Monday, October 3, 2016

The Flash - TV Series


ஒரு சூப்பர் ஹீரோவின் ஆரிஜின் தெரியாமல் திடுதிப்பென்று ஒரு படத்தில் அந்த கதாபாத்திரம் வானிலிருந்து சொய்ங்கென்று பறந்து / தரைக்குள்ளிருந்து முளைத்து வந்தால் படம் பார்ப்பவர்களுக்கு ஙே என்று இருக்காதா? மார்வெல் அந்தப்பணியினை செவ்வனே செய்கிறது. டிசியும் தனது முக்கியமான சூப்பர்ஹீரோக்களுக்கு அறிமுகப்படங்களை எடுத்தால் நல்லது.

பேசிக்கலி, நான் ஒரு மார்வெல் ரசிகன். மார்வெல் ஃபேனு, மார்வெல் மிக்ஸி, கிரைண்டர், இண்டக்சன் ஸ்டவ்வு எல்லாம். ஆனால், டிசி காமிக்ஸ் அவ்வளவாக புடிக்காது. காரணம் (நோலன் இயக்கிய பேட்மேன் ட்ரையாலஜி நீங்கலாக மத்த எதுவும்) சுத்தமாக புரியவில்லை. மார்வெல்லின் மொத்தக் கதைகளும் எதை நோக்கி செல்கிறதென்ற கிளியரான ஒரு ஐடியா கருந்தேள் உபயத்தில் புரிந்தது. அவெஞ்சர்ஸுக்கு அவர் எழுதிய தொடர் அதற்கு அடித்தளம். அப்படி யாராவது டிசி யுனிவர்ஸுக்கும் எழுதியிருந்தால் டெபனட்டாக புரிந்திருக்கும். அப்படி யாருமே எழுதினதாக எனக்கு தெரியவில்லை. அதனால், சரி நாமளாகவே புரிந்து கொள்ளலாம் என்ற முயற்சியில் தேடிய போது கிடைத்த ஒன்றுதான் The Flash.



***ஸ்பாய்லர் அலெர்ட்***

பேரி ஆலன் (Barry Allen) பத்து வயது சிறுவன். ஒருநாள் இரவு தன் வீட்டில் நடந்த விநோத சம்பவத்தால் மொத்தமாக தனது வாழ்க்கையே தலைகீழாக மாறி விடுகிறது. அவனது அம்மா நோரா ஆலனை (Nora Allen) மஞ்சள் உடையணிந்த முகமூடி மனிதனால் கொல்லப்படுவதை நேரில் காண்கிறான். ஆனால், அதை நிரூபிக்க அவனிடம் சாட்சியங்களில்லை. காவல்துறை அவனது சாட்சியை கற்பனையென நிராகரித்து விடுகிறது. தனது தாய் நோராவின் கொலைக்கு அவனது அப்பா ஹென்றி ஆலனை கைது செய்து சிறையில் (Iron Hights) தள்ளுகிறது. அந்த இரவில் பேரி அனாதையாகி நிற்கிறான். அவனை அந்த வழக்கை விசாரித்த டிடக்ட்டிவ் ஜோ வெஸ்ட் (Joe West @ Josaph West) அவரது மகள் ஐரிஸ்ஸுடன் (Iris West) பேரி ஆலனையும் தனது மகனாக பாவித்து வளர்க்கிறார்.

பதினைந்து வருடங்கள் கழித்து ஆலன் சென்ட்ரல் சிட்டி காவல்துறையில் ஃபாரன்சிக் சைன்டிஸ்ட்டாக CSI பிரிவில் பணிபுரிகிறான். ஐரிஸ் ஒரு ப்லாக் எழுத்தாளராக இருந்து கொண்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்.

சென்ட்ரல் சிட்டியில் இருக்கும் S.T.A.R Lab-ல் ஒரு விபத்து ஏற்பட்டு (Partical Acceleration) அந்த நகரம் முழுக்க ரேடியேசன் தாக்குதல் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழந்து போகின்றனர். இந்த ரேடியேசன் தாக்குதலால் பலர் மெட்டா-மனிதர்களாக (Meta-Humans) மாறுகின்றனர். அதில் பேரி ஆலனும் அடக்கம். அவன் மீது ஒரு இடி இறங்குகிறது. ஆனால், இறக்கவில்லை. உயிர் இருக்கிறது. ஆனால் கோமாவில் இருக்கிறான். மருத்துவர்களால் இடி விழுந்தவர்களுக்கு வைத்தியம் செய்து காப்பாற்றும் வழிமுறைகளும் தெரிந்திருக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு காரணமான ஸ்டார் லேபின் உரிமையாளர் மற்றும் சைன்டிஸ்ட் ஹாரிசன் வெல்ஸ் (Harrison Wells) அவனைக் காப்பாற்றுவதாக வாக்களித்து தனது லேபிற்கு கொண்டு செல்கிறார். ஒன்பது மாதங்கள் கழித்து பேரி ஆலனுக்கு நினைவு திரும்புகிறது.

