Thursday, April 16, 2020

என்னை நோக்கி பாயும் தோட்டா (2019) - ஒரு சோகப் பதிவு



என்னை நோக்கி பாயும் தோட்டா (2019)

(இத நா எந்த ஜானர்ல சேக்கறது?)

லன்ச்சுக்கு போகணும். கிளம்பி வீட்டை பூட்டிட்டு வண்டிய கெளப்பி மெயின் ரோட்டுக்கு வந்தேன். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் பாத்தேன். ரைட்ல கொடுவாயூர் பிரியாணிக்கடையா, இல்ல லெப்ட்ல பக்கத்துல உள்ள ஹோட்டல் மீல்ஸா? எதுக்குப் போறதுன்னு ஒரு கன்ப்யூசன். போன எடுத்து டைம் பாத்தேன். 1:57PM. ரெண்டு மணிக்கு ஷோ போட்ருவான். கொடுவாயூர் போறது வேஸ்ட். சரி. பக்கத்துல உள்ள ஹோட்டலுக்கே போனேன். வழக்கத்த விட இன்னிக்கி கூட்டம் அதிகமா இருந்துச்சு. நான் ரெகுலரா உக்கார்ற எடத்துல ரெண்டு ஸ்கூல் பசங்க உக்காந்து புரோட்டாவ பிச்சி எடுத்துகிட்டிருந்தாங்க. சப்ளையரக்காவ பாத்து கைகாட்டி வரச் சொன்னேன். அவங்க என்னைப் பாத்ததும் என் டேபிளுக்கு வந்து,

”சோறு கழிஞ்சல்லோ, புரோட்டா, சப்பாத்தி தரட்டே?”

எனக்கு நல்ல பசி. புல் மீல்ஸ்க்குத்தான் அடங்கும். ஆனா இல்லியே சிரிச்சிட்டே எந்திருச்சு கர்ச்சீப்ப எடுத்து கைய தொடச்சிக்கிட்டே,

”பரவால்ல சேச்சி”

பைக்க வேகமா வெரட்டுனேன் கொடுவாயூர் பிரியாணிக்கடைக்கி. அங்க எப்பவுமே கூட்டமாத்தான் இருக்கும். பிரியாணியாச்சே! அங்கயும் நான் ரெகுலரா உக்கார்ற எடத்துல ரெண்டு தடி மாடுக வாயில லெக் பீஸ கொடூரமா கடிச்சி இழுத்து கபளீகரம் பண்ணிட்டிருந்தானுக.

‘இங்கயும் நம்ம சீட்டு போச்சா? சகுனமே சரியில்லயே! சரி அந்தா ஒரு ஜோடி உக்காந்திருக்கு அதுங்கள டிஸ்டர்ப் பண்ணுவோம்’

”பிரதர், ஆளிண்டா இவிட?”

“இல்லா. இரிக்கி”

“தேங்க்ஸ்” சொல்லிட்டு அந்தப்பக்கம் மூஞ்சிய திருப்பிக்கிட்டேன். அந்த பொண்ண நான் பாக்க மாட்டனே. ம்ஹும். நெவர். அதுசரி எங்க அந்த சப்ளையர்? தோ அந்தா போறாம் பாரு, இன்னிக்கி ஓனரே சப்ளையரா, இருக்கட்டும் இருக்கட்டும்.

“ஹேய் ஏட்டா, ஒரு பீப்பு”

”ச்செரி. அவிடே?”ன்னு அந்த ஜோடியக் கேட்டான்.

“ரெண்டு பீப்”ன்னு சப்ளையர்கிட்ட சொல்லிட்டு, “பீப் ஓகேயல்லே?”ன்னு அந்த பொண்ணுகிட்டயும் கேட்டான்.

நா பாக்க மாட்டனே. ம்ஹும். நெவர். மைண்ட்ல கடலமுத்து ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டிருந்தான்.

பீப் பிரியாணி வந்திருச்சு. ரெண்டு பிளேட். வாங்க கை நீட்டவும் அது என் கைய ஓவர் டேக் பண்ணி அந்த ஜோடிக்கி முன்னாடி போய் உக்காந்திருச்சு. என் கண்ணு முன்னாடி அந்த ரெண்டு பிரியாணி பிளேட்டும், பிளைட்டா மாறி ஜொய்ய்ய்ய்ய்ய்ங்குன்னு வந்து அந்த ஜோடிக்கி முன்னாடி டொய்ய்ய்ய்ய்ய்ய்ங்குன்னு லேண்டாச்சி. நா பரக்காவெட்டி மாதிரி கைய நீட்டுனது அசிங்கமாயிருக்குமோ? ச்சே ச்சே இருக்காது. இருந்திருக்கும்லன்னு ஹ்ம்னு பெருமூச்சு விட்டுகிட்டிருக்கும் போதே,

