ஒடச்சிடறாங்க. அவரோட நாலு வயசுப் பேத்தியை மருமகள் தாத்தாகிட்ட போகக் கூடாது. அவர் ரொம்பக் கெட்டவர்ன்னு சொல்றளவுக்கு அவருக்கெதிரா மாநிலமே திரும்பிடுது.

மேல முதல்வன் சீன் ஓடிச்சா, இப்ப அடுத்து பேத்தியோட கோபத்தால மனசொடஞ்சு முதலமைச்சர் வர்கீஸ் செத்துடறாரு. அப்ப பீட்டர்ஸ்பர்க் போக செக்-இன் பண்ணிருந்த ஜான் வர்கீஸ் லைவ் பாத்து ஃப்ளைட் ஏறாம வீட்டுக்கு வர, ஹெட்'ஸ் டவுன், டெயில்'ஸ் அப் தேவர் மகன் சிவாஜி மரணத்துக்கப்புறமான சக்திவேலின் எழுச்சிக் காட்சிகள். அந்த வீடு க்ளிஃப்ஹவுஸ் கூட அந்த வீட்டை ஞாபகப்படுத்துது.

அதுக்கபுறம் அவருக்கு மக்கள் அஞ்சலி கூட செலுத்தல. பேருக்கு கட்சி மட்டும் சில கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர்கள் வக்கிது. இப்ப அந்தக் கலங்கத்தை ஜான் வர்கீஸ் போக்கினாரா, இந்தப் பழி சுமத்தலுக்குப் பின்னாடி இருக்கறது யாருங்கறதுதான் மாஸான மீதிப்படம். பிரதிச்சாயான்னா நிழல்னு அர்த்தம். இந்தப் படத்துல இண்டர்நெட்டால சீரழியிற நாடுன்னுதான் பதிவு பண்ணியிருப்பாங்க. இவ்வளவையும் தைரியமா சொன்ன மாநிலம் கூட நல்லாத்தான் இருக்கு. ஆனா இதுக்கு உதாரணமா சில விசயங்கள் நம்ம கண்ணு முன்னாடியே நிஜத்துல இருக்கு. படத்துல அதைக் கென்யான்னு சொல்லிருப்பாங்க. ஏன்னா சொந்த மாநிலத்துக் கட்சிகளை பாய்ண்ட் பண்ண முடிஞ்ச அவங்களால நிஜத்துல அப்டி உள்ள உதாரணத்தைப் பாய்ண்ட் பண்ண முடியல. அந்த வகையில அவங்க கென்யாவுல ஒவ்வொரு லைக்கையும் வோட்டா மாத்திருப்பாங்கன்னு தான் சொல்ல முடிஞ்சது.

என்னால கூட அந்த உண்மையைச் சொல்ல முடியல. சரி ஃப்ரெண்ட்ஸ் அடுத்த பதிவுல மீண்டும் சந்திப்போம். வர்ட்டா!

No comments:

Post a Comment