ஜென்ம நட்சத்திரம்
அப்டின்னு ஒரு ஹாரர் படம். நைண்டிஸ்ல வந்த அதே ஜென்ம நட்சத்திரம்தான். ஆனா இப்ப 2025ல வந்த இதுல, ’சேவியர், எல்லாம் ஒனக்காகத்தான்’னு அந்தப் பாப்பாவ வச்சே எல்லார்த்தையும் கொல பண்ண வக்கிற சீன்ஸ் மட்டுந்தான் இல்ல. அதுக்கு பதிலா, கதைய டோட்டலா சேஞ்ச் பண்ணி அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாம வேற ஒன்னா எடுத்து கடசீல இத, அந்த ஜென்ம நட்சத்திரத்தோட ட்ரிப்யூட்/கனெக்சன் மாதிரி முடிச்சிருக்காங்க. நைண்டிஸ்ல தக்காளி சீனிவாசன் எடுத்த ஜென்ம நட்சத்திரமே ஓமனோட காப்பி. சரி பரவால்ல விடுங்க, இது எப்டி இருக்குன்னு பாப்போம்.
இதுல, லூஸிஃபரோட பையன்தான் சாத்தானா பூமியில பொறக்கப் போறான்னு சில அனிமேசனோட கதை ஆரம்பிக்கிது. அதுக்கப்புறம், அஞ்சு ஃப்ரெண்ட்ஸ். அதுல ரெண்டு கல்யாணமான ஜோடிங்க. இன்னொருத்தன் அடிக்கடி அவங்க கேங்க்ல வந்து கேமியோ பண்ணிட்டிருப்பான். ஏன்னா சிங்கிள்ல. ஆறாவதா ஒரு ஃப்ரெண்டும் அப்டித்தான் உருப்படியா டிரைவரா இருக்கறதால, ட்ரிப் இல்லன்னா, அப்பப்ப வந்து கேமியோ பண்ணிட்டு போவாப்ல.
இதுல ஹீரோ, டைரக்டராகறதுக்கு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி ட்ரை பண்ணிட்டிருக்காரு. கூட அந்த ரெண்டாவது சிங்கிள் ஃப்ரெண்டும். ரெண்டாவது ஜோடில இருக்கற ஃப்ரெண்ட், பிஸினஸ் டெவலப் பண்ண இன்வெஸ்ட்டார் தேடிட்டிருக்கறவரு. பிஸ்ன்ஸ்மேனாக டிரை பண்றதால, அவர்தான் இந்த வருமானம் இல்லாத கவுதம் மேனன் பட மிடில் கிளாஸ் புவர் நண்பர்கள் கேங்குக்கு ஸ்பான்சர்.
சரி கதைக்கு வருவோம். நல்ல கதை – அம்பத்தேழு கோடி ரூவாய திருடி, ஒரு பாழடஞ்ச பங்களால ஒளிச்சி வச்சிட்டு இந்த மேற்படி கேங்க் வீட்ல வந்து லோகேசன சொல்லிட்டு செத்துப் போறாரு ஒருத்தர். போகும்போது, அதுல ஒரு நாப்பது லச்சத்த எம்பொண்ணு ஹார்ட் ஆபரேசனுக்கு பெங்களூர் ஹாஸ்பிட்டல்ல கட்டிடுங்கன்னு சொல்லிட்டு போயிடறாரு.
சம்பவத்தப்ப ஹீரோ வீட்ல இல்ல. ஒரு புரொடியூசர்கிட்ட கதை சொல்ல கோயம்பத்தூர்ல இருக்காரு. இந்த விசயத்த ஹீரோயின், அவருக்கு கால் பண்ணிச் சொல்றதக் கூட ஒரு ட்விஸ்ட்டா, அது கிராஸ் டாக்ல இன்னொரு நபரும் கேக்க, நமக்கு ‘அய்யய்யோ அந்தப் பணத்த அவன் எடுத்துட்டுப் போயிடுவானே, அந்தப் பொண்ணோட ஹார்ட் ஆபரேசன் நடக்காம போயிடுமே’ன்னு உண்மையிலயே ஃபீலாகறளவுக்கு ஷாக்கிங்கா இருக்குதான். ஆனா பாருங்க. அது இல்ல ட்விஸ்ட்டு. அதுக்கும் மேல. இத கிராஸ் டாக்ல கேட்ட அந்த ஆளு, காமெடிக்கின்னு படத்துல புக்கான ஆளு முனீஸ்காந்த். நாமதான் அத சீரியஸ்னு நெனச்சி கதி கலங்கிருக்கோம்.