“தேங்க்ஸ் ஏட்டா” பிரியாணி வந்திருச்சேய்ய்ய். அதுல முழுசா ஒரு முழு அவிச்ச முட்டையும். எதோ ஒரு கோழி எனக்காக அடைகாத்து வச்சிருந்து இதப் போட்டிருக்கு பாரேன்னு முழுங்கி..., ’ஆஹான், அது தப்பு. உன்ன இப்பவே தின்னுட மாட்டேன். அந்த பீப் பிரியாணிய மெதுவ்வ்வ்வா கொஞ்சம் கொஞ்சமா முழுங்கிட்டு, கடைசியா உன்ன திம்பனாம்’

ஆச்சு. தின்னாச்சு. கை கழுவியாச்சு. அந்தப் பொண்ண நாம்பாக்க மாட்டனே! அப்டியே அவங்கள கிராஸ் பண்ணிப் போயி இந்த 90 ரூவா பில்ல செட்டில் பண்ணி, ’அய்ய்ய் ஸ்வீட் சோம்பு! ஆமா அத யேண்டா வெறுஞ்சோம்புல கலந்து வச்சிருக்கீங்க? இந்த நாட்டுல எல்லாத்துலயும் கலப்படம். குடிக்கிற தண்ணியில கலப்படம், திங்கிற சோத்துல கலப்படம், குடிக்கிற கூல்ட்ரிங்ஸ்ல கலப்படம், கை கழுவுற சோப்புல கலப்படம், தின்னதுக்கு பில்ல குடுத்துட்டு செரிமானத்துக்கு திங்கிற ஸ்வீட் சோம்புல கலப்படம்... உங்கள....ன்னு பெல்ட்ல கை வச்சுப் பாத்தேன். ’என்னடா பெல்ட்டக் காணோம்?... ஓ’ (பெல்ட்டை... பெல்ட்டை... வீட்டிலேயே வைத்து விட்டேன் மன்னா...) ’சரி உங்கள அப்பறமா குத்திக்கிறேன். அதுவரைக்கும் இந்த ச்சுவீட் சோம்ப மென்னுக்கிறேன்.’ (அப்ப அந்த வெறுஞ்சோம்பு கலப்படம்.?) ’பரவால்ல’ ஞம் ஞம் ஞம் ஞம்...

வெளிய வந்து பைக்க ஸ்டார்ட் பண்ணேன். வண்டி பக்கத்துல இருந்த நியூ தேட்ரிக்கி போச்சு. ’அடேய் மானங்கெட்ட மனசாட்சியே, என்னய எங்கடா கடத்திட்டுப் போறீங்க. நா வீட்டுக்கு போவனுண்டா...’ (ஹோட்டல்ல நொழஞ்சதுல இருந்து அந்தப் பொண்ணயே குறுகுறுன்னு பாத்துகிட்டுருந்த பேப்பயலே மூடிக்கிட்டு வாடா) ‘அப்டீங்கற? சரி போவோம். ஆமா அவங்க எதுவும் நம்மள தப்பா நெனச்சிருந்திருப்பாங்களோ?’ (டேய் ங்கொய்யா) ‘ஆ சேர் சேர் சேர் ச்செரி நெனச்சா நெனச்சிட்டுப் போவட்டும்’ ஞம் ஞம் ஞம் ஞம்...

தேட்ரில அவ்வளவா கூட்டமில்ல. மணி 2:27PM. ’படம் போட்ருப்பான். இண்ட்ரோ சீன்லாம் முடிஞ்சிருக்கும். பரால்ல’ லைட்டா மழ வேற சொத் சொத்துன்னு அங்கயும் இங்கயும் ரெண்டொரு துளிக விழுக ஆரம்பிச்சிருந்திச்சு.

“ஏட்டா ஒரு ஈயென்பீட்டி. படம் போட்டாச்சா?” -அவ்ளோதான் நம்ம மலையாளம். ரொம்ப டீப்பா எல்லாத்தையும்லாம் பேச வராது. டக்குன்னு நாக்கு தமிழுக்கு தாவீரும்.

“அஞ்சு நிமிசம்”

“ஓ இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கா?” ‘ஒரு தம்மடிச்சிட்டு போறளவுக்கு டைமிருக்கு’

“இல்ல படம் போட்டு அஞ்சு மினிட்டாயி”

“ஆயா?” ‘ஓட்றா ஓட்றா உள்ள ஓட்றா’ குறுக்க ஒரு ஆள் கை நீட்டுனான். ‘எந்தா? ஓ டிக்கெட்... இந்தா கிழிச்சிக்க’ ஓடிப்போயி கதவ தொறந்தேன். மேகா ஆகேஷ் வாய்ஸுன்னு நெனக்கிறேன். ’சக்கரைய ப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து வொய்ன்ல போட்டு குடிக்குமாட்டிருக்குது’. தேடிப்புடிச்சு ஒரு சீட்ட கவர் பண்ணேன். மொபைல் டார்ச்ச வச்சித்தான். எனக்கு ரைட்ல ஒருத்தரும் இல்ல. கார்னர்ல உக்காந்துகிட்டேன்.

ப்ரீக்கவுட் ஓ யே... ப்ரீக்கவுட் ஓயே...

