கார்த்திக்மணி.காம்
Saturday, June 27, 2026
Moondram Kan - Murder mystery
மூன்றாம் கண் - மர்டர் மிஸ்டரி
அப்டின்னு ஒரு தமிழ் மர்டர் மிஸ்டரி. நடிகர்கள்னு பாத்தா, ஜான் விஜய், கலையரசன், விதார்த், கே.பி.வொய்.சரத், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, சுந்தரா டிராவல்ஸ் ராதா. உண்மயில இது ஒரு ஹூடன்னிட் படம். ஆனா கொஞ்சம் வித்தியாசமானது. படத்துல அந்த ஹூடன்னிட்டை மட்டும் ஆடியன்ஸே படத்தைப் பார்த்து, யாரந்தக் கொலையாளின்னு முடிவு பண்ணிக்கனும்னு முடிவ அன்சால்வ்டா விட்ருப்பாங்க. வாங்க அப்டி ஒரு அன்சல்வ்ட பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.
கதைப்படி ஒரு ஃபேக்டரி. அதுல ஒரு கொடூர சாடிஸ்ட் ஜெனரல் மேனேஜர். பேரு சதாசிவம். அவர் தனக்கு கீழ மேலன்னு யாரையும் விட்டு வைக்காம எல்லார்த்துகிட்டயும் கித்தாப்பாவும் எடுத்தெறிஞ்சும் பேசுவாரு. கீழ வேலை செய்யிறவங்களத்தான் மெரட்டறாருன்னு பார்த்தா, மேல உள்ள மேனேஜிங் டைரக்ட்டர் கிட்டயும் அப்டித்தான் பேசுவாரு. அதாவது அவர் எதாவது சொன்னா, ஜி.எம் சதாசிவம். இதெல்லாம் நான் பாத்துக்கறேன். நான் உங்கப்பனையே பாத்தவண்டா, போங்க தம்பி போய் உங்க கேபின்ல ஏசியில உக்காந்து எதையாவது அமுத்திட்டு கெடங்கன்னு சொல்லுவாரு. அதுவும் லேபர்ஸ் முன்னாடி. இது ஒருவகையில லாஜிக் பொத்தலா தெரிஞ்சது. அப்புறம் பொண்ணுங்க யாராவது இண்டர்வியூக்கு வந்தா அவங்க வீட்டுக்கே போய் உப்புமா டேக் அவே கேட்டு வாங்கிட்டு போவாரு. சேடிஸ்ட் அண்ட் பர்வர்ட்.
அடுத்ததா நாலு அத்தியாயங்கள். அதாவது இவரைக் கொல்ல முகாந்திரம் உள்ள நாலு கதாபாத்திரங்கள் அவரை ஏன் கொல்லனும்னு காட்டப்படுற நாலு எபிசோட்ஸ். அதுல என்னை ரொம்பவே பாதிச்சது முதல் எபிசோடான திலீபனோட எபிசோட். அவனுக்கு ஒரு பிரச்சினை இருக்கும். சவுண்ட் அலர்ஜி. இதால தான் நான் ரொம்ப பாதிக்கப்பட்டு வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். ஆனா அதை ஒரு எக்ஸ்ட்ரீம் லெவல்ல மிகைப்படுத்திக் காட்டிருப்பாங்க இந்த எபிசோட்ல. ஆபிஸ்ல சத்தமா மொபைல்ல பாட்டைப் போட்டு அலற வுட்டுகிட்டிருப்பாங்க. அதுவும் ஜெனரல் மேனேஜர். கேக்குறவன் கேனையனா இருந்தா... அந்த சீனை சதாசிவம் சவுண்டா பேசுறவர்ன்னு கூட வச்சிருந்திருக்கலாம். ஏன்னா அந்த மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஊருக்கே கேக்கற மாதிரி பேசுற சுபாவம் பலருக்கும் இருக்கறது உண்மை. ஆனா இதுல ஜி.எம் தன்னோட ஃபோன்ல சவுண்டா பாட்டைப் போட்டுகிட்டு வேற ஒரு ஆள்கூட ஃபோன்ல பேசிகிட்டிருந்ததா அந்த சீனை வச்சது இன்னொரு லாஜிக் பொத்தல். இதெல்லாம் அகைன்ஸ்ட் கம்பெனி ரூல். ஆனா பாருங்க இந்த ஃபேக்டரி ஆபிஸ்ல மட்டும் சகஜமா சவுண்டா பாட்டுக் கேட்டுகிட்டிருக்காரு சதாசிவம். இதுல இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் சண்டை வேற.
அடுத்து இன்னொரு எபிசோட். அது பிரகாஷ் அத்தியாயம். பிரகாஷுக்கும் ஒரு பிரச்சினை. அது சைக்கோத்தனமானது. உண்மையில ஹீரோயிசமானது. யாராவது அவர் முன்னாடி பொண்ணுங்கள அடிச்சாலோ துன்புறுத்தினாலோ அவங்கள அடிச்சுக் கொல்லனும்னு வெறியாகிடுவாரு. இதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கற டாக்டரையே தன்னோட ஸ்டெனோவை காஃபி கொட்னதுக்காக இவர் முன்னாடி அடிக்க, அவரை இவர் அடிக்க அந்த டாக்டர் ஃபோட்டோல தொங்கிருவாரு மாலையோட. இதே மாதிரி தன்னோட கம்பெனியில வேலை பாக்குற பொண்ணை கை நீட்டிட்டாருன்னு சதாசிவத்தை அடிக்கப் போனவருதான். உண்மைல இதெல்லாம் ஒரு தலைவனுக்கான நல்ல தகுதியே. அப்டியே அந்தக் கேரக்ட்டரை டெவலப் பண்ணி ஒரு அந்நியன் மாதிரியான ஒரு செம படத்தை எடுக்கலாம்.
அடுத்து ஹரிணி எபிசோட். இண்டர்வியூக்கு வந்த பொண்ணுகிட்ட வீடு வரைக்கும் போய் அடாவடி பண்றாரு சதாசிவம். அதுல ஹரிணியோட அம்மா சதாசிவத்தோட எக்ஸ் லவ்வர். பாஸ்ட்ல சதாசிவத்துக்கு ஒன் சைட் லவ் போல. இப்ப கணவனை இழந்துட்டு பொண்ணை வளக்க கஷ்டப்படற அம்மா. அந்தம்மாகிட்டத்தான் நான் ஒன்னு கேக்கனும். யேம்மா, அதான் அவன் வீட்டுக்குள்ள உன் அனுமதியே இல்லாம உள்ள நொழஞ்சு உன்கிட்ட ரொம்ப இண்டீசண்டா பிஹேவ் பண்ணுவான் அப்புறம் பண்ணிட்டான்னு தெரியிதில்ல. ஏன் கதவைத் தெறந்து வெளிய போய் கத்த மாட்டியா? அவன் வந்து உன் கன்னத்துல மூக்கை வச்சு உறிஞ்சி மோப்பம் புடிக்கிற வரைக்கும் ஹய்யய்யோ நா இப்ப என்ன பண்றதுன்னு கைய பெசஞ்சுகிட்டு நிப்பியா? அப்டின்னு உங்களுக்கும் கேக்கத் தோனும் படம் பாக்குறப்ப. இது இன்னொரு லாஜிக் பொத்தல்.
