Black Panther (2018)
Action / Fantasy
2008 ஆரம்பித்த மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்சின் 18 ஆவது
தவணையாக வெளிவந்திருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம் ப்ளாக் பேந்தர்.
ப்ளாக் பேந்தர் பற்றிய காமிக்கல் வரலாறுகளையும், வகாண்டா
பற்றிய கதைகளைப் பற்றியும் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக்கவும்.
(குட்டி ஸ்பாய்லர் அலெர்ட்)
ஒரு சின்ன ஃப்ளாஸ்பேக்குடன் படம் ஆரம்பிக்கிறது. ட்’ச்சாக்காவின்
அறிமுகம், பில்டப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஆச்சரியத்துடன் அந்த (முக்கியமான)
ஃப்ளாஸ்பேக் ஒரு உறவுச் சிக்கலை அறிமுகப்படுத்திக் கடக்கிறது.
2016. ப்ளாக் பேந்தர் ட்’ச்சாக்கா வியன்னாவில் ஒரு விபத்தில்
இறக்கிறார். (ஆல்ரெடி இதை நாம் கேப்டன் அமெரிக்கா சிவில் வாரில் பார்த்தாகி விட்டது).
கதை அங்கிருந்து ரெஸ்யூமாகிறது. அவரது பொறுப்பை ஏற்க அவரது ராஜ வாரிசு ட்’ச்சாலா வகாண்டா
வருகிறார். ஏற்கனவே முந்தைய ப்ளாக் பேந்தர் பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் (இங்கே
ஏகப்பட்ட முந்தைய பதிவு குறிப்பிடல்கள் இருக்கலாம். பார்த்து எச்சரிக்கையுடன் கடக்கவும்)
ஒரு ராஜா இறந்து போனால், அவரது வாரிசு பதவியை ஏற்கும் வழக்கம் வகாண்டாவில் கிடையாது.
அங்கே உள்ள பழங்குடியின வம்சத்தின் நடப்பு வாரிசுக்கள் போட்டியிடத் தயாராக இருப்பார்கள்.
ஒருவேளை அவர்கள் இந்த போட்டியை விரும்பா விட்டால், பதவியை ஏற்கலாம். அல்லது போட்டியிடத்
தயாராக உள்ளவனுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதி ஜெயித்தே ஆக வேண்டும். அப்படி ஒரு ஜபாரி இன
பழங்குடி நடப்பு வாரிசுடன் மோத வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
மோதலில் ஜெயித்து ராஜாவாகிறார்.
புதிய ராஜா, ஒரு புது பிரமாணத்தை எடுக்கிறார். தனது நாட்டிலிருந்து
தனது வளங்களில் ஒரு சிட்டிகையளவு திருடிய ஒரு திருடனை பிடித்துவருவதாக முடிவெடுத்து
சவுத் கொரியா செல்கிறார். அங்கிருந்து ஆரம்பிக்கிறது பரபர சேஸிங் ப்ளஸ் ஆச்ச்ச்ச்சரியமான
சண்டைக் காட்சிகள்.
இதனை 3டியில் பார்ப்பது பேரானந்தம். வகாண்டாவின் ரம்மியமான
மலையழகும், அதன் பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளும் ஒரு பக்கம் அசத்திக் கொண்டிருந்தால்,
மறுபக்கம், கதையோட்டத்தில் நமக்கு ஏற்படும் வகாண்டாவில் பயணிப்பது போன்ற பிரம்மை, ஷூரியின்
டோனி ஸ்டார்க்குக்கே சவால் விடும் கண்டுபிடிப்புக்கள், வகாண்டாவில் வந்து மாட்டிக்
கொள்ளும் சி.ஐ.ஏ அதிகாரி, ம்’பாக்காவின் காமெடி என இந்தப் படத்திற்குப் பிறகு மார்வெல்லின்
சிறந்த படங்களில் முதன்மையானது ப்ளாக் பேந்தர் என்ற கூற்றை மறுக்க முடியாது. அத்தனை
டீட்டெய்லிங் உள்ள ஒரு காமிக்கல் சூப்பர்ஹீரோ படம் இது.
பழங்குடியினர், ட்ரைப்ஸ் என்றவுடன் ’காடே சாமி காடே’ என்று
காடை, காக்கை, கொக்கு குருவியை சுட்டு உயிர்வாழுபவர்கள் என்று நினைத்திருந்தால் அயம்
சாரி. You are going to regret for this. அவர்கள் வாழ்க்கைமுறையை சீன் பை சீன் செதுக்கியிருக்கிறார்கள்.
ப்ளஸ் அந்த பின்னணி இசை. யாராச்சும் இதன் OST லின்க் கிடைத்தால், தயவு செய்து பகிரவும்.
மார்வெல் எப்போது இப்படி பின்னணி இசைக்கெல்லாம் மெனக்கெட ஆரம்பித்தார்களென்று வியந்து
போனேன். கூடவே மார்வெலுக்குண்டான சி.ஜி மேஜிக்குகளும் Grandness என்ற பதத்தை படித்தால்
புல்லரிக்குமா என்றால் தெரியாது, நீங்க படத்தைப் பாருங்க புரியும் என்று வேண்டுமானால்
சொல்லுவேன்.
மற்றபடி ஏற்கனவே சென்ற பதிவில் நான் கூறிய கில்மாங்கர், யுலிசிஸ்
கிளா, ஷூரி, ம்’பாக்கா என அத்தனை விசயங்களும் உண்டு. ஆனால், மலைக்க வைக்கும் விதத்தில்.
ப்ளஸ், இந்த படத்தில் ப்ளாக் பேந்தருக்கு நாக்கியா (Nakiya) என்றொரு ஜோடியும் உண்டு.
இந்த படத்திற்கு முன்னதாக வந்த எக்ஸ்மென்னின் அடுத்த நியூ
மியூட்டன்ஸ் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களுக்கு மார்வெல் எங்கே போய்க் கொண்டிருக்கிறதென்று
புரிந்திருக்கும். இந்தப்படம் அந்த புதுப்பாதையின் அறிமுகமாக இருக்கும். படம் முடிந்த
பிறகு மனதில் நிற்காத கதாபாத்திரமென்று எதுவுமே இல்லையென்பது சுப்பர்ல. இதன் பிறகு
ப்ளாக் பேந்தர் உங்கள் மனதில் நிரந்தரமாக சிம்மாசனமிட்டு அமர்வது நிச்சயம்.
இதே வேவ் லென்த்தில் உள்ள இதன் அடுத்த படமான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி
வாரில் அதற்கான முன்னெடுப்புக்கள் அதன் ட்ரெய்லர்களில் பளிச்சிடுகிறது.
இந்த படத்தின் இறுதியில் வரும் மிட் க்ரெடிட் சீனில் வகாண்டா
தனது வளங்களை உலகில் உள்ள மற்ற நாடுகளோடு பகிர முன்வருகிறது.
அடுத்த போஸ்ட் கிரெடிட் சீனில், ஒரு சூப்பர் ஹீரோ, ப்ளாக்
பேந்தரின் சைட் கிக்காக அறிமுகமாகிறார். வொய்ட் வோல்ப். அது வேறு யாருமல்ல நம்ம….
ஹி ஹி அடுத்த மார்வெல் பதிவுல பார்ப்போமா?
Black Panther Wakanda OST
