![]() |
F.R.I.E.N.D.S என்றொரு ஆங்கில சிட்காம் நெடுந்தொடர். கிட்டத்தட்ட
பத்து வருடங்கள் 1994-லிருந்து 2004 வரை 10 சீசன்களும் 236 எபிசோடுகளும் ஓடியது. இதிலிருந்து
எடுத்து மாற்றங்கள் செய்தால் யாருக்காவது தெரியப் போகிறதா என்ன? ஏனென்றால், தமிழனுக்குத்தான்
சிட்காம் வகை தொடர்களையெல்லாம் பார்க்கப் பிடிக்காதே. ஆர்ட்டிபீசியலாக ஹாஹாஹா சவுண்டை
சீன்களில் டயலாக்குகள் முடிந்தது ஒட்ட வைத்து இரிட்டேட் செய்திருப்பார்களே! ஆகவே அதிலிருந்து
எடுத்து கையாண்டால் யாருக்கும் தெரியப் போவதில்லை. என்ன, நீங்கள் நம்பவில்லையா? சரி
அதை இந்தப் பதிவின் முடிவில் பேசிக் கொள்வோம். வாருங்கள் அந்த ’கையாண்ட’ சீன்களைப்
பார்ப்போம்.
பதிவை
உள்ளே செல்லும் முன் கீழ்க்கண்ட பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவும். அதைத்தான் தமிழில்
எழுதப் போகிறேன் உங்கள் வசதிக்காக
1)
Chandler Bing - சேண்ட்லர் பிங்
2)
Monica Geller - மானிக்கா கெல்லர் (அமெரிக்கர்கள் Monica-வை மானிக்கா என்றேதான் அழைக்கின்றனர்.
சுருக்கமாக மான் - Mon. மாறாக மோனிக்கா என்று அழைப்பதில்லை)
3)
Ross Geller - ராஸ் கெல்லர் (இதுவும் ராஸ் தான். ரோஸ் அல்ல)
4)
Rachel Green - ரேச்செல் க்ரீன்
5)
Joey Tribbiani - ஜோயி ட்ரிப்பியானி
6)
Phoebe Buffay - ஃபீபி புஃபே (ஃபோபி அல்ல ஃபீபி)
இதுபோக
கதையின் முக்கியமான இன்னொரு கேரக்ட்டர் Central Perk Coffee shop. கதையின் முக்கால்வாசி
சம்பவங்கள் நடப்பது இந்த காஃபி ஷாப்பில்தான்.
ஓகே.
இப்போது பதிவுக்குள் செல்வோம்.
ஃப்ரெண்ட்ஸ்
சீரிஸ் முதல் எபிசோடிலேயே ரேச்சல் க்ரீன் மணப்பென் கோலத்தில் செண்ட்ரல் பர்க்கிற்கு
ஓடி வருகிறாள். அங்கே தனது பள்ளித் தோழி மானிக்கா, அவளது அண்ணன் ராஸ், மற்றும் அவர்களது
நண்பர்கள் ஃபீபி, சேண்ட்லர், ஜோயி அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். அனைவரையும் மானிக்கா
அறிமுகப் படுத்தி வைத்து விட்டு, ”என்ன ஆச்சு? ஏன் இப்டி மணக்கோலத்து ஓடி வந்திருக்க?”
என்று கேட்கிறாள். அதற்கு ரேச்செல், “மாப்பிள்ளையைப் பிடிக்கல. அதனால மணப்பெண் ரூம்ல
இருந்து ஜன்னல் வழியா குதிச்சு ஓடி வந்துட்டேன்” என்று கூறுகிறாள்.
