Tuesday, September 23, 2025

கோப்ரா - விமர்சனம்



காலைலயே கோப்ரா படம் பாக்கனும்ங்கற ஃபீல் அதிகமா இருந்தது. ஆனா அது டிக்கெட் புக் பண்றதுக்குள்ள பாத்தே ஆகனும்ங்கற வரைக்கும் அதிகரிச்சிட்டே இருந்தது. ஒரு ஒன்பது மணிக்கு மேல ரிவ்யூஸ் வரவும், போய்த்தான் ஆகனுமான்னு மாறிடுச்சி. ஆனாலும் மனசுக்குள்ள எதையும் பாத்துட்டு முடிவு பண்ணனும்னு ஒரு உள்ளுணர்வு. சரி. ஓகே. சியானுக்காக இந்த ரேப்ப நா அட்டன் பண்றேன்னு கெளம்பிட்டேன். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, கமான் கில் மீன்னு தியேட்டர்ல போய் உக்காந்தாச்சு. இதுல படத்தோட லென்த்த பத்தின கமெண்டெல்லாம் பாத்து கொஞ்சம் டர்ராகித்தான் இருந்தேன். படம் ஆரம்பிச்சி சரியா ஒரு மணி நேரம். டிரெய்லர்ல காட்டின எல்லா சீன்ஸும் முடிஞ்சிருச்சி. இதுக்கு மேல என்னடா இருக்கப் போகுதுன்னு பாத்தா, அதுக்கப்புறம்தான் கதையே ஆரம்பிக்கிது.