ஒருநாள் உலகத்தின் இயக்கம் ஸ்லோவானதாக அவனுக்கு தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒரு காபி கப் தவறி கீழே விழுந்தால், அது தவறியதாக நாம் உணரும் அதே நேரத்தில் அந்த கப் தரையில் சிதறியிருக்கும். ஆனால், ஆலனுக்கு அது தவறிய நொடியிலிருந்து தரைக்குள் விழுந்து சிதரும் வரை ஸ்லோவாக மிமி பை மிமி ஆக நேரம் நகருகிறது. உண்மையில் உலகத்தின் இயக்கம் சரியாகத்தான் இருந்தது. அவனது உடலில்தான் சில மாற்றங்கள் நடந்திருக்கிறது. அதுதான் வேகம். இந்த வேகத்தைக் கொண்டு பகலில் பாரன்சிக் சைன்டிஸ்ட்டாகவும், இரவில் சூப்பர் ஹீரோவாகவும் வாழ்கிறான்.


இவனது வேகத்தை மையமாகக் கொண்டு ஸ்டார் லேப் – ஹாரிசன் வெல்ஸ் நடத்தும் அறிவியல் சோதனைகளும், ரேடியசனில் பாதிக்கப்பட்டு மாறிய மெட்டா மனிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் மீதிக்கதை. அதுமட்டுமல்ல. ஃப்ளாஸின் வேகம் ஒவ்வொரு நிலையைத் தாண்டும் போது ஏற்படும் பின்விளைவுகளை ஒவ்வொரு எபிசோடிலும் டீட்டெய்லிங் பண்ணியிருக்கும் விதம் சூப்பர். அதெல்லாம்தான் ஃப்ளாஸின் சூப்பர் ஹீரோ abilities.

Supersonic Punch - வேகமா வந்து ஓங்கி ஒரு குத்து விடுவாரு பாருங்க

Time Remnant - போற போக்குல பேக் டைம் ட்ராவல் பண்ணி தன்னை மாதிரியே இன்னொரு உருவத்தை படைக்கிறவரு

Speed Vortex - கைய க்ளாக்வைஸ்/ ஆன்ட்டி க்ளாக் வைஸ்ல சுத்தி மேலயிருந்து விழுகுற எதையும் தாங்குவாரு. அதேபோல நவக்கிரகத்தை சுத்துறாப்ல நம்மள சுத்தினாருன்னா நாம பஸ்பமாயிருவோம்.

Lightning Throw - தன்னோட வேகத்தால மின்னலை உருவாக்கி அதை அப்டே கையில ட்ரான்ஸ்பர் பண்ணி எதிரிங்க மேல எறிஞ்சு கசமுசான்னு ஆகி அய்யோ அம்மான்னு ஆக்கிடுவாப்ல

Voice Change - அதேதான். கமல், ரஜினி, சிவாஜி, ஆர்னால்டு சுவார்சனேகர், வலம்புரி ஜான், சிவ கார்த்திகேயன், மயில்சாமி மாதிரியெல்லாம் பேசிக்காட்டுவாரு

Telepathic immunity - யூத் படத்துல திரும்பிடு திரும்பிடுன்னு விஜய்ணா சொல்றா மாதிரி சொன்னால்லாம் திரும்ப மாட்டாரு. ஆனா அவரு சொல்லனும்னு நெனச்சாலே நாம திரும்பிருவோம்

Speed Reading - நம்ம சிட்டி ரோபோ செய்யும் அதே ஸ்டைலுதான். ஆனா, புக்கோட அட்டைப்படத்தை லெப்ட் ரைட்டா டில்ட் பண்ணிட்டு படிச்சுட்டேன்னு கப்சா விடமாட்டாப்ல

Rapid Healing - வோல்வரின் மாதிரின்னு சொல்ல முடியாது. ரெண்டு மூனு மணி நேரத்துல குணமாயிடுவாப்ல

Speed Force Aura - வேகமா ஓடி ஓடி ஓடி எதிர்நீச்சல் சிவகார்த்திய தாண்டிப் போயி ஒரு தடுப்பு சுவரையே உருவாக்க முடியும்

Speed Transfer - அவரோட வேகத்தை தானமாவும் கொடுப்பாரு. கடனா கொடுத்துட்டு திருப்பி வாங்கிக்குவாரு

Travel into Dimension - ஒரே நேரத்துல சின்ன வீடு பெரிய வீடு ரெண்டையும் மெயின்டெய்ன் பண்ணி அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் போயிட்டு வரக்கூடியவரு.

