Friday, May 22, 2020

Vivarium (2019)






Vivarium (2019)

Mystery / Science Fiction

 

இதை சைன்ஸ் ஃபிக்சன் என்றால், சைன்ஸே நம்பாது. ஆனால், அப்படித்தான் மென்சன் செய்திருக்கிறார்கள். ஆனால் படம் செம்ம்ம்ம்ம்ம்ம்ம!

கார்பெண்டராக வேலை பார்க்கும் டாமுக்கும் (Tom) நர்சரி டீச்சராக வேலை பார்க்கும் அவனது மனைவி கெம்மாவுக்கும் (Gemma) புதியதாக ஒரு வீடு வாங்கவேண்டுமென்று ஆசை. ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டை அணுகுகிறார்கள். அவன் ஒரு வியர்டான சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ். அவன் பேச்செல்லாம், “நல்லா வாழப்பழம் மாதிரி பேசுவான் மேடோம்”. ச்சும்மா விசாரித்துவிட்டுப் போகலாம் என்று வந்தவர்களை, பேசியே மயக்கி, “வாங்க வீட்டைப் பார்க்கலாம்” என்று அவர்களது ஸ்மார்ட் சிட்டிக்கு அழைத்துச் சென்று விடுகிறான்.

அந்த இடமே அவ்வளவு அழகானது. வரிசையாக ஒரே மாதிரியான பிஸ்தா கலர் வீடுகள். எல்லாமே ஒரே ஜெராக்ஸ் மிஷினில் ப்ரிண்ட் எடுத்த ஜெராக்ஸ் காப்பி மாதிரி நூற்றுக்கணக்கில். அந்த இடத்தில் மேகங்கள் கூட அதே ஜெராக்ஸ் டைப் மேகங்கள். உங்களில் யார் அந்த அழகான ஏரியாவிற்குள் சென்றாலும் அங்கிருந்து வர விரும்ப மாட்டீர்கள். ஆனால், அதுதான் விதி. விதியோ வலியதல்லவா?

அவர்களுக்கு ஒன்பதாம் நம்பர் வீட்டைக் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறுகிறான் அந்த சே.எ. இவர்கள் அவனிடம் எதுவும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. அவன் சொல்வதற்கெல்லாம் மவுனமாக இவர்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, “என்ன இவன், விசாரிக்க வந்தவங்ககிட்ட, சொல்லப் போனா விண்டோ ஷாப்பிங் பண்ண வந்தவங்ககிட்ட டீல் முடிக்கற மாதிரி பெனாத்திகிட்டிருக்கான்” என்பதைப் போல பார்வைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவனோ, ”இதான் ஹால், இங்க உக்காந்து டிவி பாக்கலாம். இதான் கிச்சன், இங்க வச்சி சமைக்கலாம். இதான் பெட்ரூம், இங்க நீங்க தூங்கலாம். இதான் பாத்ரூம் டாய்லெட், இங்க நீங்க”

”டேய்ய்ய்”

“சரி வேணாம். இதான் குழந்தைக ரூம், இங்க உங்க குழந்தைங்க தங்கலாம்”

“ஆனா எங்களுக்குத்தான் குழந்தைங்களே இல்லியே”

”பரவால்ல கவலைய விடுங்க. ஏற்பாடு பண்ணிக்கலாம். வாங்க பின்னாடி போகலாம். இதான் வீட்டோட பேக் டோர்”

என்று கதவைத் திறந்து அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று அந்த அழகான இடத்தை ரசித்துக் கொண்டிருக்கையில் அவன் அப்ஸ்காண்ட்.

வெளியில் வந்து பார்த்தால், அவனது கார் அவன் முன்பு நிறுத்தியிருந்த இடத்தில் இல்லை. இவர்களது கார் மட்டும்தான் நின்று கொண்டிருக்கிறது. சரி கிளம்பலாம் என்று இருவரும் அந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டு காரில் கிளம்புகிறார்கள்.

“இந்தப் பக்கம்தான வந்தோம்? இல்ல இந்த வழியில்ல. தப்பு. பாரு அந்த கட்டு. இல்ல இந்த கட்டும் தப்பு. அய்யய்யோ சுத்தி சுத்தி மறுபடியும் ஒம்பதாம் நம்பர் வீட்டு வாசலுக்கே வந்துட்டமா... சரி நீ எறங்கு நா ஓட்றேன்.”

