Tuesday, September 23, 2025

The Conjuring: Last Rites (2025) - ஹாரர்

 


The Conjuring: Last Rites
அப்டின்னு ஒரு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான பேய்ப்பட வரிசையில நாலாவது படம். இதுவே கடைசிப் படமும் கூட. பேய்ல என்னய்யா ’உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான’? பேய்ங்கறதே ‘கப்சா’ – மூட நம்பிக்கை. இதுல எப்டி, இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில எடுத்திருக்க முடியும்னு இந்த நாலாவது – கடைசிப் படம் வந்துட்ட சமயத்துலயும், இந்தக் கேள்விகள் நம்ம மனசுல வராம இல்ல.
இந்தப் படங்களோட மெயின் லீட் கதாபாத்திரங்களான எட் அண்ட் லோரைன் தம்பதிகள், நிஜத்துல வாழ்ந்தவங்கதான். அவங்களோட நிஜ வாழ்க்கையில அவங்க அட்டன் பண்ண சில பாராநார்மல் சம்பவங்கள அடிப்படையா வச்சு, எழுதப்பட்டு எடுக்கப்பட்ட படங்கள்தான் இந்த காஞ்சூரிங் படங்கள்.
என்னதான் உண்மைச் சம்பவங்கள்ன்னாலும், அது திரைக்கதை வடிவமா சினிமாவுக்கு மாறும்போது அதோட வடிவம் பெரும்பாலும் புனைவுக்குள்ள போயிடும். அதனால, இதுல வந்த அதிகப்படியான சம்பவங்கள் சுவாரஸ்யங்களுக்காக திரித்து எழுதப்பட்ட கற்பனைகளே. முழுப்படமும் இல்ல.
உதாரணத்துக்கு, இந்த மாதிரி அமானுஷ்ய நிகழ்வுகள் ஒரு குடும்பத்துல நடக்குதுன்னே வச்சிக்குவோம். அது அப்ப நியூஸா மாறும்போதே அப்ப இருந்த பேப்பர் மீடியாக்கள்ல எழுதினப்பவே, நிறைய கட்டுக்கதைகள் அவங்கவங்க கற்பனைக்கேத்த மாதிரி, ஒரு வடிவம் எடுக்கும். அந்த வதந்திகளுக்கு, ஜடை பின்னி, பவுடரடிச்சு, பொட்டு-குங்குமமெல்லாம் வச்சு அழகா ட்ரெஸ் பண்ணி அவங்கவங்க பேப்பர் சர்க்குலேசனை ஏத்திக்குவாங்க. இதனால அந்த வதந்தியே, சில வருசங்கள் கழிச்சிப் படிக்கிறவங்க, அதை உண்மைன்னு தான் எடுத்துக்குவாங்க. இப்ப அதெல்லாம் நடந்த காலகட்டத்துக்கும், இதைப் படங்களாப் பாக்குற, நமக்குமே பல டெகேட் வித்தியாசம். நாம, இதுல எதெல்லாம் உண்மைன்னு அலசி ஆராய்ஞ்சிட்டா இருக்க முடியும்?
ஒரு படம் பாக்குறோம். ரசிக்கிறோம். பிடிச்சா சில-பல முறைகள் ரீவாட்ச் பண்றோம். மேக்சிமம் அதைப்பத்தி இப்டி எழுதிட்டோ, நண்பர்களோட பேசிட்டோ இருக்கப் போறோம். அவ்வளவுதான்.
சரி இதுவே ஒரு காமெடிப் படத்தை ஏன் விரும்பிப் பாக்குறோம்?
பாத்துட்டு சிரிக்கத்தான். அது மனசாரன்னாலும் சரி. வம்படியா வலிஞ்சு திணிக்கப்பட்ட காமெடிகள்ன்னாலும் சரி. பாக்குறோம் – சிரிக்கிறோம். நமக்கு காமெடிப் படம் - நாம சிரிக்கறதுக்காக மட்டுமே. இதோட இன்னொரு சைடுல, நாம காமெடிப்படங்களைப் பாக்காம, தனியா சிரிச்சிகிட்டிருந்தா பாக்கறவங்க நம்மள பைத்தியம்னு நினைக்க மாட்டாங்களா? இதுக்காகத்தான் காமெடிப்படங்கள் எடுக்கப்படுது. மத்தபடி அதுல உள்ள வியாபாரம் கலெக்சனெல்லாம் நமக்குத் தேவையில்லாதது.
