Friday, February 3, 2017

A Hard Day (2014) - கொரியன்


A Hard Day (2014)

கொரியன்
Thriller / Action


உங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாள் எதுன்னு கேட்டா எந்த மாதிரியான நாளைச் சொல்லுவீங்க?

அது எந்த நாளா இருந்தாலும் சாதாரணமா கடந்து போன நாளா மட்டும் இருக்காது இல்லையா?

அப்படி எல்லா தினமும் இருக்காது. எந்த பிரச்சினையும் இல்லாத நாளை மொக்கையா கடந்து போயிடுவோம். அந்த நாள் பெரும்பாலும் ஞாபகத்துல கூட இருக்காது. மறக்க முடியாத நாளா அமையறது எல்லாமே பிரச்சனைகளை சந்திச்ச நாளாத்தான் இருக்கும்.

பொதுவா நாம எதையெல்லாம் பிரச்சனைன்னு ஃபீல் பண்ணுறோம்?
1) அது நம்ம சக்திக்கு மீறினதா இருக்கும்.
2) அது நம்ம இயல்பு வாழ்க்கைய மாத்துறதாவோ அல்லது பாதிக்கிறதாவோ இருக்கும்.

அந்த பிரச்சனைகளை நின்னு ஃபேஸ் பண்ணுறவன் தன்னோட தற்போதைய நிலையிலேர்ந்து அடுத்த லெவலுக்கு போவான். பயந்து ஒதுங்குறவன் தன்னோட தற்போதைய நிலையிலேர்ந்து கீழதான் போவான்.

அப்படி ஒரு பிரச்சனையைப் பத்தின படம்தான் A Hard Day(2014). வெய்ட் வெய்ட். ஒரு பிரச்சனையா வந்துச்சு அந்த ஹீரோவுக்கு? பிரச்சனை மேல பிரச்சனை, பிரச்சனையோ பிரச்சனை. உங்க வீட்டு எங்க வீட்டு பிரச்சனையில்ல ங்கொக்கமக்கா பிரச்சனை.

இதுல ஒரு பியூட்டி என்னான்னா, படத்தோட டைட்டில்ல சொன்ன மாதிரி hard day -னு எதைச் சொல்லலாம்?

ஹீரோவோட அம்மா இறந்து போயி அந்த இறுதிச் சடங்கு நடக்குற சமயத்துல தான் லஞ்சம் வாங்குன மேட்டர் வெளிய தெரிஞ்சதைச் சொல்லலாமா?

அய்யய்யோ ஒரு போலீசே லஞ்சம் வாங்கிட்டானேன்னு ஊரே காறித் துப்புமே, அசிங்கமா போச்சேன்னு அதை மறைக்க தன்னோட ஸ்டேசனுக்கு பதறியடிச்சுகிட்டு கார்ல வேகமா போறப்ப போன் மேல போன் வந்து வண்டி ஓட்ட விடாம டார்ச்சராகுமே அதைச் சொல்லலாமா?

போன் பேசிக்கிட்டே ரோட்ல குறுக்க போன நாய் மேல இடிக்காம வண்டிய வளைச்சு ஓட்டுனப்ப தவறுதலா ரோட்டை கிராஸ் பண்ணிட்டிருந்த ஆள் மேல அடிச்சு அவன் ஸ்பாட் அவுட்டான நாளைச் சொல்லலாமா?

எறங்கி இருக்கானா புட்டுக்கிட்டானான்னு பார்த்துக்கிட்டிருக்கையில தூரத்துல ஒரு ஹைவே பேட்ரோல் வண்டி அவனை நோக்கி வந்துச்சே அதைச் சொல்லலாமா?

அந்த ஒரு ஹைவே பேட்ரோல்ல இருந்து தப்பிச்சு, டெட்பாடிய கார் டிக்கியில வச்சுக்கிட்டு ஹைவே பேட்ரோல் செக்கிங்ல மாட்டுன கதைய சொல்லலாமா?

அந்தப் பொணத்தை மறைக்க பண்ணாத கோமாளித்தனமெல்லாம் பண்ணி மறைச்சுட்டு அப்பாடா ஒழிஞ்சது சனியன்னு ஓரமா போய் உக்காரும் போது வர்ற அன்னவுன் நம்பர் போன் காலைச் சொல்லலாமா?

இவன் பொதைச்ச ஆளைத் தேடச் சொல்லி அடுத்த அசைன்மெண்ட் கொடுத்து வயித்துல புளியைக் கரைக்கிற புது போலீஸ் அதிகாரியைச் சொல்லலாமா?

போன்ல பிளாக் மெயில் பண்ணுறவனைச் சொல்லலாமா?

ஒரு வழியா எல்லா பிரச்சனையையும் சமாளிச்சதுக்கப்புறமும் வீடு தேடி வர்ற மிச்சத்தைச் சொல்லலாமா?

அவனைக் கொல்லலாம்னு எடுக்கும் போது தன்னோட துப்பாக்கி கூட எகணை மொகணையா கப்போர்டுல சிக்கி எடுக்க வராம சதி பண்ணுமே அதைச் சொல்லலாமா?

ம்ஹும் இதெல்லாத்தையும் விட கடைசி ஃப்ரேம்ல வருமே ஒரு பிரச்சனை, அதைத்தான், என்னைக் கேட்டா அந்த மாதிரி நாளைத் தான் சொல்லுவேன் Hard Day-னு.

இந்த மாதிரி படங்களைப் பத்தி இவ்ளோ தூரம் எடுத்துச் சொல்லியும் இது நல்ல படமா? வொர்த்தா? பார்க்கலாமான்னு கமெண்ட்ல வந்து கேக்கறவங்களுக்கு எந்தப் படத்தைப் பார்த்தாலும் அந்த நாளெல்லாம் hard day தான்.

No comments:

Post a Comment