Thursday, April 24, 2014

ரூபிக்ஸ் கியூப் - தீர்வும் அதன் வழிமுறைகளும்


எர்னோ ரூபிக்

இவர் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்டில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிறந்தார். இவரது தாய் ஒரு கவிஞர், தந்தை ஆகாய விமானங்களின் பொறியாளராக இருந்தார். சொந்தமாக கிளைடர் விமானங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை நடத்திக் கொண்டிருந்தார்.
கல்லூரியில் ஆரம்ப காலங்களில் சிற்பக் கலையைத்தான் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதில் பட்டம் பெற்ற பிறகு கட்டிடக் கலையை படித்தார். பிறகு அவர் வீடுகளை அலங்கரிக்கும் கலையை கற்பிக்கும் ஆசிரியராக மாறியிருந்தார். அவரின் படிப்பில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லைஎன்றாலும், ஒவ்வொன்றும் கலை நோக்கமுடையதாய் இருந்தது.
அவர் முதலில் தயாரித்த க்யூப் ஒன்றும் அவ்வளவாக ஒரு தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தவில்லை. வடிவமைப்புத் துறையில் ஆர்வம் மிகுந்த ரூபிக் எப்போதும் ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டேயிருப்பார். “தனித்தனியாக ஒட்டாமல், ஒருங்கிணைந்த கனசதுரங்களை சுதந்திரமாக அதனை விட்டு விலக்காமல் நகர்த்துவதெப்படி?” இதுதான் அவரது கேள்வி. பிறகு அதுவே அவரது வாழ்க்கையாக மாறிவிட்டது. அந்த சாத்தியமே இல்லாத அந்தக் கேள்விக்கு விடைதான் அவரது ரூபிக்ஸ் க்யூப். இந்த க்யூபில் இருபத்தியாறு சிறிய கனசதுரங்கள் ஒன்றிணைந்து ஒரு பெரிய கனசதுரமாக இருக்கும். ஒவ்வொரு பக்கமும் ஒன்பது கனசதுரங்கள் இருக்கும். இதனை, எர்னோ ரூபிக், தான் நினைத்தபடி, தனித்தனியான ஒட்டாத கனசதுரங்களை விலகாமல் நகர்த்தும் உத்தியைத்தான் இதில் சாத்தியமாக்கிக் கையாண்டிருக்கிறார். அதற்கு வர்ணங்களையும் இணைத்து அதில் ஒரு வர்ண ஜாலத்தையும் நிகழ்த்தினார். வர்ணங்களை ஒருங்கிணைப்பதுதான் இதில் விளையாட்டே.
இந்த க்யூபை கண்டுபிடித்தது ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. இதற்காக அவர் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவழித்து, தனது இருபதியொன்பதாம் வயதில்தான் இதை சாதித்தார். இது எவ்வாறு மற்றவர்களின் மனதில் ஒரு புதிரைப் போல ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைக் கண்டுபிடிக்கவே நெடுங்காலமானது. ஆரம்ப காலங்களில் இவராலேயே இந்த க்யூபை ஒருங்கிணைக்கும் தீர்வைக் காண முடியவில்லை. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதைக் கண்டுபிடித்து வடிவமைத்த எர்னோ ரூபிக்கினாலேயே இதை ஒருங்கிணைக்க ஒரு மாத காலம் ஆனது. அப்போதே அவர் அந்த வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொண்டார். அதிலிருந்து அவரது வெற்றிப் பயணம் தொடர்கிறது.
1975-ல் இவர் இதற்கான காப்புரிமையைப் பெற விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ல் தான் இதற்கான காப்புரிமை கிடைத்தது. இதனால் இதனை வெளியிட இரண்டு ஆண்டுகள் மௌனமாகக் காத்திருந்தார். பிறகுதான் இது நமது கைகளுக்குக் கிடைத்தது. பின்புதான் இவர் திருமணமே செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு ஒரு வேதனை தரக்கூடிய சோதனையும் கூடவே காத்திருந்தது. வேறு இரண்டு நபர்களும் இதே போல க்யூபைத் தயாரித்து காப்புரிமைக்கு அனுப்பியிருந்தனர். ஒன்று, இவர் அனுப்புவதற்கு முன்பே, லேர்ரி நிக்கோலஸ் என்ற அமெரிக்கர் ஒருவர் காப்புரிமைக்காக அனுப்பியிருந்தார். ஆனால் அது காந்தத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இவர் தயாரித்திருந்த க்யூப் அனைத்து விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. ரூபிக்கிற்கு ஒரு வருடம் முன்னரே அனுப்பியிருந்த ஜப்பானியரின் க்யூபும் இதே போல் நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், எர்னோ ரூபிக்கின் தொழில்நுட்பம், அவரது க்யூபை தயாரிப்பதற்கும் சரி, விளையாடுவதற்கும் சரி, எளிமையானது. எனவேதான் நாம் ரூபிக்கின் க்யூபை பயன்படுத்துகிறோம்.

