The
Lodge (2019)
Horror
/ Thriller
சென்ற பதிவிற்குப் பிறகு நிறைய படங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் அவைகளைப் பார்ப்பதிலுமே நேரங்களை செலவிட வேண்டி நேர்ந்ததால் என்னால் முன்பு போல எழுத முடியவில்லை. இதோ அதனைச் சரிகட்டும் விதத்திலான ஒரு பதிவு. இப்பதிவு சில படங்களின் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு படத்தின் பதிவு முடிந்ததும் அதன் கீழேயே அடுத்த படத்தின் தொடர்ச்சிப் பதிவின் இணைப்பு இருக்கும். ஏற்கனவே ஒரு பதிவை எழுதிய அனுபவமும் உள்ளதனால் உங்களுக்கும் அது ஒன்றும் புதியதாக இருக்காது. இதோ படத்திற்குள் செல்வோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் பார்த்த அனைத்துப் படங்களும் புதிரான கதையமைப்பைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. ஒரு படத்தைப் பார்த்து முடிவடைந்தவுடன் அதிலிருந்து மீளவே சில காலம் பிடித்தது. ஒவ்வொன்றும் அட்டகாசமான கதையமைப்பையும், ஓ மை காட் என்பதைப் போன்ற முடிவையும் கொண்டதாகவும் இருந்தது. அதில் இந்தப் படம் முக்கியமானது. படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவர்களோடு சேர்ந்து நாமும் ஒரு மாய வலையில் மாட்டிக் கொள்கிறோம். (Ari Aster) ஆரி ஆஸ்டரின் Heriditary (2018) மற்றும் Midsommar (2019) படங்களைப் பார்த்தவர்களுக்கும், அந்த வகை ஹாரர்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கும் நிச்சயம் இந்தப் படமும் பிடிக்கும்.
தனது கணவன் ரிச்சர்டிடமிருந்து பிரிந்து வாழும் லாரா ஹாலுக்கு எய்டன் ஹால் என்றொரு மகனும், மியா ஹால் என்றொரு மகளும் உண்டு. தனது கணவன் ரிச்சர்ட் மீண்டும் ஒரு திருமணம் செய்யப் போவதாகவும், அவளது பெயர் கிரேஸ் மார்ஷல் எனவும் கூறுகிறான். மனதுடைந்து போன லாரா தற்கொலை செய்து கொள்கிறாள். குழந்தைகளுக்கு மீண்டும் ரிச்சர்டே சோல் கார்டியனாக ஆக வேண்டிய சூழல். இந்த சமயத்தில் தனது குழந்தைகளிடம் தனது திருமண எண்ணத்தை வெளிப்படுத்த அவர்களிடம் ஒரு நெகட்டிவான ரியாக்சன். அந்த பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
மாதங்கள் கழிகின்றது. அவர்களிடமிருந்து பாஸிட்டிவான ரிப்ளை வரவில்லை. ஆகவே ரிச்சர்ட் ஒரு திட்டம் தீட்டுகிறான். அவர்களோடு கிரேஸை பழக வைத்தால் பிரச்சினை சரியாகுமென்று ஒரு ஐடியாவோடு அவர்கள் மூவரையும் அழத்துக் கொண்டு மாஸாசூட்டிலுள்ள அவனது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் அவர்களை கிருஸ்துமஸ்சை கொண்டாட வைத்து பழக வைக்க வேண்டும். இதனால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படும். பிரச்சினை சுமூகமாக முடியும். திருமணம் தடையின்றி நடைபெறுமென்று அவ்வாறே அவர்கள் மூவரையும் அங்கே அழைத்துச் சென்று விட்டுவிட்டு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பி விடுகிறான்.
கிரேஸிற்கு ஒரு பின்கதை உண்டு. அவள் ஒரு Mass suicide survivors இருவரில் ஒருவர். அதாவது ஒரு கெட்ட மதபோதகரின் தவறான வழிநடத்தலால், பாவம் செய்த அனைவருக்கும் வாழத் தகுதியில்லை எனவும், அவர்களுக்கு மரணமே தண்டனை எனவும் கூறி அவரது வழிநடப்பவர்கள் அனைவரையும் கூட்டி ஒரு நன்னாளில் விஷம் கொடுத்து குடிக்கச் சொல்கிறார். அனைவரும் தனது பாவங்களைப் போக்க விரும்பியே விஷத்தை அருந்தி மரணிக்கின்றனர். அதில் அவளும் அந்த மதபோதகரும் மட்டும் உயிர் பிழக்கின்றனர். இது அந்தக் குழந்தைகளுக்கும் தெரிய வருகிறது. இப்படி ஒரு பின்கதை இல்லையென்றாலும் அவர்கள் கிரேஸை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், அவர்கள் தங்களது தாயின் மீது வைத்திருந்த பற்று அப்படிடியானது. அவளை விட இன்னொருத்தி அவளுக்கு நிகராக இருந்து விடப் போவதில்லை என்பது அந்தக் குழந்தைகளின் எண்ணம்.
அந்தக் குழந்தைகளும் சாமனியப்பட்டவர்கள் கிடையாது. சாத்தான்கள் சாமனியத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளாமல் அடம் பிடிக்கும் கழுதைகள்.
அவர்கள் மூவரும் அந்த வீட்டிற்கு வந்த சமயம் கிருஸ்துமஸ் காலமல்லவா? அதனால் அந்தப் பிரதேசம் முழுக்க பனி படர்ந்து வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல். மாற்றி மாற்றி அந்தக் குழந்தைகள் இவள் முகத்தையும், இவள் அந்தக் குழந்தைகள் முகத்தையுமே நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்க வேண்டி வருகிறது. வேறு வழியில்லாமல் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளாமல் அமைதியாக தேவைக்குப் பேசிக் கொள்வதும், மற்ற சமயங்களில் உர்ரென முகத்தை வைத்துக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்துக் கொண்டு நாட்கள் மெதுவாக நகர்கிறது.
இதில் என்ன பெரிய ஹாரர் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த மூவரும், அந்த வீடும், அதன் சுற்றியுள்ள புறப் பிரதேசமும் தங்களுக்குள் ஒரு அமானுஷ்யத்தை சுமந்தே கதை அமைக்கப் பட்டிருக்கிறது.
அப்போது அங்கே ஒரு விநோதமாக ஒரு சம்பவம் நடக்கிறது. அது ஏன் நடக்கிறது? யார் அதன் பின்னால் இருந்து அந்த இடத்தை இயக்குகிறார்கள்? அவர்கள் மூவரும் நட்புடன் பழகிக் கொண்டனரா? என்பதே படத்தின் மொத்தக் கதையும். நல்லவேளையாக கதையை எங்கும் ஸ்பாயில் செய்யவில்லை.
படத்தின் முடிவில் - நிச்சயம் உங்கள் நெற்றி சுருங்கும் / கண்கள் அகல விரியும்.
அடுத்த பக்கத்தில் - Vivarium

Nice one bro
ReplyDeleteSemma....padam pathum puriyama itha padicha apram taa purinjathu....
ReplyDeleteSpoiler free