சீரியல் கில்லர்ஸ்
வித்தியாசமான முறையில்
கொலைகள் தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். இதை மாடஸ்
ஆப்பரண்டி (M.O – Modus Operandi) என்று விளிப்பார்கள். நம் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான
ஸ்ட்ரோக், கையெழுத்து ஸ்டைல் இருக்கும் அல்லவா? அதைப் போல இது கொலைகாரர்களின் கையெழுத்து.
ஆனால் அது அவர்களது விக்டிம்களின் பிரேதத்தின் மீதானதாக இருக்கும். ”இது அவன் செஞ்ச
வேலையாகத்தான் இருக்கும்” என்று முடிவுக்கு வரும் அளவிற்கு சீரானதாக இருக்கும்.
நமக்கு தெரிந்த
சில உதாரணங்களையே பார்ப்போமே
ராமன் ராகவ் -
இரவில் மாடியில், ஜன்னலோரத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை மண்டையில் இரும்புத்தடியால்
அடித்து கொலை செய்வான். இது அவனது M.O.
ஜாக் த ரிப்பர்
– தனது இரையாக உடலை விற்றுப் பிழைக்கும் பெண்களை தேர்வு செய்து, அவர்களைக் கொன்று இருதயம்,
கல்லீரல் போன்ற பகுதிகளை ஒரு தேர்ந்த மருத்துவனைப் போல அறுத்தெடுத்துச் சென்று மறைந்து
விடுவான். யார் கண்டார், அவன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகக் கூட இருந்திருக்கலாம்.
இது அவனது M.O
பஹாதுர்கார் பேபி
கில்லர் – 1995க்கு பிறகான ஹரியானாவில் ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பெண்பிள்ளைகள்
மர்மமான முறையில் இறந்து கொண்டிருந்தனர். மொத்தம் 10 பெண்பிள்ளைகள் இறுதியில் 1998ல்
சதிஸ் என்பவன் பிடிபட்டான். அவர்கள் அனைவரின் சாவுக்கும் ஒரு ஒற்றுமை வன்புணர்வு செய்தபிறகு
கொலை செய்யப்பட்டிருந்தனர். இது சதிஸின் M.O
சோடியாக் – இளம்
வயதினரை மட்டும் தொடர்ச்சியாக கொல்வான். கொன்றபின் உள்ளூர் பத்திரிக்கைக்கு தனது பெயரை
உறுதிப்படுத்த புதிர்க் குறியீடுகளைக் கொண்ட கடிதத்தை அனுப்புவான். இது சோடியாக்கின்
M.O
கொலைகாரர்கள் மட்டுமல்ல.
திருடுபவர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும் கூட ஒரு சிக்னேச்சர் இருக்கும். பூட்டை
கம்பியால் நெம்பித் திருடுபவன், ஆளில்லாத சமயத்தில் வீடு புகுந்து திருடுபவன், கத்தியைக்
காட்டி மிரட்டு கொள்ளையடிப்பவன், பிளேடு, பிக்பாக்கெட் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு
மெத்தட் இருக்கும்.
திருடுபவனுக்கும்
கொள்ளையடிப்பவனுக்கும் கூட தேவை, ஆசை, மோகம் என்று பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால்,
கொல்லுவதற்கு?
சீரியல் கில்லர்களுக்கு
– அடிக்சன். நம்மில் பலர் சிகரெட் புகைப்பதை, குடிப்பழக்கத்தை, செல்போனை நோண்டுவதை,
சீரியல் பார்ப்பதைக் கட்டுப்படுத்த / நிறுத்த முடியாமல் அதன்பிடியில் சிக்கி அவதிப்படுவோமே,
அதைப் போல இவர்களால், கொலை செய்யாமல் இருக்க முடியாது போலும்.
ஆனால், இதெல்லாம்
சீரியல் கில்லர்களைப் பற்றின ஒரு பொதுவாக தோராயமாக நம்பப்படும் எண்ணங்களே!
மேலும், நாம் கண்ட
சீரியல் கில்லர்களைப் பற்றிய சினிமாக்களும், அதன் கதைகளும், நமக்கு அப்படிப்பட்ட எண்ணங்களையே
வழங்கியிருந்தன.
சீரியல் கில்லர்களை
வில்லனாகவும் (வெறுமனே வில்லன் என்கிற வார்த்தைக்குள்ளே அடைக்க முடியாதல்லவா? ஆகையால்)
கொடூரமானவாகவும் சித்தரித்திருப்பார்கள். American Psycho (2000), Red Dragan (2002),
Silence of the lambs (1991), Sweeney Todd (2007), Sleepy Hallow (1999), From
Hell (2001), Memories of Murders (2003), I saw the devil (2010), Zodiac (2007) இப்படி உதாரணங்களை பட்டியலிட ஆரம்பித்தால், அது
எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகி விடும்.
இவைகளில் பெரும்பாலும்,
சீரியல் கில்லர்களை மேற்கூறியது போல, கொடூரமான வில்லன்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர்.
வெறுமனே இறப்பவன் விக்டிம், கொல்பவன் கொடூரமான சீரியல் கில்லர் என்றே முடித்திருப்பார்கள்.
