Wednesday, January 13, 2021

மாஸ்டர் (2021)

 


ஒன்னரை வருசம் காத்திருந்து ஒரு படம் பாக்கறோம். படம் நல்லாருக்கா? அது நம்ம எதிர்பார்ப்ப பூர்த்தி செஞ்சிருக்கான்னு பாத்தா...?

சத்தியமா 100% அது சாத்தியமாயிருக்கு!

என்னடா ஒரு அஜித் ஃபேன், விஜய் படத்த தூக்கி வச்சி பேசறேன்னு உங்களுக்கெல்லாம் டவுட்டு வரலாம். வரணும். ஏன்னா அப்டி ஆக்கி வச்சிருக்கானுக.

உண்மையில நா ஒரு எய்ட்டிஸ் கிட் பாஸு. எனக்கு ரெண்டு பேரும் ஒன்னுதான். அதுக்கப்புறம் அடிச்சிகிட்டதெல்லாம் நய்ண்டிஸ் டு டூ’கே கிட்ஸ் பிரச்சினை. அதுக்கு நாங்க பலிகடா ஆக மாட்டோம். ரெண்டு பேர்த்தயும் மொத படத்துலேர்ந்து பாத்துகிட்டிருக்கோம். எங்களுக்கு ரெண்டு பேருமே மிகப்பெரிய டீனேஜ் ஹீரோஸ். ரெண்டு பேருக்கும் மொதல்ல இருந்த இமேஜுக்கும் இப்ப இருக்கற மாசுக்கும் நடுவுல நெறய வரலாறு இருக்கு.

ரெண்டு பேரும் தல - தளபதி ஆகறதுக்கு முன்னாடியிருந்தே எங்களுக்கு ஆதர்சம். இதுல எத விட்டுக் கொடுக்கச் சொல்றிங்க? சொன்னாலும் முடியாது.

சரி. இப்ப மாஸ்டருக்கு வருவோம்.

விஜய்

இந்தப் பேரு ஒரு எனர்ஜி. அந்தளவுக்கு மொத படத்துல எப்டி இருந்தாரோ அதே அளவுக்கு இன்னிக்கும் பவர்ஃபுல் ஹீரோ. மாஸ்டர் அதுக்கு ஒரு மிகப்பெரிய உதாரணம். படத்துக்குப் படம் யூத்தாகிட்டே போற வரத்த இவரு எங்கிருந்து வாங்கிட்டு வந்தாரோ தெர்ல. மனுசன் அப்டே அட்மயர் பண்றாரு. பகல்ல காலேஜ் புரொபெசராவும், ஆறு மணிக்கு மேல சரக்கடிச்சிட்டு மட்டையாகுற அந்த மேனரிசம், லோகேஷ் எங்கயிருந்து விஜய் முகத்துல அந்த ரெஃபரன்ச புடிச்சாப்லன்னு தெர்ல? அது ஒரு ஆச்சர்யமான விசயம். பாதிப் படத்துக்கு விஜய் கதைக்குள்ள ஒரு போதைக் கை. அப்டியே அவங்கவங்க வாழ்ற ஏரியால / நம்ம ஏரியால நமக்குத் தெரிஞ்ச / பழக்கமான ஒரு நெய்பர்ஹுட் போதைக் கைய ஞாபகப் படுத்தறாரு. ஏன்னா எங்க ஏரியாலயும் ஒரு சிலர் இந்த மாதிரி எல்லாருக்கும் புடிச்சாப்ல இருக்கறவங்க வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. அத விஜய் பண்ணும்போது எப்டியிருக்கும்ங்கறதுதான் மேஜிக்.

அதே மாதிரிதான் விஜய் சேதுபதி கேரக்ட்டரும். நீங்க வாழ்ற உங்க ஏரியால உங்களுக்கு புடிக்காம நெகட்டிவ்வா பெரிய லெவல்ல வளந்துகிட்டிருக்கற கேரக்ட்டரும் இருக்கும். அது கொஞ்சம் டேஞ்சரான ஆளுன்னாலும் நம்மால தட்டிக் கேக்கறளவுக்கு தைரியம் வருமான்னா… ம்ஹும் நாம அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்.

இந்த ரெண்டு கேரக்ட்டரும் மோதிக்கிட்டா / மோத வேண்டியிருந்தா எப்டியிருக்கும்ங்கறதுதான் மாஸ்டர்.

விஜய் சேதுபதிகிட்ட ஒரு கெட்ட பழக்கமிருக்கு. எந்த கேரக்ட்டரைக் குடுத்தாலும் அதை ஒரே மாடுலேசன்ல வேற வேற கெட்டப்ல ப(பி)ண்ணுவாப்ல. இதுலயும் அதை மட்டும்தான் பண்றாரு. பெரிசா அலட்டிக்கத் தேவையில்ல. ஹீரோவா பண்ணாலும் அதே மாடுலேசன்தான். வில்லன் or சைடு ஆக்ட்டரா பண்ணாலும் அதே மாடுலேசன்தான். இதுல வர்சட்டைல்ங்கற வார்த்தைய அவர்கிட்ட யாரு சொன்னாங்கன்னு தெர்ல. அப்டி சொன்னவங்களுக்கு மண்டையில என்ன கோளாறுன்னு அவங்களே நல்ல ஸ்கேன் பாய்ண்ட்டா போயி செக் பண்ணிக்கிறது நல்லது.

பலரோட ரிவ்யூஸ்ல சொன்ன மாதிரி படத்தோட மொத பாதி வேகமாவும், ரெண்டாவது பாதி லேக்காவும் இருக்கறதா சொல்லிருந்தாங்க. அடப்பாவிங்களா… படமே ரெண்டாவது பாதிலதான் சரியான பாதையில போகுது, இதுல லோகேஷ்க்கு டைரக்ட்டோரியல் டிப்ஸ் வேற.

உண்மையில மாஸ்டர் முதல் பாதி எப்டி இருந்ததோ, அதை விட நல்லாவே ரெண்டாவது பாதியும் நல்லாவே இருந்தது. (எங்கயும் ஸ்பாய்லர் சொல்லலேங்கறதுல எனக்கு கர்வமும் உண்டு).

படம் நல்லாருக்குங்கறத எதைக் கொண்டும் மறைக்க முடியாது. தாராளமா பார்க்கலாம் ப்ரெண்ட்ஸ். படத்தைப் பத்தின டீட்டெய்ல் ரிவ்யூ soon


2 comments: