Black Panther - ஒரு அறிமுகம் – 2
மார்வெல் இதுவரை
முறையே (அவெஞ்சர்ஸ் மற்றும் இதர சூப்பர் ஹீரோ படங்களில் தலை காட்டியதல்லாமல்)
Hulk – 2,
Iron Man – 3
Thor – 2
Captain America – 2
Ant-Man - 1
தனது சூப்பர் ஹீரோக்களுக்கான
Solo Debut படங்களை எடுத்திருக்கிறது. ஆனால், Agent Romanoff மற்றும் Hawk-eye இவர்களுக்கென
தனித்தனி Solo debut எடுத்திருக்கவில்லை. இருவரும் முறையே Iron Man 2, மற்றும் Thor
படங்களில் அறிமுகம் செய்யப்பட்டனர். இவர்கள் S.H.E.I.L.D ஏஜென்டுகள் மட்டுமே. Vision மற்றும் Wanda Maximoff இருவரும் அவெஞ்சர் பார்ட் 2 வில் அறிமுகமானார்கள். Falcon கேப்டன் அமெரிக்கா பார் 2 வில் அறிமிகம் செய்யப்பட்டார். ஆனால்
ப்ளாக் பேந்தர் அப்படியல்ல. மார்வெலின் மெயின்ஸ்ட்ரீம் ஹீரோக்களில் முதலாவது சூப்பர்
ஹீரோ. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கென தனியாக ஒரு Debut செய்யாமல், நேரடியாக
Captain America : Civil War இல் பத்தோடு பதினொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம்
என்ன?
அதற்கு முன்னர்
நாம் ட்’ச்சக்கா-வின் வாழ்க்கை வரலாற்றை சற்றே தோண்டி எடுக்க வேண்டும். காமிக்ஸ் கதைகளின்
படி ப்ளாக் பேந்தர் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது Fantastic Four காமிக்ஸில் தான்.
பின்பு தனிப்பெறும் இடத்தை ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரம் இடம் பிடித்ததற்கு
காரணம், ஒரு நாட்டையே ஆளும் ராஜாவே சூப்பர் ஹீரோவாக இருந்தது. அவரது மரபு. அரசர் குலம்.
கறுப்பின சூப்பர் ஹீரோ. வைப்ரேனியத்தால் ஆன சூப்பர் ஹீரோ உடை. மேலும் ப்ளாக் பேந்தரின்
கதா பாத்திர வடிவமைப்பு. கிட்டத்தட்ட பேட் மேனுக்கும் இவருக்கும் இடையே சில ஒற்றுமைகள்
உண்டு. உடைகள் மற்றும் ஆயுதம் ஏந்தாமல் சண்டையிடுதல் போன்றவை அதற்கு உதாரணங்கள்.
ட்’ச்சக்கா-விற்கு
காமிக்ஸில் இரண்டு மனைவிகள். முதலாவது மனைவி ட்’ச்சாலா பிறந்தவுடன் இறந்துவிடுவார்.
இரண்டாவது மனைவி தன்னுடன் இருந்த ஒரு ஹன்டரோடு ஓடிப் போனதாகவும் ஒரு கதை உண்டு. பிறகெப்படி
ஸூரி பிறந்திருப்பாள்? இதில் எக்கச்சக்க குழப்பங்களும் உண்டு. காரணம், மார்வெல் காமிக்ஸ்கள்
ஆரம்பத்தில் பல்வேறு பெயர்களில் வெளியானது. அதில் அட்லாஸ் காமிக்ஸ் என்பதும் மார்வெலின்
முந்தைய பெயர்களில் ஒன்று. இதில்தான் ப்ளாக் பேந்தரரறிமுகம் செய்யப்பட்டார். அட்லாஸிற்கும்,
மார்வெலுக்கும் கதாபாத்திரங்களை இன்டர்சேஞ்ச் செய்யப்பட்ட பொழுது கதைகளில் சில மாற்றங்கள்/
அப்கிரேட் செய்யப்பட்டது. ஆகவே, சில குழப்பங்கள் நீடிக்கிறது. இன்றுவரை.
அதே போல ட்’சக்காவின்
இறப்பு. அவரைக் கொன்றது ‘Ulysses Klaw’ என்பதுதான் முந்தைய வரலாறு. ஆனால், கேப்டன்
அமெரிக்கா – சிவில் வார் படத்தில் அந்த வரலாறு மாற்றப்பட்டிருக்கிறது. அதைச் சொல்வது
ஸ்பாய்லராக மாற வாய்ப்பிருப்பதால் தவிர்த்து விடுவோம். படம் வரும் வரை அமைதி காப்போமாக.
Captain
America : Civil War படத்தில் இரண்டு அணிகள் உள்ளதை ட்ரெய்லரில் பார்த்திருக்கலாம்.
