Saturday, October 18, 2025

WAR 2 - கலர் கலரா வாந்தி

வார் 2

அப்டின்னு ஒரு இந்தி டப்பிங் ஆக்சன் மசாலா படம். ஏன் மசாலான்னா, அஃப்கோர்ஸ் இது இந்திப்படந்தான் ரித்திக் ரோஸன் நடிச்சதுதான். ஆனா பாருங்க கூட நடிச்சிருக்கறது ஜூனியர் என்.டி.ஆர்ல. அப்றம் அதுல மசாலா வாட இல்லாம சந்தனமும் ஜவ்வாதுமா மணக்கும்? என்ன ஒன்னு கொஞ்சம் ஹைஃபையான எலைட் மசாலான்னு வேணும்ன்னா எடுத்துக்கலாம். வேணாம்ன்னா காரம் கம்மியா வார் மொத பார்ட்டையே இன்னொரு வாட்டி பாத்துக்கோங்க. என்ன இப்ப? நாம வார் 2 எப்டி இருந்துச்சுன்னு பாக்கலாமா - சரி வாங்க.

கதைப்படி கபீர் - அதாங்க ரித்திக் ரோஸன் ரா-வுக்குள்ளயே ஒரு விஜிலாண்டியா இருக்காரு. அவர கலி-ன்னு ஒரு மர்ம கும்பல் கடத்தி வச்சுகிட்டு அவரோட காட்ஃபாதர் மாதிரி தன்னை வளத்த தன்னோட ரா ஆபிசர் ஒருத்தர கொல்லச் சொல்றாங்க. கஷ்டப்பட்டு கண்ல தண்ணியெல்லாம் வரவச்சு சுட்டுத் தள்ளிடறாரு. அத ஃபுல் ஃபோகஸ்ல, டைட் குளோசப்புல கொஞ்சம் லாங்ல இருந்து லாங் ஷாட் எடுத்து அந்த வீடியோவ ராவுல பரப்பி விட்ருது கலி. அப்பத்தான் ரா-வுல இனிமே கபீருக்கு ஹெல்ப் கிடைக்காதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல. ரா-வுல விஜிலாண்டியா இருந்தவர, இந்தியாவுல உள்ள கிராமத்து போலிஸ் டேசன் கான்ஸ்டபிள் கூட கண்டவுடன் சுட்டுடுவாங்கன்ற மாதிரி மோஸ்ட் வாண்டட் கிரிமினலா ஆகிடறாரு கபீர் ரோஸன்.

இதுல அந்த செத்துப் போன ரா அதிகாரியோட பொண்ணு தான், கபீர் கா காதலி கியாரா அத்வானி. பேரு காவியா. ஆமாமா காவி கலர் பிகினி சீன் கூட ஒன்னு ட்ரெண்டாச்சே - இந்தப் படத்துல தான், இந்தப் படத்துலதான். ஆனா பாருங்க காவியாவுக்கு தன்னோட தந்தையக் கொன்னது கபீர் தான்னு அந்த வீடியோவ ஜூம் பண்ணிப் பாத்ததுல தெரிய வருது. இந்தப் படத்துல கியாராவுக்கு ஜூம் பண்ணிப் பாக்கறதுதான் பல சீன்கள்ல அவங்க பாத்துக்கிருக்க ரா அதிகாரி வேலை. 

கபீர புடிச்சே ஆகனும் பழிவாங்கியே ஆவணும்னு கையில துப்பாக்கியோட இத்தாலி தெருக்கள்ல எல்லாம் வெறி கொண்டு திரியிறாங்க. ஆமா, கதைப்படி எல்லாமே இந்தியால தான். ஆனா பெரிய பட்ஜெட் படம்ங்கறதால இத்தாலி துபாய்ன்னு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் வேற வேற நாடுகள் வழியா கார்ல, பைக்ல, போட்ல, கப்பல்ல, யாட்லன்னு கிராஸ் பண்ணிட்டிருப்பாங்க. இத அவங்க பெரிய பட்ஜெட் படம் அதனால அப்டித்தான்னு சொல்லுவாங்க அத நாம நம்பிட்டு அடுத்த ஃப்ரேம் அடுத்த நாடு ஆனா அது இந்தியால நடக்கற கதைன்னு இமாஜின் பண்ணிக்கனும்.

இவ்ளோ நேரம், எங்கடா ஜூ - என்.டி. ஆர்ன்னு ராவுல உள்ளவங்க எல்லாரும், ரா ஆபிஸ்க்குள்ள போயிப் பாத்தா, கபீரப் புடிக்க வந்த புது ரா ஆபிசரே அந்த ஜு - என்.டி.ஆர் தானாம்.