‘என்ன கெரகண்டா இது? ச்சேர் ச்சேரி அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேணாம். பொறுமையா பாப்போம்.’

சஞ்சனா சாரதி, மேகா ஆகேஸோட ப்ரெண்டுன்னு நெனக்கிறேன். வில்லனப் பத்தி டிஸ்கிரைப் பண்ணி முடிச்சது. தனுஷ் ஆடுனாரு. பாட்டு முடிஞ்சது. கடற்கறையில கேம்ப் பயர் போட்டு பேசிட்டிருந்தாங்க. அந்த டயலாக்லாம் செமையா இருந்திச்சு.

சேக்ஸ்பியரா?

இல்ல. வசந்த். வசந்த். என்னோட ப்ரெண்டு.

என்ன சொன்னாரு?

தட் கேர்ள் இஸ் டிவைன் மச்சான்னு...

யூ ஆர் வெரி கைண்ட்.

உண்மையாத்தான் சொன்னேன். இந்த உலகத்துல எத்தனயோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அவங்களையெல்லாம் உன் கண்ணத் தாண்டி யோசிக்க முடியல.

செம டயலாக்ஸ் அது அப்டின்னு மனசு ஹேப்பியாகறதுக்குள்ள,

அப்டியே ஒரு மணி நேரம் பேசிட்டிருந்தோம் - தனுஷ் வாய்ஸ் ஓவர்.

ஙேன்னு ஒரு பீல் வர்றதுக்குள்ள ஒரு வண்டி நெறய ஆளுக வந்து எறங்குனாங்க. தனுஷ் பேசிட்டிருக்கும் போதே, என்னடா நக்கலான்னு பொளிச்சின்னு ஒன்னு வச்சான். தனுஷ் சுருண்டு வுழுந்துட்டாரு. மேல இருந்து மேகா ஆகேஸ் ஜன்னல் வழியா பாத்து பயந்து கீழ வர்றாங்க.

அவ பயந்திருப்பா. அவ நெனச்சிக்கிட்டா நா அடி வாங்கிட்டேன்னு. ஆனா அவ கீழ எறங்கி வர்றதுக்குள்ள அவங்க அத்தன பேரையும் -னு வாய்ஸ் ஓவர்லயே கதைய சொன்னதுல, அத சொல்லாம விட்ருந்தா ஒரு சஸ்பென்ஸ் இருந்திருக்கும். ஒரு கிக் இருந்திருக்கும். ஹீரோயிசம் செமயா டெவலப்பாயிருந்திருக்கும். போச். எல்லாம் போச்.

அடுத்த சீன்லயாரோ சுடுறாங்க. அது தனுஷ் பெல்ட்ல படுது. பக்கிழ்ஸ் தெறிக்கிது. அத கையில புடிக்...

போன் ரிங்டோன் கேட்டுச்சு. ‘ஆத்தி என்னோட போனுல இருந்துதான். யாரு? ஆத்தி என் வொய்பு. இவ யேன் இப்ப கால் பண்றா?’ போன எடுத்து வெளிய ஓடிக்கிட்டே அட்டன் பண்ணி,

“ஹலோ”

“ஹலோ எங்கிருக்கீங்க?”

“நாந்தேட்டர்ல இருக்கேன். என்னை நோக்கி பாயும் தோட்டா”

“சம்பளம் வந்திருச்சா?”

“இல்ல யேன்?”

“அப்ப படத்துக்கு போவ மட்டும் எங்கிருந்து காசு வந்துச்சு?”

அப்புறம் அவ பேசினதெல்லாம் எனக்கு காதுல விழுகல. லேசா மழை பெய்ய ஆரம்பிச்சிருந்தது. அவ எப்ப பேசீட்டு கட் பண்ணான்னு தெரியல. ஒரு சிகரெட் கரைஞ்சு சாம்பலாகற டியூரேசன்ல எல்லாம் முடிஞ்சது. அத கால்ல போட்டு நசுக்கிட்டு அப்டியே வந்தேன். கேட் தெறந்திருந்திச்சு. வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

அவ்ளோதான்.

சொல்றதுக்கு ஒன்னுமில்ல. இந்தப் போஸ்ட்டபேஸ்புக்குல எழுதின தேதி 30/11/2019. இப்ப இத இன்னிக்கி (16/04/2020) தேதிக்கி அங்கிருந்து எடுத்து ப்லாக்குக்கு மாத்திருக்கற இந்த நிமிசம் வரை மூனு முறை இந்தப் படத்த முழுசா பாக்க ட்ரை பண்ணி முடியாம தோத்துப் போயிட்டேன். வேலை பிஸியெல்லாம் இல்ல. அவ்ளோ இழுவை... சிம்ப்ளி ஜவ்வ்வ்வ்வ்வு. இந்தப் படம் அனவுன்ஸ் பண்ணப்ப நடந்த ஒரே நல்ல விசயம்,



இதோ இந்த மீமிதான். இதைப் பண்ண காம மீம்ஸ், காம எடிட்ஸ் நானே!

No comments:

Post a Comment