Iron Man vs. Captain America. இதில் ப்ளாக் பேந்தர் இடம்பெறப் போவது அயன் மேன் அணியில்.
ஒரு விசயத்தை முன்னரே தெளிவு படுத்துகிறேன். கேப்டன் அமெரிக்காவும் ட்’ச்சக்காவும்
இரண்டாம் உலக யுத்தத்தில் ஒன்றாக சண்டையிட்ட கதைகளுண்டு. அப்படியிருந்தும் ட்’ச்சாலா,
கேப்டன் அமெரிக்காவின் அணியில் இல்லாமல், அயன் மேன் அணியில் இணையக் காரணம் என்ன?
மார்வெல் யுனிவர்சில்
பணக்கார சூப்பர் ஹீரோ அயன் மேன் என்பதுதான் இதுவரை நாம் அறிந்தவை. ஆனால், அது உண்மையல்ல.
அயன் மேன் பணக்காரனாக அந்த ஊரில் இருக்கிறார். அவ்வளவே! உண்மையில், பணக்காரர், ராஜ
பரம்பரை, அரசர் குலத்தைச் சேர்ந்தவர் ப்ளாக் பேந்தர் மட்டுமே. தோர் அல்ல. அவர் கேர்
ஆப் வேற கிரகம்.
அந்தக் காரணம்,
டோனி ஸ்டார்க்கின்
பெற்றோர்கள், ஹோவார்ட் ஸ்டார்க் மற்றும் மரியா ஸ்டார்க் இருவரும் ஒரு கார் விபத்தில்
மரணமடைந்தனர். அந்த விபத்தை set-up செய்தது Bucky Barnes அலைஸ் Winter Soldier. இதனாலேயே
அயன் மேன் டோனி ஸ்டார்க்கும், கேப்டன் அமெரிக்கா ஸ்டீவ் ரோஜர்ஸும் முட்டிக் கொள்ள காரணம்
போதுமானது.
Bucky Barnes கேப்டன்
அமெரிக்காவுடன் இணைந்து உலகப் போரில் ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு ராணுவ வீரன்.
ஆனால் HYDRA-வின் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் சென்றதில் கேப்டன் அமெரிக்கா மட்டும்
தப்பித்து விடுகிறார். ஆனால் Bucky அந்த இடத்திலேயே தவறி பெரிய பள்ளத்தாக்கில் விழுந்து
விடுகிறான். அவன் இறந்து விட்டதாக எண்ணிக் கொண்டு திரும்பி விடுகிறார் கேப்டன் அமெரிக்கா.
இவையனைத்தும் Captain America : The First Avenger படத்திலேயே நாம் பார்த்திருக்கலாம்.
ஆனால், Bucky இறக்கவில்லை. அவன் ‘ஹைட்ரா’வால் காப்பாற்றப் பட்டு ரஷ்யாவின் வின்டர்
சோல்ஜர் ப்ரோகிராமிற்கு அனுப்பப்படுகிறான். அவர்கள் அவனது மூளையிலிருந்த பழைய நினைவுகள்
அழித்து விடுகின்றனர். மாறாக, ஹைட்ராவின் கட்டளைக்கு மட்டுமே கீழ்படியும் வின்டர் சோல்ஜராக
மாற்றி விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்களது கட்டளையை நிறைவேற்றியதும் Bucky-யின்
நினைவுகள் சலவை செய்யப்படுகிறது. ஆகவே அவன் யார் யாரைக் கொன்றான், அடுத்து என்ன செய்யப்
போகிறான், தான் யார் என்ற ஒரு தகவலும் அவனது மூளையில் இருக்காது. உண்மையில் வின்டர்
சோல்ஜர் ப்ராஜெக்ட் என்பது சூப்பர் வில்லன்களை உருவாக்கும் ஹைட்ராவின் முயற்சி. இவற்றில்
பாதிக்கும் மேற்பட்ட தகவல்கள் Captain America : The Winter Soldier படம் பார்த்தார்களுக்கு
புரிந்திருக்கும். ஆனால், இவ்வளவு டீடெய்லாக சிவில் வார் படத்தில் காட்டப்படும். ஏனென்றால்,
அவெஞ்சர்களுக்குள் சிவில் வார் வரக் காரணமே Bucky Barnes அலைஸ் Winter Soldier தான்.
ப்ளாக் பேந்தர்
உண்மையில் மோதப் போவது கேப்டன் அமெரிக்காவோடு அல்ல. வின்டர் சோல்ஜருடன் ;)
சிவில் வார் இந்த வருடம் ஏப்ரல் 28-ல் ரிலீஸாகிறது. ப்ளாக் பேந்தருக்கான Solo Debut திரைப்படம் - February, 16, 2018 இல் வெளியாகவிருக்கிறது.



அரசன்+சூப்பர் ஹீரோ
ReplyDeletesurprise) till April 27 infinity war
ReplyDelete