WandaVision (2021)
WebSeries
MCU
வாண்டாவுக்கும் விஷனுக்குமான அறிமுகத்தைத்
தெரிஞ்சிக்க The Legends-ல வந்த ரெண்டு
எபிசோடுகளைப் பார்த்துக்கலாம். அது தெரிஞ்சா இந்த சீரிஸ் புரிஞ்சிக்கறது ரொம்ப ஈஸி.
தெரியாதவங்களுக்காக அடுத்த சில பத்திகள்:
வாண்டா மேக்ஸிமாஃப் அலயஸ் ஸ்கார்லெட் விட்ச்,
ஹைட்ராவால உருவாக்கப் பட்ட ஒரு ஹ்யூமன் வெப்பன். லோகியோட ஸ்பியர்ல இருந்த மைண்ட் ஸ்டோனால
அப்டேட் செய்யப்பட்ட மியூட்டண்ட். அவளுக்கு, கூட ஒட்டிப் பிறந்த சகோதரனும் உண்டு. அவன்
பெயர் பியட்ரோ மேக்ஸிமாஃப். ரெண்டு பேரும் மியூட்டண்ட்ஸ். யெஸ். மியூட்டண்ட்ஸ்-தான்.
ஏன்னா இவங்களோட தோப்பனாரும் ஒரு மியூட்டண்ட். எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும்.
எக்ஸ்-மேன் சீரிஸ் படங்களில் அதிகப்படியா மெயின் வில்லனா இருந்த மக்னீட்டோ-தான் இவங்களோட
அப்பாஸ். பொறக்கும் போதே மியூட்டண்ட்ஸ்-தான்னாலும் அவங்க சக்தி மேம்படுத்தப்பட்டது
மைண்ட் ஸ்டோனாலதான். அதை செஞ்சது ஹைட்ராவுல இருந்த பாரோன் ஸ்ட்ரக்கர்.
விஷன் ஒரு சிந்தசைட். ரோபோட். டோனி ஸ்டார்க்கும்,
ப்ரூஸ் பேனரும் சேர்ந்து லோகியோட மைண்ட் ஸ்டோனை வச்சி அதுக்குள்ள ஜார்விஸ்சை புகுத்தி,
உலகத்தை ஏலியன்ஸ்ங்ககிட்டயிருந்து காப்பாத்துற ரோபோட்டை உருவாக்க நினைக்க, மைண்ட் ஸ்டோன்
தன்னிச்சையா அந்த தகர டப்பா ரோபோட்டுக்குள்ள நுழைஞ்சி, அது அழிவை உருவாக்குற அல்ட்ரானா
உருவாகி, அது தன்னைத் தானே வைப்ரேனியத்தால அப்கிரேட் செஞ்சிக்க நினைக்க, அதை அவெஞ்சர்ஸ்
தடுத்து சிலபல உள்கலவரங்களுக்கிடையில தோரோட உதவியால அந்த அல்ட்ரான், விஷனா உருவாகுது.
ஆக, விஷனை உருவாக்கினது டோனி ஸ்டார்க், ப்ரூஸ் பேனர் மற்றும் தோர். (காமிக்ஸ்ல விஷன்
உருவான விதம் எப்டின்னா, இறந்துபோன ஹ்யூமன் டார்ச்சோட உடல்ல வைப்ரேனியத்தை செலுத்தி
அல்ட்ரானை உருவாக்க ட்ரை பண்ணப்ப, அவெஞ்சர்ஸ் அதைத் தடுத்து விஷனை உருவாக்குவாங்க.)
விஷனுக்கும், வாண்டாவுக்கும் இடையில கேப்டன் சிவில் வார்ல காதல் மலருது. இன்பினிட்டி வார்ல, மைண்ட் ஸ்டோனுக்காக வாண்டா கையால ஒருமுறையும், தானோஸ் கையால இன்னொரு முறையும் நிரந்தரமா இறந்து போயிடறாரு விஷன்.