அப்புறம் சண்முகம் எபிசோட். இவனுக்கும் ஒரு பிரச்சினை. அதாவது சண்முகம் பேச மாட்டான். ஊமையெல்லாம் இல்லங்க. அவன் ஒரு இன்ட்ராவர்ட். ஆனா அவன்கிட்ட அவனோட மனசாட்சி எப்பவுமே கூடவே இருந்து ரன்னிங் கமெண்டரி குடுத்துகிட்டிருக்கும். அதுவும் அவனோட நெய்பர் ஒருத்தி, அவளோட படுக்கைல இவனை வீழ்த்தி தடவிகிட்டிருக்கறப்பவும். பாக்கற நமக்குத்தான் திரீசம் போல ஃபீலாகும். ஆனா அந்தப் பொண்ணிக்குத்தான் இவன் மனசாட்சி கண்ணுக்குத் தெரியாதே. இதுல சதாசிவத்தை விட பெரிய பர்வர்ட் சண்முகந்தான். சரிங்க ஸ்பாய்லர்தான். வேண்டாம்ன்னா அப்டியே ஸ்வைப் பண்ணிட்டுப் போயிடுங்க. சதாசிவத்தைக் கொன்னது சண்முகந்தான். மத்த மூனு பேரும் தான்தான் சதாசிவத்தைக் கொன்னோம்னு நினைக்கிறது கூட நியாயந்தான். ஏன்னா அவங்களுக்கெல்லாம் ஒரு வலுவான காரணமிருக்கு சதாசிவத்தைக் கொல்ல. ஆனா சண்முகத்துக்கு? எது பொண்ணு குடுக்கலன்னா. யேங்க இதெல்லாம் ஒரு ரீசனா? இதுதான் ரீசன்னா, இது கன்வின்சிங் இல்ல. வேற ரீசன் இருக்குன்னா உள்ளதுலயே அதுதான் மிகப்பெரிய லாஜிக் பொத்தல் இந்தப் படத்துல. ஏன்னா அப்டி ஒரு காரணமும் இல்லாம ஒருத்தன் இன்னொருத்தனைக் கொல்லுவானா?
சரிங்க. அதெல்லாம் எப்டியோ போகட்டும். ஆனா இந்தப் படத்துல அவ்ளோ சிறப்பா நடிச்சிருக்கறது சதாசிவமா நடிச்சிருக்கற ஜான் விஜய் மட்டும்தான். ஏன்னா, இவ்ளோ தூரம் மத்த மூனு பேரும் சதாசிவத்தைக் கொல்லனும்னு நினைக்கிறப்பவும், சதாசிவத்தைக் கொன்னுட்டாதான் என்னன்னு ஆடியன்சையும் நினைக்க வச்சிருக்கறது அந்த நடிப்புதான். அதுல அந்த லாஜிக் மீறல்களைக் கொறைச்சிருக்கலாம். அப்டி இருந்திருந்தா செமயா இருந்திருக்கும்.
சரிங்க. அடுத்த பதிவுல மீண்டும் நாம சந்திப்போம். வர்ட்டா!
Friday, June 26, 2026
Paingkili - Malayalam
பைங்கிளி - மலையாளம்
அப்டின்னு ஒரு மலையாளக் காமெடிப் படம். ரோமாஞ்சம் டைரக்ட்டர் ஜித்து மாதவன் எழுதின கதை. ஆனா டைரக்சன் மட்டும் ஸ்ரீஜித் பாபு. ஹீரோவா நடிச்சிருக்கறது அதே ரோமாஞ்சம்ல அந்த வீட்ல உள்ள பசங்கள்ல கொஞ்சம் லீடர்ஷிப்பா நடந்துக்கற அதே சஜின் கோபு தான். ஹீரோயினா நடிச்சிருக்கறது அனஸ்வரா ராஜன். இன்னும் பலரும் நடிச்சிருந்தாலும் குறிப்பா சொல்ல வேண்டியது நம்ம கட்டதொர ரியாஸ் கானைத் தான். படமே ஒரு மாதிரி அபத்த நகைச்சுவைல தான் ஓடிட்டிருக்கும். அதுல ரியாஸ் கான் காட்டிருக்கற முரட்டுத்தனமெல்லாம் ஒரு அதிசயம். சரி நாம நேரடியா படம் பார்த்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பார்க்கலாம் வாங்க.
கதைப்படி சுகு தன்னோடே ரெண்டு நண்பர்களோட ஊருக்குள்ள ஒரு ஸ்டிக்கர் கடை நடத்திகிட்டு இருக்காரு. இதுநாள் வரைக்கும் தன்னோட அப்பாவையே அப்பான்னு பேர் சொல்லிக் கூடக் கூப்ட்ருக்காத, சுஜித் குமார்ன்னு பேர் சொல்லி மட்டுமே கூப்ட்டுகிட்டிருக்கறவர். சுகுவோட வீட்ல அவனுக்கு ஒரு பொண்ணு கிடைக்கலையேங்கற ஏக்கத்துல அவனை பரிதாபமா ஹேண்டில் பண்ணிகிட்டிருக்காங்க. அப்டியே கட் பண்ணா ஹீரோயினுக்கு இன்னும் பதினெட்டு வயசு பூர்த்தியாகல. அப்டியிருந்தும் அவங்க வீட்ல அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிகிட்டே இருக்காங்க. அவளும் முதல் மாடியில உள்ள அவளோட ரூம் ஜன்னல் வழியா கீழ எகிறி குதிச்சு வீட்டை விட்டு ஓடிகிட்டே இருக்கா.
அப்டி ஓடிப் போனாலும் வந்து புடிச்சிடறாங்க. அடுத்து இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும். எகிறி குதிச்சு ஓடுவா. தேடி வந்து புடிச்சிடுவாங்க ரிப்பீட்டு. இப்டி சும்மா ஓடினா புடிச்சிடறாங்கன்னு யாரையாவது காதலிச்சு ஓடிப் போகனும்னு பக்கத்து வீட்டுப் பள்ளித் தோழி ஐடியா கொடுக்க, அடுத்து காதலன் தேடும் படலம். அதுலயும் முதல் நிலை சிரிப்பு. ரெண்டாவது நிலை நம்பர் வாங்கறது. மூனாவது நிலை கால் பண்ணிப் பேசறது. நாலாவது நிலை ஓடிப் போறது. எதே? இந்த குபீர் ஐடியாவையும் கொடுக்கறது அந்த பக்கத்து வீட்டுப் பள்ளித் தோழிதான். யேம்மா அவ என்ன சொன்னாலும் நம்பிகிட்டு நடப்பியா? அப்டின்னு தான் கேக்கத் தோனும். அவளே ஒருமுறை இப்டி ஓடிப் போயி அடுத்து என்ன செய்யன்னு ஒரு குழப்ப மனநிலைல இருக்கறப்ப, அவளே கால் பண்ணி எனக்கே அவ்ளோ அனுபவம் கெடயாது. நான் சொல்லிட்டு இருக்கறத எல்லாம் கேட்டு நடந்துகிட்டிருக்காத அப்டின்னு சொல்ல அப்ப தான் ஷீபாவுக்கு உலகமே புதுசா புரிய ஆரம்பிக்கிது. அப்படியே ஒடஞ்சு போய் கதறி அழுகுறா. அந்த சீன்லயெல்லாம் தான், நமக்கு மனசு இவங்களும் மனுசங்கதான் அப்படின்னு தோணும்.
சுகு என்ன பன்றார்ன்னா, வீட்ல விடுமுறை நாட்கள்ல குடிக்கிறாரு. கடையை மூடிட்டு நண்பர்களோட குடிக்கிறாரு. டீக்கு பதிலா கட்டன் சாயா குடிக்கிறாரு. அப்புறம் கடையில ஸ்டிக்கர் ஒட்டுறேன்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் வந்து ரூம் போட்டு குடிக்கிறாரு. நண்பனை குடிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு, இந்த மாதிரி சமயங்கள்லதாண்டா குடிக்கணும்னு சொல்லி, அவன வற்புறுத்தி குடிக்க வைக்கிறாரு, கூட குடிக்கிறாரு. நீங்களே சொல்லுங்க இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு பொண்ணு எப்படி கிடைக்கும்? ஆனா இவனையும் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து காதலிக்கிற ஒரு தோழனோட சகோதரி இருக்கா. அவகிட்டயும் ஸ்ட்ரிக்டா சுதாகரோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி தான் அப்படின்னு அவளை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்றாரு.
இதுல காமெடின்னு எதையும் தனியா குறிப்பிட்டு சொல்றதுன்னா, அவ்வளவு இருக்கு நிறைய சொல்லணும். ஆனா சில விஷயங்கள ஹின்ட்டா சொல்லலாம். ஹீரோ ஸ்டிக்கர் ஒட்ட கோயம்புத்தூர் போறது, போற வழியில கூட இருக்கிற நண்பன் ராஜஸ்தான் ராஜா சிலைய வாங்குறது, அது பேசாம பண்ற காமெடிகள் எல்லாம் அதுவும் சிறப்பா இருக்கும். ரூம் போட்டு சரக்கடிச்சு அதுக்கப்புறம் நைட்டு அவனோட புல்லட்ட திருட்டு கொடுக்கிறது, அப்புறம் அதை தொடர்ந்து வர சம்பவங்கள் அதுதான் மொத்த படமும். அந்த சம்பவத்தோட முடிவுல ஹீரோயின் ஹீரோ பக்கம் வந்து, அதை தொடர்ந்து வரும் மிச்ச கதைதான் மொத்த படமும். இதுக்கு நடுவுல எக்கச்சக்கமான கேரக்டர்ஸ் இருக்காங்க. அவங்க பண்ணுறது பேசுறது எல்லாமே ஒரு அபத்த நகைச்சுவைல தான் வரும். இதுல இவங்க பண்ற கூத்தெல்லாம் வேடிக்கை பார்க்கிற அந்த ஊர் மக்கள் தான் நாம.
எனக்குத் தெரிஞ்சு, மலையாள சினிமா எதையாவது புதுசா ட்ரை பண்ணிகிட்டே இருக்கு. நீங்க பைங்கிளிய பாக்க ட்ரை பண்ணுங்க. நாம அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா!
M4M: Motive for murder - Telugu
M4M: Motive for murder - தெலுங்கு
அப்டின்னு ஒரு தெலுங்கு சைக்கோ திரில்லர் ப்ளஸ் மர்டர் மிஸ்டரி மூவி. நடிகர்கள்னு பாத்தா சுபலேகா சுதாகர், சத்யா கிருஷ்ணனைத் தவிர யாரையுமே தெரியாது. அதுதான் இங்க பிரச்சினையே. அது என்னன்னு பதிவுல பாக்கலாம். சரி வாங்க இந்தப் படத்தைப் பாத்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.
கதைப்படி ஒரு நடிகர் கொல்லப் படறார். அவர் கொல்லப்பட்டு செத்துக் கெடக்கற விதம் அது ஒரு சைக்கோவின் கைவரிசைங்கறது புரியிது. அவ்ளோதான் அடுத்து சைக்கோ கொலைகாரனைத் தேடறாங்க. அது யார்னு தேடிட்டே இருக்காங்க. கடைசில இவரு குதிக்கிறாரு இவர்தான் விஸ்வநாதன், இல்ல இவர்தான் குதிச்சாரு இவர்தான் விஸ்வநாதன் அப்டின்னு சொல்லிட்டே போய் அய் நானும் குதிக்கிறேன் நாந்தான் விஸ்வநாதன் அப்டிங்கற மாதிரி இவன்தான் சைக்கோ... ஓ இவர் தான் சைக்கோவா அய்யய்யோன்னு எல்லாரும் மூக்கு மேல வெரல வைக்க, அப்ப போலிஸ் எங்களுக்கு புது இன்பர்மேஷன் கெடச்சிருக்கு. அந்த இன்பர்மேஷன் படி அவரில்ல, இவர்தான் சைக்கோ அப்டின்னு ஒரு மாதிரி படம் பாக்கறவங்கள அய்யேன்னு நெனைக்க வச்சிடுச்சு. ஹான்... என்ன சொல்ல வந்தேன்? ஆங் கண்டுபுடிச்சிட்டேன். கதைப்படி!
கதைப்படின்னு கதையைச் சொல்ல வந்தேன்ல? ரைட்டு. கதை - அது ஒன்னுதான் சொல்லிக்கிற மாதிரி இருக்கு இந்தப் படத்துல. அதையும் ஏன் ஸ்பாய்ல் பண்ணிகிட்டு. சோ நேரடியா எப்டியிருந்ததுன்னே போயிடலாம். செம அமெச்சூர்தனமா இருந்தது மேக்கிங். அது ஒன்னுதான் முக்கியமான விசயம். கதை நல்லாருக்கோ இல்லியே மேக்கிங் நல்லாருந்தா பார்த்துட்டு நாலு பேரு சொல்லுவாங்க, செமயா எடுத்திருக்காங்க அப்டின்னு. ஆனா கதை நல்லாருந்து மேக்கிங் சொதப்பினா எப்டியிருக்கும்னு சொல்ல இந்தப் படம் ஒரு உதாரணம்.
ஒரு சைக்கோ திரில்லர் எடுக்க முதல் முக்கியமான விசயம் யாரந்த சைக்கோன்னு சஸ்பென்ஸ மெய்ண்டெய்ன் பண்ணனும். அத செமயா பண்ணிருக்காங்க. அடுத்து இவன் தான் சைக்கோன்னு சொன்னா அது அக்சப்ட் பண்ணிக்கிற மாதிரி இருக்கனும். அது கொஞ்சம் ஓகே மாதிரிதான் இருந்தது. அடுத்து அதுக்கும் மேலயே ஸ்கோர் பண்ணிருந்தாங்க கதைல. அதுக்காகத் தான் பதிவா எழுதி பாரட்டிகிட்டிருக்கேன். இல்லன்னா சீண்டியிருக்கக் கூட மாட்டேன். ஆனா மேக்கிங் நிச்சயம் பெரிய சொதப்பல். இத நான் சொல்லல. படம் பாருங்க உங்களுக்கே புரியும்.
உதாரணத்துக்கு முதல்ல ஒரு ரெயின் கோட் போட்ட ஆள் சூட்டிங்ல ரெண்டு கிளாஸ் ஆரஞ்ச் ஜூஸ் எடுத்துகிட்டுப் போறான். அடுத்த கட்ல அந்த ட்ரேல ஒரே ஒரு கிளாஸ் ப்ரவுன் கலர் ஜூஸ் மட்டுமே இருக்கு. எப்டி? ஏன்? இப்டி படம் நெடுக கண்டினியுட்டி மிஸ்டேக்ஸ். அதைக் கூட மன்னிச்சிடலாம். ஆனா சைக்கோ திரில்லர்ன்னா படம் பாக்கற ஆடியன்ஸ் நெய்ல் பைட்டிங், சீட் எட்ஜ் வாட்ச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்களே, அப்டி ஒரு வஸ்துவே இந்தப் படத்துல இல்ல. கொலை, ஆர்ட்டிஸ்டிக், சைக்கோ, எஸ்.பி காலிங் கமிசனர். கமிசனர் காலிங் எஸ்.பி. அப்றம்? அடிக்கடி டிவில பிரேக்கிங் நியூஸ். அப்புறம் இன்னொரு சேனல்ல பிரேக்கிங் நியூஸ். அப்புறம்? இன்னொரு... 🤐
படத்துல இது மிகப்பெரிய சொதப்பல். படத்துல காட்சிகளா வசனங்களா மவுனச் சலனங்களா கடந்து போக வேண்டிய எல்லா சீன்ஸ்லயும் டிவில அந்த கொலை பத்தின தகவல்கள் பிரேக்கிங் நியூஸா ஓடுது. ஒரு வாட்டி நியூஸ் காட்டினா பரவால்ல. மொத்தப் படத்துல பாதிப் படம் பிரேக்கிங் நியூஸ் தான்.