Why because I  this cube and this fellow 

இப்போ அதை எப்படி சால்வ் செய்யறதுன்னு பார்ப்போமா? கமான், முயற்சி திருவினையாக்கும்!!!

ரூபிக்ஸ் க்யூப் 


 முதன் முறையாக தமிழில்
 உலகில் எட்டில் ஒரு பங்கு மக்களால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு ரூபிக்ஸ் க்யூப் என்றழைக்கப்படும் கனசதுர விளையாட்டுகி.பி 1974 ல் எர்னோ ரூபிக் என்ற ஹங்கேரி நாட்டு கட்டிடக் கலை நிபுணர் இதனை வடிவமைத்தார்.
ஆறு வித வர்ணங்களால் வடிவமைக்கப்பட்ட இதன் உருவம் சற்றே புதிரானது. வெள்ளை, சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் அமைந்துள்ளது. ஆறு வர்ணங்களும் ஒன்பது கனசதுரமாக இணைந்துள்ளது. இதனை எப்படி விளையாடுவது என்று காண்போம். நாம் இப்போது காணும் ஒருங்கிணைப்பு வழிமுறை 3 x 3 க்யூப்.
இதற்கு ஆறு முகங்கள் உண்டு.
1.    Front face
2.    Back face
3.    Upper face
4.    Down face
5.    Right face
6.    Left face
வழிமுறைக் குறியீடுகள்
·         F  = Front face clockwise
·         Fi = Front face anti clockwise
·         B  = Back face clockwise
·         Bi = Back face anti clockwise
·         U  = Upper face clockwise
·         Ui = Upper face anti clockwise
·         D  = Down face clockwise
·         Di = Down face anti clockwise
·         R  = Right face clockwise
·         Ri = Right face anti clockwise
·         L  = Left face clockwise
·         Li = Left face anti clockwise
clockwise = கடிகாரம் சுற்றும் முறை
anti clockwise = கடிகாரம் சுற்றின் எதிர் முறை
க்யூபின் அமைப்பு

நடு கனசதுரம் – Center piece

ஒவ்வொரு பக்கத்திலும் நடுவில் உள்ள கனசதுரம் center piece எனப்படும் நடு கனசதுரம் ஆகும். இதற்கு ஒரு முகம் மட்டுமே இருக்கும். இது மொத்தம் ஆறு இருக்கும்.
இரு வர்ண கனசதுரம் – Edge piece

நடு கனசதுரத்தின் நான்கு புறமும் கூட்டல் குறி அமைத்தது போல அமைந்துள்ள இதன் பெயர் Edge piece எனப்படும் இரு வர்ண கனசதுரம். இது இரண்டு வர்ணம் கொண்டதாக மொத்தம் 12 இருக்கும்.
மூவர்ண கனசதுரம் – Corner piece

ஒவ்வொரு முகத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள இதன் பெயர் Corner piece எனப்படும் மூவர்ண கனசதுரம். மூன்று வர்ணம் கொண்டிருக்கும். மொத்தம் எட்டு கனசதுரங்கள் இருக்கும்.
க்யூபை கீழ்காணுமாறு அதன் குறியீடுகளின்படி திருப்ப வேண்டும். 


வழிமுறை 1

வெள்ளை நடு கனசதுரத்தை மேல் முகமாக வைத்துக் கொள்ளவும். வெள்ளை கூட்டல் குறி ஒன்றை படத்தில் காணுமாறு அமைக்கவும்.

அதனைத் தொடர்ந்து உள்ள மற்ற நான்கு நடு கனசதுரத்தின் சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு (மஞ்சள் நீங்கலாக) பக்கங்களை படத்தில் காணுமாறு இணைக்கவும்.


வழிமுறை 2

வெள்ளை நடு கனசதுரத்தின் மற்ற நான்கு மூவர்ண கனசதுரங்களை படத்தில் காணுமாறு இணைக்கவும்.
   
 க்யூபின் அமைப்பு கீழ்காணுமாறு வரும்வரை மேல்காணும் வழிமுறையினை பலமுறை செய்யவும். 

