எத்தனை பேர் இந்த
சீரிஸை தொடர்ந்து பார்த்துகிட்டிருக்கீங்கன்னு போன ஃப்ளாஸ் பத்தின பதிவுல தெரிஞ்சுகிட்டேன்.
அந்த வரவேற்பு தந்த உற்சாகத்துல இதோ ஃப்ளாஸ் சீரிஸ் பத்தின என்னுடைய அடுத்த பதிவு.
கிட்டத்தட்ட அஞ்சு மாசத்துக்கு முன்னாடிதான் பார்க்க ஆரம்பிச்சேன். எப்படா அடுத்த எபிசோட்
வரும்ன்னு வெய்ட் பண்ண வச்சு ஒவ்வொரு வாரமும் காலைல பல்லு கூட விளக்காம பார்த்துகிட்டிருக்கேன்.
அந்த சீரிஸ் மேல அப்படியொரு ஈர்ப்பு. முதல் பதிவுல ஃப்ளாஸ் பத்தின அறிமுகத்தை எழுதியிருந்தேன்.
இந்தப் பதிவுல இந்த சீரிஸ்ல என்னை ரொம்பவே கவர்ந்த அந்தக் கதையோட போக்கையும், சுவாரஸ்யமான
சில காட்சிகளையும் பத்தி பார்ப்போம்.
முதல் சீசன்
பேரி ஆலனோட (அதாங்க
ஃப்ளாஸோட ஒரிஜினல் நேம். இந்த சூப்பர் ஹீரோ பசங்க எல்லாருக்குமே ஒரு முகமூடி இருக்கும்.
அத மாட்டிக்கிட்டா ஒரு நேம். கழட்டி வச்சா ஒரு நேம். இதெல்லாம் கூட பரவால்ல. சூப்பர்
மேனுக்கும் சூப்பர் கேர்ளுக்கும் கண்ணுல ஒரே ஒரு கண் கண்ணாடிதான். மூஞ்சியில மச்சம்
கிச்சம்? அட, அட்லீஸ்ட் கொஞ்சம் முடிய பிச்சு உருட்டி பசை தடவி மூஞ்சியில மருவாச்சும்
வச்சுக்கிட்டு வரக்கூடாது? ம்ஹும்) அம்மாவை ரிவர்ஸ் ஃப்ளாஸ் கொல்றதுல ஆரம்பிக்கிது
இந்தக் கதை. அப்ப பேரி ரொம்ப சின்னப் பையன். அவன் கண்ணு முன்னாடி மஞ்சள் கலர்ல எதோ
ஒன்னு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி சுத்தி வந்து அவனோட அம்மாவை கொன்னுடுது. ஆனா அந்த எடத்துல
பேரியோட அம்மாவையும், அப்பாவையும் தவிர யாருமே இல்ல. அதனால போலீஸ் அவங்கப்பாவை கைது
பண்ணிக்கிட்டு போயிடுது. இந்த சீன்லயே ரெண்டு விசயங்கள் தெளிவாயிடுது.
முதலாவது, பேரி
தன்னோட அப்பாவை ஜெயில்லேர்ந்து ரிலீஸ் பண்ணனும். அதுக்கு தன்னோட அம்மாவை கொன்னது யார்ன்னு
கண்டுபிடிக்கனும். ரெண்டாவது, கொன்னவனைப் பழிவாங்கனும்.
இதுதான் முதல்
சீசன்.
இப்ப மூனாவதா இன்னொரு
விசயமும் கூட சேர்ந்துக்குது. அதாவது, கொன்னவனைக் கண்ணாலயே பார்க்க முடியலேன்னா அது
ஒரு அமானுஷ்யம். அப்படி ஒரு அமானுஷ்யத்தை கண்டுபிடிச்சு பழிவாங்க அதுக்கு ஈக்குவலான
ஒரு சக்தி இருக்கனும். இப்ப முதல்ல சொன்ன அந்த ரெண்டு பாயிண்டையும் நிவர்த்தி செய்யிற
ரீசன் கிடைச்சிருச்சா? பேரி ஆலனுக்கு அந்த பவர் ஒரு மின்னல் மூலமா கிடைக்குது.