இந்த அடிப்படை
இலக்கணங்களையும் வரைமுறைகளையும் உடைத்து, சீரியல் கில்லர்களை ஹீரோவாக சித்தரித்த படங்களும்,
கதைகளும் மிக மிகக் குறைவு.
கூகுளில் சென்று
serial killer tamil movies என்று தேடினால், வேட்டையாடு விளையாடு, மூடுபனி போன்ற சொற்பமான
படங்களே விடையாக கிடைக்கும். ஆனால், இந்தியன், அந்நியன், ரமணா, கஜினி போன்ற படங்களை
சீரியல் கில்லர்களாக நாம் இதுவரை பாவித்ததே இல்லை. இதை உங்களால் மறுக்க முடியுமா? முடியாதல்லவா?
ஏன்?
அவர்கள் ஹீரோக்கள்.
அவர்கள் செய்யும் கொலைகள் கூட நியாயமானதாக இருக்க வேண்டும் என்று நாம் கண்களை கட்டப்பட்டிருக்கிறோம்.
நேரடியாகவே சீரியல்
கில்லர்களை ஹீரோவாக சித்தரித்தால் (நெகட்டிவ் ரோல்) படம் ஓடாது என்பதாலா?
வாஸ்தவம்தானே!
கோடிகளை முதலீடு செய்து எக்ஸ்பரிமெண்ட் முயற்சிகளால் கைகளை சுட்டுக் கொள்ள யாரும் தயாராக
இருக்க மாட்டார்கள்தானே!
ஆளவந்தான் படம்
இதற்கான ஒரு நேரடி உதாரணம்.
சரி. மேற்கண்ட
சீரியல் கில்லர்களுக்கான இலக்கணங்களை உடைத்து ஒரு அற்புதமான படைப்பு ஒன்று இருக்கிறதென்றால்
பார்க்க யாரும் விரும்புவார்கள்தானே? அப்படி ஒன்று இருக்கிறதா? என்கிற எனது தேடலுக்கான
விடை…
Dexter ( TV Series 2006 – 2013)
இந்த டிவி சீரிஸை
பார்க்கச் சொல்லி ஒரு நண்பர் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். (அவர் ஏற்கனவே
என்னை Stranger Things பார்க்கச் சொல்லி கட்டாயப் படுத்தியவர்) இந்த தொடர்களையெல்லாம்
பார்க்காவிட்டால் உங்களோடு எனக்கு பேச்சு வார்த்தையே வேண்டாம் என்று என்னை விட்டு விலகியும்
கூட விட்டார். அவரது கோபம் அதிகப்படியானதாக அன்று நாங்களெல்லாம் (வாட்சப் குரூப் நண்பர்கள்)
நினைத்துக் கொண்டோம். ஆனால், அவரது கோபம் நியாயமானது என்பதை ஸ்ட்ரேஞ்சர் திங்ஸையும்,
டெக்ஸ்டரையும் பார்த்த பிறகு வெட்கத்தை விட்டு ஒத்துக் கொள்கிறோம். வீ ஆர் சாரி கில்லாடி
ரங்கா -/\-
இதைப் பார்க்க
ஆரம்பிக்கும் போது எனக்கிருந்த மிகப்பெரிய பயம் ஒவ்வொரு சீசனுக்கும் பன்னிரண்டு என
எட்டு சீசன்களுக்கிருந்த 96 எபிசோடுகள்தான். மேற்கூறிய பாராவில் குறிப்பிட்டிருந்த
நண்பரின் பரிந்துரைகளை இக்னோர் செய்ய இதுவே முழு முதற் காரணம். ”இது ஆவறதில்ல. இது
சத்தியமா ஆவறதில்ல” என்று பார்க்காமல் தவிர்த்துக் கொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை
வருடங்களாக.
அகஸ்மாத்தாக இதன்
ஒரு எபிசோடை அமேசான் ப்ரைமில் பார்க்க ஆரம்பித்தேன். பார்க்க ஆரம்பித்து மூன்று மணி
நேரங்களில் மூன்று எபிசோடுக்கு என்னை உள்வாங்கியிருந்தது (ஆம். ஒரு எபிசோடுக்கு 50
லிருந்து 60 நிமிடங்கள் வரை) ஆனால், நேரம் போனது கூட தெரியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்பதை பின்புதான் உணர்ந்தேன். இதோ இரண்டே வாரங்களில் 96 எபிசோடுகளையும் பார்த்தாகி
விட்டது. ”அவ்ளோ ஸ்பீடா” என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால், அது ஒரு
உள்வாங்கி. அதிலுள்ள பாத்திரங்கள் நம்மை உள்ளிழுத்து அவர்களோடே நம்மை பயணிக்கச் செய்து
கால நேரத்தை கடக்கச் செய்யும் ப்ளாக் ஹோல்.
அப்படி என்னதான்
கதை அது?
கதையையெல்லாம்
விவரிக்க முயல்வது மெத்தக் கடினம். என்னைக் கவர்ந்த சில கதாபாத்திரங்கள் அதில் உண்டு.
நிறையவே. அவர்களைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்
மீண்டும் சந்திப்போமா…


No comments:
Post a Comment