அடுத்து ஹீரோ அண்ட் ஹீரோயின். ஹீரோ இந்த வழக்கை இன்வெஸ்டிகேட் பண்ற போலிஸ். ஹீரோயின் இந்த வழக்கைப் பத்தி நியூஸ் எழுதற இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட். அது தப்பில்லன்னாலும், இந்தக் கதைக்கு அப்டி இருந்திருக்க வேணாமேன்னு தோனுது. அப்டி இல்லாம இருந்திருந்தா கூட எப்டியாவது அந்த நெய்ல் பைட்டிங் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்க வாய்ப்பிருக்கு. ஆனா பாருங்க அது மிஸ்ஸிங். இதுல ரெண்டு பேருமே புது முகங்கள். ரெண்டு பேருமே நடிக்கிறாங்கன்னு பச்சையா தெரியிது.
இந்தக் கதையை, தெரிஞ்ச முகங்களை வச்சு, நல்ல மேக்கிங் தெரிஞ்ச ஒரு டைரக்டர் இயக்கியிருந்தா கிளாஸா இருந்திருக்கும். சரி விடுங்க, மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா!
Tuesday, June 23, 2026
Fault London - English movie series
Fault London - ஆங்கிலப் படவரிசை
அப்டின்னு ஒரு ரொமான்ஸ் மூவி அதுவும் ஃபர்பிடன் ரொமான்ஸ். பாக்கற படங்கள், வெப்சீரிஸ்கள், படிக்கிற புத்தகங்களைப் பத்தி எழுதறதுதான் என் வழக்கம். அந்த வகையில இந்தப் படத்தைப் பாக்கறதுக்கு முன்னாடியே இந்த நாவல் வரிசைகள படிக்கவும் செஞ்சிருக்கேன். மெர்சிடஸ் ரான்ங்கற எழுத்தாளர் எழுதின கல்ப்பபிள் நாவல் வரிசையைத் தழுவினது தான் இந்த மை ஃபால்ட் லண்டன்ங்கற முதல் படம். இதே தலைப்புல தான் அந்த நாவலும் வெளியாகி பெஸ்ட் செல்லரா இருந்தது.
கதைப்படி ஃப்ளோரிடால நோவாவோட அப்பா ஜெயிலுக்குப் போனதுக்கப்புறம், அவளோட அம்மா லண்டன் பணக்காரரான வில்லியம் லெய்ஸ்ட்டரை மறுமணம் செஞ்சிக்கறாங்க. அதனால நோவாவும் லண்டனுக்குப் போக வேண்டியதாகிருது. அவ அங்கயிருந்து லண்டனுக்கு வந்தப்புறம் அவளோட காதலன் அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் கூடவே தன்னோட காதலை டைவர்ட் பண்ண, விசயம் தெரிஞ்ச நோவா ரொம்பவே ஒடஞ்சு போயிடறா. இதுக்கு நடுவுல வில்லியமுக்கு ஆல்ரெடி நிக் அப்டின்னு ஒரு மகன் இருக்கான். அவனுக்கும் நோவாவுக்கும் முதல் சந்திப்புல இருந்தே ஆகறதில்ல. ஆனா ஒடஞ்சு போயிருந்த சமயத்துல ஸ்டெப் சிபிலிங்ஸ்க்குள்ள காதல் பொறந்து சண்டையெல்லாம் மறந்து ரொம்ப டீப்பா லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.
ரெண்டு பேருக்குமே கடந்த காலம்ங்கறது இருக்கத்தான் செய்யிது. ஆனா அது நோவாவைப் பொருத்தவரை ஒன்னே ஒன்னுதான். ஆனா நிக்கை நெருங்க நினைக்கிற பெண்களோட எண்ணிக்கை அதிகம். அதுல எல்லாமே அவனோட பணத்துக்காகத்தான். கிடைச்சா லக். கிடைக்கலேன்னா அடுத்து யாரையும் கிடைக்கக் கூடாதுன்னு சரியான சமயத்துக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க. அவ்ளோதான் அந்த கடந்த காலம் எல்லாமே. இப்ப இதெல்லாம் அங்கங்க கண்ணி வெடிகள் மாதிரி வெடிக்கக் காத்துகிட்டிருக்கு. ஆனா இப்ப நண்பன் ஒருத்தனுக்காக இல்லீகல் கார் ரேஸுக்குப் போன எடத்துல ஒரு பஞ்சாயத்தாகிருது. ஏன்னா விதிப்படி நிக் தான் காரை ஓட்டிருக்கனும். அந்த நேரத்துல நிக்கே எதிர்பார்க்காத லெவல்ல நோவா நிக்கோட காரை ஓட்ட அது தீராத தலைவலியா மாறிடுது.
இந்த மை ஃபால்ட் லண்டன்ல இந்த ஒரு தலைவலிதான் பெருசா காட்டப்பட்டு காட்சிகள் நகர்ந்து முடியிது. ஆனா...
படத்துல மேற்படி சொன்ன கண்ணி வெடிகள்ல ஒன்னு வெடிக்கிது. அதை நிக் நினைச்சிருந்தா ஆரம்பத்துலயே டிஃப்யூஸ் பண்ணிருக்கலாம். ஆனா அதையெல்லாம் பண்ணிகிட்டிருக்க அவனுக்கு அப்ப நேரம் இல்ல. ஏன்னா இது வெடிக்கும்னு அவனே எதிர்பார்த்திருக்கல. எங்க டிஃப்யூஸ் பண்ண. ரொம்ப சூதானமா இருந்தும் இந்த விசயம் நோவாவோட அம்மாவுக்குத் தெரிஞ்சு, அப்புறம் நிக்கோட அப்பா வில்லியமுக்குத் தெரிஞ்சு இதனால லெய்ஸ்ட்டர் கம்பெனிகள் மேல இன்வெஸ்டார்ஸ் பண்ணிருக்கற இன்வெஸ்ட்மெண்ட்ஸ் போயிடக் கூடாதுன்னு இத்தோட இதை நிறுத்தித் தொலைக்கவும்னு சொல்ல, சரி நாங்க கள்ளத்தனமா லவ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து இருந்தாலும், ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இன்செக்யூரிட்டி ஃபீல். ஆனா அதுக்கு பொசஸிவ்னஸ்ன்னு பேர் வச்சு படம் பாத்துகிட்டிருக்கற நமக்கே, டேய் டேய் இதப் பண்ணாதடா பாவின்னும், நோ நோவா வேண்டாம் பண்ணாத ப்ளீஸ்ன்னும் நம்மளயே மனசளவுல கெஞ்ச விட்ருக்காங்க.
இதுல நிக்கா நடிச்சது யார்ன்னு தெரியல. ஆனா நோவாவா நடிச்சிருக்கறது ஆஷா பேங்ஸ். அப்டே இந்திய முகவெட்டு. அப்புறம் நம்ம ருக்மணி வசந்த் ப்ளஸ் தமிழ் பிக்பாஸ் சீசன் 6ல கண்டெஸ்டண்டா வந்த நிவாஷினி மாதிரி ரெண்டும் கலந்த மாதிரி ஒரு முகம். நான் கூட இவங்க ரெண்டு பேருக்கும் அக்கா தங்கச்சி யாராவதா இருக்குமோன்னு சேட்ஜிபிடி அண்ட் கூகுள் மண்டையப் போட்டு குடாய்ஞ்சுகிட்டிருந்தேன். அப்டியெல்லாம் இல்ல. இவங்க ஆல்ரெடி ஆங்கில நடிகைதான். ஹாலிவுட் நடிகை அல்ல. சோ எங்கேயோ அவங்களுக்கு ஒரு இந்தியப் பின்னணி இருக்கு. அது என்னான்னு தெரிய வர்றப்ப பாத்துக்கலாம்.
