Thursday, April 16, 2020

The Night Manager (2016) - Television Series


The Night Manager (2016)

Mini Series

Drama

ஒரு டான், ஒரு ஹோட்டல் நைட் மேனேஜர். ரெண்டு பேருக்கும் சம்பந்தமில்லை. ஆனா ஒரு சம்பவம் அந்த ஹோட்டல் மேனேஜரை வாழ்க்கையையே வெறுக்க வைக்கிறளவுக்கு ஆக்குது.

அந்த ஹோட்டல் மேனேஜர், ஜோனாதன் பைன் இங்கிலாந்து ஆர்மியில் இருந்து ரிட்டயர்டானவன். அவ்ளோ வயசெல்லாம் இல்லை. போரின் கொடூரத்தால் தன்னை ஆர்மியில் இருந்து பின்வாங்கிக் கொண்டவன். வயதும் அதிகமில்லை. எகிப்தில் உள்ள கெய்ரோவில் ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் நைட் மேனேஜராக வேலை செய்கிறான். அப்போது கெய்ரோ அவ்வளவு அமைதியாக இல்லை. ஜோனாதன் ஆர்மியில் எல்லையை இருந்ததை விட கெய்ரோ கொடூரமாக அரசியல் பிரச்சினையில் மக்களை வெறி கொண்டு போராட வைக்கிறது. அவன் வேலை செய்யும் ஹோட்டலில் உள்ள விருந்தாளர்களின் பாதுகாப்பும் விருந்தோம்பலும் அவனது பொறுப்பாகிறது.

அந்த டான், ரிச்சர்ட் ரோப்பர். உலகம் முழுவதும் ஆயுதம் விற்பனை செய்து போரை வளர்த்து அதில் ஆதாயம் காண்பவன். அவனைச் சுற்றிலும் உள்ள அவனது நம்பிக்கையான சகாக்கள் மூலம் அவனது ஆயுத வியாபாரத்தை செவ்வனே செய்து வருகிறான். ஆனால், அவனது வியாபாரத்தை MI6இல் உள்ள சில நல்ல ஏஜெண்டுகளால் இவன் மேல் சந்தேகத்தையும் தலைவலியையும் உண்டு பண்ணுகிறது. உண்மையில் MI6 முதற்கொண்டு ரோப்பரின் ஆட்கள் உண்டு. அவ்வளவு சீக்கிரம் அவனை ஆதாரத்துடன் நெருங்க முடியாது.

இந்த சமயத்தில்தான் ரோப்பர் சம்பந்தமான ஒரு பெண் கெய்ரோவில் ஜோனாதன் நைட் மேனேஜராக பணிபுரியும் ஹோட்டலில் கொல்லப் படுகிறாள். இதில் ஜோனாதன் எப்படி சம்பந்தப் படுகிறான்? ரோப்பரை MI6 எப்படி நெருங்கியது என்பதை அமேசான் பிரைமில் The Night Manager இல் காண்க.
ஜொனாதன் பைனாக, நம்ம லோகி , டாம் ஹிடல்ஸ்டன். இதுவரைக்கும் அந்தாளை வெறுத்தவர்கள் கூட இதில் விரும்ப வைக்கும் அளவுக்கான ஒரு கதாபாத்திரம். உண்மையில் நான் இந்த சீரிசை பார்க்க ஆரம்பித்த போது லோகி டாம் ஹிடல்ஸ்டன் கண்களுக்குத் தெரிந்தார். சிறிது நேரம் தாண்டியதும் ஜோனாதன் பைன் மட்டுமே நம்முடன் பயணிப்பார்.

இது போக டானாக நடித்த நடிகரையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். Stuart little, 101 Dalmatianஇல் இவரைப் பார்த்த நியாபகம் நடித்தவர். சில வில்லன்கள் நம் மனதை விட்டு அகல மாட்டார்கள். ஹீரோவை விடுங்க. அவனுக எப்பயுமே டெம்ப்ளேட் நல்லவர்களாக இருப்பானுக. ஆனா வில்லன்களை கெத்தாகவும் கடைசி வரை நமது ஆதர்சமாகவும் அவதானிக்க வைப்பது ஒரு சில கேரக்டர்களே. அதில் இதுவும் சேரும்.

ட்விஸ்ட் என்ற பெயரில் கே.வி. ஆனந்த்தனமாக எதுவும் இல்லாமல் கதையில் போக்கில் நம்மை இட்டுச் செல்லும் நல்ல ஸ்பை திரில்லர் சீரிஸ் இது.

அமேசான் பிரைமில் ஆறு எபிசோட்களாக உள்ளது. கண்டிப்பாக பார்க்க ஒரு நல்ல சீரிஸ் இது.

முடிந்தவரை மார்வல் லோகியை மறந்துவிட்டு பார்க்கவும். இல்லாவிட்டாலும் லோகியை எந்த இடத்திலும் ஞாபகப்படுத்தாது.

No comments:

Post a Comment