ஸ்பாய்லர் அலர்ட்
ஏற்கனவே, வாண்டாவோட சகோதரன் பியட்ரோ, சொக்கோவியால அல்ட்ரான் கையால இறந்து போன துக்கமும், விஷன் வகாண்டாவுல இறந்து போன துக்கமும் சேர்ந்து அவளைத் தனிமைப்படுத்துது. ஆனா, அவளுக்கான வாழ்க்கையை இதுவரைக்கும் வாழாமயே இருந்ததால, தனக்கான ஒரு வாழ்க்கையை வாழனும்னு ஒரு பாக்கெட் டைமன்சனை உருவாக்கி அதுக்குள்ள விஷனும், வாண்டாவும் சந்தோசமான தம்பதிகளா வாழறாங்க. அந்த இடத்துக்கு பேருதான் வெஸ்ட்வியூ. அது ஒரு குறு நகரம். (காமிக்ஸ்லயும் அப்டி வாண்டா ஒரு பாக்கெட் டைமன்சன் ஊரை உருவாக்குவாங்க. அந்த ஊருக்குப் பேரு - லியோனியா.) இதை வாண்டாவா உருவாக்கி அவங்க பேரு வைக்கல. ஏற்கனவே இருக்கற ஈஸ்ட்வியூவ இவங்களோட பாக்கெட் டைமென்சனுக்குப் பயன்படுத்திக்கிறா. அதுக்கு வெஸ்ட் வியூன்னு பேரையும் மாத்தி வச்சிக்கிறா.
விஷனைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் எதுவுமே தெரியாது. ஏன்னா, விஷனுக்கு இன்பினிட்டி வாரோ, எண்ட் கேமோ, தானோஸோ எதுவுமே ஞாபகத்துல இல்லை. வாண்டாவைக் கல்யாணம் செஞ்சிருக்கறதாகத் தெரியும். மேற்படி, தான் ஒரு சின்தசைடுங்கறதும் ஞாபகத்துல இருக்கு. அவ்ளோதான். விஷனைப் போலவே அந்த வெஸ்ட்வியூ மக்களுக்கும் பழசு எதுவும் ஞாபகத்துல இருக்கறதில்லை. இன்னும் சரியா சொல்லனும்ன்னா வாண்டா வெஸ்ட்வியூவ தன்னோட பாக்கெட் ரியாலிட்டியா மாத்திகிட்டதுக்கு முன்னாடி இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கு உண்டான வித்தியாசத்தை உணரல. எதோ ரொம்ப காலமா அவங்க ஒரு டிவி உலகத்துல பிளாக் அண்ட் வொய்ட்ல வாழ்ந்துகிட்டிருக்கறதாகத்தான் நினைச்சுகிட்டிருக்காங்க. ஏன்னா அது வாண்டாவோட ரியாலிட்டி. அவங்க மொத்தப் பேரையும் தன்னோட கண்ட்ரோல்ல வச்சிருக்கா. அதனால யாருக்கும் பழசு எதுவும் நினைவுல இல்ல.
