Teach you a lesson
அப்டின்னு ஒரு கொரியன் வெப்சீரிஸ். இல்லங்க இதுல நடிகர்கள்னு பாத்தான்னு எனக்கு லிஸ்ட் சொல்ல ஆசைதான். ஆனா யாரையும் தெரியாது. ஆனா இந்த பத்தே முக்கால் மணி நேர வெப்சீரிஸை ஒரே நாள்ல உக்காந்து பாத்ததுல பல கதாபாத்திரங்களோட பத்தே முக்கால் மணி நேரம் நான் டிராவல் பண்ணிருக்கேன்னு மட்டும் பதிவு பண்ணிகிட்டு, இந்த சீரிஸ் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துக்கறேன். அது எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.
கதைப்படி கொரியாவுல உள்ள ஸ்கூல்கள்ல மாணவர்கள் திமிரா நடந்துக்கறதுல ஆரம்பிச்சு, கேங் கலாச்சாரம், ஆசிரியர்கள மாணவர்கள் மோசமா ட்ரீட் பண்றது, மாணவர்கள ஆசிரியர்கள் மோசமா ட்ரீட் பண்றதுன்னு பல விசயங்களைச் சரி செய்ய ஈ.ஆர்.பி.பிங்கற ஒரு அமைப்பை கல்வி அமைச்சர் உருவாக்கறாரு. அதுல அவரும் அவரோட ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும்தான் மொத்தமே. அந்தக் கல்வி அமைச்சர் பேரு ச்சோய் கேங் சியோக். அவரோட தலைமையில நா ஹ்வா ஜின்-ங்கற ஒரு இன்ஸ்பெக்டர் களத்துல எறங்கி வேலை செய்வாரு. களத்துலன்னா நேரடியா ஸ்கூலுக்குப் போய் அங்க ஸ்டூடண்ட்ஸ் அல்லது ஆசிரியர்கள் பண்ற தப்பை அலசி ஆராய்ஞ்சு தக்க தண்டனையை வழங்குவாரு. அதுக்கு எதாவது எதிர்ப்பு வந்தா அத அமைச்சர் பாத்துக்குவாரு.
அப்டி நா ஹ்வா ஜின் என்ட்ரியாகற சீனும் இடமும் நமக்கு அவ்ளோ திருப்திகரமானதுன்னு பார்த்தா புரியும். எக்ஸாக்ட்டா சீரிஸ் பாத்துகிட்டிருக்கற நாம என்னடா இந்த ஸ்டூடண்ட் இவ்ளோ அரகண்டா கூடப்படிக்கிற இன்னொரு ஸ்டூடண்ட்ட அடிச்சிட்டிருக்கான். இவனயெல்லாம்...ன்னு மனசுல திட்டி சபிச்சிகிட்டிருக்கற சமயத்துல இவர் வந்து அவனை அடிச்சிப் பொளப்பாரு. என்னது ஸ்டூடண்ட்ட அடிக்கிறதாவதுன்னு நாம தயங்கற அந்த கேப்ல தான் அவனுக அந்தத் துள்ளு துள்றது. ஒன்னு டீச்சர்ஸ் அடிச்சித் திருத்தனும். அவனை அடிக்க டீச்சர்ஸே பயப்படுறாங்கன்னா அவன் வெய்ட்டு கையின்னு அர்த்தம். அப்ப யாருதான்ப்பா அந்தப் பூனைக்கி மணியக் கட்றது? அப்டி உருவானது தான் இந்த எஜுகேசன் ரைட்ஸ் ப்ரொடெக்சன் ப்யூரோ சுருக்கமா ஈ.ஆர்.பி.பி.