Speed Speak - ஹ்ம்ம் அப்றம்… ஹ்ம்ம் அப்றம்னு மொக்க போட மாட்டாரு. ஆமா குயிக்கா பேசிட்டு, குயிக்கா போயிருவாரு

Time Travel – கையில வாட்சுக்கு பதிலா வால்கிளாக்கையே கட்டிக்கிட்டு அதுல ஊஞ்சலே ஆடுவாரு


இனி இந்த சீரிஸில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மூன்று கதாபாத்திரங்களைப் பார்ப்போம்.


சிஸ்கோ ரமோன் – Cisco Ramon

இளம் சைன்டிஸ்ட். இந்த கதாபாத்திரம் அடிக்கும் லூட்டியும் காமெடி வசனங்களும் கதையை சுவாரஸ்யமாக்கும் முதன்மை காரணிகளில் ஒன்று.


இந்த கேரக்டரில் நடித்த நடிகர் Carlos Valdes. பார்க்க இந்தியன் மாதிரி இருந்தாலும், இவர் ஒரு கொலம்பியன். நல்ல சிங்கரும் கூட. 1001 Nights, Space Age, Night Off, Open Your Eyes இதெல்லாம் இவர் பாடிய பாடல்கள். நல்ல காமெடியான நடிகரா இருந்தும் இதுவரைக்கும் எந்த சினிமாவிலும் இன்னும் இவர் தலை காட்டாதது ஆச்சரியம். இதுவரை சிஸ்கோ ரமோன் கதாபாத்திரமாகவே அறியப்பட்டு வருகிறார்.


ஹாரிசன் வெல்ஸ் – Harrison Wells

46 எபிசோடுகளும் வேகமாக நகர்ந்து சென்றதில் முக்கியப் பங்கு இந்த கதாபாத்திரத்திற்கே. செம டெரர் அண்டர்ப்ளே நடிப்பு. இவரைப்பத்தி வேற என்ன சொன்னாலும் அது இனிமேல் இந்த சீரிஸை பார்க்கப் போகிறவர்களுக்கு செய்கிற துரோகமாகும். ஏனென்றால், இந்த கேரக்டரை ஜஸ்டிபை செய்வதில்தான் கதையே அடங்கியிருக்கிறது.


இந்த கேரக்டரில் நடித்த Tom Cavanagh இவரை ஏற்கனவே பல நாடகங்களில் பார்த்திருக்கலாம். நடிப்பில் ரகுவரனை எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தினார். Bang Bang you’re dead படத்தில் பிரதான கதாபாத்திரம் இவரே. அதுவும் ஒரு செம திரில்லர் படம்.


ஜோ வெஸ்ட் – Joe West

பேரி ஆலனின் வளர்ப்புத் தந்தை. நல்ல போலீஸ்காரர். இந்த இரண்டு சீசனிலும் நடிப்பில் மிகவும் என்னை வியக்க வைத்த ஒரு நடிகர்.



இந்த கேரக்டரில் நடித்தவர் Jesse.L.Martin. மனுசன் சிரிச்சா என்னடா இந்தாளு இப்படி சிரிக்கிறான் என்று வித்தியாசமாகத் தோன்றும். அப்படி ஒரு கிக்கிக்கி சிரிப்பு. நாகேஷ் சொன்ன தெய்வீகச் சிரிப்பு போலவே. அதேபோலவே சென்டிமென்ட் காட்சிகளிலும். அப்படி ஒரு அசத்தலான நடிப்பு.

பல நடிகர்கள் இந்த சீரிஸில் இருந்தாலும் நடிப்பில் என்னை கவர்ந்தது இந்த மூவர்தான். அதேபோல இந்த ஃப்ளாஸ் சூப்பர் ஹீரோவும்.

மொத்தம் 2 சீசன்கள் தலா 23 எபிசோடுகள். நான்கே நாட்களில் அந்த ஃப்ளாஸை விட வேகமாக சென்றது. ஒரு எபிசோட் முடிந்ததும் என் கைகள் அனிச்சையாக அடுத்த எபிசோடை கிளிக்கும் அளவுக்கு பரபரப்பாக இருந்தது. இப்போது எனக்கு சூப்பர் ஹீரோக்களில் மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக ஃப்ளாஸ் கேரக்ட்டர் மாறியது எனக்கே ஆச்சரியம் தான். இனி நாம் சில நாட்கள் இடைவெளியில் டிசியின் சூப்பர் ஹீரோக்களின் அறிமுகத்தைக் காண்போம்.


