Monday, August 14, 2017

Coherence (2013)


Coherence (2013)

Science Fiction / Thriller


1973 வாக்கில் வால்நட்சத்திரம் ஒன்று பூமியைக் கடந்து சென்றது. அதன் தொடர்விளைவாக பலருக்கும் ஞாபகக் கோளாறு ஏற்பட்டது. எவருக்கும் தனது சொந்த வீடு ஞாபகத்திலில்லை. மாறாக வெவ்வேறு வீடுகளில் பல வருடங்கள் வாழ்ந்தது போல மாற்றி வாழ்ந்தனர். இது பல நாட்கள் நீடித்தது. ஆனால், ஒருத்திக்கு மட்டும் ஞாபகத்தில் எந்த பிசகும் இல்லை.

911-க்கு டயல் செய்து தன் வீட்டிலிருப்பவன் தனது கணவனல்ல என்று புகார் கொடுத்தாள். ஆனால், காவல்துறையோ அவன் தான் அவளது கணவனென்று பல சான்றுகளை முன் வைத்தது. அவள் இல்லவே இல்லையென்று வாதிட்டாள். இறுதியாக அவள் சில உண்மைகளை வெளியிட்டாள்.

முந்தைய நாள் மாலை வேளையில் தனது கணவனை அவள் கொன்று விட்டதாகவும், இப்போது இருப்பவன் தனது கணவனே இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கி எறிந்தாள். அவள் வார்த்தைகளில் அவள் உறுதியாகவும் இருந்தாள்.

காவல்துறை ஆடிப் போனது.

அப்படியென்றால் இப்போது அதே உருவத்தில் இருப்பவன் யார்?

குழப்பமே மிஞ்சியது.

இறுதியாக காவல் துறை ஒரு விசயத்தை உறுதி செய்தது. வால் நட்சத்திரம் கடந்து சென்றதில் ஏற்பட்ட கால மாற்றத்தால், இறந்த கணவன் இறப்பதற்கு முன்பான நேரத்தில் திரும்பி வீடு வந்திருக்கிறான்.

இது படத்தில் வால் நாட்சத்திரத்தால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி வசனங்கள் வாயிலாகக் கொடுக்கப் பட்ட ஒரு சிறிய விளக்கம்.

ஆனால் கோஹரன்ஸின் கதை இது இல்லை. அது முழுக்க முழுக்க குவாண்டம் பிசிக்ஸ் சம்பந்தப்பட்டது.

அது ஒரு இரவு விருந்து. வெறும் எட்டுப்பேர் கொண்ட நண்பர்கள் குழுவில் ஒரு வீட்டில் நடக்கிறது. இதற்கென எமிலி தனது காரில், தனது கணவன் கெவினுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டே செல்வதில் ஆரம்பிக்கிறது கதை. அவள் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கையிலேயே பேச்சு தடைபட்டு, மொபைல் போன் ஆப் ஆகி, அதன் டிஸ்பிளே கிராக் ஆகிறது. விருந்து நடக்கும் வீட்டிற்கு சென்று வேறு யாராவது மொபைலில் தொடர்பு கொள்ள நினைக்கிறாள். ஆனால், நெட்வொர்க்கும் இல்லை. இண்டர்நெட் வசதியும் இல்லை. மொத்த தொலை தொடர்பு சாதனங்களும் இயங்க மறுத்து விடுகிறது. விருந்து தொடங்குகிறது. தொலை தொடர்போடு மின்சார வசதியும் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை இயக்க அந்த வீட்டிலிருந்து இருவர் வெளியேறுகின்றனர்.

இதன் பிறகு ஏற்படும் மர்மங்களும் குழப்பங்களுமே மீதிக் கதை.

மல்ட்டிவர்ஸ் கதைகளில் ஒரு சமயத்தில், இரண்டு ஒரே மாதியான ஆல்டர்னேட் யுனிவர்ஸ் சம்பந்தப்பட்ட இரு கதைகளை குழப்பாமல், எழுதப்பட்ட திரைக்கதையுள்ள சில படங்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கிறோம். அதில் முக்கியமானது, ப்ளஸ் 1 (2013) திரைப்படம்.



(இல்லை. சத்தியமாக Triangle படத்தை கம்பேர் செய்ய முடியாது. அது மொத்தமும் வேறு களம்) அதில் கூட vfx இன் உதவி பெரும்பான்மை வகித்திருக்கும். எடிட்டிங்கும் அதற்கு தகுந்தாற்போல அமைந்திருக்கும். ஆனால் கோஹரன்ஸில் அதெல்லாம் எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க வசனங்களும், திரைக்கதையும், காட்சியமைப்புக்களும் கொண்டு இந்தப் படத்தில் இயக்குநர் நடத்தியிருக்கும் மேஜிக் வேறு லெவல்.

குறிப்பாக வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் அதே வீட்டிற்கு வராமல், (sorry. இதெல்லாம் சொன்னால், படம் பார்க்கும் ஆசையே போய்விடும். ஆகவே படத்தைப் பார்த்து புரிந்து கொள்க)

இது போல பல இண்டிபெண்டண்ட் மூவிக்கள் அடிக்கடி வெளியானால், நமது சினிமா பசிக்கு மிகப் பொறுத்தமான தீனியாக அமையும்.

தவிர்க்காமல் பார்க்கவும். (ப்ளஸ் 1 படத்தையும்)


நன்றி

1 comment:

  1. தெளிவான விமர்சனம் ணா

    ReplyDelete