Friday, January 22, 2021

RADIUS (2017)

 


RADIUS (2017)

Sci-Fi / Thriller

 

ஒரு கார் விபத்துல இருந்து ஹீரோ கண் முழிக்கிறாரு. சுத்தி யாரும் இல்ல. தலையில ஒரு பக்கம் ரத்தம் வழிஞ்சிகிட்டிருக்கு. அவருக்கு ஒன்னும் புரியல. இது எப்டி நடந்தது? யாரு ஓட்டுனா? எந்த வண்டியில மோதுனோம்னு ஒன்னும் ஞாபகமில்ல. எவ்ளோ யோசிச்சாலும் அது ஆக்ஸிடண்ட் நடந்த சில நொடிக் காட்சிகள் மட்டும்தான் ஞாபகத்துல தெரியிது. சரி அப்டியே போய் யார்ட்டயாச்சும் ஹெல்ப் கேப்போம்னு ரோட்டுல நடந்து போகையில ஒரு கார் வருது. இவரு கைய காட்டி நிறுத்த, அந்த வண்டி ஸ்லோவாகி இவர்கிட்ட வரும்போதே தாறுமாறா ரோட்டுக்கு கீழ எறங்கி ஒரு எடத்துல போய் நிக்கிது. ஓடிப் போயி பாத்தா, டிரைவர் சீட்ல ஒரு லேடி. கண்ணுல கருவிழி மேல போயி வெறும் வெள்ளைக் கலர் மட்டும் தெரிய, நாடிய செக் பண்ணிப் பாத்தா, அது நின்னு போயிருக்கு. லிப்ட்டு குடுக்க ஒதுங்கின கேப்ல உசுர வுட்ருக்கு அந்த லேடி.

 

சரின்னு 911க்கு கால் பண்றாரு. அவங்க எல்லாத்தையும் கேட்டுட்டு, சரி உதவுறோம். உங்க பேரென்னன்னு கேக்க, அப்பத்தான் இவருக்கு ஒரு விசயம் புரியிது. ஹீரோவுக்கு தன்னோட பேர் கூட ஞாபகத்துல இல்ல. அதுமட்டுமில்ல. அவருக்கு அந்த ஆக்ஸிடண்டைத் தவிர, தன்னைப் பத்தின வேற எந்த விவரமும் ஞாபகத்துல இல்ல. ஆனா, ஒருமாதிரி சமாளிச்சி பாக்கெட்ல கைய வுட்டு அலாசி ஆராய்ஞ்சி பர்ஸ்ல இருந்து டிரைவிங் லைசன்ஸ் எடுத்து தன்னோட பேர கண்டுபுடிச்சி சொல்றாரு – Liam. அதான் ஹீரோவோட பேரு. அதுல உள்ள அட்ரஸ கண்டுபுடிச்சி உள்ள போயி அவரோட வீடுதானான்னு செக் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டு அங்கேயே இருக்கறாரு.

 

ஹீரோவுக்கு சிலபல சம்பவங்களுக்கு அப்புறம்தான் புரியிது, தான் இருக்குற எடத்துலேர்ந்து சில அடி தூரத்துல இருக்கறவங்க எல்லாரும் எதோ வைரஸ் தாக்கின மாதிரி ஸ்பாட்லயே பொத்து பொத்துன்னு விழுந்து சாவுறாங்க. எல்லாருக்கும் சொல்லி வச்ச மாதிரி மொத பாரா கண்ணு மேட்டரு ஒரே மாதிரி கருவிழி மேல போயி வெள்ளையா மட்டும் இருக்கு.

 

இது எதோ வைரஸ் காத்துல பரவுனதாலதான்னு மொதல்ல நினைக்கிறாரு. ஊர்ல மத்தவங்களும் அப்டித்தான் மொதல்ல நினைக்கிறாங்க. ஆனா, அதுதான் இல்ல. நம்ம ஹீரோவை குறிப்பிட்ட ரேடியஸ்ல நெருங்கறவங்க எல்லாரும் செத்துப் போறாங்க. அதுக்கு நம்ம ஹீரோதான் காரணம். அவரோட ஒடம்புல இருந்து எதோ மர்மமான முறையில எதோ வெளிப்பட்டுதான் இதெல்லாம் நடக்குதுன்னு கண்டுபுடிக்கிறாரு.

 

மனுசங்க மட்டுமில்ல. அந்தக் குறிப்பிட்ட ரேடியஸ்ல மேல பறக்குற பறவைகளும் செத்து பொத்து பொத்துன்னு விழுகுது.

 

போதுண்டா சாமி. இதுக்கு மேல தன்னால யாரும் சாக வேண்டாம்னு தன்னைத்தானே தனிமைப் படுத்திகிட்டு குவாரண்டைன்ல வாழ நினைக்கிறாரு லியம்.

 

ஆனா, அவரைத் தேடி ஒரு பொண்ணு வருது. அங்க ஒரு ட்விஸ்ட்டு. அவ கிட்ட நெருங்கியும் அவ சாகல. இதுல இன்னொரு ட்விஸ்ட் என்னன்னா அவளுக்கும் தன்னோட பழசு எதுவுமே ஞாபகத்துல இல்ல. இன்னொன்னொரு ட்விஸ்ட்டு அவளும் அந்தக் காருல ஆக்ஸிடண்டாகறதுக்கு முன்னாடி லியம் கூட கார்ல இருந்தா. அவ பேரு Jane Doe.

இதென்ன பிரமாதம். இதுக்கு மேல ஒரு ட்விஸ்ட்டு இருக்கு. அது அந்தப் பொண்ணு ஹீரோகூட இருக்கறப்ப மத்தவங்க யாரும் சாகறதில்ல.

 

ஏன்? எதுக்கு? எப்படி?

 

இதெல்லாம் Radius (2017) படத்தைப் பார்த்து தெரிஞ்சிக்கோங்க. படம் உங்களுக்கு எல்லாருக்கும் கண்டிப்பா புடிக்கும். செம கதை இது. 


இந்தப் படம் OTT platformல எதுலயும் இல்ல. அதனால இதுக்கு உங்களால முடிஞ்ச சாமர்த்தியங்கள வச்சி இந்தப் படத்த்தைப் பார்த்துக்கவும்.


No comments:

Post a Comment