“நீயும் அதே ஒம்பதாம் நம்பர் வீட்டு வாசல்லயேதான் கொண்டுவந்து நிறுத்திருக்க”

என்று ஆள் மாற்றி ஆள் ஓட்டியும் அவர்களால் சரியான வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எப்படி சுற்றினாலும் அதே ஒன்பதாம் நம்பர் வீட்டு வாசலுக்கே வந்து நிற்கிறார்கள். ”என்னடாது இந்த அமெரிக்காக்காரனுக்கு வந்த சோதனை” என்று மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அதே ஒன்பதாம் நம்பர் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்க, “நாம சுத்துறமா? இல்ல இந்த வீடு நம்மள தொரத்துதா?” என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இருட்டி விடுகிறது. வண்டியில் பெட்ரோலும் காலி. மொபைலில் டவரும் இல்லை. மேப் உபயோகிக்க முடியாது. வேறு என்னதான் வழி என்று யோசித்துக் கொண்டிருக்கையில், அதே ஒன்பதாம் நம்பர் வீட்டில் லைட் எரிகிறது.

உள்ளே சென்று அன்றைய இரவை அங்கேயே கழிக்கிறார்கள். விடிந்ததும் நடந்தே கிளம்புகிறார்கள். வீட்டின் பின்பக்கம் உள்ள நாற்காலியை இழுத்துப் போட்டு ஒவ்வொரு வீட்டின் பின்பக்க காம்பவுண்டாக ஏறி இறங்கி, நாற்காலியை இழுத்துப் போட்டு, காம்பவுண்ட் ஏறி இறங்கி மீண்டும் இருட்டி விட,

“அங்க பாரு அந்த வீட்ல லைட் எரியிது” என்று அந்த வீட்டின் பின்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றால், அங்கே ஒருவருமில்லை. முன்கதவைத் திறந்து வெளியே வந்தால்,

“ச்சைக் சல்ப்பி. இது அதே ஒம்பதாம் நம்பர் வீடு”

என்று செம காண்டாகி அன்று அந்த வீட்டைக்கொளுத்தி எரித்தே விடுகிறான் டாம். இரவு கொளுந்துவிட்டு எரியும் அந்த வீட்டின் முன்பு தெருவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டே தூங்கிக் கொண்டனர். கண் விழித்துப் பார்த்தால்,

அதேதான். அதே ஒம்பதாம் நம்பர் வூடு. முட்ட முழுசா அப்டியே புத்தம் புதுசா அவர்களைப் பார்த்து சிரிக்கிறது.

அவர்கள் அந்த வீட்டை விட்டு தப்பித்தார்களா? அவர்களுக்கு மட்டும் ஏன் அப்படி நடக்கிறது என்பது விளக்க முடியாத Vivarium கதை.

என்னால் நிச்சயமாக கதையை விளக்க முடியும். என்னால் சத்தியமாக இப்படி ஒரு கதையை ஜீரணிக்க முடியவில்லை. காரணம், கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு கதையை அடிப்படையாக வைத்து நண்பர் சிவராஜ் ஒரு கதையை எங்களிடம் படமாக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், அந்தக் கதையின் அடிப்படையை அப்படியே தழுவி இவர்கள் படமாக்கியிருந்ததைப் பார்க்கவும் ஆடிப் போனேன்.

கிளைமாக்ஸ் புரியவில்லையென்றால் என்னிடம் வாருங்கள். கமெண்ட் செய்யுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு விளக்குகிறேன். ஆரம்பத்தில் முதல் பாராவில் கூறியிருந்ததைப் போல இது நிச்சயமாக சைன்ஸ் ஃபிக்சன் அல்ல. இது முற்றிலுமாக வேறு. படம் பார்க்கப் போகிறவர்களை திசைதிருப்பும் முயற்சியே இந்த சைன்ஸ் ஃபிக்சன் ஜானர் பித்தலாட்டம்.

ஆக, அடுத்த பக்கத்தில் The Invisible Man (2020)


1 comment: