Sunday, July 5, 2026

டெல்லி கிரைம் - சீசன் 2


Delhi Crime - Season 2

அப்டின்னு முன்னொரு காலத்துல நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைக் கதைக்காக இப்ப நடக்கற மாதிரி புனைவா எடுக்கப்பட்ட கிரைம் திரில்லர் வெப் சீரிஸ். இதோட மூனாவது சீசனைப் பத்தி டெல்லி கிரைம் - சீசன் 3 பதிவுல எழுதிருக்கேன். அதைப் படிச்சிட்டு வாங்க. மிச்சத்தைத் தொடரலாம். நடிகர்களைப் பத்தி நிச்சயம் சொல்லியே ஆகணும். அதுல ஷிஃபாலி ஷா அண்ட் ரசிகா துகல். இவங்க ரெண்டு பேரும் தான் டிசிபி அண்ட் ஏசிபி. நீதி சிங்கா நடிச்சிருக்கற ரசிகாவ எங்கயோ பார்த்த ஞாபகம். உண்மைல அவங்களைப் பத்தி நான் தேடல. ரெடிட்ல அவங்க வீடியோக்கள் சிலதை எனக்குக் காட்டிச்சு. ஆத்தி மிர்ஸாபூர்ல பீனா பாபி. அப்பதான் எனக்கு ஏன் இவங்கள எங்கயோ பார்த்த ஃபீல்னு புரிஞ்சது. இதுல இவங்களுக்குன்னு ஒரு லைஃப் ட்ராக் ஒன்னு இருக்கு. இன்ஃபாக்ட் எல்லா முக்கியக் கதாபாத்திரங்களுக்கும் அது உண்டுன்னாலும், மூனாவது டெல்லி கிரைம் சீசன்ல ஏன் அவங்க டைவர்ஸ் பண்ணாங்கன்னு புரிஞ்சது. நாந்தான் ரிவர்ஸ் ஆடர்ல டெல்லி கிரைம் வெப்சீரிஸை அணுகியிருக்கேனே. பின்ன பல விசயங்களுக்குக் காரணமே தெரியாதே. இன்னும் சொல்லப் போனா ரேண்டம் ஆர்டர். மொதல்ல முதல் சீசன், ரெண்டாவது மூனாவது சீசன், இப்ப மூனாவதா ரெண்டாவது சீசன். இப்டி நான் கசமுசா ஆர்டர்ல பாத்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி ஒரு கேங் ரொம்பப் பணக்கார சீனியர் சிட்டிசன்ஸ் மட்டுமே குடியிருக்கற வீடுகள்ல ராத்திரி நேரமா தடாலடியா உள்ள நொழஞ்சு அவங்கள சுத்தியல் மற்றும் கோடாரியால மண்டைல அடி அடின்னு அடிச்சே கொன்னுட்டு, பணம் நகைகள் எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டுப் போயிடறாங்க. போறதுக்கு முன்னாடி வீட்டுல உள்ள சாப்பாடு சரக்குன்னு எல்லாத்தையும் எஞ்சாய் பண்ணிட்டுப் போயிருக்காங்கன்னு பாத்தாலே தெரியிது. அங்க வீடுகள்ல உள்ள சிசிடிவியில அவங்க வந்தது, கொன்னது, கொள்ளையடிச்சதுன்னு எல்லாமே பதிவாகியிருக்கு. வந்தவங்க கச்சா அல்லது ச்சட்டி பனியன் கேங். இவங்க தொண்ணூறுகள்ல வட இந்தியாவுல ரொம்பப் பிரபலமான கொள்ளைக் கும்பல். வெறும் அண்டர்வேர், பனியன் மட்டுமே அவங்க யூனிஃபார்ம். ஒடம்பு முழுக்க எண்ணெயைத் தடவிகிட்டு கைல சுத்தியல், கோடாரியோட வந்து இந்தக் கொள்ளையைச் செஞ்சுகிட்டிருந்தாங்களாம்.