அடுத்து
சிலபல சீசன்களுக்குப் பிறகு ராஸ் கெல்லருக்கும் எமிலி என்றொரு பிரிட்டிஷ்காரிக்கும்
லண்டனில் திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது ஒரு சம்பவம் நடந்து விடுகிறது. அதில்
கடுப்பான எமிலி மணமான அடுத்த நிமிடமே ராஸ் கெல்லரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்
சென்று அடிவயிற்றில் ஒரு கும்மாங்குத்தை திருமணப்பரிசாகக் கொடுத்து விட்டு ஹோட்டல்
அறைக்குள் சென்று ராஸை இஷ்டத்திற்கு திட்டித் தீர்த்து விட்டு அவனை வெளியே தள்ளி கதவை
அடைத்துக் கொள்கிறாள். வெளியே அவனது நண்பர்கள் அனைவரும் நிற்கின்றனர். அவனுக்கு அவளிடம்
திட்டு வாங்கியதை வெளியே காட்டிக் கொள்ள விருப்பமில்லை என்பதனால் (கதவிற்கு உள்ளே அவர்கள்
பேசியது அத்தனையும் வெளியே நின்றிருந்தவர்களுக்கு நன்றாகவே கேட்டிருக்கும் என்பது தெரிந்திருந்தாலும்)
சிரித்து மழுப்பி அவளை சமாதனப்படுத்த நினைக்கிறான். வெகுநேரமாக கதவிற்கு வெளியே நின்று
அவளுக்கு சமாதான வார்த்தைகள் கூறுகிறான். ஆனால், அவள் கதவைத் திறக்கவில்லை. அப்போது
ரேச்செல், ”நான்கூட இப்டித்தான் கல்யாணத்தன்னிக்கி மாப்பிள்ளைய புடிக்கலேன்னு ஜன்னல்
வழியா குதிச்சு ஓடி வந்துட்டேன்” என்று தமாஸாக சிரித்துக் கொண்டே சொல்கிறாள். அனைவரும்
அதைக் கேட்டு சிரிக்கின்றனர். சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு “ஓ மை காட்” என்று
நிலைமையை ரியலைஸ் செய்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றால், ரேச்செல் சொன்ன மாதிரியே
எமிலியும் ஜன்னல் வழியாக துணிகளைக் கட்டி இறங்கி ஓடி விட்டிருந்தாள்.
இந்த
எபிசோட் வெளியான தேதி 24 செப்டம்பர் 1998. சரியாக மூன்று வருடம் கழித்து தமிழில் பம்மல்
கே சம்பந்தம் என்கிற படம் 15 ஜனவரி 2002இல் வெளியாகிறது. இந்த மேற்சொன்ன காட்சி இந்தப்
படத்தில் எடுத்து கையாளப் பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய
வேண்டுமா, என்ன?
அதே
திருமணத்தின் போது ராஸ் கெல்லரை சந்தித்து அவன் மீதுள்ள தனது காதலைத் தெரியப்படுத்த
நியூயார்க்கிலிருந்து லண்டன் வருகிறாள் ரேச்செல். ராஸும் ரேச்செலும் ஏற்கனவே காதலர்கள்.
ஆனால் ஒரு மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் சம்பவத்தில் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிறகுதான்
எமிலியை ராஸ் சந்தித்து அது காதலாக மலர்ந்து கல்யாணம் வரை வந்திருக்கிறார்கள்.
ரேச்செல்
வந்து சேர்ந்த சமயத்தில், ராஸும் எமிலியும் கட்டியணைத்துக் கொண்டிருக்க தனது காதலை
சொல்லாமலேயே மறைத்து விடுகிறாள். ஆனால், திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு
மீண்டும் தனது நட்பைப் புதுப்பித்துக் கொள்கிறாள். ஆனால், அவனும் மனதில் இன்னும் ரேச்சலை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறான். திருமணம்
நடக்கிறது. பாதிரியார் மணமக்களை உறுதிமொழி எடுக்க, ”எமிலியான நான் ராஸ் கெல்லரை காலம்
முழுவதும்...” என்று எமிலி சொல்லி முடிக்க, ”ராஸ் கெல்லராகிய நான் ரேச்செலை...” என்று
எமிலியின் பெயருக்கு பதிலாக சொல்லவும், எமிலி கடுப்பாகிறாள்.
