Thursday, April 16, 2020

6 Underground (2019)


6 Underground (2019)

Action / Thriller



ஒரு டெக் பில்லியனர். கிட்டத்தட்ட டோனி ஸ்டார்க் மாதிரி. ஆனா இவரு ஆயுத வியாபாரி கிடையாது. தன்னோட மனசுல ஒருநாள் இந்த கவர்மெண்ட் சிஸ்டம் எல்லாம் சுத்த ஹம்பக்னு வந்த ஒரு உந்துதல்ல செத்துப் போயிடறாரு. - இல்லேங்க இதெல்லாம் சத்தியமா ஸ்பாய்லரே இல்ல. இது ஸ்பாய்லர் ஃப்ரீ பதிவுதான். தைரியமா எந்தப் பத்தியையும் தாண்டாமயே படிங்க. இந்தப் படத்தோட ஸ்பீடுக்கு இந்தப் பதிவ கொண்டு போக முடியாதுங்கறதால மெதுவா நடந்தே வாங்க - உலகத்த நம்ப வைக்க அவர் ஆடின நாடகம்தான் அவரோட சாவு. அப்பத்தான ஃப்ரீயா எந்த ஐடியும் இல்லாம புதுசா ஒரு ஐடியில தான் நினைச்சத சாதிக்க முடியும்.


இவர மாதிரியே இன்னும் அஞ்சு பேரு. அவங்களுக்கும் இப்ப இருக்கற கவர்மெண்ட் சிஸ்டத்து மேல அவ்ளோ அதிருப்தி.



இவங்க ஆறு பேரும்தான் அந்த சிக்ஸ் அண்டர்கிரவுண்ட்ஸ்.


படம் ஆரம்பிக்கறதே ஒரு கார் ச்சேஸிங்லதான். நார்மலா கிளைமாக்ஸ்ல வர்ற மாதிரி ச்சேஸிங் இல்ல இது. கிட்டத்தட்ட இருபத்தஞ்சு நிமிசம் வர்ற தொடர் காட்சிகள். அதுவும் படத்தோட ஆரம்பத்துலயே. அதுலயே அந்தந்த கேரக்ட்டர்களோட அறிமுகம், அவங்களோட குணாதிசயம், அவங்களுக்குள்ள இருக்கற தொடர்பு, செண்டிமெண்ட்ஸ், ஸ்கில்ஸ் அதுலயே ஒரு ஆப்பரேசன், எல்லாம் அந்த இருபத்தஞ்சு நிமிச ச்சேஸிங்லயே! இதுல ஆச்சரியம் என்னன்னா அந்த மொத்த ச்சேஸிங்கும் ஆரம்பிக்கிறதோ முடியிறதோ நமக்கு கொஞ்சம் கூட அலுப்பே தட்டாது. அவ்ளோ பரபரன்னு ஒரு வித்தியாசமான ச்சேஸிங்.


பொதுவா ஒரு ச்சேஸிங்ல ஹீரோவோட கார் துரத்துகிட்டு வர்றவனோட கார்ல லைட்டா போய் இடிக்கும். அவன் பக்கத்துல நிறுத்தி வச்சிருக்கற மாட்டு வண்டியில லீட் எடுத்து ஏர்ல பறந்து போயி திடீர்னு அந்த ரோட்டுக்கு சம்பந்தமேயில்லாம ஒரு ஏரிக்குள்ளயோ ஆத்துக்குள்ளயோ லேண்டாகிருப்பான். ஆனா இது டோட்டலா வேற. எதிர்ல வர்ற அத்தன பேர் வண்டியையும், பொதுமக்கள் உட்பட அடிச்சித் தூக்கிட்டு போயிட்டே இருப்பானுக. அதுவும் பைனல் டெஸ்டினேசனோட ஆக்ஸிடண்ட் காட்சிகள் அலேக்கா தூக்கி சாப்பிடற லெவல்ல இருக்கும். படம் R-Rated வேற. ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பகீர் ச்சேஸிங்.