வழிமுறை 3
அடுத்து வெள்ளை நடு கனசதுரத்தின் முழுமையடைந்த மேல் முகத்தை, கீழ் முகமாக திருப்பி, மஞ்சள் நடு கனசதுரத்தை மேல் முகமாக வைத்துக் கொள்ளவும். இப்போது மஞ்சள் நீங்கலாக உள்ள மற்ற இரு வர்ண கனசதுரத்தின் பக்கங்களை எவ்வாறு இணைப்பது என்று காண்போம். உதாரணத்திற்கு நீல நிறத்தில் உள்ள இரு வர்ண கனசதுரத்தை எடுத்துக்கொள்வோம். அங்கே ஏற்கனவே மூன்றில் ஒரு பகுதி முழுமையடைந்திருக்கும். நீல நிறம் என்றால் அதன் இடது பக்கம் ஆரஞ்சு மற்றும் வலது பக்கம் சிவப்பு. நீலமும் சிவப்பும் உள்ள வலப்புற இரு வர்ண கனசதுரத்தை கீழ்காணும் வழிமுறையில் இணைக்கவும்.



படத்தில் உள்ளவாறு அந்த சிவப்பு நீல வர்ண கனசதுரத்தை, நடு கனசதுரத்தின் மேற்புறம் வைத்துக் கொண்டு கீழ்காணும் வழிமுறையில் அமைக்கவும். 



அடுத்து, 

இதே போல இடப்பக்க ஆரஞ்சு நீல கனசதுரத்திற்கு கீழ்காணும் வழிமுறையில் அமைக்கவும். 


இதே போன்று நான்கு பக்கங்களிலும் இணைக்கவும்.

நம் க்யூபின் மூன்றில் இரண்டு பங்கு நிறைவடைந்து விட்டது.

வழிமுறை 4
அடுத்ததாக நாம் மஞ்சள் நிறத்தில் கூட்டல் குறி ஒன்றை மேல்புறத்தில் அமைக்க வேண்டும். ஏற்கனவே கூட்டல் குறி அமைந்திருந்தால் கீழ் காணும் நான்காவது வழிமுறையை தவிர்த்து விட்டு ஐந்தாவதிற்குச் செல்லவும். இல்லையெனில் நான்காவதைத் தொடரவும். 

படத்திலுள்ளதுபோல் மஞ்சள் நிற கூட்டல் குறி வரும்வரை பல முறை முயற்சிக்கவும்.


இப்போது நம் க்யூப் படத்தில் உள்ள நிலையில் அமைந்திருக்கும்.

வழிமுறை 5
அடுத்து நாம் மஞ்சள் நிற பகுதியை முழுமயானதாக்க வேண்டும். அதற்கு கீழ்காணும் வழிமுறையை பலமுறை செய்து பார்க்கவும்.

ஒரே முறையில் இது அமையாது. பலமுறை முயற்சிக்கவும். இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் முயற்சித்து முடிக்கும் போது, க்யூப் கலைந்திருந்தால், உங்கள் முயற்சியில் எங்காவது பிழை நேர்ந்திருக்கும். மீண்டும் முதல் நிலையிலிருந்து முயன்று பார்க்கவும். 

இப்போது நம் க்யூப் மேலுள்ள நிலையில் இருக்கும்.

வழிமுறை 6

இப்போது நம் க்யூபில் ஏதாவது இரு மூவர்ண கனசதுரம் சரியான நிலையில் பொருந்தியிருக்கும். அதை Back face எனப்படும் பின் முகமாக மாற்றி வைத்துக் கொள்ளவும். கீழேயுள்ள வழிமுறையைத் தொடரவும்.

க்யூப் கீழேயுள்ள நிலையை நான்கு புறங்களிலும் அடையும் வரை மேலேயுள்ள வழிமுறையைத் தொடரவும்.

நான்கில் ஒரு புறம் வெள்ளை மற்றும் மஞ்சள் பக்கங்களைப் போல் முழுமையடைந்திருக்கும். அப்படி இல்லாமல் நான்கு புறமும் ஒரே போலிருந்தாலும் பரவாயில்லை. அப்படியே அடுத்த வழிமுறைக்குச் செல்லவும்.

வழிமுறை 7
ஏற்கனவே சொன்னதைப் போல நான்கில் ஒரு பக்கம் முளுமையடைந்திருந்தால் அதை பின் முகமாக மாற்றி வைத்துக் கொள்ளவும். கீழேயுள்ள வழிமுறையை க்யூப் முற்றிலும் முழுமையடையும் வரைத் தொடரவும். 


அவ்வளவுதான்! நம் க்யூப் இப்போது 

 வாழ்த்துக்கள். என்ன? இப்போ சந்தோசம்தானே… ;)
  





2 comments:

  1. தங்கள் விளக்க முறை எளிமையாக புரியும்படி உள்ளது, இதை பயன்படுத்தி ரூபிக் கியூப் சேர்க்க எளிமையாக கற்றுக்கொண்டோம். நன்றி

    ReplyDelete