Thursday, July 2, 2026

எனோலா ஹோம்ஸ் 3


Enola Holmes 3

அப்டின்னு ஒரு மூவி சீரிஸ் ஃப்ரான்ச்சைஸோட மூனாவது தவணை. பீரியட் ப்ளஸ் டிடெக்ட்டிவ் சீரிஸ். இதோட முந்தைய ரெண்டு பாகங்களைப் பத்தியும் எனோலா ஹோம்ஸ் பதிவுல நீங்க க்ளிக் பண்ணி வாசிச்சிட்டு வாங்க. இப்ப நடிகர்கள்னு பாத்தா எனோலா ஹோம்ஸா நடிச்சது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்ல நடிச்ச மிலி பாபி ப்ரவுன் அண்ட் அவளோட அண்ணன் ஷெர்லாக் ஹோம்ஸா நடிச்சிருக்கறது சூப்பர் மேனா நடிச்ச ஹென்றி காவில் அப்புறம் இவங்க ரெண்டு பேர்த்தோட அம்மாவா நடிச்சிருக்கறது ஹெலினா போனம் கார்ட்டர். சரி இந்த மூனாவது தவணை பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பார்க்கலாம் வாங்க.

கதைப்படி எனோலாவுக்கும் ட்யூக்ஸ் பரிக்கும் அதாவது முதல் பார்ட்ல இருந்தே ஒரு சண்டையும் காதலுமா ஒரு ட்ராக் ஓடிட்டிருந்ததே, அந்த முதல் பார்ட்ல ஒரு இளவரசனை யாரோ கொல்ல ட்ரை பண்ணிக் காப்பாத்தி, அது யாருன்னு கண்டுபுடிச்சி ஷெர்லாக் மாதிரியே டிடெக்ட்டிவா ஆனாங்களே அதே ஆள் தான் இந்த ட்யூக்ஸ் பரிக்கும் மால்ட்டாங்கற தீவுல கல்யாணம் நடக்க இருக்கும். அது கல்யாண நாள். போலாமா வேணாமா, கல்யாணம் நமக்குத் தேவையா இல்லையான்னு கல்யாணத்தன்னிக்கி யோசிச்சி டாஸ் போட்டுப் பாக்காத கொறையா ட்யூக்ஸ் பரி முகம் ஒரு செகண்ட் மனசுல வந்துட்டுப் போக, சரி போய்க் கல்யாணத்தப் பண்ணித் தொலையலாம்னு லேட்டா கெளம்பிப் போக, போற வழியில வாட்சன் மூலமா செய்தி வருது ஷெர்லாக்கைக் காணோம், யாரோ கடத்திட்டாங்க போலன்னு ஒரு நியூஸ் வருது. அவ்ளோதான் அத்தோட கல்யாணத்தையும், சர்ச்ல மோதிரம் மாத்திக்கலாம்னு காத்துகிட்டிருந்த ட்யூக்ஸ் பரியையும் டீல்ல விட்டுட்டு அய்யோ எங்க அண்ணா நீங்கன்னு தேடிட்டு கெளம்பிடறா.

கல்யாணம் நின்னெல்லாம் போகல, அப்போதைக்கி நடக்காம போக, கோபத்துல ட்யூக்ஸ் பரியைக் கூட்டிட்டு வந்து நைட்டு தாண்டிருக்க மாட்டாங்க அவனோட அம்மா. அதாவது எனோலாவோட வருங்கால மாமியார். அவங்களும் காணாமப் போக விசயம் சீரியஸாகுது. எங்கண்ணன் ஷெர்லாக்கையே கடத்துனது எவம்லேன்னும், என் வருங்கால மாமியாரையும் கடத்தினது எவம்லேன்னும் அப்ப இருந்து கல்யாணப் பொண்ணு எனோலா, டிடெக்ட்டிவ் எனோலா ஹோம்ஸா மாறி அவங்க ரெண்டு பேரையும் கடத்தினது ஒரே ஆளா, இல்ல வேற வேற ஆளா, ஏன் கடத்தினாங்க, எப்டி கடத்தினாங்க, அவங்களை இன்னும் உயிரோட வச்சிருக்காங்களா இல்லையா, அப்டி இன்னும் உயிரோட வச்சிருந்தா எங்க வச்சிருக்காங்கன்னும் அதுக்குப் பின்னாடி உள்ள ஆளுங்களையும் அதோட காரணங்களையும் வாட்சன், தன்னோட அம்மா, அப்புறம் வருங்கால கணவன் ட்யூக்ஸ் பரியோட சேர்ந்து கண்டுபுடிக்க ட்ரை பண்றாங்க.