இது ஆல்ரெடி இன்செஸ்ட் கதையோன்னு டவுட்டாகி சேட்ஜிபிடிகிட்ட கேட்டா ரெண்டு பேரும் ஸ்டெப் சிபிலிங்ஸ்தான, பயாலாஜிக்கலி சிபிலிங்ஸ் இல்லல்ல? அப்ப இது இன்செஸ்ட்ல ரா லேதுன்னு சொல்லுது. யோவ் போயா உனக்கென்ன தெரியும் உறவுமுறைகளைப் பத்தின்னு கடுப்பாயிடுச்சு. இங்கயெல்லாம் ஒரு பொண்ணு ஒருத்தன புடிக்கலேன்னாலே அண்ணான்னு சொன்னா போதும். அப்டியே நொறுங்கிப் போயிருவோம். இதுல ஸ்டெப் சிபிலிங்ஸாம், நான் பயாலாஜிக்கலாம். இதெல்லாம் இன்செஸ்ட்லதாம்லே வருது. எங்கலே போயிட்டிருக்கு உலகம்? ம்க்கும் அடுத்து அவர் ஃபால்ட் லண்டன் அப்டின்னு ட்ரையாலஜியா எடுத்து ரிலீஸ் பண்ணி முடிக்கப் போறானுக. அந்த நாவலையும் படிச்சாச்சு. எப்டியிருந்தாலும் ஆஷா பேங்ஸுக்காக பாக்க வேண்டிய கடமை ஒன்னிருக்கு. பாப்போம்.
அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம் நண்பர்களே, வர்ட்டா!
Nooru Saami - Tamil cinema
Nooru Saami
is a truly proud Tamil film. There is no hidden sarcasm in that statement. I genuinely mean it. Until the very end, I kept feeling nervous inside, hoping the makers would not turn everything into unnecessary cinematic emotion. But thankfully, this film is an emotional roller coaster in the best possible way. There are many actors worth talking about, and I will mention them as we go along. So, let us get into how this emotional roller coaster felt.
According to the story, this should not be seen as just another movie. That is important. Obviously, this is a remake that closely follows a real life incident, even keeping the original names unchanged. When Selvi lost her husband at the age of 26, she was left with two young sons. Even at that difficult time, her relatives did not really stand by her and help share her responsibilities. So she took up whatever work she could find and raised both her sons on her own.
At that point, I expected one of those sons to eventually grow up to be Vijay Antony. But no. The boys remain exactly who they are throughout the film. Now Selvi is 42 years old. Back when her sons were still studying and had not yet started working, she once expressed a desire to have a second chance at life and find a companion. But her elder son Bhaskar reacted strongly against the idea. So Selvi buried that thought and continued living only for her children. Years passed, and now she is 42.
The interesting thing is that only now Bhaskar finally understands something important. He no longer sees his mother as just a mother. He realizes she is a human being trapped within the same four walls, repeating the same routine every day. Only now does he understand that she deserves companionship too. You foolish fellow, what exactly was your problem with accepting this back then? But even if Selvi agrees now, the next question is always how society will see it. That is where many people fail. The fear of what will others think. It is not an imaginary fear. There are countless consequences attached to it. Without turning the film into a social message campaign, director Sasi presents an entire life journey on screen.
Seriously, what kind of human are you? I mean that as the highest compliment. In 28 years, he has directed only nine films. Yet I cannot easily separate them into categories like great, average, or weak. I honestly wonder if anyone else could have made a film like this. At least from what I have seen. My own experience is my only measuring stick. I can proudly say I am going to watch a Sasi film because he consistently delivers meaningful cinema. The only one of his films I still have not watched is Dishyum.
Next comes Swasika, who plays Selvi. I remember Vijay Antony mentioning in an interview that this story remained unmade for years because they could not find the right person to play Selvi. m, I cannot imagine anyone else in that role. She absolutely nailed it. People often use the phrase lived the character. Here, it feels true. The scenes where Selvi talks to the ceiling fan as if it were her companion genuinely brought tears to my eyes. I cannot even explain why. We often hear the saying that relationships stay with us only up to a certain point. This film shows exactly how far those relationships really go and why they exist in the first place. Some scenes are painful to watch because they feel so real.
Then there is Ajay Dhishan as the elder son Bhaskar and Sakthi as the younger son. Ajay Dhishan appeared in Margan. As for Sakthi, most people probably know him already. Comedy may not always work for him, but acting certainly does. Yes, he is the same Portugal Pombala Police Sakthi who appeared as a comedian in Season 2 of Cooku with Comali.
Even after Selvi's sons become willing to arrange a marriage for their mother, we cannot simply assume everything will go smoothly. There are countless obstacles that can appear in different forms. The effort these two actors put into showing that struggle is remarkable. Calling it acting almost feels insufficient. You will understand when you watch the film.
Apart from them, there are many others including Jenson Diwakar, Bucks Bhagavathi, Thamarai Selvi, Kodangi Vadivel, Aruldoss, Lijomol Jose, and Vinodhini Vaidyanathan. But if I had to single out two performances, it would be Balaji Sakthivel and Karunas. The others have relatively limited screen time, but these two leave a powerful impact. That does not mean only they shine. There are many performers whose names I do not even know, so I cannot properly mention them. Honestly, instead of me describing every scene individually, it is better if you watch the film yourself. Every scene can be discussed and appreciated on its own. But that is not what this write up is about.
After a very long time, I finished a movie with the satisfaction of having watched a true cinema experience.
Let's meet in my next post again, friends... See ya!
நூறு சாமி - தமிழ் சினிமா
அப்டின்னு ஒரு உண்மையான பெருமைக்குரிய தமிழ் சினிமாப் படம். இதுல எந்த உள்குத்தும் இல்ல. இதுதான் உண்மையும் கூட. படத்தைப் பார்த்து முடிக்கிற வரைக்கும் மனசுக்குள்ள திக்கு திக்குன்னு பல படபடப்புக்கள், அய்யோ இவனுக சினிமாவுக்குன்னு எதையும் எமோசனலா பண்ணிறக் கூடாதேன்னு. ஆனா அப்டியில்லாம உண்மையிலேயே இந்தப்படம் ஒரு எமோசனல் ரோலோகோஸ்ட்டர். நடிகர்கள்னு நிறைய பேர்த்தைப் பத்திச் சொல்லனும். அதையெல்லாம் பதிவுக்குள்ள சொல்லிக்கலாம். வாங்க அந்த எமோசனல் ரோலோகோஸ்ட்டர் அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம்.
கதைப்படி இதை யாரும் கதையா மட்டுமே பாத்துடக் கூடாது. அதுதான் தேவை. ஆப்வியஸ்லி இது ஒரு உண்மைச் சம்பவத்தோட பெயர்கள் கூட மாற்றம் செய்யப்படாம அப்டியப்டியே அடியொற்றி எடுக்கப்பட்ட ரீமேக் தான் இந்த நூறு சாமி சினிமா. செல்வியோட 26 வயசுல கணவனை இழந்தப்ப அவ கையில ரெண்டு பசங்க. அப்பவே அவளோட குடும்பச் சுமைய பகிர்ந்துக்க அவளோட வீட்டு ஆளுங்க கூட நிக்கல. அப்புறம் அவளே சுயமா கிடைக்கிற வேலைகளைச் செஞ்சு தன்னோட ரெண்டு பசங்களையும் படிக்க வச்சு வளக்கறாங்க. அப்பவே நான் எக்ஸ்பெக்ட் பண்ணது அந்த ரெண்டு பசங்கள்ல ஒருத்தன் தான் விஜய் ஆண்டனியா இருக்கும்னு. ஆனா இல்ல. கடைசி வரைக்கும் அந்தப் பசங்க அப்டியேதான் இருக்கங்க.