அடுத்து இது ஒரு பேய்ப்படம்னு அடிக்கடி நமக்கு ரெஜிஸ்ட்டர் பண்ணனுமே. மேற்படி ஒரு அம்பத்தேழு கோடி, அத எடுக்க எட்டு ப்ளஸ் காமெடி கேங்க்ல ரெண்டுன்னு இஸ் ஈக்வல் டூ எட்டுப் பேர பங்களாக்குள்ளாற எறக்கியாச்சு. இப்ப அடிக்கடி பேய்ப்படம்னு அங்கங்க ரெஜிஸ்ட்டர் பண்றதுக்குன்னு செமயா தின்க் பண்ணி, ஒரு விசயத்தப் பண்ணிருக்காங்க. அது என்னன்னா, ஹீரோயின் தூங்குனாலோ, தனியா பாத்ரூம் போனாலோ, தனியா இருந்தாலோ, அவங்களுக்குக் கனவு வரும் – ஜெய்ஹிந்த் படத்துல கவுண்டமணிக்கி வர்ற மாதிரி. அப்ப கனவுல செந்தில் வருவாரான்னு கேப்பீங்கன்னுதான் டைரக்டர் ஒரு மேட்டர் வச்சிருக்காரு அங்க. ஏன்னா அவருதான் ஏற்கனவே செமயா தின்க் பண்ணிருக்காருன்னு சொன்னனே. கனவுல செந்தில் வர மாட்டாரு. அவரு கால்ஷீட் கெடைக்கல போல. அவருக்கு பதிலா, கிராஃபிக்ஸ்ல பேய் வந்து கேமியோ பண்ணிட்டுப் போகும்.
இத மொத வாட்டிக் காட்னப்ப நல்லாருந்தது. அதுலயே மொட்ட மாடில நடக்கற சீனைக் கூட கிரீன்மேட்ல எடுத்தது துண்டா தெரிஞ்சது. அவ்ளோ வொர்ஸ்ட்டான டிஐ.
நான் மேல ஒரு பத்தியில, ஹீரோ, ஒரு புரொடியூசர்கிட்ட கத சொல்லப் போனாருன்னு சொன்னேன்ல. அந்த சீன்ல புரொடியூசர் ஹீரோகிட்ட, “கதை நல்லாருக்கு. நாம பண்ணுவோம். பட்ஜெட் எவ்ளோன்னு சொல்லுங்க”ன்னு கேப்பாரு. இவரு அஞ்சு கோடின்னு சொல்ல, அவரு ஒன்னரைல முடிங்கன்னு சொல்லி பார்கெய்ன் பண்ண, ஹீரோ இல்ல சார், இது அஞ்சு கோடி பட்ஜெட் வேல்யூ உள்ள கதை, ஒன்னரை கோடில பண்ண முடியாதுன்னு கோச்சுகிட்டு வந்திருவாரு. ஆனா பாருங்க அவர் அந்தப் புரொடியூசர்கிட்ட ஓகேன்னு ஒத்துக்கிட்டு ஒன்னரைல படம் எடுத்துட்டாரு, அதத்தான் இப்ப நாம பாத்துகிட்டிருக்கோம்னு, அப்பப்ப ஹீரோயினுக்குக் கனவு வர்றப்பவெல்லாம் புரிய வருது.
சரி. படம் பாத்து முடிச்சிட்டு கலாய்ச்சு ஒரு மீம் போடலாம்னு பாத்தா, மேற்படி கேங்க் பணத்த எடுக்க பாழடஞ்ச பங்களாவுக்கு கார்ல போயிட்டிருக்கறப்ப ஹீரோயின் தூங்குவாங்க. அப்ப நமக்கே தோன ஆரம்பிச்சிரும், களவாணியில விமல் ஓட்டிட்டுப் போற மாட்டுவண்டில உக்காந்திருக்க ரெண்டு ஆண்டிஸ் மாதிரி, “அய்யய்யோ மறுபடியும் ஃபோன் வந்திருச்சுடி, எடுக்கப் போறாண்டி, அய்யய்யோ குதிச்சிட்டாண்டி”ன்னு, அதே மாதிரி ஹீரோயின் தூங்க, கனவுல பேய் வந்து கேமியோ குடுக்க, தூக்கம் தெளிய, ஹீரோயின் கத்த – அந்த பிஸ்னஸ் மேன் ஃப்ரெண்டு, ”கண்ண மூடுனா கனவுல பேய்தான, வேற யார் வருவா”ன்னு அவங்களுக்குள்ளயே கலாய்ச்சுக்கறாங்க. டேய் எங்களுக்கும் கொஞ்சம் மீம் போடறதுக்கு மிச்சம் வய்ங்கடான்னு சத்தியமா தோனுச்சு.
பாழடைஞ்ச பங்களா, அம்பத்தேழு கோடி, சாத்தான்னு உண்மையிலயே நல்ல கதை. ஆனா, எக்ஸிகியூசன் சரியில்ல. டிஐ சுத்தமா பல்ல இளிச்சிருச்சு. சோ நல்ல முயற்சிதான். ஆனா பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

No comments:
Post a Comment