Friday, May 1, 2020

Muse (2017) - ஸ்பானிஷ்




Muse (2017)

ஸ்பானிஷ்
Horror / Thriller

இதுவும் ஸ்பெயின் இயக்குநர் ஜாமி பாலக்வெரோ-வின் (Jaume Balagueró) படம்தான். பாலகுரு யாரா? யூட்யூப் Plip Plip சேனல்ல சர்வ் சகாவோட வருவாரே அவர்னு நெனச்சிங்களா? இவரு SleepTight, Fragile, Rec Sequel படங்களோட இயக்குநருங்க.

Muse ட்ரெய்லரின் இவரை Genre Master என்ற பில்டப்புடன் ஒரு பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப்படம் அவ்வளவாக ஓடவில்லை போலும். விமர்சகர்கள் தாறுமாறாக விமர்சித்து திட்டித் தீர்த்திருக்கிறார்கள். நானும் ஒருவகையில் பயந்துகொண்டேதான் பார்க்க ஆரம்பித்தேன். முடிவில் அந்த பயம் போய்விட்டது. படம் உண்மையில் அருமையாகவே இருந்தது.

கதைப்படி, டப்ளினில் உள்ள ஒரு யுனிவர்சிட்டியில் ப்ரொபெசராக உள்ள சாம்யூல் சாலமனுக்கு (Samuel Solomon) அவரிடம் படிக்கும் மாணவி பீட்ரிஸ் (Beatriz) உடன் பதிமூன்று மாதங்களாக நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், யுனிவர்சிட்டியைப் பொறுத்தவரை இது ஒருவருக்கும் தெரியாது. ஒருநாள் அவரோடு படுக்கையில் இருந்த பிறகு, தன்னை காதலிக்கச் சொல்லி கோரிக்கை வைக்கிறாள். அவள் அவ்வளவு அன்போடு கேட்ட பிறகு மறுக்க முடியாத சாலமன், அவளைக் காதலிப்பதாக சத்தியம் செய்கிறார். சந்தோசமாக குளியலறைக்குச் செல்கிறாள். அந்த சமயத்தில் தன்னுடைய Pet பூனைக்கு கொடுக்க வேண்டிய உணவு தீர்ந்து விட்டதால், வெளியில் சென்று வருவதாக அவளிடம் கூறுகிறார். அவளிடமிருந்து பதிலெதுவும் வராததால் குளியலறைக்கும் சென்று பார்க்கிறார். அவள் தன் கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு பாத்டப்பில் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாகக் கிடக்கிறாள். பதறிப் போன சாலமன், அவளை வெளியே கொண்டுவந்து காப்பாற்ற எவ்வளவோ முயற்சிக்கிறார். ம்ஹும், அவள் பாத்டப்பிலேயே இறந்து போயிருந்தாள்.

அதன்பிறகு தன்னை முற்றிலும் மறந்து போன சாலமன், தடியும் குடியுமாக சோகமாகவே திரிகிறார். பயப்பட வேண்டாம். அதன்பிறகு One year later என்று ஆரம்பித்து டைரக்ட்டாக கதைக்குள் சென்றுவிடுகிறது. யுனிவர்சிட்டிக்குக் கூட ஒரு வருடமாக சாலமன் செல்வதில்லை. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார். வெளியில் சென்றால், அது சரக்கு வாங்குவதற்காகவும் உணவிற்காகவும் மட்டுமே.

பீட்ரிஸ் இறந்து போன பிற்பாடு சோகத்திருந்த சாலமனுக்கு ஒரு கனவு வருகிறது. ஒரே கனவுதான். அடிக்கடி வருகிறது. பின்பு தினசரி அந்தக் கனவு வருவது வாடிக்கையாகிப் போகின்றது.

அந்தக் கனவில், ஒரு பெண், சிலர் அவளை அவளது பிரம்மாண்டமான வீட்டிலேயே வைத்து துரத்துகிறார்கள். தப்பித்து ஓடுகிறாள். அவர்களிடம் மாட்டிக் கொள்கிறாள். எதோ சடங்கு போல செய்து அவளது கழுத்தை அறுத்து அவளைக் கொன்று பலி கொடுக்கிறார்கள்.

மேற்சொன்ன கனவுடன் அந்த வீட்டைப் பற்றிய சில டீட்டெய்ல்களும் கனவில் படம் போல வருகிறது. ரெகுலராக வந்து கொண்டிருப்பதால் ஆரம்பத்தில் பயமுறுத்திய கனவு, போகப் போக மனப்பாடமாகி விடுகிறது. இதை அப்படியே தனது தோழியும், உடன் பணிபுரியும் புரெபெசருமான சூசனிடம் அச்சுப் பிசகாமல் ஒப்பிக்கிறார்.

ஒருநாள், சூசன் அவருக்கு போன் செய்து உடனடியாக டிவி நியூஸைப் பார்க்கச் சொல்கிறாள். அதில் கனவில் வந்த, அந்த அதே அவள், அந்த அதே வீட்டில் கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.

ஓகே இது சாதாரணமாக Premonition அல்லது Déjá Vu என்று சொல்லிவிடலாம். ஆனால், அதற்கு மேல் ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது இதே கனவு இன்னொருவருக்கும் வருகிறது. வந்து கொண்டிருக்கிறது. அவள் பெயர் Rachel. அவள் ஒரு பார் டான்சர். அவளும் இதே கனவால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இருவரும் அந்தக் கனவை ஏன் தங்களுக்கு வருகிறது என்று துப்பு துலக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது.

இவ்வளவு செமையான திருப்பங்களுடன் கூடிய படம், கொடூரமாக விமர்சிக்கப் பட்டிருப்பதுதான் சோகமான விசயம். So sad.

படத்தின் டைட்டில் கார்டு கிராபிக்ஸ் அட்டகாசம். மிஸ் / ஸ்கிப் செய்ய வேண்டாம்.

மீண்டும் சந்திப்போம்!

No comments:

Post a Comment