அப்டி யாராவது வந்து பழசை ஞாபகப் படுத்தினா, குறிப்பா விஷன் இருக்கும்போது வாண்டாவுக்கு கெட்ட கோவம் வரும். அந்த ஸ்பாட்லயே அந்த ரியாலிட்டிய ஆல்ட்டர் பண்ணிடறாங்க. மொத எபிசோடுல மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ஹார்ட் வாண்டா – விசன் வீட்டுக்கு நைட் டின்னருக்கு வர்றாங்க. அப்ப பேச்சுவாக்குல, மிஸ்சஸ் ஹார்ட் பேச்சுவாக்குல, நீங்க ரெண்டு பேரும் எந்த ஊர்லயிருந்து வந்தீங்க? இந்த ஊருக்கு எப்ப வந்தீங்க? எதனால இந்த ஊருக்கு வந்தீங்க? எப்பக் கல்யாணமாச்சுன்னு கேசுவலா கேக்கப் போக, வாண்டாவுக்கும் விஷனுக்கும் இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு உண்மையாவே தெரியாம முழிக்கிறாங்க. உண்மையாவே அப்டி ஒன்னு நடந்திருந்தாத்தான பதில் சொல்ல முடியும். பதில் சொல்ல முடியாம தெணர்றாங்க. அப்ப அதே கேள்விகள, மிஸ்டர் ஆர்தர் ஹார்ட் அதிகாரத் தொனியில திரும்பத் திரும்பக் கேக்கவும், வாண்டாவுக்கு கோவம் வந்துருது. ஆனா அத முகத்துல காட்டுறதுக்கு சாதாரண ஆள் இல்லியே நம்ம வாண்டா. தன்னோட பவரால, தொண்டைக்குள்ள எதோ அடைச்சிக்க வச்சி அவரு மூச்சு விட முடியாம தெணறவும், மிஸ்சஸ் ஹார்ட் ஸ்டாப் இட்… ஸ்டாப் இட்னு திரும்பத் திரும்ப சொல்றாங்க. ஆனா ரெண்டு வாட்டிதான் தன்னோட கணவரைப் பாத்து சொல்றாங்க. அதுக்கப்புறம் சொன்ன எல்லா ஸ்டாப் இட்-டுமே வாண்டாவைப் பாத்து சொன்னது.
அந்த செகண்டுலயே வாண்டா அந்த ரியாலிட்டியில ஒரு சின்ன மாற்றம் செய்யிறாங்க. அதாவது மேற்படி கேட்ட கேள்விகள அந்த ரியாலிட்டியில இருந்து நீக்கிடறாங்க. அப்புறம் எப்பவும் போல அவங்க ரெண்டு பேரும் விருந்து முடிஞ்சி உபசரிப்புக்கு நன்றின்னு சொல்லி விஷனுக்கு புரமோசன் குடுத்துட்டு போயிடறாங்க.
இதுதான் முதல் ரியாலிட்டி ஆல்ட்டர்.
அடுத்து ஒருமுறை ஒரு Bee Keeper வாண்டாவும் விஷனும் இருக்கும்போது டிரெய்னேஜ் வழியா மேல வர்றாரு. உடனே வாண்டா டக்குன்னு ஒரு ரியாலிட்டி ஆல்ட்டர் செய்யிறா. ஏன்னா அந்த மொத்த செட்டப்பும் (என்னதான் ரியாலிட்டியா இருந்தாலும் அது ஒரு செட்டப்தான். ஏன்னா அது) விஷனுக்காக.
விஷனோட டெட்பாடிய கடத்திட்டு வந்து, தன்னோட பாக்கெட் ரியாலிட்டியில உயிர் குடுத்து தன்னோட கணவன் எப்டியெல்லாம் இருக்கனும்னு ஆசைப்பட்டாளோ எப்டியெல்லாம் வாழனும்னு எதிர்பார்த்தாளோ அதே மாதிரி மாத்திக்கிறா. ஆனா வாண்டாவுக்கு ஒரு ரோபோட் எப்பிடி இயங்கும், விஷனோட உண்மையான சக்திகள் என்னென்னன்னு தெரியாது. அவ முன்னாடி இதுவரைக்கும் விஷன் வெளிக்காட்டின சக்திகள மட்டுமே வச்சி விஷனை உருவாக்கிருப்பா. ஆக இங்க இருக்கறது வாண்டாவோட விஷன். மேல மூனாவது பாரால சொன்ன மாதிரி விஷன் இது கிடையாது. அதனாலதான் மைண்ட் ஸ்டோன் இல்லாமக் கூட விஷனால உயிரோட வாழ முடிஞ்சிருக்கு. கூடவே விஷனுக்கு தன்னோட சகோதரன் பியட்ரோவோட சக்தியையும் கொடுத்திருப்பா.
இது எல்லாமே மேனுப்லேட் பண்றது வாண்டாதான்னாலும், அவளயும் ஒரு சக்தி மேனுப்லேட் பண்ணிட்டிருக்கு. அது எப்படியும் இந்த சீரிஸ் முடியறதுக்குள்ள நமக்குத் தெரிய வரும். ஆனா அதுக்கான க்ளூஸ் எல்லாத்தையும் மொத எபிசோட்ல இருந்தே ஆங்காங்கே தூவி விட்ருக்காங்க.
அது என்னென்ன?
ஆரம்பத்துலயே ஒரு பக்கத்து வீட்டுக் கேரக்ட்டர் என்ட்ரியாகும். Agnes. அவ மொத எபிசோட்ல இருந்தே குழந்தைங்களப் பத்தியே பேசிட்டிருப்பா. அந்த ஊர்ல உள்ள ஸ்கூல்ல குழந்தைகளுக்காகன்னு ஒரு பங்சன் நடக்கும். அதுல வாண்டாவும் விசனும் கலந்துக்குவாங்க. சரியா சொல்லப் போனா அந்த ஊர்ல ஸ்கூல் இருக்கும். அதுக்கான பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் அசோசியேசன் இருக்கும். ஆனா கொழந்தைங்களே இருக்காது. இந்த மாதிரி அவங்க ரெண்டு பேர்த்து மனசுலயும் கொழந்தைங்க கொழந்தைங்கன்னு சொல்லி சொல்லி அந்த ஆசைய அவங்க மனசுல அவங்களுக்கே தெரியாம விதைக்கிறாங்க. இதைத்தான் ஒரு எக்ஸ்டர்னல் ஃபோர்ஸ் அவளையும் மீறி அங்க இருக்குன்னு சொன்னேன்.
சரி அது ஏன் கொழந்தைங்க?
அப்டி ஒரு டவுட்டு வரணும்ல. கண்டிப்பா அதுக்கு ஒரு காரணமும் இருக்கும். காமிக்ஸ்ல வாண்டா விசனுக்கு நிறைய வில்லன்களும் நண்பர்களும் இருந்தாலும், மெயின் வில்லன் & வில்லி Agatha Harknes & Mephisto. ஆக, அது யாரா இருக்கும்னு இந்த சீரிஸ் பாத்துகிட்டிருக்கறவங்க கண்டிப்பா யூகிச்சிருப்பிங்க. அதுல ஒன்னு Agnes. இன்னொருத்தர் யார்னு இன்னும் யாரும் கண்டுபுடிக்க முடியாத மாதிரிதான் போயிட்டிருக்கு.
காமிக்ஸ்க்கும் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கும் நிறைய மாற்றங்கள் செய்யிற மாதிரி இதுல அந்த வில்லனை அப்படியே மாத்திக் கூட காட்ட வாய்ப்பிருக்கு. டாக்டர் ஸ்ட்ரேஞ்ல த ஏன்சியண்ட் ஒன்னை பெண்ணா மாத்தின மாதிரி, மெபிஸ்ட்டோவ பொண்ணா மாத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் நிச்சயமா இருக்கு. அது டாட்டியா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு.
ஏன்னா அந்த வில்லி / வில்லனுக்கு வாண்டா மூலமா பொறக்கப்போற ரெண்டு கொழந்தைங்களும் வேணும். அது ஏன் / எப்டி ரெண்டு? ஏன்னா வாண்டாவே ஆல்ரெடி ஒரு ட்வின்ஸ் தான். அதனால அத அவ மனசுல விதைக்கனும்னு அவசியமே இல்ல. அது ஆட்டோமேட்டிக்கா நடக்கும். ஆக ரெண்டு கொழந்தைங்க பொறக்கறாங்க.
இந்த எடத்துல வாண்டாவுக்கு பிரசவம் பாக்குறது மோனிகா ராம்போ. அவங்க யாருன்னா, கேப்டன் மார்வலோட தோழி மரியா ராம்போவோட பொண்ணு. ஆனா, மோனிகாவும் வெஸ்ட்வியூல உள்ள மத்தவங்க மாதிரி தான் யார்ன்னே தெரியாம தன்னோட பேரை மறந்து ஜெரால்டின்ங்கற பேர்ல வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்களையும் அறியாம ட்வின்ஸ்ங்கற பேச்சு அடிபட்டதும், ஆமால்ல உங்க சகோதரர் பியட்ரோ. அல்ட்ரான் கூட கொன்னுடுச்சேன்னதும், வந்துச்சு பாருங்க வாண்டாவுக்கு அந்த குட்டி சைஸ் மூக்குக்கு மேல கோவம்… சும்மா சொல்லக் கூடாதுங்க நம்ம கேப்டன் தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கன்னு வாய்லதான் சொன்னாரு. வாண்டா அத அப்டியே செஞ்சிட்டா… அப்டி மோனிகா வெஸ்ட்வியூ வெளிய வந்து விழும்போதுதான் அது ஒரு பாக்கெட் ரியாலிட்டிங்கறதே நமக்கு ரிவீலாகும்.
S.H.I.E.L.D உருவாக்கினது Peggy Carter, Howard Stark மற்றும் Hank Pym. அது ஹைட்ராவ அழிக்கிறதுக்காக தன்னையும் சேர்த்து அழிச்சிகிச்சு.
அதுக்கப்புறம் ஷீல்டோட பணிகளையெல்லாம் பாத்துக்கறது S.W.O.R.D. இதை உருவாக்கினது கேப்டன் மார்வல், மரியா ராம்போ மற்றும் நிக்
ப்யூரி. ஆமாம் நிக் ப்யூரிதான். ஸ்வார்ட் இருக்கற தைரியத்துலதான் ப்யூரி ஷீல்டை கொஞ்சம்கூட
யோசிக்காம அழிக்க முன்வந்தாரு. இதோட தலைமையகம் எங்க இருக்குன்னு யாருக்காவது ஞாபகமிருக்கா?
பரவால்ல, நானே சொல்லிடறேன். Spider-Man Far From Home-ல ஒரு எண்ட் கிரெடிட் சீன்ல பூமியில உள்ள நிக் ப்யூரி ஸ்க்ரல்லாவும், ஒரிஜினல் நிக் ப்யூரி ஒரு விண்வெளி ஓடத்துல மிதந்துகிட்டு அங்கிருந்து பூமியில உள்ள டூப் நிக் ப்யூரிக்கி இன்ஸ்ட்ரக்ஸன் கொடுக்கறதாகவும் காட்டிருப்பாங்களே. அந்த இடம்தான் ஸ்வார்டோட ஒரிஜினல் தலைமையகம். இப்போதைக்கி ஏஜண்ட் கோல்சன் மாதிரி இந்த வெஸ்ட்வியூ கேஸை பாத்துக்கற ஸ்வார்ட் ஏஜெண்ட் Jimmy Woo. இவர் Ant-man and the Wasp படத்துல ஹவுஸ் அரெஸ்ட்ல உள்ள ஸ்காட் லேங்கை வீட்டை விட்டு வெளிய போன தொரத்திப் புடிக்கிற அதிகாரியா வருவாரே அவரேதான்.
இனிவரும் காலங்கள்ல ஸ்வார்டுல A.I.M ஊடுறுவிட்டதாகவும் அத அழிச்சிட்டு வேற ஒன்னை உருவாக்கி அதை ஒரு ஃபோர்ஸாவும் காட்ட நிறைய வாய்ப்பிருக்கு. ஏன்னா எய்மோட எம்பளம் ஹெக்ஸாகன் ஷேப்லதான் இருக்கும். அதுகூட ஸ்வார்டுல உள்ள எல்லாமே ஹெக்ஸாகன் ஷேப்ல இருக்கறதுக்கான காரணமா இருக்க-லாம். இந்தப் பாரா மட்டும் லாம் தான். ஏன்னா எதுவும் உறுதியா சொல்றதுக்கில்ல.