அப்றம் பல பன்ச்சு பறக்க, கண்ணு மொறைக்க, புருவந்துடிக்க, தோள்கள் தினவெடுக்க அடிக்கடி ஆக்சன் காட்டுறாரு. என்னதான் இந்த ஆக்சன் சீன் எல்லாம் மசாலா தெறிச்சாலும், ஒரு டுஸ்ட் வக்கிற மாதிரி செண்டியப் போட்டுத்தான் முடிப்பானுக. அதெல்லாம் ஒரு பிளாஸ்பேக் நோக்கி நகர, அது கபீரும் ரகுவும் - ரகு தாங்க ஜூனியர் என்.டி.ஆர் ஜூனியரா இருந்தப்பலேர்ந்தே வீட்டுல வச்ச பேரு. கபீரும் ரகுவும் அசால்ட்டா வாண்ட்டா வந்து தங்கிருக்கற ஜுவைனல் ஜெயில நோக்கி கதை நகருது. 

அங்க ஆரம்ப சீன்ல கபீரால கொல்லப் பட்ட காவியாவோட ரா அதிகாரி அப்பா தான் வந்து கபீர தத்தெடுத்துக்கறாரு ரா அதிகாரியா இண்டியா ஃபர்ஸ்ட்னு சொல்ல ஒரு வாரிசா. ஆமா ஆனா அதுல ரகுவுக்கு ஒரே வயித்தெரிச்சல். ஆனா அதுக்கு ரகுதாண்டா ஃபர்ஸ்ட்டுன்னு ஜூனியர் ஜூனியர் என்.டி.ஆருக்கு பன்ச் டயலாக் வச்சு, வாண்டடா வந்து தங்கிட்டிருக்கற ஜுவ்வைனல் ஜெயில்ல இருந்து அசால்ட்டா ஹை ஜம்ப் பண்ணி தப்பிச்சுப் போயி பெரிய ஜூனியர் என்.டி.ஆரா ராவுல விக்ரம்ங்கற பேர்ல வந்து, தன்னை ஜூனியர் வயசுல, ஜூவைனல்ல தான் மட்டும் ரா அதிகாரியால நல்ல பேரெடுத்த கபூவ கொல்றதுக்காக வந்து சேந்துருக்காரு. அதாவது, போலிஸ், சி.பி.ஐ, சி.பி.சி.ஐ.டி இவங்களாலயே டீல் பண்ண முடியாத வழக்குகளன்னு ஃபியூச்சர் டென்ஸ்ல போறத விட வரும் முன் காக்கற ரா இண்டலிஜெண்ட்ல எப்டி ஜுவைனல்ல அசால்ட்டா டீல் பண்ணாரோ அதே போல ராவுலயும் வந்து டியூட்டில ஜாயின் பண்ணி அங்க உள்ள பேப்பர் வெய்ட்ட ஸ்டைலா சுத்திட்டிருக்காரு. 

அப்றம் கபூவும் ரகுவும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கறாங்க, குத்திக்கிறாய்ங்க, அதுவும் லேட்டஸ்ட்டா வந்த சூப்பர்மேன் படத்துல வந்த அதே மாதிரி பனிக்குகையில, அப்றம் சுட்டுக்கறாங்க ஆனா சாவ மாட்றானுக. ஏண்டா படம் பாக்கறன்னு நம்மளத்தான் சாவடிக்கிறானுக. 

படத்துல பெரிய ட்விஸ்ட்ன்னெல்லாம் இவனுக காட்டுனது எல்லாம், அடுத்ததா வர்றா செண்டிக்கும், காவியாவோட காவி பிகினி சீனுக்குமான லீடுக தான்.

கிராபிக்ஸ் எல்லாம் பயங்கரம். ஒரு எடத்துல ஹெலிகாப்டர் மோதுற மாதிரி ஒரு ஆரம்பக்கட்ட ஃபைட் சீன் சேஸிங்ல, அந்த ஹெலிகாப்ட்டர தக்குனூண்டா காட்னப்பவே சிஜி பல்ல இளிச்சிருச்சு. அப்ப மத்ததெல்லாம் எப்டின்னு கால்குலேட் பண்ணிப் பாருங்க.

மொத்தத்துல பாட்டு நல்லாருக்கும்னு ஆர்க்யூ பண்றவங்க நல்ல ஹெட்செட்ல பாட்டக் கேளுங்க. காவியாவ பாக்கனும்னா ரெடிட்ல பார்த்துக்கோங்க. அவ்ளோதான் வேற ஒன்னும் உருப்படியில்ல இதுல. 

No comments:

Post a Comment