Dexter: Resurrection
அப்டின்னு ஒரு வெப்-சீரிஸ். இதுக்கு முன்னாடி முதல் எட்டு சீசன்கள், 2006ல இருந்து 2013 வரைக்கும் டெலிவிசன் சீரிஸா வந்து செமயா ஹிட்டடிச்சது. அப்பவே இதுக்கு ரசிகர்கள் அதிகம். இதுக்கு இப்பவும் நிறைய வரவேற்பு கிடைக்கறதப் பாத்துட்டு, 2021ல டெக்ஸ்டர் நியூ ப்ளட்னு ஒரு மினி வெப்-சீரிஸ எடுத்து ரிலீஸ் பண்ணாங்க. அதுவும் ஹிட்டு. ஏன்னா அந்த கேரக்ட்டர் அப்டி.
நாம இதுவரைக்கும் சைக்கோ கொலைகாரர்கள வில்லனாத்தான் பாத்திருக்கோம். ஹீரோவா காட்டின படங்களும் உண்டு. உதாரணம்: நான் மகான் அல்ல விஸ்வனாத், இந்தியன்ல சேனாபதி கமல், அந்நியன்ல அம்பி அந்நியனா மாறி செய்யிற கொலைகள், திருப்பாச்சில சிவகிரின்னு இது எல்லாமே இந்த வகையில செய்யிற கொலைகள்தான். அதாவது, கெட்டவங்கள தேடிப் புடிச்சு கொலை செய்யிறது. நாம அவங்கள எல்லாம் வில்லன்களாவா பாக்கறோம். ஒரு ஹீரோவா ஏத்துக்குறோமே, ஏன்னு யோசிச்சிருக்கீங்களா?
ஏன்னா, ஒரு உயிர எடுக்கற உரிமை சட்டத்துக்கு மட்டுமே உண்டு. அந்த சட்டத்த கையில எடுத்துகிட்டு கெட்டவங்களத் தேடித் தேடிக் கொல்லுற கேரக்ட்டர்ஸ்தான் இவங்க எல்லாருமே. ஆனா, அவங்கள சைக்கோங்கற வரையறைல கொண்டுவராம, பர்ப்பஸாவே ஹீரோவா போர்ட்ரே பண்ணிருப்பாங்க.
ஆனா டெக்ஸ்டர்ல, அப்டி நல்லவனா போர்ட்ரே பண்ணாம, நேரடியாவே அவன, கொடூரக் கொலைகாரனாத்தான் காட்டிருப்பாங்க. ஆனா, அந்தக் கொடூரக் காட்சிகளயெல்லாம் கழிச்சிட்டுப் பாத்தா, நான் மேல சொன்ன ஹீரோக்கள் மாதிரிதான் இருக்கும். ஏன்னா டெக்ஸ்ட்டரும் அப்பாவி மக்கள எதுவும் கொல்றதில்ல. கெட்டவங்களா தேடிப் புடிச்சு கொடூரமா கொலை செய்யிறவன். இத்தனைக்கும் அவன், மியாமில போலிஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்யிற ஒரு ஃபாரன்சிக் ஆளு. பிளட் ஸ்பேட்டர் அனாலசிஸ்ட். போலிஸ்ல இருக்கற மத்தவங்க எல்லாரையும் விட, யார் இந்தக் கொலைய செஞ்சிருப்பான்னு இவனால ஈஸியா கண்டுபுடிக்க முடியும். அத வச்சு அவங்களத் தேடிப் போய் கொல்றது இன்னும் ஈஸிதான?
இதுக்கு முன்னாடி வரைக்கும் மியாமில இவன் பண்ண கொலைகள் எல்லாம் ’பே ஹார்பர் புச்சர்’ங்கற பேர்ல ரொம்ப பாப்புலர். ஆனா முதல் எட்டு சீசனோட முடிவுலயே, மியாமில இருந்து ஓடிப் போய், புது எடம், புது ஐடண்டிட்டி, புது வேலைன்னு கோஸ்ட்டா மாறிருப்பான். போன நியூ பிளட் சீரிஸ் முடிவுல, அங்க இருந்தவனயும், இவன் மகன் கையாலயே சுட வச்சு, செத்துட்டான்னு கதைய முடிச்சிருப்பாங்க. இப்ப வந்திருக்கற ரீசரக்சன் சீரிஸ்ல, அதுல இருந்து பொழச்சி உயிரோட நியூயார்க் வந்து வாழ்ந்துகிட்டிருப்பான். எங்க போனாலும், கொலை செய்யனும்ங்கற உந்துதல் இருந்துகிட்டே தான இருக்கும். எங்க போனாலும் அவன் ஒரு சைக்கோ தான.
