Thursday, April 16, 2020

ஆண்ட்ராய்டு குஞ்ஞப்பன் வர்சன் 5.25 (2019) - மலையாளம்



ஆண்ட்ராய்டு குஞ்ஞப்பன் வர்சன் 5.25 (2019)

மலையாளம்

Science Fiction / Drama / comedy


மனைவியை இழந்த அப்பா. அவரோட அந்திமக் காலத்துல அவரை கவனிச்சிக்க ஹோம் நர்ஸ வேலைக்கி கூட வச்சிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கிப் போற மகன்.

ஆனா அப்பன் பாஸ்கரனோட கெடுபிடிக்கி கொஞ்சம் கூட ஈடு கொடுக்க முடியாத ஹோம் நர்ஸுகள் வேலைக்கி வருவதும், வேலையை விட்டுட்டுப் போறதுமா இருக்கறாங்க. வேற வழியில்லாம மகன் தான் வேலை பாக்கற கம்பெனியில இருந்து ஒரு ரோபோட்டை அப்பனுக்கு துணையா கொண்டு வந்து விட்டுட்டுப் போறாப்ல.

அங்க ஆரம்பிக்கிது கதையும் பிரச்சினையும்.

தன்னோட கெடுபிடியிலேர்ந்து கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காத பாஸ்கரன், குஞ்ஞப்பன் ரோபோட்டோட அசாத்திய பொறுமையினால அதை தன்னோட இன்னொரு மகனாவே நினைக்கிறாரு.

ரோபோட்டுகள் சொன்ன வேலையை செய்யறதுக்காகவே ப்ரோகிராம் செய்யப் பட்டவை. மொத்தம் நாலு ரோபோட்டுகள் டெஸ்ட் மோடுல நாலு பேர்கிட்ட அனுப்பப் படுது. அதுல மூனு ரோபோட்டுகள் தன்னோட எஜமான்களை கொன்னுடுது.

குஞ்ஞப்பன் எனப்படும் இந்த ரோபோட் பாஸ்கரனை என்ன செய்கிறது என்பதே மீதிக் கதை.

இந்தப் படத்தைப் பத்தி என்னோட கருத்தை வெளியிடறதுக்கு முன்னாடியே ஒரு விசயத்தை நான் பதிவு பண்ண விரும்புறேன். பல காலமா சினிமா பார்த்து அழாத நான் இந்தப் படத்துல வர்ற சில காட்சிகள்ல அழுதுட்டேன். அது எந்தளவு உங்கள தனிமை ஆட்கொள்ளுதோ அந்தளவுக்கு உங்களோட அழுகையின் அளவுல வித்தியாசம் இருக்கும்.

புரியலேன்னா படத்தப் பாருங்க.

ஒரு சைன்ஸ் ஃபிக்சன் படத்துல அழுக என்ன இருக்கப் போகுதுங்கற உங்க கேள்வி புரியிது. ஒருவேள நீங்க இந்தப் படத்தப் பார்த்தா நீங்க உங்க எண்ணத்த மாத்திக்க வேண்டியிருக்கும்.

எல்லா வகையிலயும் ஃபீல்குட்டா முடிக்க வேண்டிய படத்துல கதையில சமரசம் செஞ்சிக்காம இதுக்கு இதான் முடிவுன்னு முடிச்சிருக்காங்க. பாருங்க மக்களே நல்ல படம் இது.

No comments:

Post a Comment