Tuesday, May 24, 2016

X-Men: Apocalypse (2016)



எக்ஸ்-மென் : அபோகலிப்ஸ்

எவ்வளவு பெரிய எத்தனாக இருந்தாலும், எத்தனுக்கு எத்தன் உலகில் எப்போதும் உண்டு. வித்தியாசமான சக்திகளால் சூப்பர் ஹீரோவாக ஆனவர்களாக இருந்தாலும், அவர்களின் எதிரிகள் நிச்சயம் சூப்பர் வில்லன்களாக மட்டுமே இருக்க முடியும். எக்ஸ்-மென் கதைகளில் ஹீரோ ஒருவரல்லவே. அது கணக்கில்லாத மியூட்டன் தொகை. (மக்கள் தொகை என்று சொல்ல முடியாதல்லவா) அவர்களால் மட்டுமே அந்த சூப்பர் வில்லனை எதிர்க்க / அழிக்க முடியும்.

அப்படி ஒரு சூப்பர் வில்லன் அல்லது சூப்பர் மியூட்டன்ட், மியூட்டன்களுக்கெல்லாம் தல மியூட்டன், உலகின் ஆதி முதல் மியூட்டன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அபோகலிப்ஸ். அவனுக்கு நான்கு படை வீரர்களும் (Four Horsemen) உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும், அந்த நான்கு பேரும் அவனுக்கு துரோகம் செய்து அவன் அழியும் போது இன்னொரு மியூட்டனின் உடலில் தன்னை மாற்றிக் கொள்வான். அவனை அவதாரமாக வழிபடும் ஒரு கூட்டமும் உண்டு. அந்தக் கூட்டம் அவனது உடலை உலகின் பல இடங்களிலும் தேடி, எகிப்தில் அவனது உடலை கண்டெடுக்கின்றனர். அவனது உயிரை இன்னொரு உடலுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கின்றனர். அபோகலிப்ஸ் உயிர்த்தெழுகின்றான். இது கிட்டத்தட்ட மம்மி படத்தில் அங்க்-சு-நமுன் (Ankh-Su-Namun) உயிர்த்தெழும் காட்சிக்கு இம்மியளவும் மாற்றமின்றி ஒப்பானது.

அபோகலிப்ஸ் தனது படை வீரர்கள் நான்கு பேரையும் தேர்ந்தெடுக்கிறான். அவர்களது அரைகுறை மியூட்டன்ட் சக்தியை முழுமையடையச் செய்து அப்கிரேட் செய்கிறான். அவனைப் பொறுத்தமட்டில் மியூட்டன்ட்டுகள் மட்டுமே பலசாலிகள். ஏனைய மனிதர்கள் வலுவற்றவர்கள். ஆனால், எந்த சக்திகளுமின்றி வெறுமனே ஆயுதங்களையும், நாட்டுக்கொரு வகையான சட்டங்களையும் கொண்டு, மியூட்டன்ட்டுகளை மனிதர்கள் அடிமைப் படுத்தி ஆட்சி செய்வதைக் கண்டு அவன் எரிச்சலடைகின்றான். தனது படையோடு மனிதர்களை அழித்து எஞ்சியிருக்கும் மியூட்டன்ட்டுகளை மட்டுமே கொண்டு உலகை ஆள முனைகின்றான். அவனது முயற்சி பலித்ததா? மியூட்டன்ட்டுகள் அவனது முயற்சிக்கு ஒத்துழைத்தார்களா என்பதே மீதிக்கதை.

முதலில் ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். காமிக்ஸிலுள்ள கதையைப் படித்தால்தான் படம் புரியும் என்பது. இதென்னய்யா வம்பா போச்சு உங்களோட? டிக்கெட் கொடுக்கும் போதே, அதற்குரிய காமிக்ஸையும் கையில் கொடுத்தால்தான் முடியும் போல. படம் பார்த்தாலே கதை புரியும். புரிகிற மாதிரிதான் இந்தப் படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எக்ஸ் மென் பட வரிசை அனைத்தையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்த்திருத்தல் அவசியம். இல்லையென்றால், சார்லஸ் சேவியர் யாரு? அவர யேன் அபோகலிப்ஸ் தேடுறாரு? அப்படியென்ன பொல்லாத சக்தி இருக்கு அந்தாள்ட்ட? என்றும், யார்றாவன் பேர்பாடி, திடீர்னு வந்தான், கையில மூனு மூனு கத்தி மொளக்கிது, அல்லாத்தையும் குத்திட்டு அவன்பாட்டுக்கு ஓடிப்போறான்? என்றும், ஸ்ட்ரைக்கர் யாரு? அவன் எங்கிருந்து வந்தான்? அவன் யேன் பசங்கள கடத்திட்டுப் போறான்? என்றும் கேள்விகள் மண்டையைக் குடையும். ‘எதோ இங்கிலீசு படம் போல' என்றும் நினைக்கத் தோன்றும்.