இந்த
எபிசோட் வெளியான தேதி 07 மே 1998. சரியாக 21 வருடங்கள் கழித்து 25 அக்டோபர் 2018இல்
பிகில் திரைப்படத்தில் இந்தக் காட்சியை கதாநாயகிக்காக மாற்றியமைக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்னரே, அதே காட்சி, அதே இயக்குநரின் முந்தைய படமான ராஜாராணி திரைப்படத்தில் சுட்டிருந்தார். இதில் இரண்டு பியூட்டிகள் உண்டு. ஒன்று இரண்டு படத்திலும் ஒரே நாயகிதான் இந்தக் காட்சியில் நடித்திருப்பார். இரண்டாவது அந்த இயக்குநர் ஏற்கனவே அதை சுட்டிருந்த காட்சியென்பதால் (அது யாருக்கும் தெரியாமல் போனதனால்) அதை அவரே சொந்தம் கொண்டாடிக் கொண்டு இஷ்டத்திற்கு எல்லா திரைப்படத்திலும் அந்தக் காட்சியை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார் போலும்.
மற்றொரு
எபிசோடில் செண்ட்ரல் பெர்க்கில் நண்பர்கள் அமர்ந்திருக்க, ராஸ் கெல்லர் ஒரு ப்ளேபாய்
புக்குடன் வருகிறான். அதில் தனது ஜோக் ஒன்று பிரசுரமாகிருப்பதாகவும் அதற்கு 100 டாலர்
பரிசு கிடைத்திருப்பதாகவும் கூறி அதனை நண்பர்களிடம் காண்பிக்கிறான். அதைப் படித்த சேண்ட்லர்,
அது தனது ஜோக் எனவும் அதை நீ திருடிப் பரிசு வாங்கியிருக்கிறாய் என்றும் கூறுகிறான்.
இருவருக்கும் அந்த எபிசோட் முழுக்க அந்த ஜோக் யாருடையது என்கிற விவாதங்களும் சண்டைகளுமாகவே
நகரும்.
இந்த
எபிசோட் 13 ஜனவரி 2000இல் வெளியானது. சரியாக 19 வருடங்கள் கழித்து 2019 ஆகஸ்ட் 15இல்
கோமாளி திரைப்படத்தில் இந்தக் காட்சியை எடுத்து கதாநாயகன் மற்றும் அவனது நண்பனின் காமெடி
காட்சி ஒன்றிற்காக உபயோகப் படுத்தப்பட்டிருந்தது.
இந்த
ஃப்ரெண்ட்ஸ் சீரிஸ் 1994இல் இருந்து 2004 வரை பதினோரு வருடங்கள் வெற்றிகரமாக ஓடித்
தீர்த்தது. அதன் பிறகு இதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை வைத்து
Spin-off சீரிசாக எடுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். முதற்கட்டமாக ஜோயி ட்ரிபியானி கதாபாத்திரத்தை
வைத்து Joey என்றொரு சீரிஸ் 2004 முதல் 2006 வரை வெளியானது. மற்ற ஐந்து கதாபத்திரங்களும்
அதில் நடிக்கவில்லை. ஒன்லி ஜோயி.
இதில்
ஒரு காட்சி. அதனை நான் விளக்கப் போவதில்லை. வெறுமனே அந்தக் காட்சிகளை சப்டைட்டிலுடன்
படங்களாக பதிவிடுகிறேன். உங்களுக்கே புரியும். ஒரு மீம் போல.
இதுதான்
அந்தக் காட்சி. இது வெளியான தேதி 23 செப்டம்பர் 2004. இரண்டு வருடங்கள் கழித்து
2007இல் வெளியான போக்கிரி திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடியாக எடுக்கப்பட்டிருந்தது.
இது ஒரு தெலுங்கு ரீமேக் என்றாலும் தெலுங்கில் இந்தக் காட்சி இல்லை.
ஓகே
நண்பர்களே அடுத்தப் பதிவில் சந்திப்போம். அதுவரை கீழுள்ள இரண்டு பாடல்களையும் கேட்டு
ரசியுங்கள்.