இங்க மட்டும் கெட்டவங்கன்னு யாரும் இல்லாமலா போயிடப் போறாங்கன்னு பாத்தா, இங்க இவனுக்கு, நான் பட விஜய் ஆண்டனி மாதிரி இன்னொரு சைக்கோ கொலைகாரனோட ஐடெண்டிட்டியே கிடைக்குது. அவனக் கொன்னுட்டு, அந்த புது ஐடில இருந்தவனுக்கு பல்க்கா கொலை செய்யத் தீனி போடுற மாதிரி, சைக்கோ கொலைகார்ர்களோட மீட்டப்புக்கு அழைப்பு வருது. அந்த புது ஐடெண்டிட்டிய கவரப்பா வச்சே, அந்த மீட்டுக்கு வந்த சைக்கோக்கள லிஸ்ட்டு போட்டு ஒருத்தொருத்தனா தூக்கறான்.
முதல் கொலையா, ஒரு டாட்டூ கொலைகாரன கொல்றப்ப, அவனும் இவன இந்தப் புது ஐடெண்டி கொலைகாரன் தான, இவன் அவ்ளோ பயங்கரமானவனெல்லாம் இல்லன்னு சாகும் போது கூட இவன சப்பையா லெஃப்ட் ஹேண்ட்லதான் டீல் பண்ணி பேசிட்டிருப்பான். ஆனா, அப்ப டெக்ஸ்டர் சொல்லுவான், நா ரெட் இல்ல, எம் பேரு டெக்ஸ்டர் மார்கன், த பே ஹார்பர் புச்சர் அப்டின்னு சொன்னதும் அந்த டாட்டூ கொலைகாரன் ஷாக்காகற சீன் அப்டியே டிட்டோ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு. பாட்சா, மாணிக் பாட்சான்னு ரஜினி சொல்ற அதே சீன். ஆனா அயர்னி இந்த சீன் உங்களுக்கு அதே கூஸ்பம்ப்ஸ் எஃபெக்ட் கெடைக்கனும்ன்னா, நீங்களும், முதல்ல வந்த ஒன்பது சீசனையும் பார்த்திருக்கனும்.
கதை எழுதினவங்களும், நெறய ஃபேன்ஸ் இருக்காங்க, இன்னொரு சீசன் எடுத்தே ஆகணும், சீசன்ல நாலஞ்சு பேர்த்த டெக்ஸ்டர் கொன்னா போதும்னு ஏனோதானோன்னு ஃபேன்பாய் சீரிஸா எடுக்காம, முன்ன வந்த சீசன்கள்ல அப்பப்ப நம்ம பொறுமைய சோதிக்கற மாதிரி, டெக்ஸ்டர் மாட்டிக்கிறாப்ல கதை போகும். அது அங்கங்க. ஆனா இந்த ரீசரக்ஸன்ல முழுக்கவே இவன் என்ன செஞ்சாலும் சிக்கிக்குவான்கற செக்-மேட் சீன்ஸ்லதான் மொத்தக் கதையுமே நெய்ல் பைட்டிங் பிங்கே வாட்ச்சிங்கா போகும்.
அதுலயும் டிடெக்ட்டிவ் வாலேஸ்னு ஒரு போலிஸ் இருப்பாங்க. சிம்பிளா அவன் எதயெத வச்சு, எங்க எங்க நின்னு எப்டியெப்டி கொலை பண்ணிருப்பான்னு புட்டுப் புட்டு வப்பாங்க. அதையெல்லாம் மீறி அந்த போலிஸ் தியரிய ஒடச்சாத்தான் இவன் வெளியவே நடமாட முடியும்ங்கறளவுக்கு கிரிப்பிங்கான பத்து எபிசோட்ஸ்.
அமேசான் பிரைம்ல இருக்கு. ஒன்லி இங்கிலிஷ்தான். டெக்ஸ்டரப் பொறுத்தவரைக்கும் கதையோட நேட்டிவ் லாங்குவேஜ்ல பாக்குறதான் சிறப்பு. பார்த்துட்டு வாங்க. பேசலாம். அப்புறம் நான் ஒரு அதி தீவிர டெக்ஸ்டர் விசிறிங்கறத இங்கயும் பதிவு பண்ணிக்கிறேன்.

No comments:
Post a Comment