ஆக்சன் படங்களுக்கும் இதே தியரிதான். நாம பப்ளிக்கா பத்து நூறு பேர்கூட சண்டை போட்டுகிட்டிருக்க முடியாது. அது நியூசன்ஸ் அண்ட் வயலன்ஸும் கூட. அதனால ஆக்சன் படங்கள் அதுக்கான வடிகால். ஆக்சன் படங்களைப் பார்க்குறோம். அப்டியே பல பேர்த்த அடிச்சி தொம்சம் பண்ணிட்ட மாதிரி ஃபீலாகறோம் அல்லது ஆர்கசம் அடைஞ்சிக்கறோம்.
இதேதான், பேய்ப்படங்களுக்கும். பின்ன நாமயெல்லாம் என்ன, பெரிய தைரியசாலிகள்னு நிரூபிக்கறதுக்காகவா பேய்ப்படங்களுக்குப் போறோம்? மனுசனாப் பொறந்தா, குயிக் ரிஃப்ளெக்ஸ்ங்கறது இருந்தே தீரும். அதாவது அனிச்சை செயல். இதுக்கும் பேய்ப்படங்களுக்கும் என்ன சம்பந்தம்ன்னா கேக்கறீங்க? சொல்றேன். அனிச்சை செயல்ன்னா என்ன? எதாவது நமக்கு ஆபத்துன்னா நாம எந்த வேலை செஞ்சுகிட்டிருந்தாலும், டக்குன்னு நமக்கு வர்ற ஆபத்துல இருந்து தப்பிக்க எதாவது செய்வோம்ல, அதேதான். அது நமக்கு உள்ள, பொறந்ததுல இருந்தே, பல வலி உணர்வுகளால, நம்ம மூளையில பதியிற ஒரு எச்சரிக்கை அண்ட் பய உணர்வுனாலதான். அதனாலதான், யாராவது முகத்துல குத்த வந்தா குனியிறோம். இன்னும் சிம்பிளா சொல்லப் போனா, ரோட்டை கிராஸ் பண்ண, ரெண்டு பக்கமும் வண்டி வருதான்னு பார்த்துட்டு, ரோட்டைக் கிராஸ் பண்றோம்.
இது எல்லாமே நமக்குள்ள இருக்கற பய உணர்வுகளாலதான். அதோட மேக்சிம் வர்சனை ஒரு ரோலோ கோஸ்ட்டர் ரைடு மாதிரி அனுபவிக்கறதுக்காகத்தான் பேய்ப்படங்களை விரும்பிப் பாக்கறோம். தவிர நான் எதுக்கும் பயப்பட மாட்டேன்னு நிரூபிக்கறதுக்காக இல்ல. நல்லா பயமுறுத்திருந்தாங்கன்னா நல்ல பேய்ப்படம். இல்லன்னா அது மொக்கைப் படம் அவ்வளவுதான் ஸ்கேல்.
இதுல நமக்கு லைஃப்பே நிறைய ரோலோகோஸ்ட்டர் ரைடுகளக் கொடுத்து, பெரும்பாலும் அந்த பயமெல்லாம் மழுங்கிடுச்சு. அதனால நம்மள எல்லாம் பயமுறுத்தனும்ன்னா, நிறைய யோசிச்சிப் படம் எடுத்து ரிலீஸ் பண்ணாத்தான் உண்டு.
எனக்கு இந்த காஞ்சூரிங் சீரிஸ்ல ரெண்டாவது பார்ட் மட்டும்தான் ரொம்பப் புடிச்சது. தேர்டு பார்ட் அவ்வளவா புடிக்கல. ஆனா, இந்த நாலாவது பார்ட்?
இது, எட் அண்ட் லோரைன் அல்லது வாரன் தம்பிதிகள் கடைசியா அட்டன் பண்ண ‘பாரானார்மல் ரிசர்ச்’ கேஸ். இதுல அவங்க இதுக்கு முன்னாடியெல்லாம் அட்டன் பண்ண கேஸுகள்ல ஃபேஸ் பண்ணது, ஒரு சமயத்துல ஒன்னோ ரெண்டோ பேய்ங்களைத்தான். ஆனா, இந்த கேஸ்ல இது அவங்களை பல வருசமா ஃபாலோ பண்ணி, ‘வாடி மாப்ள, கேட்டுக்குள்ள வா’ன்னு ஒரு வீட்டுல ஒரு ஃபேமிலிய டார்ச்சர் பண்ணி, வாரன் கப்புள்ஸ் வரட்டும்னு காத்துகிட்டிருந்திருக்கு. ஒன்னில்ல, ரெண்டில்ல. நிறைய பேய்கள். அதுல ஒரு சாத்தானும் அடக்கம். அதுதான் பல வருசமா இதெல்லாம் ஆர்கனைஸ் பண்ணிட்டிருந்திருக்கு.
நீ கண்டினியூசா என்ர பொழப்பக் கெடுத்துக்கிருக்க. சரி வா, நான் உன்ர பொழப்பக் கெடுக்கறேன்னு அந்த சாத்தான், தன்னோட உச்சபட்ச எஃபோர்ட்டெல்லாம் போட்ருந்திருக்கு. அதுலயும் நிறை மாச கர்ப்பமா, லோரைன் ஒரு கேஸ் அட்டன் பண்ணிட்டிருந்தப்ப, அங்க ஒரு ஆளுயர (அத ஆளுயரன்னு சொல்றத விட, அதுக்கும் மேல உயரம்ன்னே சொல்லலாம்) நிலைக்கண்ணாடில ஒளிஞ்சுகிட்டிருந்த சாத்தான், டக்குன்னு ஒரு ஃப்ளாஸ் அடிச்சிருக்கு. லோரைனுக்குத்தான், இதெல்லாம் உணரக்கூடிய தன்மை இருக்கில்ல. (அதை சக்தின்னு சொன்னா அப்புறம் சூப்பர் வுமனாகிருவாங்க. அந்த மாதிரி அவங்க எங்கயும் சொல்லிக்கல. படங்கள்லயும் அப்டி எதுவும் காட்டியிருக்கல. சோ, அது அவங்க தன்மைன்னே வச்சுக்கலாம்.) அதை வச்சு, அவங்க இது ஒரு துஷ்ட்ட சக்தியோட வேலைன்னு ஃபீல் பண்ணிடறாங்க. அதுவும், வயித்துல இருந்த பாப்பா வரைக்கும் அப்புறம் அவங்க ஃப்யூச்சர் எல்லாம், ஒரு குயிக் கிளான்ஸ் விஷனா வந்துட்டுப் போகுது.
அப்டி அவங்க கண்ணாடியத் தொட்ட எடம், லைட்டா கிராக் வுட்டுதான் இந்த விஷனெல்லாம் வரும். அதுக்கப்புறம் கதை பல வருசம் தாண்டி அந்தப் பாப்பா பொறந்து ஜூடின்னு பேரு வச்சு, அது வளந்து கல்யாண வயசுல பாய் ஃப்ரெண்டோட சுத்துன வரைக்கும் அந்த சாத்தான் வெய்ட் பண்ணிக்கிருந்திருக்கு, நம்ம நல்ல உள்ளம் கொண்ட வோல்டமோர்ட் மாதிரி. ஆமாங்க. அவருதான் ஹாரிபாட்டர் ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்னு அவன் ஒவ்வொரு வருசமும் படிச்சி எக்ஸாம் எழுதி முடிக்கிற வரைக்கும் வெய்ட் பண்ணி, அதுக்கப்புறமா வந்து ஹாரி பாட்டர அட்டாக் பண்ணி, அட்டாக் பண்ணி, அவன் கையால மூக்குல குத்து வாங்கி, குத்து வாங்கிதான் அவன் மூக்கு சப்பையா இருக்கறதே. அப்படிப் பாத்தா, வோல்டமோர்ட் நல்ல உள்ளம் கொண்டவன்னு சொல்றதுதான மொற?
அந்த வகையில, இந்த சாத்தான், ரெண்டரை டெக்கேட்ஸ் வெய்ட் பண்ணி, லோரைன் பொண்ணு, ஜூடிக்கு கல்யாணம் நிச்சயமானதுக்கப்புறமா, அங்க வர வச்சு, அந்தக் கண்ணாடியில கிராக் விழுந்த எடத்தத் தொட வச்சு, இதுக்கு முன்னாடி அவங்கம்மா, லோரைன் தொட்டதால விழுந்த கிராக்னு விஷன் காட்டி – ஒரே செம கனெக்ட்டிவிட்டி சீன் போங்க.
இதுல இன்னொரு செம சீன் இருக்கு. அது அம்பி, நந்தினியோட பேரண்ட்ஸ்கிட்ட, தான் நந்தினிக்கி லவ் லெட்டர் கொடுக்கப் போறேன்னு அவங்க கால்ல வுழுந்து பிளெஸ்ஸிங்ஸ் வாங்குவானே, அதே மாதிரி ஒரு சீன் இதுலயும். ஆனா, ரொம்ப கேசுவலா அந்த சீன் புரப்போசலா, மாறி செமயா வொர்க்கவுட்டான சீன்.
மத்தபடி படம் இதுக்கு முன்னாடி வந்த மூனு பாகங்கள விட சில செண்டிமெண்ட்ஸ் எல்லாம் நல்லா வொர்க்கவுட்டகிருக்குன்னு தான் சொல்லனும். ஆனா, அது காஞ்சூரிங் படங்களோட ரசிகர்களுக்கானது. உங்களுக்கும் வொர்க்கவுட்டாகும்னு சொல்ல முடியாது.
செப்பரேட்டா ஒரு இண்டிவிஜுவல் படமா ஃபீல் பண்ணிக் கூட பார்க்கலாம். நிச்சயமா, இதுக்கெல்லாம் ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் தான் பெட்டர். பார்க்கலாம். பார்த்துட்டு வாங்க.

No comments:

Post a Comment