Thursday, June 2, 2016

It Follows (2014) - எம்மெல்லெம் பேயி



இது ஒரு பேய்ப்படம். அதுவும் ஒரு புது டைப் கான்செப்ட் பேய்ப்படம். 


அது என்ன கான்செப்ட்?


அட அதாங்க MLM Concept. சதுரங்க வேட்டை படத்துல கூட கக்கூஸ் பைப்ல வர்ற தண்ணிய பாட்டில்ல புடிச்சு விப்பாய்ங்களே... அது மாதிரி. பேய்க்கு ஆள் புடிச்சு கொடுக்கனும். இல்லேன்னா அதுகிட்ட சிக்கிட்டு சீரழியனும். 

இந்தப் படத்துலயும் ஒரு பேய் இருக்கு. ஒரே ஒரு பேயிதான். 



கதை: (ஓடாதிங்க ஸ்பாய்லர்லாம் இல்ல)



ஒரு இஸ்கூல் பொண்ணு. அதுக்கொரு பாய் ப்ரெண்டு. ஒரு நாள் ராத்திரி தனியா கார்ல ரொமான்ஸ் பண்ண கூட்டிக்கிட்டு போறாப்ல. எல்லாம் அதுக்குத்தான்னு குஜாலாகி இந்தப் பொண்ணும் அவன நம்பி கார்ல அவங்கூட போகும். போன எடத்துல அவள இவன் அட்டாக் பண்ணி ஒரு நாற்காலியில கட்டிப் போட்டுட்டு, உன்ன நான் அதுக்காக கூட்டிட்டு வரல. இதுக்காகத்தான் கூட்டியாந்தேன்னு எதோ அவன் ப்ரெண்ட அறிமுகப் படுத்தற மாதிரி, ஒரு பேய அறிமுகப் படுத்தறான். இன்னிலேர்ந்து உனக்கு இந்தப் பேய தாரவாத்துட்டேன். நீயாச்சு அந்தப் பேயாச்சுன்னு கெளம்பிடறான். போறதுக்கு முன்னாடி அந்தப் பேயப் பத்தி சில கண்டிசன்ஸ சொல்றாப்ல. அது நமக்கு ரொம்பவே புதுசு. அதாவது

இதுல இந்தப் பேய்க்கும் முந்தைய பேய்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அவன் சொன்ன கண்டிசன்ஸெல்லாம் இந்த வித்தியாசத்துலயே அடங்கும்.

வித்தியாசம் நம்பர் 1 : இந்தப் பேய்க்கி ஃப்ளாஸ்பேக்கெல்லாம் கிடையாது. சோ, ரிவெஞ்ச் எடுக்காது.

வி.ந.2 : பறந்து வராது. ட்டுஸ்ஸுன்னு மறையாது. ட்டுஸ்ஸுன்னு வராது.

வி.ந.3 : நாம சிவனேன்னு எங்கயாச்சும் உக்காந்திருந்தா, அது நம்மள நோக்கி (தேடி) வரும். ம்ஹும். ஓடியெல்லாம் வராது. மெதுவாத்தான் வரும்.

வி.ந.4 : எந்த உருவத்துல வேணும்னாலும் வரும். ஆனா உங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்.

வி.ந.5 : அது உங்களை தொட ட்ரை பண்ணும். சிக்கினா செதச்சுரும். அந்த மாதிரி சமயங்கள்ல காரோ, பைக்கோ, சைக்கிளோ, உங்க வசதிக்கு ஏத்த மாதிரி புடிச்சு தப்பிச்சிடனும். எதுவுமே கிடைக்கலியா? பிரச்சினையில்ல. ஓடிக் கூட தப்பிக்கலாம். அது மெதுவாத்தான் உங்கள நோக்கி வரும்.

வி.ந.6 : ரொம்ப நாள் இப்பிடியே ஒடித் தப்பிக்க முடியலியா? அதுவும் ஒரு பிரச்சினையே இல்ல பாஸு. வேற யாருக்காச்சும் தாரவார்த்துருங்க. அவங்களுக்கும் இந்த டர்ம்ஸ் & கண்டிசன்ஸ்லாம் சொல்லிடுங்க. இனி அவங்க பாடு.

ரொம்ப முக்கியமான கடைசி வி.ந.7 : அப்படி நீங்க ட்ரான்ஸ்ஃபர் பண்ணி வுட்ட ஆளுங்க அதுகிட்ட மாட்டி செத்துட்டாய்ங்கன்னு வைங்க... ங்கொய்யால அது திரும்பவும் உங்கள நோக்கித்தான் வரும். மறுபடியும் மொதல் வி.ந-லேர்ந்து எல்லா கண்டிஷனும் உங்களுக்கு ரிப்பீட்டடா அப்ளை ஆகிடும். இப்ப நீங்க மறுபடியும் அடுத்த ரவுண்டுக்கு ஆள் தேட வேண்டியிருக்கும்.

இப்ப வடிவேலு காமெடி ஞாபகத்துக்கு வருதா?

இப்படி ஒரு பேய்ப்படம் நேத்து நான் பார்த்தேன். படத்தோட பேரு It Follows.

தமிழ்ல டப் பண்ணா 'அது உங்கள நோக்கித்தான் வருது'னு வைக்கலாம்.

நேத்து இந்தப் படத்தை நல்லாருக்குன்னு சொல்லி ஒரு ஆள சிக்க வச்சிட்டேன். அந்த ஆளோட கதி என்னவாகியிருக்குனு இன்னும் தகவல் வரல. பிழைச்சிருந்தா வந்து இந்த போஸ்ட்டுக்கு லைக் போடட்டும் பார்ப்போம்.

ஆங்... ஒரு முக்கியமான வித்தியாசத்த சொல்ல மறந்துட்டேன். அந்தப் பேயி சில சமயங்கள்லதான் ட்ரெஸ் போடுமாம். பல சமயங்கள்ல... ச்சீய் போங்க பாஸ் அதெல்லாம் நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு...



அவ்ளோ பெரிய பயமுறுத்துற படமெல்லாம் இல்ல. டெம்ப்ளேட் பேய்ப் படங்கள பார்க்க வெறுக்கறவங்களுக்கு மட்டும். 




1 comment:

  1. நல்ல Condtions...ஹாஹா...இதையே வடிவேலுக்கு பதிலா Rowan Atkinson நம்மாலுங்க எடுத்து இருந்தா...ஹாலிவுட் பட காமெடிய கூட திருடி இப்பெல்லாம் படம்
    எடுக்குறாங்கனு புரளி கிளம்பி இருக்கும்...நல்லவேளை..!

    ReplyDelete