Noise
அப்டின்னு ஒரு ஹன்வென் பேய்ப்படம். ’ஹன்வென்’ அப்டின்னா சைனீஸ்ல, கொரிய மொழின்னு அர்த்தம். உனக்கெப்டிடா சைனீஸெல்லாம் தெரியுமான்னா, தெரியும் - கத்துகிட்டிருக்கேன். இன்னும் பேய்ப்படம்ன்னு சொல்ல சைனீஸ்ல என்னன்னு தெரியாது. தெரிஞ்சதும் அதையும் சொல்றேன்.
இது ஒரு ஹீரோயின் லீட் ஸ்டோரி. கதைப்படி ஹீரோயினும் தங்கச்சியும் வசிக்கிற 604ங்கற அபார்ட்மெண்ட்ல இருந்து தங்கச்சி மட்டும் மிஸ்ஸிங். அவ வீட்டைவிட்டு வெளிய போனதுக்கு சிசிடிவி ஆதாரம் உண்டு. ஆனா அவ அந்த காம்பவுண்ட விட்டு வெளிய போகல. இதுல இன்னொரு பிரச்சினையும் இருக்கு இந்த சகோதரிகளுக்கு. ஒருத்திக்கு கால் ஊனம். சித்தி சீரியல்ல எம்.ஆர்.வாசு நடக்கற மாதிரிதான் நடப்பா. அக்காதான் ஹீரோயின். அவளுக்கு காது கேக்காது. இது ரெண்டுமே ஒரு ஆக்சிடெண்ட்ல ஆனது. அதே ஆக்சிடெண்ட்ல தான் இவங்க பெத்தவங்களும் இறந்தது. இதெல்லாம் இவங்க ஸ்கூல் படிக்கிறப்ப நடந்தது. இப்ப அக்கா வேலைக்குப் போறாங்க ஒரு இண்டஸ்ட்ரியில. அதுலயும் இவங்க டெஃப்ங்கற ஒரே காரணத்தாலயே வேலை கிடைச்சிருக்கும். ஏன்னா, அந்த கம்பெனியில வேலை செய்யனும்ன்னா காதுல ஹெட்ஃபோன் மாட்டிகிட்டுத்தான் வேலை பாக்க முடியும். நம்ம ஹீரோயினைப் பொறுத்தவரை ஹியரிங் எய்ட கழட்டினாலே போதும்ல. அதனால.
அடுத்து படத்துல மெயின் பிரச்சினை ஹீரோயினோட தங்கச்சி மிஸ்ஸான விசயமில்ல. அதையும் தாண்டி ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கு. அவங்க வசிக்கிற 604க்குக் கீழ் வரிசைல 504ல இருந்து தெனம் வந்து காலிங்பெல் அடிச்சி, ரொம்ப நாய்ஸ் பொல்யூசன் பண்ணாதிங்க. கீழ குடியிருக்க முடியலன்னு பொறுமையா சொல்லிட்டுப் போவான். இன்னும் ஹைலைட் பண்ணிச் சொல்லனும்ன்னா, பொறுமையா மெரட்டிட்டுப் போவான், ‘இன்னொருவாட்டி இப்டி கத்திட்டிருந்திங்கன்னா, அப்புறம் நான் உங்க வாய கிழிக்கவோ ஒடைக்கவோ வேண்டியிருக்கும்னு’. அவன் எவ்ளோ பெரிய டெரர்ன்னு அடுத்தடுத்த சீன்ல நமக்குப் புரிய வப்பாங்க.
இதுல பேயே வர்லியேன்னு நெனக்கிறீங்களா, பேயைக் காட்டுவாங்க. ஆனா அது அவுட் ஆஃப் ஃபோகஸ்லயே தான் அடிக்கடி வந்து அமைதியா ஒரு ஓரத்துல நின்னுக்கிருக்கும். நாமதான் ’ஓ ஒருவேள அதுதான் பேயா’ன்னு நெனப்போம். அவ்ளோதான் படம் முழுக்க பேய்க்கு மரியாதை. அதுவும் ஒரு சீன டெரர் பண்ணி வுட்டுகிட்டிருக்கும். அப்பவும் அது அவுட் ஆஃப் ஃபோகஸ் சில்லவுட்ல தான் இருக்கும்.
அந்த சீனை மட்டும் சொல்லி நான் ஸ்பாய்ல் பண்ண விரும்பல. இந்தப் படம் பார்த்ததுக்கு வொர்த்தான மொமண்ட் அது ஒன்னுதான்ங்கறதால, அடுத்து இன்னொரு விசயத்த இங்க ஓபன் பண்றேன். அதாவது இது பேய்ப்படம்ங்கறத விட, திரில்லர் படம்ன்னு தான் சொல்லிருக்கனும். ஆனா, பேய்தான் திரில்லர் ஆஸ்பெக்ட்டா வரும்ங்கறதால அதையும் நான் பெருசா ஸ்பாய்ல் பண்ண விரும்பல.