அடுத்து, ‘வோல்வரின் வோல்வரின் வோல்வரின்’ என்று வோல்வரினை மட்டுமே எக்ஸ்-மென் படங்களில் எதிர்பார்ப்பது. எல்லா எக்ஸ்-மென்னிலும் வோல்வரினை எதிர்பார்த்தால், மற்ற மியூட்டன்ட் ஹீரோக்கள் ஸ்கோர் செய்வது எப்படி? பழைய எக்ஸ்-மென் சீக்வல்களில், வோல்வரினை பிரதானப்படுத்தி, மக்னீட்டோவையும், சார்லஸ் சேவியரையுமே மொக்கையாக்கியிருப்பார்கள். இத்தனைக்கும் மக்னீட்டோதான் படத்தின் மெயின் வில்லனாக வேறு இருந்திருப்பார். உண்மையில் அவர்கள் இருவரும்தான், எக்ஸ்-மென் படங்களில் பிரதானப்படுத்தப்பட வேண்டியவர்கள். அதேபோலத்தான் ‘மிஸ்டிக்’. இப்போது வந்த மூன்று படங்களிலும் இவர்களுக்குத்தான் மெயின் ரோல். இனி வரும் படங்களிலும் அப்படியே. வோல்வரினுக்கு, முந்தைய சீக்வல்களில் தேவையான அளவு பிரதான இடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. எக்ஸ்-மென் சீக்வலை ரீபூட் செய்த பிறகு X-Men : First Class படத்தில் ஒரு காட்சியில், வோல்வரினே வெறுப்படைந்து, ‘எல்லா வில்லனையும் நானே அழிக்கனுமா? மூடிட்டு போறீங்களா, இல்ல வாயில க்ளாஸ (Claws) வுட்டு சுத்தவா?’, என்பதைப் போல ஒரு காட்சியிருக்கும். அவரைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்கப்பா. அதான் எல்லா எக்ஸ்-மென் படத்துலயும் கெஸ்ட் ரோல்ல வரார்ல. Stop expecting Wolverine in all X-Men movies. Dot. அதற்கென்றே வோல்வரினின் தனிப்படம் Wolverine -3 மார்ச் 3 2017 இல் ரிலீஸாகிறது. ஆனால் ஒரு கெட்ட செய்தியும் உண்டு. அத்தோடு வோல்வரினுக்கு டாட்டா காட்டப் போவதாகவும் ஒரு செய்தி உண்டு. காத்திருக்கோம். நானும் வோல்வரின் ஃபேனுதான்டா.



பீட்டர் மேக்ஸிமாஃப் அலைஸ் குயிக்சில்வர். இவர் வரும் ஒவ்வொரு காட்சியும் கண்கொள்ளா காட்சியே! இதில் மாற்றுக் கருத்து என்பதற்கே இடமில்லை. திரையில் இவர் பரிமளிக்கும் காட்சிகளில் ஒரு பின்னணிப் பாடலும் இணைந்து அந்தக் காட்சியை மெருகேற்றி பிரமிப்பை அளிக்கும். ஆனால், அவெஞ்சர்ஸ் படத்தில் இவரை பொசுக்கென்று கொன்றது அநியாயத்தின் உச்சம். தயவு செய்து ட்வன்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம், எக்ஸ்-மென் கேரக்டர்களுக்கான உரிமையை மார்வெலிடம் விட்டுக் கொடுக்காமலிருப்பதே நல்லது.

இறுதியில் சென்டினல்ஸ் மீண்டும் வருவதைப் போல ஒரு காட்சி இருந்தது. அது சேவியரின் இஸ்கூலில், மியூட்டன்ட் மாணவர்களுக்கு, அழிக்க முடியாத வில்லன் படையை எப்படி ஒன்றாக சேர்ந்து அழிப்பது என்ற பயிற்சி வகுப்புக் காட்சி மட்டுமே. சென்டினல்ஸ் மீண்டும் எக்ஸ்-மென் படங்களில் ‘ரா லேது’. ஆனால் நான் மிகவும் ரசித்த மற்றொரு காட்சி இறுதியில் சார்லஸும், மக்னீட்டோவும் ஒரே ஃப்ரேமில் இருந்த காட்சி. Goodbye my old friend. மரண மாஸ். புல்லரிச்சிருச்சுங்க.

இந்த ரீபூட் செய்யப்பட்ட எக்ஸ்-மென் சீக்வல் படங்கள், ஒன்றை விட ஒன்று மிஞ்சும் அளவிற்கே உள்ளது. நான் இந்தப் படத்தை வெகுவாகவே ரசித்தேன். பலருக்கு அதில் இருந்த அதிகப்படியான Mutant casting சலிப்பையும் திகட்டலையும் தந்திருக்கலாம். இவ்வளவிற்கும் முந்தைய சீக்வலில், மெயின் வில்லனுக்கு, ஒரு மியூட்டன் படையே இருக்கும். இப்போது அது தவிர்க்கப் பட்டிருக்கிறது. (Except Sentinels – அவை வெறும் இயந்திரங்கள் மட்டுமே. மியூட்டன்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க) ஆனால், இந்த வரிசைப் படங்கள் இனி இப்படித்தான் இருக்கும். தனி ஒருவரால் அழிக்க முடியாத வில்லனை ஒரு பட்டாளமே சேர்ந்துதான் அழிக்க முடியும். இதற்கே சலித்துக் கொண்டால் அடுத்து வரப்போகும் Avengers : Infinity War படங்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்களோ?

3 comments:

  1. வாண்டா மாக்ஸ்சிமா எப்போ வருவாங்க...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த அவெஞ்சர்ஸ் படத்துல வருவாங்க!!!

      Delete
    2. X-Men படத்துல எப்போ வருவாங்க?

      Delete