அப்டி ஒரு மணி நேரம் கழிச்சி ஆரம்பிச்ச கதையைத்தான் இவங்க சோசியல் மீடியால லேக், இழுவை, வேற லெவல் மொக்கை, தேவையில்லாத லவ் போர்சன், தேவையில்லாத ரிப்பீட்டட் ஹாலூசினேசன் சீன்ஸ், எடிட்டிங் சொதப்பல்னு இங்க வாந்தி எடுத்து வச்சிருக்காங்க. இதுல ஒரு நண்பர், ரெண்டு சீன்ல வர்ற உனக்கு எதுக்கு ஆக்ட்டிங் ட்ரெய்னிங்ன்னெல்லாம் மிர்னாளினிய ட்ரோல் பண்ணி இருந்தாரு. ஆண்புள்ள நண்பரே படத்தை உண்மையிலுமே பார்த்துட்டு தான் எழுதினீங்களா? ஏன்னா அந்தப் புள்ள படத்துல இண்டர்வெல்லுக்கப்புறம் வர்ற பாட்டுல இருந்து செகண்ட் ஆப்ல ஆல்மோஸ்ட் ஸ்கிரீன் ஸ்பேஸ்ல இருந்தது.
***Complete Spoiler*** படம் பாக்காதவங்க இதுக்கு மேல படிக்க வேணாம்.
ஓகே. அந்த இரண்டு மணி நேரக் கதைதான் படத்துல இருந்த உருப்படியான விசயமே. அதுக்கான அடித்தளம்தான், முதல் ஒரு மணிநேரம். ஆளவந்தான் மாதிரி ஒரு கான்செப்ட். ஆனா அதுல யார் நல்லவன் யார் கெட்டவன்னு கடைசிவரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருந்துகிட்டே இருக்கும். உண்மையில நடந்ததென்னங்கற ஒரு சஸ்பென்ஸ். அது என்னன்னு ஒரு மாதிரியா தெரியறப்ப, ஓகே இந்த கேரக்ட்டர் இப்படித்தான் பண்ணும். அதனாலதான், முதல் ஒரு மணி நேரம் அந்தக் கொலைகளையெல்லாம் பண்ணுச்சி அப்டின்னு புரிய வரும். படத்துல வில்லனா காட்டப்படுற கார்ப்பரேட் வில்லன், ஒரு மாதிரி கத்தி வில்லனையே இன்னும் கொஞ்சம் அரகண்டா காட்ட ட்ரை பண்ணி சீரியஸா அது ஒர்க்கவுட்டகலேங்கறது உண்மைதான். ஆனா, அந்தக் கேரக்ட்டரோட பர்ப்பஸ்ன்னு ஒன்னு இந்தக் கதையில இருக்கு. அதுக்காக அந்தக் கேரக்ட்டர் தேவைதான். அப்பத்தான் கதையில அங்கங்க ஹீரோவுக்கு அடுத்த லெவல் போக வேண்டிய தேவை ஏற்படுது. சோ, வில்லன்ங்கறவன் எவ்ளோ சரியா எழுதப்படாத கதாபாத்திரமா இருந்தாலும், ஹீரோவோட வெற்றிக்கு அவன் மட்டும்தான் காரணம்.
அடுத்ததா ஹீரோயின். இதவுட அழகா ஒரு ஹீரோயின நா எங்க போய்த் தேடுவேன். சாரி, வர்ணிக்க வார்த்தைகள எங்க போய் நான் தேடுவேன். செம அழகு. செமயா நடிச்சாங்களான்னெல்லாம் கேட்டு தர்ம சங்கடப் படுத்தாதிங்க. ஹீரோ பேஸ்டு மூவியில, எங்க ஹீரோயினுக்கு பெருசா ஸ்பேஸ் குடுக்கறாங்க. ரெண்டு பாட்டு வேணா குடுத்தாங்க. அதுலயும் நம்ம ஃபுல் ஃபோகஸ் குமுதா மேலதான். மத்தபடி, தமிழ் சினிமா வழக்கப்படி, ஹீரோயின் எண்ட்ரின்னா, மார் குலுங்க ஓடி வரணும், படம் முழுக்க ஹீரோ வேணாம் வேணாம்பாரு அப்றம், மூக்கொழுகனும். யேய்யா, இதென்ன ஹீரோயினுக்கான டெம்ப்ளேட்டா? எப்பந்தான்யா திருந்துவீங்க?
அடுத்து ஹீரோயின் நம்பர் 3. (செகண்ட் ஹீரோயின் தான் மிர்னாளினி) மீனாக்ஷி கோவிந்தராஜ். அதான் பேருன்னு நினைக்கிறேன். படம் முழுக்க இண்டர்போல் ஆபீசர்கூட ட்ராவல் பண்ற, மேத்ஸ் ஸ்டூடண்ட். படத்தோட முதல் பாதியில நடந்த ரெண்டு கொலைகள, ”இப்டித்தான் நடந்திருக்கும்”னு படம் போட்டு பாகம் குறிச்சி, கலர் ப்ரிண்டவுட் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் போட்டு, இண்டர்போலுக்கு அனுப்பி வக்கிற ஒரு ஷ்பெசல் கேரக்ட்டர். ஆனா, எனக்கென்னமோ, இர்ஃபான் பதான காப்பாத்த வந்த சேவியர் மாதிரி தான் தோனிச்சு. யேன்னா, விவேகம் விவேக் ஒபராய் வேலைய இர்ஃபான் பதான் செஞ்சிறக் கூடாதுன்னு, ரொம்ப பர்ப்பஸா, இந்த கேரக்ட்டர உள்ள நொழச்சிருக்காரு டைரக்ட்டர். ஆனா, சில இடங்கள்ல ரசிக்கும்படியாவும் இருந்திச்சி.
அடுத்து இர்ஃபான் பதான். யார்றா அவன், வந்ததுக்கு ஒரு பவுலிங்காச்சும் போட்டுட்டு போங்கோன்னு மீம் போட்றது? பிச்சிருவேன் பிச்சு. படத்துல நல்லா ஸ்பேஸ் குடுக்கற மாதிரியே கொண்டு போய், கடைசியில ஒரு இண்டர்போல் ஆபிசர, லோக்கல் போலிஸ்கிட்ட கெஞ்ச வுட்டானுக. கொடூரம். ஆனா, ஆள் செம ஸ்மார்ட்டா இருக்காருங்க.
படத்துல விக்ரம்க்கு ஒரு செம சீன் இருக்கு. இதுவரைக்கும் விக்ரமோட நடிப்புல டக்குன்னு ஞாபகத்துக்கு வர்றது, அந்நியன் கிளைமாக்ஸ் ட்ரான்ஸ்பர்மேசன் சீன் தான். ஆனா, இதுல கிட்டத்தட்ட நாலஞ்சி கேரக்ட்டரோட இமிட்டேசன், அதுவும் அந்தந்த நடிகர்களோட சேம் டைமிங்ல, அதுவும் சேம் சின்க்ல. ப்பா மெரண்டுட்டேன். டிக்கெட்டுக்கு குடுத்த காசுக்கு உண்மையிலயே வொர்த்தான சீன். அதுக்கே சரியா போச்சு.
அடுத்து இசை டிபார்ட்மெண்ட். உயிர் உருகுதேவும், இதர காட்சிகள்ல பின்னணி இசையும், செமயா இருக்கு. ஆதிரா பாட்டு மட்டும், சிங்கிள்ஸ் ரிலீஸான நாள்ல இருந்தே வேற எங்கயோ கேட்ட மாதிரியே ஃபீலாகிட்டிருக்கு. மத்தபடி, தும்பித் துள்ளலும், தரங்கிணியும் செமன்னு சொல்லனும்ன்னா அதுக்கு ஸ்ரீநிதி மட்டுமே காரணம்.
படம் ரொம்ப மொக்கை, வேற லெவல் மொக்கை, ம்பிருச்சி போன்ற மிகைப்படுத்தப்பட்ட கமெண்டுகளெல்லாம், ஏன் வருதுன்னு தெரியல. ஆனா, படம் பார்த்திருந்தா கண்டிப்பா வந்திருக்காது. கண்டிப்பா பாக்கலாம் லெவல் படம்தான். விக்ரம்க்கு இதுவும் வொர்த்தான படம்தான். எட்டு கெட்டப் போட்டு நடிக்கும்போது அவருக்கு கஷ்டமாவும், நமக்கு எரிச்சலாவும் இருந்ததென்னமோ உண்மைதான். ஆனா அது மட்டுமே கோப்ரா படம் இல்லை. படம் பாருங்க உங்களுக்கே புரியும்.

No comments:

Post a Comment