ஆனா மொத எபிசோட்ல அந்த ஸ்டூடண்ட் வழக்கை சரி செஞ்சதோட எல்லாமே சமனாகிருச்சே, அப்ப அடுத்ததா என்ன சொல்ல மிச்சமிருக்குன்னு நாம யோசிக்கும் முன்னாடியே அடுத்த எபிசோட்ல ஸ்டூடண்ட்ஸ் கேங் வச்சு பண்ற அழிச்சாட்டியங்களைத் தட்டிக் கேட்டு அதயும் இந்த எபிசோட்லயே சரி பண்ணி நீதி பரிபாலனம் பண்ணிடறாங்க. அப்புறம் என்னதாங்க இருக்கு இன்னமும்னு நாம யோசிக்கும் முன்னமே அங்கங்க ஃபோர்ஷேடோயிங்கா ஏன் ஈ.ஆர்.பி.பி உருவாக்கப் பட்டுச்சுன்னு ஒரு பின்கதை லேசுபாசா அப்பப்ப வர்றப்பவே லைட்டா கெதக்ன்னு இருந்தது. இதனால இந்த ஈ.ஆர்.பி.பியே ஆட்டம் கண்டு ஒன்னுமில்லாம போகப் போகுதுன்னு தோனிட்டிருந்தப்பவே பாங் ஹுன் டே-ன்னு ஒரு அப்ராணி டெக்கி இந்த டீம்ல இணையறாரு.
அச்சச்சோ மொதல்ல ரெண்டு பேர் மட்டும் டூவீலர் மாதிரி. இப்ப மூனு பேர் ட்ரை சைக்கிள் மாதிரின்னு நாம அந்த எபிசோட் முடிச்சு மூனாவது எபிசோடுக்கு வந்தப்பவே நாலாவதா ஒரு பொண்ண இதுல இன்ஸ்பெக்ட்டரா இணைச்சு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ஸா மாறின ஸ்டூடண்ட்ஸ் பண்ற தகிடுதத்தங்கள தவிடுபொடியாக்கி ஃபோர் வீலராயிடுச்சு. அவ்ளோதாங்க இனி கடைசி வரைக்கும் இந்த ஃபோர் வீல்ல தான் வண்டி ஓடுச்சு. நான் கூட நெனச்சேன் இந்த நாகார்ஜுன்க்கு சாரி நா ஹ்வா ஜின்னுக்கு ஹான் ரிம்ம ஜோடியாக்கீடுவாங்களோன்னு எதிர்பார்த்துகிட்டிருந்தேன். அந்த லவ் ட்ராக்க டெபுட்டி பாங் ஹுன் டேவுக்கு மாத்தி கனெக்ட் பண்ணிட்டாய்ங்க.
ஒவ்வொரு ஸ்கூல்லயும் ஆசியர்களுக்கு மாணவர்களால, மாணவர்களுக்கு ஆசிரியர்களாலன்னு பல பிரச்சினைகள். ஸ்டூடண்ட்ஸால இன்னொரு ஸ்டூடண்ட் சூசைட், ஸ்டூடண்டால டீச்சர் சூசைட்ன்னு இப்டி மனிதாபிமானமே இல்லாம நடந்துக்கறவங்களுக்கு அவங்க பாஷையிலயே பாடம் எடுக்கறாங்க இந்த நாலு பேரும். அதுல ஒவ்வொரு வில்லனுக்கும் வில்லனுக்குப் புரியிற வகையில அவங்கவங்களோட பாஷையிலயே பாடம் எடுக்கறது எல்லாம் பரம திருப்தியை ஆடியன்ஸுக்குக் கொடுக்கற விசயம்.
ஒரு ஸ்டூடண்ட் சோசியல் மீடியால ஆறு லட்சம் ஃபாலோயர்ஸ் வச்சிருக்கான்னு பண்ற அலப்பறை ஒன்னு. அவ கிளாஸ் நடந்துகிட்டிருக்கும் போதே கிளாஸை கவனிக்காம லைவ் போட்டு ஃபாலோயர்ஸ்கிட்ட பேசிட்டிருப்பா. கிளாஸ கவனிம்மான்னு டீச்சர் பொலைட்டா சொன்னாக் கூட, லைவ் போயிட்டிருக்கு பாத்தா தெர்லயா உங்களுக்குன்னு கோச்சிக்குவா. என்றா இது? ன்னு தான் நமக்கு கடுப்பா இருக்கும் பார்க்க. அப்ப டீச்சராலயும் அவளை கண்டிக்கவோ எதிர்க்கவோ முடியாது. ஏன்னா இப்டி கண்டிச்ச ஒரு ஆண் ஆசிரியர் மேல பொய்ப் பாலியல் புகாரை ரீல்ஸ்ல போட்டு அவர் சூசைடே பண்ணிகிட்டிருப்பாரு ஆல்ரெடி.