இவங்க நாம தீரன் அதிகாரம் ஒன்றுல பாத்த மாதிரி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவங்களோட கைவரிசை. இப்ப இதுல போலிஸுக்கு என்ன குழப்பம்ன்னா, இந்த கேங் தங்களோட கைவரிசைகளை நிறுத்தி அல்லது காவல்துறை அவங்க கைவரிசைகளைக் கட்டுப்படுத்தி இருவது வருசமாகுது. திடீர்னு அதே எம்.ஓ. இப்ப குழப்பம் வரும்ல. சிசிடிவில பார்த்த ஆட்களோட உடைகள் சேம் டு சேம். அந்த வீட்டு ஆட்களைக் கொன்ன விதம் சேம் டு சேம். கொள்ளையடிச்ச விதம் சேம் டு சேம். அதுக்கப்புறம் அவங்க அங்க உள்ள சாப்பாடு சரக்கை கபளீகரம் பண்ணியிருக்கற விதமும் சேம் டு சேம். அதான் எப்டி? நாமதான் அவங்க எல்லார்த்தையும் கண்டுபுடிச்சுக் கட்டுப்படுத்தியாச்சே. மறுபடியும் சேம் டு சேம் எம்.ஓன்னா ஹவ்?

ஒரு நல்ல டிடெக்ட்டிவ்க்கு அழகு தப்பு பண்ணவங்களப் புடிக்கறது மட்டுமில்ல. அப்டி யாரையவது கையும் களவுமா புடிச்சிட்டுப் போய் குற்றவாளிக் கூண்டுலயே நிறுத்தினாலும், அதுக்கு ஆதாரம்னு ஒன்னு வேணும் குற்றத்தை நிரூபிக்க. அப்ப தப்பு பண்றவங்களப் புடிக்கறது மட்டுமில்ல டிடெக்ட்டிவ்ஸோட வேலை. நடந்த தப்புல, தப்ப நடத்தினவங்க எல்லாத்தையும் கச்சிதமா நடத்திருந்தாலும், அதுல எதாவது ஒரு தப்பை தப்பா விட்ருப்பாங்க. அந்தத் தப்பைக் கண்டுபிடிக்கிறதுதான் அவங்க முக்கியமான வேலை. அதுல தான் ஆதாரத்தோட அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா இருக்கும். தப்ப நடத்தினவங்க தப்பிக்கவே முடியாது. ஏன் இதெல்லாம்? இது டெல்லி போலிஸ் பத்தின கதைதானே, பின்ன ஏன் டிடெக்ட்டிவ்ஸோட அடிப்படையெல்லாம் சொல்லிட்டிருக்கேன்னா, போலிஸோட முக்கியமான வேலை இதைக் குழு அமைச்சு விசாரிச்சு துப்பறியறதுதான்.

இவ்ளோ பண்ணியும், அவங்களால மொத்தமா அந்தப் பழங்குடிகளைக் கைது பண்ணி அடிச்சு குத்தத்தை ஒத்துக்கச் சொல்லி மிரட்ட முடிஞ்சதே தவிர, உண்மையான குற்றவாளிகளைப் புடிக்கவே முடியல. உண்மைல இந்த சீசன்ல டைரக்டராலக் கூட அதை எப்டி மூவ் பண்றதுன்னு தெரியல போல. எல்லாமே போலீஸோட பாய்ண்ட் ஆஃப் வ்யூல கதையைக் கொண்டு போயிட்டு, திடுதிப்புன்னு நாலு பேர், இந்தக் குற்றங்களைச் செய்யிற காட்சிகளைக் காட்டி, இந்த சீரிஸ் மேல இருந்த மொத்த அபிமானத்தையும் சீரழிச்சிட்டாங்க. அப்டிக் காட்டறதா இருந்தா முதல்ல இருந்தே அவங்களைக் காட்டிருக்கனும். ஆனா இவங்க கதைக்கு கன்வீனியண்டா நாலாவது எபிசோட்ல கொண்டு வந்து, அவங்க நாலு பேர்த்தையும் காட்டினது ஏற்புடையதா இல்ல.

