மிராஜ்
அப்டின்னு ஒரு மிஸ்டரி திரில்லர். அய்யோ அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. ஏன்னா பணம் போட்டு படம் எடுக்கறாங்கல்ல. ஆனா...
அட கண்ணு இது ஒரு வெங்காயங் கண்ணு. காரமா இருக்கும் கண்ணெல்லாம் எரியும். ஆனா உரிக்க உரிக்க ஒன்னுமே இருக்காது. அதான் வெங்காயம். அதான் இந்தப் படம். அப்டித்தான் இந்தப் படம் முழுக்க உரிக்கல, ஆனா நல்லா உருட்டிருக்காய்ங்க.
நல்லாருக்கா நல்லால்லியான்னு கேட்டா... நல்லாருக்குன்னும் சொல்ல முடியாது. நல்லால்லன்னும் சொல்ல முடியாது.
வாங்க அது எப்டின்னு பாக்கலாம்.
கதைப்படி மொதல்ல வேணாம். இந்தக் கதைய ஸ்பாய்லரில்லாம ஹிண்ட்டா ஸ்பாய்ல் பண்ண ட்ரை பண்றேன். கீழ்க்கொண்டு படிக்கவும்.
அதாவது, ஒருத்தன ஒருத்தி லவ் பண்றா. அந்த ஒருத்தன் ரயில் விபத்துல மரிச்சு. பின்னே இது மலையாள மூவி அல்லே. பின்னெ ஞான் எங்கன விமர்சிக்கும்?
அவன் மரிச்சல்லே அவன் நல்லவனில்ல. அவன் ஒரு பெரிய காவாலி. ஆகாவலி அல்ல. காவாலின்னா தனக்கு வேணுங்கறத சாதிக்க எந்த எல்லைக்கும் போறவன். அப்டித்தான் இப்ப அவன் பண்ண லவ்வும், அவன் சாவும்.
பின்னே போலிஸ் எண்ட்ரி. வில்லன் பேர்ல ஒருத்தன் எண்ட்ரி. அப்றம் போலிஸ் துரத்த... வில்லன் மிரட்ட... யார? அந்தக் காதலியத்தான். எல்லாமே ஒரு ஹார்ட் டிஸ்க்குக்காகத்தான். ஏன்? பில்லா படத்துல என்ன தேடுவாங்க? டயரி. அதுல என்ன இருக்கும்? வில்லன் யார் யார் கூட டீல் வச்சிருந்தான்னு. இப்ப இந்தப் படத்துல ஹார்ட் டிஸ்க்ல என்ன இருக்கி? ( ஆம் இத மலையாளம்ன்னு நம்புங்க பிளீஸ் ) சரி அதுல என்ன இருக்கி? அதே வில்லன் யார் யார் கூட கூட்டு நாட்டு வச்சிருக்கான்ங்கற டீட்டெய்லஸ்தான். சொன்னா புரிஞ்சிக்கோங்க புரோவ். இதெல்லாம் சேம் கதையில்ல காப்பி டீயெல்லாம் இல்ல. ஒன்லி பியூர் மில்க்கிங் சம் ஓல்ட் ஸ்கிராப்ஸ் மெட்டீரியல்ஸ். பழசுதான. அத காப்பி பண்ணா யாரு கேக்கப் போறா? தவிர இதுல டயரி இல்ல, ஹார்டு டிஸ்க். புதுசா யோசிச்ச ஃபீல் குடுத்தமா வெய்ட்டாயி காட்னமா... எப்புடீ!
இப்ப அந்த ஹார்டு டிஸ்க்கத் தேடி வில்லன் சிலர அந்தக் காதலிகிட்ட அனுப்புறான். அப்ப போலீஸ்? அந்த வில்லன அரெஸ்ட் பண்ணிருந்தா பிரச்சினையே இல்லையே, அவன் அத திருடிட்டு சாக வேண்டியதில்ல. அவளும் அடிவாங்கி சாக வேண்டியதில்ல. ஆனா பாருங்க கதை மூவ் ஆகனும்ல...
ஏதாவது புரிஞ்சதா? புரியலன்னா படத்தப் பாருங்க. புடிச்சா என்னைத் திட்... ம்ஹும் அதுக்கு வாய்ப்பில்ல. பிடிக்கலன்னா - நானா சொன்னேன் நல்லாருக்கு பாருங்கன்னு?
இதுல வில்லன் வில்லன் தான். ஆனா அதில்ல ட்விஸ்ட். இதுக்கு மேல நான் சொல்லவே வேணாம். உங்களுக்கே எல்லாம் புரிஞ்சிருக்கும். ஆனா இதெல்லாம் ட்விஸ்ட்னு யாரோ டைரக்டர் மண்டையில இல்லனா அவரோட ஆழ்மனசுல புகுந்து நம்ப வச்சிருக்காங்க. திரிஷ்யம் மாதிரி. ஆம்மா இது திருஷ்யம் பட டைரக்டர் படந்தான். பின்ன நம்பும்படியா நாம ஷாக்காகற மாதிரி ட்விஸ்ட் வைக்க இவர் என்ன கே.வி. ஆனந்தா என்ன?
எல்லாமே சின்னப்புள்ளைத்தனமா இஷ்டக் கூந்தலுக்கு கதைய வளைச்சிட்டு ட்விஸ்ட்டு இதான் கிளைமேக்ஸ்ன்னு சொன்னா கடுப்பாகுமா ஆகாதா?