மொதல்ல ஒரு விசயம். இதுல எனோலா நோ லாங்கர் சின்ன பொண்ணு. மொத இருந்தே வயசுக்கு மீறின மெச்சூர்டுன்னாலும் இப்ப ஒரு அப்சொல்யூட் அடல்ட். ரொம்ப அழகான எனோலாவும் கூட. ஆமா இத இங்க பதிவு பண்ணித்தான் ஆகணும். படத்துல இதையும் நான் ஃபீல் பண்ணனே! அடுத்து ரொமான்ஸ் காட்சிகள். அதுல கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம ஜலக்கிரீடையெல்லாம் கடல்ல எறங்கி தூர் வாரியிருக்கு புள்ள. அடுத்து வாட்சனா நடிச்சவர் ஒரு இந்தியர். அதுவும் நமக்கு ரொம்பவே ஒரு தமிழ்ப்படம் பாக்கற ஃபீலைத் தருது. அப்ப உலகத்துல உள்ள மத்தவங்க எப்டி ஃபீல் பண்ணிருப்பாங்கன்னு தெரியல. அதுலயும், வாட்சனை ஷெர்லாக்குக்கு அறிமுகப்படுத்தி ரெண்டு பேர்த்தையும் சேர்த்து வச்சதே எனோலாதான். அது தான் ரெண்டாவது பார்ட் கிளைமாக்ஸ் சீன்.

செகண்ட் பார்ட்லன்னு இல்ல. முதல் பாகத்துல இருந்தே லேயர் லேயரா கதை தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கு. அதனால இந்தப் படத்தைப் புரிஞ்சிக்கனும்ன்னா முதல் ரெண்டு பாகங்களையும் பார்த்திருந்தா மட்டும்தான். அதனால முதல் ரெண்டு பாகங்களையும் பார்த்துட்டு வந்திருங்க. இது ஒரு ஃபன் டிடெக்ட்டிவ் கதையுள்ள மூவி ஃப்ரான்ச்சைஸ். அதுலயும் ஹென்றி காவிலுக்கும் மிலிக்கும் அண்ணன் தங்கச்சியா நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். அது பாக்கறதுக்கே அவ்ளோ அழகா நல்லாருக்கும். நமக்கே அவங்க எப்படா பாசத்தைப் பொழிவாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ண வச்சிருப்பாங்க. அடுத்து இந்தப் படத்தோட லொக்கோசன்ஸ். அது முந்தைய ரெண்டு பாகங்கள்லயும் வந்த மாதிரி அழுக்கும், அழகான விக்டோரியக் கால உடைகளும், ரொம்ப பிசியுமா மக்கள் திரியிற பிரிட்டிஷ் தெருக்கள் எதுவும் இல்லாம மொத்தமா மால்ட்டாங்கற தீவு தான் இதுல. அதை அழகா காட்டிருக்கறது எப்ப ஃபீலாகும்ன்னா, அடிக்கடி அவங்க அந்தத் தீவோட பேரைச் சொல்றப்பவெல்லாம் ஓ இது ஐலேண்டில்ல. அட ஆமா அதான் இவ்ளோ பெருசா செட் மாதிரி இல்லாம அழகா இருக்குன்னு ஃபீலாக வச்சிருக்கு. இது முதல் பார்ட்ல எவ்ளோ நார்மலான பீரியட், ஃபன் அண்ட் டிடெக்ட்டிவ் டோன்ல இருந்ததோ அதுல இருந்து கொஞ்சம் நேச்சுரலா டார்க் டோன்ல கதை போக வச்சிருந்தாங்க. அதுவும் குறிப்பா மாமியார் காணாம போற சீனுக்கு முன்னாடி சீன்ல இருந்து.

இது ஷெர்லாக் கதைகள்ல இல்லாத புதுக்கதை. நாவலா எழுதினவங்க நான்சி ஸ்ப்ரிங்கர். போன பதிவுல இல்ல இத நாம இங்க சொல்ல வேணாம். எல்லாரும் படத்தைப் பார்த்தே தெரிஞ்சிக்கட்டும்ன்னு சொல்லாம விட்ட விசயம் ஒன்னு இருக்கு
அது எனோலா கேரக்ட்டர் ஃப்ரீக்வெண்ட்டா ஃபோர்த் வால் ப்ரேக் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அதாவது ஃபோர்த் வால் ப்ரேக்கிங்ன்னா திரையில வர்ற முக்கிய கதாபாத்திரம் ஆடியன்ஸோட நேரடியா பேசுவாங்க ஸ்க்ரீன்ல இருந்து. லைக் நம்ம டெட்பூல் வேட் வில்சன் பேசுற மாதிரி. இதை முதல் முதல்ல நான் பாத்தது மாஸ்க் கார்ட்டூன்ல மாஸ்க் கேரக்ட்டர் ஆடியன்ஸைப் பார்த்து டிவி ஸ்க்ரீன்ல இருந்து பேசினது தான். உங்களுக்கு எனோலா ஹோம்ஸ் முதல் ரெண்டு பாகங்கள் பிடிச்சிருந்தா இந்த மூனாவது பாகம் ரொம்பவே பிடிக்கும். நெட்பிளிக்ஸ்ல இருக்கு.

சரி நண்பர்களே, அடுத்த பதிவுல சந்திக்கலாம். வர்ட்டா!

No comments:

Post a Comment