எப்டிப் பாத்தாலும் இது ஒரு ஹூடன்னிட் தான். அப்டின்னா சைமல்ட்டேனியஸா கதையோட ஆரம்பத்துல இருந்தே குற்றத்தை மட்டும் காட்டாம குற்றவாளிகளையும் அவங்க செயல்முறைகளையும் காட்டியிருந்தா இன்னும் அவங்க இவ்ளோ கொடூரமானவங்களான்னும், எப்டி போலிஸ் துப்பு துலக்குறாங்கன்னு ஆடியன்ஸுக்கு ஒரு சுவாரஸ்ய அனுபவம் கிடைச்சிருக்கும். ஆனா அப்டியில்லாம, டெல்லி போலீஸோட பர்சனல் வாழ்க்கைகளைக் காட்டி, அந்தக் கதாபாத்திரங்கள் பாருங்க மக்களுக்காக போலிஸ் எப்டிக் கஷ்டப்படறாங்க தங்களோட குடும்பங்களைக் கவனிச்சுக்க முடியாம அப்டின்னும், அதனால அவங்க ப்ரொபெசன்ல  அந்த மனக்கவலை எப்டி அவங்கள மாத்திடுது அப்டின்னு மட்டுமே ஃபோகஸ் பண்ணிருக்காங்க. வாட் டைரக்ட்டர் ப்ரோ, இட் ஈஸ் வெரி ராங் டைவர்சன் ப்ரோ.

ஆஸ் யூஸ்வல், ஷிஃபாலி ஷா அண்ட் ரசிகா துகல் மட்டும்னு இல்லாம இதுல நடிச்சிருந்த எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. இதுல நான் இன்னொன்னும் கவனிச்சேன். ஷிஃபாலிக்கு மேக்சிமம் ப்ரொஃபைல் குளோஸப் ஷாட்ஸ் தான். அதுலயும் தலைய லைட்டா டில்ட் பண்ணி வச்சிட்டுதான் எதிர்ல உள்ளவங்களப் பாக்கறது, பேசறது எல்லாம். ஒருவேள அவங்க மூக்கு பெருசா இருக்கறதாலயா இருக்கலாம். கேமராவுக்கு நேரா அவங்களுக்கு குளோஸப் வச்சா அது ஒரு மாதிரி அந்த கேரக்ட்டரையே அசிங்கமா காட்டின மாதிரி ஃபீல் பண்ண வைக்கும்ங்கறதாலயா இருக்கலாம். நீங்க பாக்குறப்ப இதையும் நோட் பண்ணிப் பாருங்க. இத நோட் பண்ணவே எனக்கு இத்தன வருசமாகிருக்கு. ஆனா இதனால கதைல எந்த பாதிப்புமில்ல. அதுக்கும் மேல இது ஒரு இண்டன்ஸ் ஃபீலைக் கொடுக்கவும் தவறல. மொத்தக் கதையும் ஒரு மாதிரி டார்க் ஷேட்ல தான் இருக்கும். மத்தபடி இந்தக் கேரக்ட்டரை மட்டும் இப்டிக் காட்ட வேற எந்த அவசியமும் இல்ல. உண்மைல இவங்க தன்னோட சுப்பீரியரே இதைத்தான் நீ பண்ணனும், இவங்கதான் கச்சா பனியன் கேங் ஆளுங்க. ஆறு கொலைகளையும் பண்ணது இவங்க தான்னு மீடியாவுக்கு சொல்லிடு. எனக்கு மேல இருந்து ப்ரஷ்சர் அப்டின்னு சொன்னாக்கூட இவங்களா ஒரு ஸ்டேண்ட் எடுப்பாங்க. அதுல இந்த கேர்க்ட்டரோட வெய்ட்டே வேற லெவல்.

ஏண்டா எப்பப் பாரும் ஷிஃபாலி ஷாவைப் பத்தியே எழுதிட்டிருக்கன்னு நீங்க கேக்க நினைக்கலாம். நான் என்ன செய்ய, குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரம் இவங்களும் ரசிகாவும் தான். ஆனா ரசிகாவோட ஸ்க்ரீன் ஸ்பேஸ் கம்மி. அதனால மொத்த டெல்லி கிரைம் வெப்சீரிஸோட முகமும் இவங்களோடது தான். எப்டியும் ஒரு அம்பது ப்ளஸ் வயசிருக்கலாம் அவங்களுக்கு. அவங்கள மட்டும் ப்ரமோட் பண்ணி நான் என்ன செய்யப் போறேன், நல்லாருக்குன்னா நல்லாருக்குன்னு சொல்றதத் தவிர?

ஓகே ப்ரண்ட்ஸ், நெட்பிளிக்ஸ்ல இருக்கு, பாருங்க. நாம மறுபடியும் அடுத்த பதிவுல சந்திப்போம். வரேன்!

No comments:

Post a Comment