X: Past is Present (2015)
Mystery/Drama
மொத்தம்
11 கதை. 11 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கின படம்.
நம்ம
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், படம் இருக்கில்லையா, அதெல்லாம் அப்டி தள்ளி நிக்கனும்.
ஏன்னா நம்ம ஹீரோவோட எக்ஸ்களைப் பத்தின கதைதான் மொத்தப் படமும். மொத்தம் 12 பொண்ணுங்க.
அதனால ஆட்டோகிராப் மாதிரி நெனச்சிக்காதிங்க. டஜன் பொண்ணுங்க இருக்கறப்பவே தெரிஞ்சிருக்கனும்.
இது ஆட்டோகிராப் இல்ல. மஸ்த்ராம்னு. ஆமா 18+ தான். ஆனா… அதுவேணா. ஸ்ட்ரெய்ட்டா கதைக்குள்ள
போனா…
ஹீரோ
பேரு K. அதான் பேரே. அந்தாளு ஒரு ஃபேமஸ் டைரக்ட்டர். இதுவரைக்கும் 20 படங்கள் எடுத்திருக்காரு.
ஆனா எல்லாமே பிலிம் பெஸ்டிவல்ல மட்டும்தான் ரிலீஸாகும். அப்டியாப்பட்ட டைரக்ட்டர்.
தண்ணிக்கொடம் தூக்குறவனுக்கு எதுக்குடா கூலிங்கிளாஸுங்கற மாதிரி, இருட்டு பார்லயும்
கூலிங்கிளாஸோடதான் சுத்துவாரு. அங்கனக்குள்ள ஒரு புள்ள இவராண்டயே வந்து வாயப் புடுங்குது.
அப்டியே பேச்சுவாக்குல அந்தப் புள்ளகிட்ட தன்னோட ஒவ்வொரு கதையா சொல்ல ஆரம்பிக்கிறாரு.
சரக்கு உள்ள போயிருச்சில்ல. அப்றம் பழச போட்டு கிண்டிக் கெளறலேன்னா அப்றம் அந்தக் கருமத்த
எதுக்கு குடிச்சிகிட்டு.
அப்டி
அவர் சொன்ன கதைகள்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது ரெண்டு கதைகள்.
அதுல
ஒன்னு,
ஹீரோ
மும்பைல இருந்து கல்கத்தாவுக்கு வேலை விசயமா போறாரு. ஆனா வேலை கிடைச்சும் தங்க ரூம்
கிடைக்கறதில்ல. எங்கெங்கயோ சுத்தி ஒரு எடத்துல ஒரு ஓல்ட் லேடி ரூம் குடுக்க ஒத்துக்கறாங்க.
ஆனா அவங்களும் ஆரம்பத்துல, நீ மும்பை பையனா, ரூமில்ல ராசாங்கறாங்க. இவன் மேல மேல கெஞ்சவும்,
ஒரு ரூம் இருக்கு. ஆனா அதுல ஆல்ரெடி ஒருத்தங்கள குடி வச்சாச்சேங்கறாங்க. இவனும் வுடாம,
நான் நைட்டு எட்டு மணிக்கி வேலைக்கிப் போனா காலைல எட்டு மணிக்கித்தான் வருவேன்ங்கறான்.
ஓ அப்ப சரி. இங்க குடியிருக்கற ஆளு காலைல எட்டு மணிக்கி வேலைக்கிப் போனா நைட்டு எட்டு
மணிக்கித்தான் வருவாங்கன்னு சரின்னு ஒத்துக்கறாங்க. ஏற்கனவே ஒரு ஆள் குடியிருக்கறதால,
லீவு நாள்ல கூட நீ நைட்டு எட்டு – மார்னிங் எட்டு வரைக்கும் எப்பயும் போல வேலை பாக்குற
எடத்துலதான் தங்கிக்கனும்னு சொல்லி ரூம் குடுக்கறாங்க.
இவன்
டைரக்ட்டர் வேலைக்கி ட்ரை பண்றதால நெறய எழுதுவாப்ல இல்லியா. அத அப்டியே ரூம்ல வச்சிட்டு
வேலைக்கு போயிருவாப்ல. அடுத்து அங்க இன்னொரு ஆள் தங்கிருக்கில்லையா அது ஒரு பொண்ணு.
இவனோட எழுத்துக்கள வாசிக்கறதும், அதுக்கு பக்கத்துலயே இவங்க அதே மாதிரி எழுதறதும்,
அடுத்து இவன் வந்து அதை வாசிச்சிட்டு பதில் எழுதறதும்னு செமயா இருக்கும்.
ஒரே
ரூம்லயே தங்கிருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் பாக்காமயே இப்டி எழுத்து மூலமா ஒருத்தர ஒருத்தர்
பிடிச்சுப் போயி விரும்ப ஆரம்பிச்சிடறாங்க.
அப்றம்
என்னாச்சி?
ஹ்ம்ம்
கூல்ட்ரிங்க்ஸ் குடிங்க. எல்லாத்தையும் நானே சொல்லனுமாக்கும்? நீங்க பாக்கறதுக்கும்
புரிஞ்சிக்கறதுக்கும் படத்துல நெறய இருக்கு. அதையெல்லாம் சொல்லி ஸ்பாய்ல் பண்ண விரும்பல.
இந்தப்
படத்துல ஒரு போர்ஷன் மட்டும் (அவங்க தங்கிருந்த போர்ஷன் இல்ல) நம்ம நலன் குமாரசாமி
இயக்கினது. அது படத்துல கட்டக் கடைசியா வரும். படம் மொத்தமும் ஆங்கிலமும் ஹிந்தியும்
கலந்து வந்தாலும், அந்தக் கடைசி போர்ஷன் முழுக்க தமிழ்ல, நம்ம தமிழ்நாட்டுலதான் நடக்குது.
கிளைமேக்ஸே இங்கதான்.
படத்துல
ஹீரோவா நடிச்சிருக்கறது ரஜத் கபூர்னு ஒரு நடிகர். ஆனா அவரோட டீனேஜ் காலத்து வர்சனா
நடிச்சிருக்கறது நம்ம மஸ்த்ராம் ஹீரோ அன்ஷுமன் ஜா.
இது
போக எனக்குத் தெரிஞ்ச முகங்கள், காலாவுல ரஜினியோட எக்ஸா வர்ற ஹ்யூமா குரேஷி, ராதிகா
ஆப்டே, ராஞ்சானாவுல தனுஷ் கூட நடிச்ச ஸ்வரா பாஸ்கர், கோ படத்துல வர்ற பியா பாஜ்பாய்,
சிங்கர் உஷா உதூப், நம்ம தோர் நடிச்ச Extraction (2020) மற்றும், The painted
House (2015) படத்துல நடிச்ச நேஹா மகாஜன், அப்றம் நம்ம பில்லாவோட ரைட் ஹேண்ட் ரஞ்சித்
ஞாபகம் இருக்கில்லையா யோக் ஜேபி. இவ்ளோதான் இந்த படத்துல எனக்கு தெரிஞ்ச முகங்கள்.
இவ்வளவுக்கும் மேல எனக்கு தெரிஞ்ச இன்னொருத்தரும் இருக்காரு. அவர்தான் இந்தக் கதையை அனு மேனன்ங்கறவங்களோட சேர்ந்து எழுதி மொத்தக் கதைக்கும் திரைக்கதை எழுதினவரு. அவர்தான் நம்ம தியாகராஜன் குமாரராஜா.

செம்ம Bro கண்டிப்பா பார்க்குறேன் But கொஞ்சம் Time ஆகும்
ReplyDelete