இதுல ஹீரோன்னு ஒருத்தன் கூட கெடயாது. படம் எடுத்தவங்க பர்ப்பஸா இதப் பண்ணல. உண்மையிலயே இந்தப் படத்துல முக்கியமான ஆளுங்க எல்லாமே பெண் கதாபாத்திரங்கள்தான். ஹீரோயினுக்கு அவ தங்கச்சியக் கண்டுபுடிச்சிக் கொடுக்க தங்கச்சிய டேட் பண்ண ஒருத்தன் வருவான். அவனயும் ஆர்.ஐ.பி பண்ணி வுட்ரும், ‘இதுக்கு மட்டும் கத்துதா அந்தப் பல்லி’ங்கற மாதிரி அந்தப் பேயி. வில்லனா ஒருத்தன் வருவான். அவன் கதவைத் தட்றப்ப, ஹீரோயின் மட்டும் கதவைத் தெறந்திருந்தா, அவன் ஹீரோயின ஆர்.ஐ.பி பண்ணி வுட்ருப்பான். ஆனா, அப்டி ஒருக்கா வந்து படம் பாக்கற ஆடியன்ஸ் நம்மளயும், ஹீரோயினையும், செமயா மெரட்டி வுட்டுட்டு போய்க்கிருந்தவனயும் பேய் ஆர்.ஐ.பி பண்ணி வுட்ரும்.
இது போக தெக்கால ரூம் பக்கம் போவாதன்னு சொல்றதுக்குன்னே ஒரு கேரக்டர், எது அந்த பழைய சேர்வுமனா, எது அந்த எட்நூத்தி நாலா நம்பர் வீடான்னு கதையளக்குறதுக்குன்னே ஒரு கேரக்டர், யேன் யேன் யேன் கத்துறன்னு சாஃப்ட்டா கேக்கற எடத்துல கூட சவுண்டு சரோஜாவா வந்து கத்திட்டுப் போற எக்ஸ்-சேர்வுமன் ரூம் நம்பர் எட்நூத்தி நாலுன்னு ஒரு கேரக்ட்டர் – இதெல்லாம் கதையில ரொம்ப முக்கியமான பிரகஸ்பதிகள். இதுல யாரு நம்மள அதிகமா இரிட்டேட் பண்றதுன்னு ஒரு போட்டியே நடத்தலாம் போல – யம்மாடீ!
இதுல ஸ்கேரி மொமண்ட்ஸ்னு சொல்ல அதிகமா யூஸானது ஹீரோயின் காது கேக்கறதுக்காக யூஸ் பண்ற கேட்ஜெட்ஸ்தான். அதுலயும் இப்ப ஒரு மொபைல் ஆப் ஒன்னு வந்திருக்காம். ஹியரிங் எய்ட கழட்டினாக் கூட, சரவுண்டிங்ல யாராவது பேசினா ஒடனே இந்த ஆப் நோட்டிபிகேசன் அனுப்பும். அத ஓபன் பண்ணா, வெளிய யார் என்ன (மொழியில) பேசிட்டிருந்தாலும், அது ஹீரோயினோட மொழியில அத அப்டியே வார்த்தைகளா கன்வெர்ட் பண்ணிக் குடுத்துரும். இத வச்செல்லாம் மெரட்டி வுட்ருக்கானுக.
ஆனா இவ்வளவு இருந்தும் என்ன பிரச்சினைன்னா, கடைசிவரைக்கும், முழுசா இத ஒரு பேய்ப்படம்ன்னு சொல்லிக்கவோ, நல்லபடம்னு ஏத்துக்கவோ முடியாது. எல்லாத்துலயும் ஒரு அரைகுறை ஃபீல். அதனால பேய்ப்பட விரும்பிகள், வேற எதுவும் பேய்ப்படம்னு இப்பத்தைக்கி லிஸ்ட்ல பாக்கறதுக்குன்னு இல்லன்னா இந்தப் படத்தைப் பாருங்க. இல்லைன்னாலும் பெரிய இழப்பெதுவும் இல்ல.
இதச் சொல்றதுக்காடா இவ்ளோ பெரிய பதிவுன்னு கேக்கறீங்களே, இந்தப் படம் பாக்கும் முன்ன ஹனி டோண்ட்னு ஒரு பெரிய ஃபேமஸான டைரக்ட்டர் படம்னு நம்பி ஒன்னப் பாத்தேன். அப்புறந்தான் புரிஞ்சது, அவரே ‘டோண்ட்’னு டைட்டில்லயே, வேணாம்னு மென்சன் பண்ணிக் கூட ஏண்டா இதப் பாத்தேன்னு ஃபீல் பண்ணேன். எனக்கு நல்லா வேணும். அதையெல்லாம் எழுதினா, அது மூவி ரிவ்யூவாவோ, ரெகமெண்டேசனாவோ, சஜெசனாவோ இருக்காது. ஒன்லி பொலம்பல் தான். பொலம்பல் பதிவு எவ்ளோ பக்கம் போகும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

No comments:
Post a Comment