இந்த டீம்ல ஒருத்தருக்கொருத்தர் பேர் கூட வெளிக் காட்டிக்கறதில்ல. மிஸ்டர் ஒன், மிஸ்டர் ட்டூன்னு எல்லாம் வெறும் நம்பர்ஸ்தான். அதுல இவங்க ஆள் ஒருத்தர் மர்கயா. அதுக்கப்புறம் புதுசா ஒரு ஆள நம்பர் செவனா கொண்டு வர அவன் இந்த டீம்ல எப்படி செட்டாகறான். அவங்க என்ன செய்யிறாங்கங்கறதுதான் மீதிப்படம்.


படத்துல நம்பர் ஒன்னா வர்றவரு நம்ம டெட்பூல், ரயான் ரெனால்ட்ஸ். சும்மாவே காமெடியில கலக்குவாரு. இதுல அட்வென்ச்சரஸா ஆக்சன்ஸ் ஹீஸ்ட் முறையில வேற இருக்கும். பிரிச்சி மேஞ்சிட்டாரு.


டீம்ல ரெண்டு பேரு நவ் யூ சீ மீ முதல் பாகத்துல வந்த மெலனி லாரண்ட்டும், டேவ் ஃப்ரான்கோவும். இன்னொரு பையன் எக்ஸ்-மென் அபோகலிப்ஸ்ல ஏஞ்சலா வர்ற பென் ஹார்டி -  (இதுக்கு நான் சத்தியமா .எம்.டி.பிக்குத்தான் போனேன். மத்தபடி டீம்ல உள்ள இதர முகங்களெல்லாம் அவ்வளவா பரிட்சயமானதில்லை.)


கதைன்னு பார்த்தா இந்த டீம் எடுத்துக்கிட்ட ஒரு மிஷன். அதுவும் முதல் மிஷன். இவங்களோட நோக்கம் சர்வாதிகாரத்தை அழிக்கிறது மட்டுமே! ஏன்னா அது எல்லா நாட்டுலயும் இருக்கு. அதுல முதல் பத்து நாடுகள செலக்ட் பண்ணி முதலாவதா இவங்க செய்யிற மிஷன் தான் இந்தப் படமே. சோ இந்தப் படத்தோட அடுத்தடுத்த பாகங்கள் கண்டிப்பா வரும். அந்தளவுக்கு பொட்டன்ஸியல் உள்ள வித்தியாசமான திரைக்கதையமைப்புள்ள படம்தான் இது.


திரைக்கதைன்னு பேசிட்டிருக்கும் போதுதான் ஒன்னு ஞாபகத்து வருது. இந்தப் படத்தோட டைரக்டர் யார்னு தெரியுமா? மைக்கெல் பே-வாம். (இன்சர்ட் வாயில கைய பொத்தி அழுவுற சந்தானம் டெம்ப்ளேட்). டிரான்ஸ்பாமர்ஸ், பேய்ப்படங்கள்னு ஒரே மாதிரி படங்கள எடுத்துத் தள்ளிட்டிருந்த இவருக்குள்ளயும் இப்படி ஒரு திரைக்கதை இருந்திருக்கு பாரேன். அதுசரி கதை எழுதினது வேற யாரோ ரெண்டு ஆளுங்கதானாம். இவர் இதை புரொடியூஸ் பண்ணி டைரக்ட்டும் பண்ணிருக்காரு. அவ்வளவுதான். அதுக்கும் ஒரு தனி தெறம வேணும்ல்ல. ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.


அப்புறம் ஒரு முக்கியமான விசயம். பழக்கதோசத்துல இந்தப் படத்த தியேட்டர்ல தேடாதிங்க. இவ்ளோ செலவு பண்ணி இத நெட்பிளிக்ஸ்லதான் ரிலீஸ் பண்ணிருக்காங்க.


ஏற்கனவே A-Team மாதிரியான படங்கள்ல வந்த மாதிரியான ஒரு கதைதான். ஆனால் இது வேற லெவல் ஆக்சனுங்கோவ்.


கொழந்தகுட்டிக, இதயம் பலவீனமானவங்க, கர்ப்பிணிகளத் தவிர எல்லாரும் கண்டிப்பா பாக்கலாம். சத்தியமா செம்ம வொர்த்து.

No comments:

Post a Comment