Sunday, October 5, 2025

காந்தாரா லெஜண்ட் சேப்ட்டர் 1

காந்தாரா லெஜண்ட் சேப்ட்டர் 1

அப்டின்னு ஒரு கடமுடா படம்.  சாமிப்படத்தையும் ஆக்சன் படத்தையும் மிக்ஸியில போட்டு அடிச்சு, அதுல வி.எஃப்.எக்ஸ் மசாலா தூவி கண்ல மொளகாப்பொடி தூவிருக்கற படம்தான் இது. இதைப் பாக்கனும்ன்னா ஒரு முக்கியமான தகுதி இருக்கனும். அதாவது தியேட்டருக்குள்ள படம் பாக்க வண்டிய வெளியவே பார்க் பண்ணி விட்டுட்டுப்  போற மாதிரி, மூளையையும் கழட்டி வச்சுட்டு டோக்கன் வாங்கிட்டுதான் போகனும். இதுல ஒரு சவுரியம் என்னன்னா, நமக்குத் தேவைன்னா வெளிய வரும்போது மறுபடியும் அத எடுத்து மாட்டிக்கலாம். வாங்க மறுபடியும் மூளைய எடுத்து மாட்டிகிட்டே இந்தப் படம் எப்டியிருக்குன்னு பாக்கலாம்.

கதைப்படி கெணரு மாதிரி ஒரு குழி. அதப்பத்தி ஒரு பையன் என்னான்னு கேக்க, அதுக்கு ஒரு கதைய அவுத்து வுட்டாம்பாருங்க அந்தாளு - அடங்கப்பா! அந்தப் பய கேள்வி கேட்ட எடந்தான் காந்தாராங்கற காடு. அதுக்கும் அந்தப் பக்கம் இன்னொரு டீப் ஃபாரஸ்ட். ஆனா பாருங்க, அதுக்குப் பேரு ஈஸ்வர பூந்தோட்டம். ஆமாங்க அது சிவன் இல்லயாம். ஈஸ்வரன் தானாம். ஒன்னு சிம்பு ஃபேனா இருக்கனும். அதுக்கு வாய்ப்பில்ல. பேன் இண்டியால ப்ரமோட் பண்ணனும்னு  ஈஸ்வரன்னு வச்சிருக்காங்களாம். 

அந்தக் கதயக்கூட ஒழுங்கா கோர்வையா சொல்லாம அந்தாளு, என்ன இருந்தாலும் பொடியந்தானன்னு, ஹல்க்கு பாடிக்கு மாட்டுத் தலையக் கொடுத்து, மூஞ்சிய மட்டும் கொரங்கு மாதிரி அடிச்சி விட்டாம் பாருங்க ஒரு கத.

அது யாரு, என்ன, ஏன், எப்டின்னு எந்த வெளக்கமும் இல்ல. சரி கதைப்படி ஒரு கல்லு வேணும்ல, டிசி - கிரிப்டோனைட், மார்வெல் - இன்பினிட்டி ஸ்டோன்ஸ் மாதிரி. இதுலயும் ஒரு கல்லு. அதுல ஒரு நாமத்த கிறுக்கி, இதான் பவர்புல் சாமிக் கல்லுன்னு கதையில செகண்ட் கியரப் போட்டு விடறான். அந்தக் கல்லு வந்தவுடனே அதக் கையில கெடச்சு எடுத்த புள்ளையோட பெத்தவங்க அவ ஊர்ல மத்தவங்கன்னு எல்லார்த்தையும் கொன்னுடறாங்க - இதெல்லாம் ஒரு அச்சசச்சோ ஃபீல்க்காக சேத்தீருப்பாம்போல.

இப்ப கதப்படி சாமிதான் ஹீரோன்னு அடிச்சு விட ஆரம்பிச்சவனுக்கு அந்த சாமிய எங்க இருந்தாவது கொண்டு வரனும்ல. அதனால வெளிய வெய்ட் பண்றவங்க எல்லாரும் அந்தக் குழியில போயி எட்டிப் பாத்தா, அதுல ஒரு கொழந்த. அந்தக் கொழந்தைய ஒரு பெத்த சைஸ் புலி சுத்தி சுத்தி வந்து மோந்துகிட்டிருக்கு. அந்தக் கொழந்த தான்  சாமி. அந்தக் கொழந்ததான் ஹீரோ எல்லாம்.

