Thursday, May 7, 2020

Extraction (2020)



Extraction (2020)

Action

ஆக்சுவலாக இந்தப் படத்திற்கு நான் மீமிதான் போட்டிருக்க வேண்டும். அதெல்லாம் விட்டுட்டு என் கெரகம் இந்த ப்லாக்ல வந்து மாட்டிகிட்டேன். காரணம் இந்தப் பதிவைப் படித்து முடிக்கும் போது உங்களுக்கே புரிந்திருக்கும். சரி விசயத்துக்கு வருவோம்.

கதைப்படி ஆஸ்திரேலியாவிலிருக்கும் எக்ஸ் ஆர்மி மேன் தற்போதைய கூலிப்படை ஆசாமி டெய்லரிடம் (துணி தெக்கிற டெய்லரில்லிங்க. துணிய கிழிக்கிற டெய்லர் - Tylar Rake) டாக்காவில் சிறையிலிருக்கும் ஒரு மாஃபியா டானின் கடத்தப்பட்ட மகனை காப்பாற்றி வரும் வேலையை ஒப்படைக்கிறார்கள். அதற்கென ஒரு ஏஜென்ஸி இருக்கிறது. அவர்கள்தான் இடைத்தரகர்களாக இருந்து இந்தப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்பவர்கள்.

இந்த ஏஜென்ஸி மேட்டரெல்லாம் நான் அவதானித்தது. வேறு வகையிலும் இருந்திருக்கலாம். தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும். ஏனென்றால், நெட்ப்ளிக்ஸில் தமிழ் டப்பிங் குவாலிட்டி அந்த லட்சணத்தில்தான் இருந்தது. நானும், மாமன் மகள் படத்தில் வரும் கவுண்டமணி போல ரெண்டு காதுகளிலும் எதாவது பிரச்சினையோ, நமக்குத்தான் காது சரியாக கேட்க மாட்டேன் என்கிறதோவென காதைக் குடாய்ந்து குடாய்ந்து தூர்வாரிவிட்டு வசனத்தை கவனிக்க முயற்சித்தேன். பொதுவாக 12இல் வைத்தாலே பா.....ல் என்று ஊரைக் கூட்டும் எனது ஸ்பீக்கர்கள் நாற்பத்தைந்தைத் தாண்டியும் ஒரு வசனத்தையும் புரிந்து கொள்ள முடியாத ஆடியோ குவாலிட்டியில்தான் அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. வேறு எவருக்கும் இதே போல் இருந்ததா என்பதை தெரியப்படுத்தவும் - நெட்ப்ளிக்ஸிற்கு.

அந்தச் சிறுவனைக் காப்பாற்ற ஒன் மேன் ஆர்மியாக கிளம்புகிறார் டெய்லர். சிறுவனைக் காப்பாற்ரும் அந்தக் காட்சியிலிருந்து சுட ஆரம்பிக்கிறார். அங்கிருந்து படம் முடியும்வரை சுட்டுக் கொண்டே இருக்கிறார். அல்லது யாராவது இவரை சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ரோட்டில் யாராவது பர்ஸை அடித்துவிட்டால் அங்கிருக்கும் ஒரு கூட்டம் ஒன்று கூடி அவனைப் பிடித்து குமுறிக் கொண்டிருக்குமல்லவா! அதுபோல இந்தப் படத்தில் அந்த வழியாக ஃப்ரேமில் வரும் அத்தனை பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதுவும் ரகம் ரகமாய் பலப்பல வெரைட்டியான துப்பாக்கிகளில். டிசைன் டிசைனாய் கார்கள் - அதில் சேஸிங்குகள். இதில் ஸ்கூல் சிறுவர்கள் வேறு கைகளில் துப்பாக்கியுடன் திரிகிறார்கள். ச்சே ச்சே ச்சே ச்சே இந்த ஊர்ல தீபாராதன காட்டுறவன் மொதக்கொண்டு தீவிரவாதியால்ல ஆக்கி வச்சிருக்கானுக. படத்தில் யாராவது வசனம் பேசினால் வெறும் வாயை மெல்லும் என் ஸ்பீக்கர்கள் அவர்கள் சுட ஆரம்பித்தாலோ பின்னணி இசை ஒலிக்கும் நேரங்களிலோ அதே பா.....ல் எனத் திறந்து சவுண்டு ஊரைக் கூட்டும். 45இல் அல்லவா வைத்திருக்கிறேன்.