அதே செண்ட்ரல்
சிட்டியில ரிச்சான ஒரு விஞ்ஞானி. டாக்டர் ஹாரிசன் வெல்ஸ். ஸ்டார் லெபாரட்டரின்னு ஒன்னு
வச்சு பெப்பெரிய ஆராய்ச்சியெல்லாம் செஞ்சுகிட்டிருக்காரு. அவ்ளோ பெரிய லேப்ல அவர் கிட்ட
வேலை பார்க்குறது வதவதவதன்னு, மூனே மூனு பேர். Fran’Cisco’ Ramon, Ronnie Raymond, Caitlin Snow. (அடடே!) இவங்க போசான்
துகள் மாதிரி உருவாக்க நினைச்சு அது தோல்வியில முடிய அந்த லேப் வெடிச்சு சிதறிடுது.
அந்த சமயத்துல தான் பேரி ஆலன் மேல மின்னல் விழுந்து கோமாவுக்கு போயிடறாரு. (இப்ப கூடவே
அந்த நகரத்துல பலர் மேல அதே மாதிரியான சில செயற்கை மாற்றங்கள் நடக்குது. இவங்கள மெட்டா
ஹ்யூமன்ஸ்ன்னு (Meta Humans) சொல்லுவாங்க.)
பேரி ஆலன் ஒன்பது மாசம் கழிச்சு கோமாவுல இருந்து டெலிவரியாகறாரு. நா யாரு? நா எங்க
இருக்கேன்? நா எப்பிடி இங்க வந்தேன்ங்கற பார்மாலிட்டீஸெல்லாம் முடிச்சிட்டு தன்னோட
உடல்ல ஏதோ ஒரு புது மாற்றத்தை உணர்றாரு. அங்க இருந்து பேரி ஆலன் ஃப்ளாஸாக மாறி ஓட ஆரம்பிக்கிறார்.
ஓடினார் ஓடினார் இந்த உலகம் பூராம் ஓடி ஓடி சலிச்சுப் போயி, மல்ட்டிவர்ஸ் எர்த் ஒன்,
ட்டூ, த்ரீ, ஃபோர்ன்னு எர்த் நைண்டீன், எர்த் ட்வெண்ட்டிக்கெல்லாம் ஓடுறார். உண்மையில
அவர் அந்த ஊர்ல உள்ள போலீஸ் டேசன்ல ஃபாரன்சிக் சைன்ட்டிஸ்ட்டா இருக்காரு.
இதுல ஒரு சின்ன
காமெடியான விசயம். பசங்களா இந்த ஊர்ல ஸ்டார் லேப் வெடிச்சு மெட்டா ஹ்யூமன் ஆகாதவங்க
யாரு? நம்ம ஐரிஸ் அப்பாவும், பேரி ஆலன் அப்பாவும்ன்னு சின்னக் கொழந்தைங்க கூட சொல்லும்.
அந்தளவுக்கு மெட்டா ஹ்யூமன்ஸ். எதுக்கு?
பேரிக்கு சொய்ங்
சொய்ங்ன்னு ஓடுற பவர் இருக்கு. ரைட்டு. அவருக்கு சமமா மோதி ஏற்கனவே கொஞ்சம் சூப்பர்
ஹீரோவா இருக்கறவன செம சூப்பர் ஹீரோவா மாத்திக்க வேணாமா? அதுக்குத்தான். தனது காலையே
சக்கரமாக்கி, தனது கால் படும் இடத்தையெல்லாம் கன்வேயர் பெல்ட்டாக்கி ச்சும்மா சுத்தி
சுத்தி ஓடிப் பழகுறாரு த ஃப்ளாஸ். ஒவ்வொரு மெட்டாவோடயும் மோதி பலப்பரிட்சை செஞ்சு அவங்கள
ஜெயிக்கும் போது ஒரு புது லெவல் வேகத்தை கடந்து சாதனை செய்யிறாரு.
வேகத்தோட லெவல்ல
‘Mach’ ன்னு ஒரு அளவு இருக்கு. அத Speed of Sound ன்னு சொல்லுவாங்க. வேகமா ஓடுறதால
உருவாகுற ஒலியோட அடர்த்தியான அளவை. 1 Mach = 1234.8 KMPH. இதுல நம்ம ஃப்ளாஸ், மூனு
லெவல் தாண்டுறாரு. அந்த வேகமான ஒலியை வச்சு சூப்பர்சானிக் பன்ச் எல்லாம் செய்யலாம்.
கொஞ்சம் பலமான உறுதியான மெட்டாவை அடிச்சு வீழ்த்த உதவும்.
சூப்பர் வில்லன்
இந்த லெவலெல்லாம்
தாண்ட டாக்டர் ஹாரிசன் வெல்ஸ் உதவுறாரு. அவர் பேரியோட ஸ்பீட் மேல காட்டுற அளவுக்கதிகமான
ஈடுபாடே அவர் மேல சந்தேகத்தை வரவழைக்கிது. உனக்கு என்னப்பா பிரச்சனை? நீ ஏன் அவன் மேல
இவ்ளோ அக்கறையா இருக்கன்னு எல்லாருக்கும் தோன்றுனாலும், யாருமே ஹாரிசனை நெருங்கி ஏன்னு
கேக்க முடியாது. அப்படி ஒரு ஆளுமை. ரெண்டு காலும் வேலை செய்யாது. வீல் சேர் வில்லன்னாலே
எனக்கு இந்த கேரக்டர்தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு பிடிச்ச வில்லன்களோட லிஸ்ட்டுல
கண்டிப்பா இவருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.
சரி. ரெண்டு காலும்
வேலை செய்யாத அந்த வீல் சேர் டாக்டர் எப்படி வில்லனானாரு? அவரு ஏன் பேரி ஆலனோட ஸ்பீட்
லெவல் மேல அப்படி ஒரு ஈடுபாடு காட்றாரு? ம்க்கும். அத எப்பிடி சொல்றது? அதுதான கதையே.
மொதல் சீசன் மொத்தமுமே அவ்ளோ க்ரிப்பா பரபரப்பா மூவ் ஆனதுக்கு காரணம் ஃப்ளாஸ்ங்கற சூப்பர்
ஹீரோ கேரக்ட்டர் அல்ல. டாக்டர். ஹாரிசன் வெல்ஸ். அதுக்கு அவர்கிட்ட இருந்த ஸ்ட்ராங்கான
ரீசன், ஸ்ட்ராங்கான ஃப்ளாஸ்பேக் (ரொம்ப லென்த்தெல்லாம் இல்லை. ச்சும்மா ஒரு பத்து நிமிசம்
வரும்), இத்தனை நாளும் எப்படி இத கவனிக்காம போனோம்ங்கற அளவுக்கு கண்ணைக் கட்டுற லெவல்ல
வில்லனா உருவாகுற விதம். இதெல்லாமே அடேங்கப்பா லெவல் கதை.
இவ்வளவு பில்டப்பையும்
தாண்டி, அந்த வில்லன், சமகாலத்திய மனுசன் கிடையாது. எதிர்காலத்துல இருந்து வந்து பேரி
ஆலன் fastest man in the world ஆகற வரைக்கும் வளர்த்து, அடப் போங்கப்பா. இட்ஸ் அமேஸிங்
அவ்ளோதான் சொல்ல முடியும்.
அடுத்த பதிவுல
தொடருவோமா?


No comments:
Post a Comment