இப்ப செல்விக்கு 42 வயசு. ஆனா அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி படிச்சிட்டிருந்த காலத்துலயே ஒரு சமயம் தனக்கும் இன்னொரு வாழ்க்கையை அமைச்சிக்க எண்ணமிருக்கறதா தெரிய வர, அதுக்கு செல்வியோட பெரிய மகன் பாஸ்கர் ரொம்பவே அகைன்ஸ்ட்டா ரியாக்ட் பண்ண, அப்டியே அந்த எண்ணத்தை மறந்துட்டு வாழ்க்கை ஓட இப்ப செல்விக்கு வயசு 42. என்ன விசயம்ன்னா, இப்பத்தான் பாஸ்கருக்கு புத்தியில ஹெவிய்யா ஒரைக்கிது. அம்மா வெறும் அம்மாவா தெரியாம, நாலு சொவத்துக்குள்ள மாட்டிக்கிட்டுச் செஞ்ச வேலையையே திரும்பத் திரும்ப செஞ்சுகிட்டிருக்கற பெரிய சைஸ் எலின்னு. இப்பதான் அவன் புத்திக்கித் தெளியிது அம்மாவுக்கு ஒரு துணை வேணும்னு. அடப்பாவி சண்டாளா இதை அப்பவே ஏத்துகிட்டிருந்தாத்தான் என்னவாம் பிரச்சினை உனக்கு?
ஆனா இப்ப அம்மாவே சரின்னாலும் அதை அடுத்தவங்க எப்டி பார்ப்பாங்கன்னு தான் நினைக்கத் தோனும். பலரும் தோத்துப் போறது இங்க தான். அடுத்தவங்க என்ன நெனப்பாங்கன்ற பயம். அது பொய்யான பயமில்ல. அதுல ஆயிரம் பின்விளைவுகளும் இருக்கு. அத்தனையையும் ஒரு பிரச்சாரப் படமா இல்லாம, ஒரு வாழ்க்கையை நமக்கு ஸ்க்ரீன்ல ஓட்டிருக்காரு டைரக்ட்டர் சசி. யோவ் நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா. சும்மா சொல்லல. 28 வருசங்கள்ல வெறும் 9 படங்களை மட்டுமே எடுத்திருக்காரு. அதுல எதையும் இது செம இது சுமார்ன்னெல்லாம் வகை பிரிக்க முடியாது. என் லைஃப்ல இப்டி ஒரு சினிமாவை வேற யாரும் எடுத்திருப்பாங்களா அப்டிங்கறது சந்தேகம் தான். நான் பார்த்தவரையில சொன்னேன். எனக்கு என் பார்வைதான் அளவுகோல். பெருமையா சொல்லிக்கலாம் சசி படத்துக்குப் போறேன்னு, அவ்ளோ நல்ல சினிமாக்களைக் கொடுக்கறவர். அதுல டிஷ்யூம் மட்டும் நான் இப்பவரைக்கும் பாத்ததில்ல.
அடுத்ததா செல்வியா நடிச்ச ஸ்வாஸிகா. பல வருசமா இந்தக் கதையை எழுதிட்டு எடுக்காம அப்டியே செல்வியா யாரை நடிக்க வைக்கலாம்னு கூட தேடாம அமைதியா விட்டுட்டாருன்னு ஒரு இண்டர்வ்யூல விஜய் ஆண்டனி சொன்னதா ஞாபகம். இப்ப ஸ்வாஸிகாவைத் தவிர யாரையும் செல்வியா யோசிக்கக் கூட முடியாது. நெய்ல்ட் இட். வாழ்ந்திருக்காங்கன்னு வார்த்தை அலங்காரமா சொல்லுவாங்கல்ல. அதை நெஜமாவே இதுல செஞ்சு காட்டிருக்காங்க. அந்த சீலிங் ஃபேனைத் தனக்குப் பேச்சுத் துணையா பாவிச்சுகிட்டுப் பேசற அந்த சீன்ஸ் எல்லாம் கண்ல தண்ணி வந்தது எனக்கு ஏன்னு தெரியல. வீடு வரை உறவுன்னு சொல்லுவாங்க. ஆனா இந்த உறவெல்லாம் எதுக்காக நிக்கும் எதுவரைக்கும் போகும்னு நமக்கு உரைக்கிற மாதிரி வந்த காட்சிகள் எல்லாம் பாக்கவே பகீர்னு இருக்கு. ஆனா இதான் நிஜம்ல!
அடுத்து பெரிய மகன் பாஸ்கரா நடிச்சிருக்கற அஜய் திஷான் அண்ட் ரெண்டாவது மகனா நடிச்சிருக்கற் சக்தி. இதுல அஜய் திஷான் மார்கன் படத்துல நடிச்சவர். ஆனா சக்தி யார்னு சொல்லாமயே எல்லாருக்கும் தெரியும். காமெடிதான் வரல. பரவால்ல செமயா நடிக்க வருதே அதுவே போதும். ஆமாங்க செகண்ட் சீசன்ல குக்கு வித் கோமாளியில கோமாளியா வந்த அதே போர்ச்சுக்கல் பொம்பள போலிஸ் சக்தியே தான். அதான் செல்வியோட பசங்களே தன்னோட அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத் தயாராகிட்டாங்களே அப்றமும் என்னன்னு நாம அப்டி லேசா நினைக்க முடியாது. அதுக்கு எத்தனைத் தடைகள் எந்தெந்த ரூபத்துல வந்து நிக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. அதுக்கு இந்த ரெண்டு பேரும் கொடுத்திருக்கற உழைப்புன்னு தான் சொல்லனும். ஏன்னா நடிப்புன்னு சொல்ல முடியாது. அதைப் படம் பார்த்தா புரியும்.
இதுபோக, ஜென்சன் திவாகர், பக்ஸ் பகவதி, தமிழ் பிக்பாஸ் அஞ்சாவது சீசன்ல வந்த தாமரை, கோடாங்கி வடிவேல், முனிஸ்காந்த், அருள்தாஸ், லிஜிமோல் ஜோஸ், வினோதினின்னு நிறைய பேர் நடிச்சிருந்தாலும் தனியா குறிப்பிட்டு சொல்லக் கடவது பாலாஜி சக்திவேல் அண்ட் கருணாஸ் கதாபாத்திரங்களைத் தான். ஏன்னா முன்னாடி சொன்ன பெயர்கள் எல்லாருக்கும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் அவ்வளவுதான். ஆனா இந்த ரெண்டு பேரும் மெரட்டிருக்காங்கன்னு தான் சொல்லனும். அதுக்காக இவங்க எல்லாம் மட்டும்தான்னு இல்ல. இதுல பலரோட பேரே தெரியாது. அதனால அவங்களைப் பத்திக் குறிப்பிட முடியல. அதுல எதைப் பத்தியும் நான் குறிப்பிட்டுச் சொல்றதை விட தியேட்டர்ல பாருங்க புரியும். தனித்தனியா ஒவ்வொரு சீன் பத்தியும் சிலாகிக்கலாம். ஆனா அது இல்ல இந்தப் பதிவு. ரொம்ப நாள் கழிச்சு ஒரு சினிமா பார்த்த திருப்தியோட இந்தப் பதிவ முடிச்சுக்கறேன்.
நாம அடுத்த பதிவுல சந்திப்போம் நண்பர்களே... வர்ட்டா!
Sunday, June 21, 2026
I will find you - Web Series
I Will Find You
is a Netflix web series based on a novel by Harlan Coben. When it comes to the cast, I only recognized Sam Worthington from Avatar and Clancy Brown, who played Captain Hadley in The Shawshank Redemption. Apart from them, another actor looked very familiar, but I still cannot remember where I had seen him before. That was Aaron Ashmore, who plays Ronald Dreason in this series. If any of you know where I might have seen him before, do remind me. Anyway, let us get into how my experience was watching this series.
According to the story, David Burroughs has been serving a prison sentence for five years in Briggs Prison, Maine, for allegedly beating his three year old son Matthew to death with a baseball bat. The story begins when his sister in law Rachel Mills visits him in prison and shows him a photograph. After that visit, several attempts are made to kill David inside the prison. For five years nobody had bothered him, so where did all these enemies suddenly come from? Just like David, we are left confused. Very quickly, the reason becomes clear. The problem is the photograph Rachel showed him. In that picture, David's son Matthew, who was supposedly killed three years earlier, appears to be walking hand in hand with someone as an eight year old boy. The image is out of focus, but there is one detail that stands out clearly. Matthew had a large birthmark on his right cheek, and it is visible even in the blurry photo. But if Matthew died five years ago, and David is in prison because of that death, then who is the child in the photograph? More importantly, who was the child found dead in David's house? If David can prove that the boy in the picture is really Matthew and that he is still alive, then his long standing claim I did not kill anyone will finally become the truth.
