The Queen’s Gambit (2020)
Mini Web Series
***ஸ்பாய்லர் அலர்ட்***
Elizabeth Harmon aka
Beth Harmon ஒரு அனாதைச்
சிறுமி. விடுதியில் வளர்கிறாள். அங்கே ஒரு விடுதிக் காவலரிடம் செஸ் பயில்கிறாள். பிறகு
15 வயதில் வேறு ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப் படுகிறாள். அவள் தத்தெடுக்கப் பட்ட
சில தினங்களில் அவளது வளர்ப்புத் தந்தை வீட்டை விட்டு ஓடி விடுகிறான். பிறகு அவள் வளர்ப்பு
அன்னையின் பாதுகாப்பில் மேல்நிலைப் பள்ளியில் சேர்கிறாள். அங்கே அவளுக்கு செஸ் சம்பந்தமான
எந்தக் கிளப்புகளும் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. ஒருநாள் செஸ் சம்பந்தமான ஒரு
புத்தகத்தை ஒரு மெடிக்கல் ஷாப்பில் பார்க்கிறாள். அதை வாங்குமளவுக்கு கையில் பணம் இல்லாததால்
திருடி எடுத்து வந்து படிக்கிறாள். அதில் அவளுக்கு பக்கத்து ஊரான சின்சினாட்டியில்
உள்ள யுனிவர்சிட்டியில் ஒரு செஸ் டோர்னமெண்ட் நடக்கவிருப்பதை அறிந்து கொள்கிறாள். முதல்
பரிசு 100 டாலர்கள். ஆனால், கலந்து கொள்வதற்கு ஐந்து டாலர்கள் தேவை என்பதை உணர்கிறாள்.
(கதை நடப்பது 1961 என்பதால் ஐந்து டாலர்கள்) தனக்கு செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்த
அநாதைகள் விடுதிக் காவலருக்கு கடிதம் எழுதி அனுப்புகிறாள். பணம் கிடைக்கிறது. அவள்
அங்கே விளையாடச் செல்கிறாள்.
அங்கே
பெயர் பதியும் கவுன்ட்டரில் இவளது ரேட்டிங்கை கேட்கிறார்கள். இவளுக்கு அப்படியென்றால்
என்னவென்று கூட தெரியாது. அவர்கள் இதற்கு முன்னால் எதாவது டோர்னமெண்டில் விளையாண்டிருக்கிறாயா
என்று கேட்கிறார்கள். இல்லை என்கிறாள். ”அப்ப கண்டிப்பா விளையாடனும்னு சொல்றியா? எங்ககிட்ட
பெண்களுக்குன்னு தனியா விளையாட்டுப் பிரிவு கூட இல்ல. பேசாம நீ Beginners போட்டியில விளையாடு. அதுல சிலர்
ஆர்வக் கோளாறுல கலந்துகிட்டிருக்காங்க” என்று குறைத்து மதிப்பிட, இவள் அதில் எவ்வளவு
பரிசு கிடைக்கும் என்று கேட்கிறாள். 20 டாலர்கள் என்று கூறுகிறார்கள். ”சரி அப்போ
100 டாலர்கள் பரிசு குடுக்கற போட்டியிலயே பேரை பதிஞ்சிக்கோங்க” என்று ஐந்து டாலர்களைக்
கட்டி விட்டு உள்ளே விளையாடச் செல்கிறாள். ஆனாலும் அவர்கள் இவளை அன்ரேட்டட் பிரிவில்
கடைசியாக ஒரு பிளேயராக பதிந்து கொள்கிறார்கள்.
அங்கே
அவளைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண் மட்டும்தான் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தாள்.
அவளும் அன்ரேட்டட். ஹார்மன், அவளுடன் தான் முதல் முதலாக அபிசியல் செஸ் டோர்னமெண்டில்
போட்டியிடுகிறாள். போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களில் அவளை வென்றும் விடுகிறாள். அப்படியே
படிப்படியாக அன்ரேட்டட் பிரிவில் உள்ள அனைவரையும் வெற்றி காண்கிறாள். இதில் வெற்றி
பெற்றதால் ரேட்டட் பிரிவில் முதல் சுற்றில் ஜெயித்தவர்களுடன் விளையாட, அடுத்த
சுற்றுக்கு முன்னேறுகிறாள். அங்கே அனைவரையும் வென்று இறுதிச் சுற்றில் முதல்
பரிசையும் வெல்கிறாள்.
இவளது
ஆட்டமுறை அனைவருக்கும் வியப்பை அளிக்கிறது. இவளது பெயர் செய்தித்தாள்களில் ஒரு துண்டுச்
செய்தியாக வெளியாகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு டோர்னமெண்டாக விளையாடச்
செல்கிறாள்.
இவளது
ஒரே கனவு உலக செஸ் கிராண்ட் மாஸ்டராக ஆக வேண்டும். ஆனால், அவளால் ஆகமுடியாத படிக்கு
முட்டுக் கட்டை போடும் ஒரு கெட்ட பழக்கம் அவளிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே சதுரங்கத்திற்கு
மட்டுமல்ல, போதைக்கும் இவள் அடிமை. அது இவளை பல சமயம் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே
இருக்கிறது. அதிலிருந்து விடுபட்டாளா, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றாளா என்பதே ஆச்சரியங்களும்,
அசத்தலான மேக்கிங்கும், நிறைய செஸ் மூவ்ஸும் கொண்ட மினி வெப்சீரிஸ் The Queen’s Gambit (2020).
நெட்பிளிக்ஸில்
கிடைக்கிறது. ஏழு அசத்தல் எபிசோடுகள். Dark சீரிஸில் எப்படி ஒவ்வொரு எபிசோடிலும் சில
பாடல்கள் வருமோ அதே போல இதிலும் நிறைய ரெட்ரோ பாடல்கள் வரும். அது அந்தக் கதையின் பின்னணியில்
கலந்து ஒரு மேஜிக்கல் அனுபவத்தை அளித்ததை நான் உணர்ந்ததைப் போல நீங்களும் நிச்சயம்
உணர்வீர்கள்.
செஸ்
விளையாடத் தெரியாதவர்களுக்கும் இந்தக் கதை நிச்சயம் புரிந்து கொள்ளும் விதமாகத் தான்
எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு செஸ் விளையாடுவது ரொம்பவே பிடிக்கும். அதனாலோ என்னவோ
இந்த வெப்சீரிஸ் எனக்கு மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது. லகான் (2001), சென்னை 600028 (2007) & (2016) போன்ற படங்களில் நாம்
உணர்ந்தை விட இதன் மேக்கிங் அருமையாக இருப்பதை பார்க்கும் போது நிச்சயம் உணரலாம். கிட்டத்தட்ட
நிஜத்தைப் போலவே இருக்கும். ஆனால் இது ஒரு Fictional Biography. சில செஸ் வீரர்களின்
வாழ்க்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு Walter Tavis -ஆல் எழுதப்பட்ட The Queen’s Gambit என்கிற நாவலை அப்படியே
அடியொற்றி திரைக்கதையாக்கப் பட்டு படமாக்கப் பட்டிருக்கிறது.
நெட்பிளிக்ஸில்
ஏழு எபிசோடுகளாக பார்க்கக் கிடைக்கிறது.

No comments:
Post a Comment