ஈஸ்ட்வியூ எங்க போச்சு? வெஸ்ட் வியூன்னு ஒன்னு புதுசா ஏன் முளைச்சது? அங்க இருந்த மூவாயிரத்து சொச்சம் மக்களெல்லாம் என்ன ஆனாங்க? அந்த ஊருக்குள்ள போக விடாம ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் படலம் ஏன் தடுக்குது? இதையெல்லாம் கண்டுபுடிக்க சில அந்தந்த துறை சார்ந்த நாலஞ்சி பேரை ஸ்வார்டு நியமிக்கிது. அதுல ஒருத்தங்கதான் Dr. Darcy Lewis. இவங்களை ஆல்ரெடி நாம Thor மற்றும் Thor: The Dark World படங்கள்ல பார்த்திருப்போம். அதுல ஜேன் ஃபாஸ்டரோட ப்ரெண்டா வருவாங்க. ஞாபகமிருக்கா ப்ரெண்ட்ஸ்? நான் கூட மார்வெலால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அழகான நடிகைகள்னு ஒரு பதிவெழுதிருந்தனே அந்த அதே தேவதைதான் இந்த டாக்டர் டார்ஸி லூயிஸ்.
இந்த சீரிஸ் முழுக்க சிட்காம் மாதிரியும், பழைய சிட்காம் ரெபரென்ஸ்களும் வச்சிட்டேதான் இருக்காங்க. அதுல ஒன்னு முதல் எபிசோட்ல வந்த மிஸ்சஸ் ஹார்ட். அவங்க F.R.I.E.N.D.S சிட்காம்ல வந்த ஒரு நடிகை. அவங்க பேர் Debra Jo Rupp. அடுத்து டார்ஸியோட கணவர், Phil Jones. அவர் அப்டியே அச்சு அசல் F.R.I.E.N.D.S சிட்காம் நடிகர் டேவிட் ஸ்விம்மரின் டூப் மாதிரியே இருப்பார். அடுத்து டார்ஸியாக நடிச்சிருக்கற கேட் டென்னிங்ஸே ஒரு சிட்காம் நடிகைதான். அதுல ரொம்ப பேமஸானது 2 Broke Girls. டார்ஸி வந்துதான் இது ஒரு பாக்கெட் ரியாலிட்டி. அதுக்குள்ள இன்னதெல்லாம் நடந்துகிட்டிருக்குன்னு கண்டுபுடிக்கிறாங்க.
ஆனா, இந்த பாக்கெட் ரியாலிட்டிக்கி உள்ள நடக்கற விசயங்களையெல்லாம் சிட்காம் வடிவுல வெளிய ஒளிபரப்புறது யாரு? மத்த யாரையுமே உள்ள அனுமதிக்காத அந்த கண்ணுக்குத் தெரியாத சுவர் படலம், மோனிகா ராம்போவை மட்டும் எப்படி அனுமதிச்சது? உள்ள போன Bee Keeper என்ன ஆனாரு? யாரந்த எக்ஸ்டர்னல் ஃபோர்ஸ் அப்டிங்கறத இனிவரும் எபிசோடுகள்ல பாக்க நானும் உங்கள மாதிரியே படு ஆவலா இருக்கேன்.
அதேமாதிரி இன்னொரு விசயம். அபிசியலா எக்ஸ்-மென்ல உள்ள மியூட்டன்ஸ் இந்த சீரிஸ் மூலமா மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்கு உள்ள வந்தாச்சு. அது இன்னிக்கி வந்த அஞ்சாவது எபிசோட் கிளைமாக்ஸ் பார்த்தவங்களுக்குப் புரியும். ஆரோன் டெய்லரா இல்லாம எவான் பீட்டர்ஸ் வந்ததுதான் ஹைலைட்டே!
சீரிஸ் முடியட்டும் வரேன்.

No comments:
Post a Comment