The first problem is that David is in prison. So, exactly as most of us would expect, he escapes. What happens next forms the heart of the series. Does David find Matthew? Can he prove that he is not a murderer? If the boy in the photograph is truly Matthew, then who kidnapped him? Who was the child that was actually found dead in David's house? And who was responsible for that murder? The series answers all these questions through a chain of twists and surprises.
David Burroughs is played by Sam Worthington. There is nothing overly heroic about his performance here. He plays a frightened and vulnerable man. He looks like someone who would jump if a person suddenly shouted behind him. That is exactly how the character is written. However, prison life and the situations he faces gradually force him into action. The character development works quite well.
The standout performance for me comes from Britt Lower, who plays Rachel Mills. She shares most of her screen time with David and Hayden Payne. The romance track belongs to Rachel and Hayden, even though they have already broken up. Rachel is not David's romantic partner, but she is clearly the female lead while David remains the male lead. The writing never loses sight of that balance.
One thing that could have felt illogical is Rachel helping her former brother in law even after her own sister has remarried and is now pregnant. The writers cleverly solve that by making Rachel a famous journalist. That professional drive gives her a strong reason to keep investigating and helping David. It is smart writing.
Another character I really liked was Hayden Payne. He is extremely wealthy, yet he continues helping Rachel even after their breakup. He also helps David simply because he feels sorry for him. This is a man who casually spends millions of dollars to support Rachel's efforts. Rachel may attract our attention, but Hayden earns our respect through his actions. He is a genuinely well written character.
Then there is Clancy Brown. What an attitude. Do not worry, that is not a spoiler. A villain is a villain. But he is a stylish and commanding one. Every moment he appears on screen, he carries himself with confidence and menace. As long as he is present, the villainy never loses its impact.
I started watching the series only this morning. It is around five hours long, and the story moves with excellent pacing. The dark tone, constant suspense, and flowing narrative made it very easy to binge watch. I think many of you will enjoy it too. Give it a try.
Until the next review, let's meet again, folks. See ya!
I will find you - வெப்சீரிஸ்
அப்டின்னு ஒரு நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ். மர்மக்கதை எழுத்தாளர் ஹார்லன் கோபன் அவர்களின் நாவல் ஒன்னைத் தழுவி எடுக்கப்பட்டது. நடிகர்கள்னு பாத்தா அவதார் ஹீரோ சாம் வொர்த்திங்டன் அப்புறம் ஷாஷாங் ரிடம்சன்ல கேப்டன் ஹாட்லியா நடிச்ச க்ளான்ஸி ப்ரவுன் இவங்க ரெண்டு பேர்த்தத் தவிர இன்னொருத்தரையும் எங்கயோ பாத்த மாதிரியே தோனுச்சு. ஆனா இப்ப வரைக்கும் அது எங்கன்னு தெரியல. அது இந்த சீரிஸ்ல ரொனால்ட் ட்ரீசனா நடிச்ச ஆரோன் ஆஷ்மோர். ப்ச் உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சா ஞாபகப் படுத்துங்க. சரி வாங்க, இந்த ஐ வில் ஃபைண்ட் யூவைப் பாத்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பார்க்கலாம்.
கதைப்படி டேவிட் பரோஸ் தன் மூனு வயசு மகன் மாத்யூஸை பேஸ்பால் பேட்டால அடிச்சுக் கொன்னுட்டான்னு அஞ்சு வருசமா மெய்ன்ல உள்ள ப்ரிக்ஸ் சிறைல தண்டனையை அனுபவிச்சிட்டிருக்கான். அவனைப் பாக்க அவனோட கொளுந்தியா ரேச்சல் மில்ஸ் அங்க விசிட்டரா வந்தப்ப ஆரம்பிக்கிது இந்தக் கதை. வந்தவ டேவிட்கிட்ட ஒரு ஃபோட்டோவைக் காட்டிட்டுப் போயிடறா. அதுக்கப்புறம் டேவிட்டைக் கொல்ல ஜெயில்லயே பல முயற்சிகள் நடக்குது.
என்னடா அஞ்சு வருசமா அவனை யாருமே சீண்டியிருக்கல. திடீர்னு எங்கிருந்து வந்தாங்க இந்த வில்லன்களெல்லாம்னு நாம டேவிட் மாதிரியே கொழப்பத்துல இருக்க, அந்தப் பிரச்சினை தெளிவா ஒரு விசயத்தைப் புரிய வைக்கிது. அது என்னன்னா, அது ரேச்சல் காட்டின அந்த ஃபோட்டோ. அதுல தான் பிரச்சினையே. ஏன்னா அதுல மூனு வருசத்துக்கு முன்னாடி டேவிட்டால கொலை செய்யப்பட்ட அவனோட மூனு வயசுப் பையன் மாத்யூஸ் இப்ப எட்டு வயசுப் பையனா அதுல ஒருத்தரோட கையைப் பிடிச்சிட்டு நடந்து போறதா இருக்கு, அதுவும் அவுட் ஆஃப் ஃபோகஸ்ல. ஆனா அது அஞ்சு வருசம் முன்னாடியே செத்துட்டானே, அதுக்காகத் தானே இந்த ஜெயில் வாசம். இப்ப எப்டி அது அதே மாத்யூஸ்னு தீர்மானமா சொல்ல முடியும்?
காரணம் மாத்யூஸ் வலது கன்னத்துல உள்ள காயம் சைஸ்ல பெருசா ஒரு மச்சம். அது அவுட் ஆஃப் ஃபோகஸ்ல கூட ஃபோகஸ்டா தெளிவா தெரியிது. அப்ப வீட்ல டேவிட் கொன்னதா சொன்னது யாரை? அதுவும் மூனு வயசுப் பையன் தானே? எப்டிப் பாத்தாலும் அவன் இன்னும் உயிரோட இருக்கான்னு அவனைப் புடிச்சி இந்த உலகத்துக்கு நிரூபிச்சிட்டா இவன் முன்ன இருந்தே சொல்லிட்டிருந்த நா யாரையும் கொலை பண்ணலங்கறது உண்மையாகிடும். இப்ப முதல்ல அதுக்கு டேவிட் வெளிய இருக்கனுமே. ஆனா ஜெயில்லல்ல இருக்கான். எக்ஸாக்ட்லி நாம நெனச்ச மாதிரி தப்பிச்சிடறான் அங்க இருந்து. அதுக்கப்புறம், அந்தப் பையனைக் கண்டுபுடிச்சானா, இந்த உலகத்துக்கு தான் கொலைகாரன் இல்லன்னு டேவிட் நிரூபிச்சானா, அப்ப டேவிட் வீட்ல உண்மைல செத்துக் கெடந்த மூனு வயசுப் பையன் யாரு, அவனைக் கொன்னது யாரு, அப்டி அந்த ஃபோட்டோல இருந்தது மாத்யூஸ்ன்னா அவனைக் கடத்தினது யாரு? அப்டின்னு பலப்பல முடிச்சுக்களுக்கு பதில் பல திருப்பங்களோட விடை சொல்லிருக்கு இந்த ஐ வில் ஃபைண்ட் யூ.
டேவிட் பரோஸா நடிச்சிருக்கறது சாம் வொர்த்திங்டன். அவ்ளோ கெத்தெல்லாம் இல்லங்க. ரொம்ப பயந்த சுபாவம் போல உள்ள அப்ராணி நடிப்பு தான். பின்னால யாராவது ஊய்ன்னு சொன்னா இங்க இவர் நடுங்கிருவாரு போல. அப்டித்தான் இதுல நடிச்சிருக்காரு. ஆனா ஜெயில் வாசமும் சூழ்நிலையும் செதுக்கி செதுக்கி கொஞ்சம் ஆக்சனும் பண்ண வச்சிருக்குன்னு தான் சொல்லனும். அப்டித்தான் கதாபாத்திர வடிவமைப்பே.