காட்டைப் புடிக்க ஒரு ராஜா வர்றாரு. அவர அந்தக் காட்டுல இருந்த அமானுஷ்யமான ஒரு எதோ ஒன்னு கொன்னுடுது. அந்த ராஜாவோட பையன் கண்ணு முன்னாலயே. அப்றம் அந்தப் பையன் வளந்து வயசாகினதுக்கப்புறந்தான் அந்தப் பையனுக்கு ஒரு கொழந்த பொறக்குது. படம் பாக்கப் போன நமக்கும், ஒரு விடிவு காலம் பொறக்குது. வடிவா ஒரு புள்ள - அதுதான் ருக்மணி.

அவ்ளோதான் இதுக்கு மேல கதையில ஒன்னுமில்ல. மொத்த ஏற்பாடும் ருக்குவ பாத்ததுக்கே சரியா போச்சு.

அதுக்கெல்லாம் அப்புறம் என்னாச்சு?

இருங்க இருங்க சொல்றேன். என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க. ஆங் ஆமா அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் வில்லனா இல்ல காமெடியனான்னு ஒரு கொழப்பமிருக்கு. அப்பறம் நடுவுல பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்ஸ் படத்தோட ஸ்ட்ரீட் சேசிங் ரீல் ஓடிட்டிருந்தது. தியேட்டர்ல சேனல் மாத்திட்டிருப்பாங்களாருக்கும்னு நெனச்சுகிட்டிருந்தேன். அப்புறம் ஆள் யார்ன்னே தெரியாதளவுக்கு, ஒடம்பு மூஞ்சியெல்லாம் கருப்புக் கலர பூசிட்டு ஒரு குரூப்பு வந்துச்சு. அவனுக கூட பெருசா வில்லனுகளாட்ருக்குதுன்னு பாத்தா, தேவாங்க புடிச்சு, அதோட கண்ணீர்ல கரண்ட் எடுத்துக்கிருந்தானுக. ஓ ஹாரி பாட்டர் படமாடா - சேனல மாத்திருப்பானுகளாட்ருக்கு. எனக்கு அதெல்லாம் எங்கிங்க நாபகமிருக்கு. நமக்கு எப்படா ருக்குவக் காட்டுவானுகன்னு வெய்ட் பண்ணதுல அந்த ரிமோட்ட வச்சிருந்தது யாருன்னெல்லாம் பாத்துகிட்டிருக்க டயமில்லிங்.

அப்புறம் காந்தாரா படங்களா, எப்டியிருக்குன்னா? அத யேன் கேக்கறீங்க - ஒரே  கெரக்கத்துலயே ருக்குவப் பாத்துகிட்டிருந்தனுங்களா, ஹீரோவும் அதே கெரக்கத்துலயே ருக்குவப் பாத்துகிட்டிருந்தாருங்களா - திடீல்ன்னு ஒரு டுஸ்ட்டு. அந்தப் பேய் மூஞ்சிக்காரனுகதான் கொழந்தைக்கு பால் குடுத்துருக்கானுகளாமா, பால் கொடுத்தா அவங்க பவரெல்லாம் பால் குடிச்சுகிட்ட கொழந்தைக்கும் வந்துருமாமா - இதுதான் படத்துல நமக்கு சொன்ன நீதி. மத்தபடி நீங்க ஒன்னும் பீதியாக வேணாம். அந்தக் குழியப் பத்தி கேள்வி கேட்ட அந்தப் பையனத்தான் ரொம்ப நேரமா தேடிட்டிருக்கேன். கெடச்சதும் இனிமே இப்டியெல்லாம் கேப்பியாடான்னு நறுக்குன்னு மூனு வார்த்த கேட்டுப் போடோனும்ன்னிருக்கேன். வர்ட்டுங்ளா... நெறய சோலி கெடக்கு வாரேன். அப்றம் பாக்கலாங்.


No comments:

Post a Comment