இவங்க பெண் ஆசிரியர். இவங்கள ரொம்ப ஈஸியா அவங்களோட படங்கள சோசியல் மீடியால போட்டு ரொம்ப மோசமான ஆசிரியைன்னும், ஆசிரியரா இருக்கவே தகுதியில்லாதவங்கன்ற பிம்பத்தையும் உருவாக்கி அவங்க மனசளவுல ஒடஞ்சி போய் பயந்துகிட்டே தான் கிளாஸுக்கு டெய்லி எண்டராவாங்க. அப்றம் எப்டி இதுல கண்டிக்கறது? இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்குன்னு உருவாக்கப் பட்டது தான் இந்த ஈ.ஆர்.பி.பி. இதுல ரொம்ப டீப்பா போற ஸ்டூடண்ட்ஸை அதாவது கண்டிப்புக்கு அடங்காத, ஆசிரியர்களை மதிக்காத ஸ்டூடண்ட்ஸுக்குன்னு மட்டும் இல்லாம, ஸ்டூடண்ட்ஸுக்கு கிடைக்க வேண்டிய எஜுகேசன் ரைட்ஸை அவங்களுக்குக் கிடைக்க விடாம காசுக்கு மேலிடங்களுக்கு விற்பனை செய்யிற ஆசிரியர்களுக்கும், போதை மருந்து கலாச்சாரத்தை வளர்த்து காசு பார்க்கும் ஸ்டூடண்ட்ஸுக்கும் அப்டின்னு பலவகையிலயும் பாதிப்பை உண்டாக்குறவங்களுக்கு பாடம் எடுத்து படிக்க வைக்கிறது தான் இந்த டீச் யூ அ லெசன்.
உண்மைல இதப் பாக்கறப்ப இப்டி ஒரு அமைப்பு இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு, எப்டி இந்தியன் தாத்தா மாதிரி ஒருத்தர் லஞ்சத்துக்கு எதிரா போராடினப்ப, ஸ்டூடண்ட்ஸை வச்சு லஞ்சத்துக்கு எதிரா ப்ரொஃபெசர் ரமணா போராடினப்ப எப்டி ச்சே இவங்கள மாதிரி யாராவது இருந்தா நல்லாருக்கும்லன்னு நெனச்சமோ அப்டித்தான் இந்த ஈ.ஆர்.பி.பி மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்கி முடிஞ்சது இந்த பத்தே முக்கால் மணி நேர டீச் யூ அ லெசன். ஆமா மொத்தமும் ஸ்கூல்ஸ்லயேன்னா போரடிக்காதான்னு நானும் நெனச்சுகிட்டு ஒரு தயக்கத்தோட தான் பாக்க ஆரம்பிச்சேன். ஆனா, அப்டியெல்லாம் போரடிக்க விடாம சில காட்சிகள் எப்படா இந்தக் கொடூரம் முடியும்னு ஏங்க வச்சு, அதுக்கு அவங்க பாஷையிலயே பாடம் நடத்தி நமக்கு திருப்தி வர வச்சுடறாங்க. அதனால ஒரு ஷிஃப்ட் முழுசா தேவைப்படும் இந்த சீரிஸைப் பாக்க. பாருங்க.
மறுபடியும் அடுத்து ஒரு பதிவுல சந்திக்கலாம் மக்களே... வர்ட்டா!
No comments:
Post a Comment