இன்னும் இரண்டு நாட்களில் இதன் மூன்றாவது சீசன் தொடங்க இருக்கிறது. அதனை தொடர்வதானால், இந்த இரண்டு சீசன்களையும் பார்த்துவிட்டு தொடரவும். மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோவின் அறிமுகத்துடன் சந்திப்போம். நன்றி.

4 comments:

  1. நல்ல முன்னுரை... நானும் DC origin அவ்வளவா படிச்சதில்ல... good intro...

    ReplyDelete
  2. நல்ல முன்னுரை... நானும் DC origin அவ்வளவா படிச்சதில்ல... good intro...

    ReplyDelete
  3. நல்லா இருக்கு அண்ணா.
    ஆரம்பத்தில எனக்கும் மார்வல்ல இப்படி ஒரு அலாதி பிரியம் இருந்திச்சு.அதுக்கு காரணம் அப்ப டிசி பற்றி அ,ஆ கூட தெரியாது.
    இப்ப இப்ப டிசி யோட கொமிக்ஸ்களை கொஞ்சம் வாச்சதில இருந்து டிசில ஒரு பிடிப்பு.
    உண்மைதான் டிசி படங்கள் டக்குன்னு கொமிக்ஸ் எதுவுமே பாரக்காம,அது சம்பந்தமான எந்த விசயமும் தெரியாமலே பார்த்தா ங்கே தான்.
    டிசி யோட பலமுமம் பலவீனமுமே அவங்களோட ஸ்டோரி லைன்தான்.
    டிசி தொடங்கினதில இருந்து 2011 ஆண்டு வரைக்கும் அது தொடர்கதை மாதிரி வந்திட்டு இருந்திச்சு.2011 ல வந்த flashpoint (flash s03 இதானாம்,) தான் அந்த டிசின்ர ஈராவுக்கு முற்றும் போட்டிச்சு.
    அது வரைக்கும் வந்ததில இடைல ஒரு கதையை எடுத்து படிச்சா தலையும் வாலும் புரியாது. அத படமா எடுத்தா இன்னும் வெளங்கிடும் என்டு அவங்களுக்கே புரிஞ்சதால அவங்கள் அந்த ஜடியாவுக்கே போகல.
    பட் மார்வல் அப்படி இல்ல மார்வல் சினிமட்டிக் யுனிவேர்ஸ் என்டு ஒன்னை புதுசா கிரியேட் பண்ணி அதுக்குன்னு புறம்பா ஒரு ஸ்டோரி லைனை மெயின்டேன் பண்ணுது.
    சொன்னா நம்புவீங்களோ தெரியாது.உண்மையான avengers - age of ultran ஸ்டோரில wolverine தான் மெயின் ஹீரோ. பட் படத்தில???
    அது தான் மார்வல் சினிமட்டிக் யுனிவேர்சோட தந்திரம்.

    Civil war கேக்கவே வேணாம்.

    டிசி அந்த வழிக்கு போகாம ஸ்டோரி லைனை மாத்தாம ஒரிஜினல் ஸ்டோரியை போலோ பண்ணுறதாலதான் இந்த விளங்காத பிரச்சினை.

    இது புரிஞ்சாப்பிறகுதான் flashpoint என்ட பெரிய டிசி event ஒட அது வரை காலமா வந்திட்டு இருந்த அ்த்தனை கதைகளுக்கும் ஒரு முடிவைக்கொடுத்து
    DC new 52 என்டு புதுசா 2011ல இருந்து கதைகள விட தொடங்கிச்சு.
    அதோட நோக்கமே புது ஓடியன்ஸ் கவருறதான்.பழைய ஸ்டோரிகளுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
    இப்படி டிசியோட பக்றவுண்ட் றொம்போ பெரிசு.நிறைய சொல்ல்லாம்.

    என்னைக்கேட்டா டிசி படம் எடுக்கிறதிலும் பார்க்க சீரிஸா எபிசோட் கணக்கில விடுறதுதான் பெட்டர் என்பேன்.

    பார்க்கலாம்.
    உங்க அடுத்த பகுதிய வாசிக்க ஆவலாய் உள்ளேன்.
    Bye..

    ReplyDelete
  4. தெரிந்த ஆட்களை பற்றி எழுதுறிங்களே பெருசா ஒன்னும் தெரியாத கேரக்டர் பற்றி எழுதுவிங்களா.Shazam,Atom,Martian Manhunter பற்றி அடுத்து எழுதுங்க பாஸ்.

    ReplyDelete