படம் முடிந்தபிறகு தம்மடிக்க சிகரெட்டைத் தேடி எனது சட்டை மேல் பாக்கெட்டில் கையை விட்டால் மொத்தமும் துப்பாக்கி புல்லட்டுகள். எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுத்தான் தம்மே அடித்தேன். நல்லவேளையாக என் சட்டையில் துப்பாக்கி குண்டுகள் எதுவும் துளைக்கவில்லை. இதற்கு முன் பில்லா 2 -வில்தான் இப்படி நடந்தது. அதன்பிறகு படம் பார்ப்பவர்கள் சட்டையில் பொத்தல் விழுமளவுக்கு புல்லட்டுகளை உபயோகித்தது இந்தப் படமாய்த்தானிருக்கும். அடேய்களா, அப்டி எவ்ளோ நேரந்தாண்டா சுட்டுகிட்டே இருப்பீங்க? கொஞ்ச நேரமாச்சும் கேப் விட்டு சுடுங்களேண்டா என்று கதற வைத்த ஆக்சன் படம்தான் எக்ஸ்ட்ராக்சன்.

நம்ம தோர் க்றிஷ் ஹெம்ஸ்வொர்த்துதான் இதில் அந்த ஒன் மேன் ஆர்மி டெய்லர் ரேக். அவர் போக அவரது ஏஜெண்ட் நிக் (Nik) ஆக நடித்திருக்கும் Golshiteh Farahani-யை Pirates of the Caribbean: Dead Men Tell No Tales (2017), Exodus: Gods and Kings (2014) போன்ற சிலபல படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் போக Pankaj Tripathi மற்றும் David Harbour போன்ற தெரிந்த முகங்களிருந்தாலும், நேய்சா என்றொரு கேரக்ட்டரில் நடித்த Neha Mahajan-ஐ நான் சாயம் பூசிய வீடு (2015) என்றொரு படத்தில் பார்த்திருக்கிறேன். நெட்பிளிக்ஸில் அகஸ்மாத்தாக எதையோ தேடப்போக அந்தப் படத்தைப் பார்த்தேன். நல்ல்ல்ல படம் அது! நோட் திஸ் பாய்ண்ட் யுவரானர்.

படத்தின் ஸ்கிரீன்ப்ளே Joe Russo என்கிற பெயரைப் பார்த்ததும் அட என்று கூகுளில் தேடினால், CIUDAD என்கிற வார்த்தை கிடைத்தது. அந்த வார்த்தையைப் பின்தொடர, அது ஒரு காமிக்ஸில் போய் நின்றது. அந்தக் காமிக்ஸிற்கான கதையை எழுதியது Anthony & Joe Russo and Ande Parks என்றிருந்தது. அட நம்ம மார்வெல் யுனிவர்ஸின் கேப்டன் அமெரிக்கா - விண்டர் சோல்ஜர் முதல் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரையிலான படங்களின் இயக்குநர்களாச்சே என்று அந்த காமிக்ஸை தேடிப் படித்தேன். அந்த CIUDAD காமிக்ஸ்தான் Extraction படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

CIUDAD என்றால் என்னவெனத் தேடினால் அதற்கு City என்று அர்த்தம் வந்தது. கூகுளில்தான். அது ஒரு ஸ்பானிஷ் வார்த்தை எனவும் தெரிந்து கொண்டேன். மேற்கொண்ட சில தேடல்களுக்குப் பின் அந்தப் பெயரில் ஒரு ஸ்பானிஷ் படம் இருப்பதை அறிந்து கொள்ள அந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். அது... TwinMurders The Silence of the White City (2019)


No comments:

Post a Comment