அடுத்ததா சொல்லிக்கிற மாதிரி நடிப்புன்னா அது கொளுந்தியாவா நடிச்சிருக்கற ப்ரிட் லோவர். இவங்க தான் ரேச்சல் மில்ஸ் கேரக்ட்டர். சீரிஸ் முழுக்கவே சாம் கூடவும் அப்றம் ஹேய்டன் பேய்ன் கூடவும் நடிச்சிருக்காங்க. லவ் ட்ராக் ஹேய்டன் கூட தான். அதுவும் ப்ரேக்கப் ஆனப்புறமும் லவ் பண்ற ஜோடி. அது சரி இந்தக் கொலைக்கப்புறம் தன்னோட அக்காவே இன்னொருத்தனக் கல்யாணம் பண்ணிகிட்டுப் போயி இப்ப கர்ப்பமா வேற இருக்கா. அப்புறமும் ஏன் கொளுந்தியா போய் முன்னாள் அக்கா புருசனுக்கு ஹெல்ப் பண்றான்னு லாஜிக்கலா இடிக்கும்ங்கறதுக்காக அவங்கள ஒரு ஃபேமஸ் ஜர்னலிஸ்ட் சீட்ல உக்கார வச்சிருக்கற ரைட்டிங் செம! சீரிஸ் முழுக்க ரேச்சல் டேவிட்டுக்கு ஜோடியில்ல. ஆனா டேவிட் தான் மேல் லீட். ரேச்சல் தான் ஃபீமேல் லீட். இதுல எந்த மாற்றமும் இல்ல.
அடுத்து இந்த சீரிஸ்ல எனக்குப் புடிச்ச இன்னொரு கேரக்ட்டர் ஹேய்டன் பேய்ன். மிகப்பெரிய பணக்காரன். ஆனா ஜர்னலிஸ்ட் ரேச்சலை லவ் பண்ணி ப்ரேக்கப் பண்ணிட்டு இப்ப முன்னால் காதலனா இருந்தாலும் ரேச்சலுக்கும் அவளோட அக்கா புருசனாச்சே பாவம்னு உதவுற கேரக்ட்டர். மில்லியன் கணக்குல டாலரை செதற வுட்ற கேரக்ட்டர் ரேச்சலுக்காக. ரேச்சலையே பாத்துகிட்டே இருக்கறதால தான் நமக்குப் புடிக்கும். ஆனா ஹேய்டனையெல்லாம் அவன் பழக்கவழக்கத்துக்காகப் புடிக்கும். இது ஒரு நல்ல கதாபாத்திரம்.
அடுத்ததா நம்ம க்ளான்ஸி ப்ரவுன். செம ஆட்டிட்யூட் வில்லன். சரி சரி இது ஸ்பாய்லரெல்லாம் இல்ல. தைரியமாப் படிங்க. வில்லன்னா வில்லன் தான். அதுலயும் கெத்து வில்லன். ஸ்க்ரீன் ஸ்பேஸ் உள்ளவரைக்கும் கெத்துக் கொறச்சலில்லாம வில்லத்தனம் பண்ணிருக்காப்ல.
இன்னிக்கிக் காலைல தான் பாக்க ஆரம்பிச்சேன். அஞ்சு மணி நேரம் தான். செமயா திரில்லிங்கா ஒரு டார்க் ஷேட்ல கதை ஃப்ளோவா பிங்கே வாட்சிங்ல போச்சு. உங்களுக்கும் புடிக்கும்னு நம்பறேன். பாருங்க. அடுத்த பதிவுல நாம மீட் பண்ணுவோம் மக்களே, வர்ட்டா!
Saturday, June 20, 2026
Teach you a lesson - Korean web series
Teach You a Lesson
is a Korean web series. Honestly, I would love to start with looking at the cast, but I do not know any of them. What I can say is that I spent ten and a half hours with a lot of these characters in a single day. So let me share my experience of watching this series.
According to the story, the Korean Education Minister creates an organization called ERPB to deal with various problems in schools. These problems range from arrogant students and gang culture to teachers mistreating students and students mistreating teachers. At the beginning, the entire organization consists of only two people. The Education Minister Choi Kang Seok and an inspector named Na Hwa Jin.
Na Hwa Jin is the one who goes into the field and does the actual work. By field, I mean he directly visits schools, investigates what students or teachers have done wrong, and hands out appropriate punishment. If anyone opposes his actions, the minister handles the political side of things.
The first scene where Na Hwa Jin makes his entrance is incredibly satisfying. Just when we as viewers are sitting there thinking What is wrong with this student? Why is he beating up another student like this? Someone should really... Na Hwa Jin arrives and gives him exactly what he deserves. We hesitate because it feels wrong to hit a student. But that hesitation is exactly what gives these troublemakers confidence. If teachers are too afraid to discipline a student, that usually means the student has become too powerful. So who is going to bell the cat? That question is exactly why the Education Rights Protection Bureau, or ERPB, was created.
After the first episode solves that particular case, we start wondering what more the series can possibly show. Before we can even think about it, the next episode tackles student gangs and their activities and delivers justice there as well. Then we wonder again what is left to tell. But throughout these episodes, the series keeps dropping small hints about why ERPB was created in the first place. Those moments quietly build interest in the larger story.
Just when it starts feeling like ERPB itself might be in danger, a harmless looking tech expert named Bang Hun Dae joins the team.
At first the organization feels like a two wheeler because it has only two members. Then it becomes a tricycle with three. By the third episode, a female inspector joins the team and helps deal with students who have turned into social media influencers and use their popularity for all kinds of nonsense. Just like that, the team becomes a four wheeler. From that point onward, the vehicle runs smoothly with all four members.
I even thought they might pair Han Rim with Na Hwa Jin and create a romance track. Instead, that storyline ends up connecting with Deputy Bang Hun Dae.
Every school has its own problems. Teachers suffer because of students. Students suffer because of teachers. One student drives another student to suicide. A student drives a teacher to suicide. The four members of ERPB step in and teach lessons to people who behave without even the slightest sense of humanity. What makes the series so satisfying is that every villain gets taught a lesson in a language they personally understand.
One example is a student who constantly boasts about having six hundred thousand followers on social media. During class, she ignores the lesson completely and keeps talking to her followers through live streams. Even when a teacher politely asks her to pay attention, she gets angry and responds as if the teacher is disturbing something important. Watching that makes us think What on earth is this?
The teacher cannot even properly discipline her. Why? Because a male teacher who tried to do that earlier was falsely accused of sexual misconduct through social media videos and eventually took his own life.
Now this teacher is a woman. It becomes even easier for students to spread her photos online, create a false image of her as a terrible teacher, and destroy her confidence. She enters the classroom every day already scared and emotionally exhausted. In that situation, how can she effectively discipline anyone?
ERPB exists for people like her.
The series does not focus only on students who refuse to listen to teachers. It also targets teachers who deny students the education they deserve because of money and influence. It targets students who profit from spreading drug culture. It targets anyone whose actions harm the educational environment.
That is what Teach You a Lesson is really about. It teaches lessons to the people who need them most.
While watching it, I kept thinking about how wonderful it would be if an organization like this actually existed. Just like people wished for someone like the Indian thaaththaa from Indian to fight corruption, or like Professor Ramana standing against corruption with the help of students, this series makes us think If only there were people like this in real life.
That feeling is probably the biggest achievement of these ten and a half hours.
I was honestly hesitant before starting the series because I thought spending the entire runtime inside schools might become boring. But the series never allows that to happen. Some situations become so cruel that we desperately wait for them to end. Then ERPB steps in, teaches the guilty parties a lesson in their own language, and gives us that sense of satisfaction.
You will need an entire work shift's worth of free time to finish this series.
Give it a watch.
Let's meet again in the next post, friends.
See ya!